என் மலர்
செய்திகள்

திருமங்கலம் அருகே பெண் மீது தாக்குதல்: ராணுவ வீரர்கள் கைது
பேரையூர்:
திருமங்கலம் அருகே உள்ள நாகையாபுரம் போலீஸ் சரகத்துக்குட்பட்ட ஏ.தொட்டியபட்டியை சேர்ந்தவர் முத்தையா. ஓய்வு பெற்ற ராணுவ வீரரான இவருக்கு நாகஜோதி, சிவசுதா என்ற 2 மகள்களும் முத்துச்செல்வம் என்ற மகனும் உள்ளனர்.
நாகஜோதியின் கணவர் ஆண்டிச்சாமியும், சிவசுதாவின் கணவர் முத்துராஜாவும் ராணுவ வீரர்கள் ஆவார்கள்.
தற்போது முத்தையா தனது மகன் முத்துச் செல்வத்துக்காக புதிய வீடு கட்டி வந்தார். இது தொடர்பாக விடு முறையில் ஊருக்கு வந்திருந்த மருமகன்கள் ஆண்டிச்சாமியும், முத்து ராஜாவும் மாமனாரிடம் கேட்டுள்ளனர். இதில் அவர்களுக்குள் வாக்குவாதமும் ஏற்பட்டது.
நேற்றும் ஆண்டிச்சாமி இதுதொடர்பாக மனைவி நாகஜோதியிடம் பிரச்சினை செய்துள்ளார். அப்போது தன்னை தாக்கியதாக ஆண்டிச்சாமி, முத்துராஜா உறவினர் முத்து ஆகியோர் மீது நாகையாபுரம் போலீசில் நாகஜோதி புகார் செய்தார்.
அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ராணுவ வீரர்கள் ஆண்டிச்சாமி, முத்துராஜா உள்பட 3 பேரை கைது செய்தனர்.






