search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முத்தரப்பு டி20 தொடர் - அயர்லாந்து அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது நெதர்லாந்து
    X

    முத்தரப்பு டி20 தொடர் - அயர்லாந்து அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது நெதர்லாந்து

    நெதர்லாந்து நாட்டில் நடைபெற்றுவரும் முத்தரப்பு டி20 தொடரின் இரண்டாவது போட்டியில் நெதர்லாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்து அணியை வீழ்த்தியது. #NEDvIRE #IREvNED

    ரோட்டர்டேம்:

    நெதர்லாந்து, அயர்லாந்து, ஸ்காட்லாந்து ஆகிய அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு டி20 தொடர் நெதர்லாந்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் போட்டியில் நெதர்லாந்து அணி அயர்லாந்தை வீழ்த்தியது. இத்தொடரின் இரண்டாவது போட்டியில் நெதர்லாந்து - அயர்லாந்து அணிகள் நேற்று மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    இதையடுத்து அயர்லாந்து அணியின் பால் ஸ்டிர்லிங், ஜேம்ஸ் ஷனான் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். ஸ்டிர்லிங் 27 ரன்களிலும், ஜேம்ஸ் 31 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். தொடர்ந்து வந்த வில்லியம் போர்டர்பீல்ட் 20 ரன்களில் ஆட்டமிழந்தார். கடந்த போட்டியில் அரைசதம் அடித்த சிமி சிங் 13 ரன்கள் மட்டுமே எடுத்து பெவிலியன் திரும்பினார்.

    கேரி வில்சன் மட்டும் சற்று நிலைத்து நின்று விளையாடினார். எதிர் முனையில் வந்தவர்கள் பிரகாசிக்க தவறியதால் அயர்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்தது. கேரி வில்சன் 45 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். நெதர்லாந்து அணி பந்துவீச்சில் ரோலோப் வேன் டெர் மெர்வ் 2 விக்கெட் வீழ்த்தினார்.



    இதையடுத்து 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெதர்லாந்து அணி பேட்டிங் செய்தது. நெதர்லாந்து அணியின் தோபியாஸ் விசே, மேக்ஸ் ஓதவ்த் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். தோபியாஸ் 25 ரன்களிலும், அவரைத்தொடர்ந்து களமிறங்கிய பென் கூப்பர் 10 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். மேக்ஸ் ஓதவ்த் நிதானமாக விளையாடி 39 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். 

    அதைத்தொடர்ந்து பஸ் டி லீடே 6 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின் ரோலோப் வேன் டெர் மெர்வ், பீட்டர் சீலர் ஆகியோர் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடி ரன் சேர்த்தனர். வேன் டெர் மெர்வ் 37 ரன்களில் ஆட்டமிழந்தார். பீட்டர் சீலர் 22 ரன்களுடன் களத்தில் இருந்தார். நெதர்லாந்து அணி 19 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அயர்லாந்து அணி பந்துவீச்சில் ஜார்ஜ் டாக்ரெல் 2 விக்கெட் வீழ்த்தினார். 

    இதைத்தொடர்ந்து வருகிற 16-ம் தேதி நடைபெறும் மூன்றாவது லீக் போட்டியில், ஸ்காட்லாந்து - அயர்லாந்து அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன. #NEDvIRE #IREvNED
    Next Story
    ×