என் மலர்

  செய்திகள்

  ஹாக்கி சாம்பியன்ஸ் கோப்பை - இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா
  X

  ஹாக்கி சாம்பியன்ஸ் கோப்பை - இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நெதர்லாந்து நாட்டில் நடைபெற்றுவரும் ஹாக்கி சாம்பியஸ் கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற இந்தியா, நெதர்லாந்து இடையேயான லீக் ஆட்டம் 1-1 என டிரா ஆனது. #IndiaKaGame #INDvNED #NEDvIND #HCT2018

  பிரிடா:

  37-வது சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி நெதர்லாந்து நாட்டில் உள்ள பிரிடா நகரில் நடந்து வருகிறது. இதில் இன்று நடந்த லீக் போட்டியில் இந்திய அணி, நெதர்லாந்து அணியை எதிர்கொண்டது. இது கடைசி லீக் போட்டியாகும். இந்த போட்டியை டிரா செய்தாலே இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெரும். நெதர்லாந்து அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்துடன் களமிறங்கியது.

  விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் முதல் பாதிநேர ஆட்டத்தில் இரு அணியினருன் தொடர்ந்து கோல் போட முயற்சித்தனர். இருப்பினும் அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன. இதனால் முதல் பாதிநேர ஆட்டம் கோல் அடிக்கப்படாமல் சமனில் இருந்தது.  தொடர்ந்து நடந்த இரண்டாவது பாதிநேர ஆட்டத்தின் 47-வது நிமிடத்தில் இந்திய வீரர் மந்தீப் சிங் கோல் அடித்து இந்திய அணிக்கு முன்னிலை கொடுத்தார். அதன்பின் 55-வது நிமிடத்தில் நெதர்லாந்து அணியின் பிரிங்மேன் கோல் அடித்தார். இதனால் ஆட்டம் 1-1 என சமனானது.

  அதன்பின் இரு அணியினரும் கோல் அடிக்கவில்லை. இதனால் இந்த போட்டி 1-1 என டிராவில் முடிந்தது. இதன்மூலம் 8 புள்ளிகள் பெற்ற இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றது. இந்தியா இறுதிப்போட்டியில் பலம்வாய்ந்த ஆஸ்திரேலியா அணியை எதிர்கொள்ள இருக்கிறது. #IndiaKaGame #INDvNED #NEDvIND #HCT2018
  Next Story
  ×