என் மலர்
நீங்கள் தேடியது "arrested army soldier"
சேலம்:
கேரளா மாநிலம் திருவனந்தபுரம் அருகில் உள்ள முல்லூரை சேர்ந்தவர் அகில். இவர் உத்தரபிரதேசத்தில் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார்.
இவர் கடந்த சில நாட் களுக்கு முன்பு விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்தார். பின்னர் அவர் நேற்று இரவு கேரளா எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.
ரெயில் நள்ளிரவு 12 மணி அளவில் ஈரோடு அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது அவரது இருக்கைக்கு அருகில் இருந்த கல்லூரி மாணவியிடம் அகில் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இன்று அதிகாலை ரெயில் சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்திற்கு வந்தபோது அந்த மாணவி கீழே இறங்கி வந்து சேலம் ரெயில்வே போலீசில் புகார் செய்தார்.
இதன்பேரில் ரெயில்வே இன்ஸ்பெக்டர் இளவரசி ராணுவ வீரரை அழைத்து விசாரணை நடத்தி அவரை கைது செய்தார்.
இந்த சம்பவம் சேலம் ரெயில் நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பேரையூர்:
திருமங்கலம் அருகே உள்ள நாகையாபுரம் போலீஸ் சரகத்துக்குட்பட்ட ஏ.தொட்டியபட்டியை சேர்ந்தவர் முத்தையா. ஓய்வு பெற்ற ராணுவ வீரரான இவருக்கு நாகஜோதி, சிவசுதா என்ற 2 மகள்களும் முத்துச்செல்வம் என்ற மகனும் உள்ளனர்.
நாகஜோதியின் கணவர் ஆண்டிச்சாமியும், சிவசுதாவின் கணவர் முத்துராஜாவும் ராணுவ வீரர்கள் ஆவார்கள்.
தற்போது முத்தையா தனது மகன் முத்துச் செல்வத்துக்காக புதிய வீடு கட்டி வந்தார். இது தொடர்பாக விடு முறையில் ஊருக்கு வந்திருந்த மருமகன்கள் ஆண்டிச்சாமியும், முத்து ராஜாவும் மாமனாரிடம் கேட்டுள்ளனர். இதில் அவர்களுக்குள் வாக்குவாதமும் ஏற்பட்டது.
நேற்றும் ஆண்டிச்சாமி இதுதொடர்பாக மனைவி நாகஜோதியிடம் பிரச்சினை செய்துள்ளார். அப்போது தன்னை தாக்கியதாக ஆண்டிச்சாமி, முத்துராஜா உறவினர் முத்து ஆகியோர் மீது நாகையாபுரம் போலீசில் நாகஜோதி புகார் செய்தார்.
அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ராணுவ வீரர்கள் ஆண்டிச்சாமி, முத்துராஜா உள்பட 3 பேரை கைது செய்தனர்.






