என் மலர்
செய்திகள்

நெதர்லாந்தில் சோகம் - தண்டவாளத்தை கடக்க முயன்ற சைக்கிள் மீது ரெயில் மோதி 4 சிறுவர்கள் பலி
நெதர்லாந்து நாட்டில் தண்டவாளத்தை கடக்க முயன்ற கார்கோ சைக்கிள் மீது ரெயில் மோதிய விபத்தில் 4 சிறுவர்கள் பரிதாபமாக பலியாகினர். #Accident
ஆம்ஸ்டர்டாம்:
நெதர்லாந்து நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள ஆஸ் நகரில் கார்கோ சைக்கிளில் சிறுவர்கள் சிலர் சென்று கொண்டிருந்தனர்.
அவர்கள் அங்குள்ள தண்டவாளத்தை கடக்க முயன்றனர். அப்போது அந்த வழியாக வந்த ரெயில் சைக்கிள்மீது வேகமாக மோதியது.
இந்த விபத்தில் சைக்கிளில் சென்ற 4 சிறுவர்கள் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக இறந்தனர். மேலும் ஒரு பெண் படுகாயம் அடைந்தார்.
தகவலறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். கார்கோ சைக்கிள் மீது ரெயில் மோதியதில் 4 சிறுவர்கள் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #Accident

Next Story