என் மலர்
செய்திகள்

சங்கரன்கோவில் அருகே பெண் மீது தாக்குதல்- வாலிபர் கைது
சங்கரன்கோவில் அருகே பெண் மீது தாக்குதல் நடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் அருகே உள்ள வாடிக்கோட்டையை சேர்ந்தவர் காளிமுத்து மனைவி பழனித்தாய் (வயது 40). காளிமுத்து கூலி வேலை செய்து வருகிறார். இதே ஊரை சேர்ந்தவர் கோட்டைச்சாமி (30). காளிமுத்துவும், கோட்டைச்சாமியும் சேர்ந்து அடிக்கடி குடிக்க சென்று வருவது வழக்கம்.
இந்நிலையில் காளிமுத்து சரியாக வேலைக்கு செல்லாமல் குடித்து விட்டு இருந்து வந்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்த பழனித்தாய் சம்பவத்தன்று கோட்டைச்சாமியிடம் ஏன் இப்படி எனது கணவரை குடிக்க அழைத்து செல்கிறீர்கள்? என கேட்டு சத்தம் போட்டுள்ளார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த கோட்டைச்சாமி, பழனித்தாயை அவதூறாக பேசி கல்லால் அடித்து காயப்படுத்தி விட்டு சென்று விட்டாராம். இது குறித்து கரிவலம்வந்தநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் கோட்டைச்சாமியை கைது செய்தனர்.
Next Story






