search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Navjot Singh Sidhu"

    தமிழ்நாட்டை பற்றி நவ்ஜோத் சித்து தெரிவித்த கருத்துக்காக ஒவ்வொரு தென்னிந்தியரிடமும் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என பா.ஜ.க. வலியுறுத்தியுள்ளது. #NavjotSingh #Rahulshouldapologise
    புதுடெல்லி:

    இந்தியாவில் உள்ள பலதரப்பினரின் கடும் எதிர்ப்பையும் மீறி முன்னாள் கிரிக்கெட் வீரரும், பஞ்சாப் மந்திரியுமான நவ்ஜோத் சித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பதவி ஏற்பு விழாவுக்கு சென்று வந்ததும் அந்நாட்டு ராணுவ தளபதியுடன் சிரித்து கைகுலுக்கியதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், பாகிஸ்தானை நான் விரும்புவது ஏன்? என்பதற்கு விளக்கம் அளிப்பதுபோல் நேற்று ஒரு கருத்தை சித்து வெளியிட்டிருந்தார்.

    கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஒரு இலக்கிய விழாவில் பேசிய சித்து, ‘நான் தமிழ்நாட்டுக்கு சென்றால் அங்குள்ள மொழி புரியாது. ஒன்றிரண்டு தமிழ் வார்த்தைகள் தவிர எனக்கு வேறெதுவும் தெரியாது.


    அங்குள்ள உணவு பிடிக்காது என்று சொல்வதற்கில்லை. இருந்தாலும், தொடர்ந்து அதை நீண்ட நாட்களுக்கு சாப்பிட முடியாது. அதேபோல் அவர்களின் கலாசாரமும் முற்றிலும் வேறுவிதமானது.

    ஆனால், நான் பாகிஸ்தானுக்கு பயணம் செய்யும்போது இந்த சிரமம் இல்லை. மொழி உள்பட அங்குள்ள அனைத்தும் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது’ என்று  குறிப்பிட்டிருந்தார்.

    அவரது இந்த கருத்துக்கு பா.ஜ.க. இன்று கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக,  கருத்து தெரிவித்துள்ள பா.ஜ.க. மேலிடத் தலைவர் ஜி.வி.எல்.நரசிம்ம ராவ், சித்து கூறிய கருத்துக்காக ஒவ்வொரு தென்னிந்தியரிடமும் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

    உங்கள் கட்சி (காங்கிரஸ்) பாகிஸ்தானை நேசிப்பதும், உங்கள் கட்சியினர் பாகிஸ்தானின் புகழ்பாடி வருவதும் எங்களுக்கு தெரியும். தமிழ்நாட்டை பற்றி சித்து தெரிவித்த கருத்துக்காக அவர் நீக்கம் செய்யப்பட வேண்டும்.



    இதற்காக ஒவ்வொரு தென்னிந்தியரிடமும் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும். நவ்ஜோத் சித்துவையும் மன்னிப்பு கேட்க வைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். #RahulGandhi #GVLNarasimhaRao #NavjotSingh #Rahulshouldapologise
    சித்து மீதான கொலை வழக்கில் தீர்ப்பை மறு ஆய்வு செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டு இருப்பதால் அவருக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதில் அவருக்கு ஜெயில் தண்டனை கிடைக்கவும் வாய்ப்புள்ளது. #NavjotSinghSidhu
    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் நவ்ஜோத் சித்து. தற்போது பஞ்சாப் மாநில சுற்றுலாத்துறை மந்திரியாக உள்ளார்.

    1988-ம் ஆண்டு பாட்டியாலாவில் சித்துவும், அவரது நண்பர் ரூபிந்தர் சாந்தும் காரில் சென்றபோது மற்றொரு காரில் வந்த குர்னாம் சிங்குடன் தகராறு ஏற்பட்டு கைகலப்பானது. இதில் காயம் அடைந்த குர்னாம்சிங் இறந்தார்.

    இந்த வழக்கில் சித்து, ருபிந்தர்சிங் ஆகியோரை விசாரணை நீதிமன்றம் விடுவித்தது.

    இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றம் கடந்த 2006-ம் ஆண்டு சித்து, ரூபிந் தர்சிங்குக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.

    இதை எதிர்த்து சித்து, ரூபிந்தர் சிங் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தனர்.

    இந்த மனுவை விசாரித்த சுப்ரீம்கோர்ட்டு கடந்த மே மாதம் பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றம் விதித்த 3 ஆண்டு ஜெயில் தண்டனையை ரத்து செய்தது.

    சித்துவுக்கு ரூ.1000 அபராதம் மட்டும் விதித்து தீர்ப்பு அளித்தது. ரூபிந்தர்சிங்கை விடுதலை செய்தது.

    இந்த நிலையில் தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி குர்னாம் சிங் குடும்பத்தினர் சுப்ரீம்கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

    மனுவை நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்சர், சஞ்சய்கிஷான் கவுல் ஆகியோரை கொண்ட பெஞ்ச் விசாரித்தனர். அப்போது ஏற்கனவே அளிக்கப்பட்ட தீர்ப்பை மறு ஆய்வு செய்ய நீதிபதிகள் ஒப்புக் கொண்டனர். இது தொடர்பாக சித்துவுக்கு நோட்டீஸ் அனுப்பும்படி உத்தரவிட்டனர்.

    30 ஆண்டுகள் நடந்து வந்த வழக்கில் அபராத்துடன் சித்து வெளியே வந்ததால் நிம்மதி அடைந்து இருந்தார். ஆனால் தற்போது தீர்ப்பை மறு ஆய்வு செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டு இருப்பதால் அவருக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதில் அவருக்கு ஜெயில் தண்டனை கிடைக்கவும் வாய்ப்புள்ளது. #NavjotSinghSidhu
    இம்ரான் கான் பதவியேற்பில் பங்கேற்ற சித்துவின் தலையை கொண்டு வருபவருக்கு ரூ.5 லட்சம் பரிசு தொகை வழங்குவதாக இந்து அமைப்பு ஒன்று அறிவித்துள்ளது. #NavjotSinghSidhu
    லக்னோ:

    பாகிஸ்தான் பிரதமராக முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான் சமீபத்தில் பதவியேற்றார்.

    இம்ரான்கான் பதவி ஏற்பு விழாவில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், பஞ்சாப் காங்கிரஸ் மந்திரியுமான நவ்ஜோத்சிங் சித்து மட்டுமே பங்கேற்றார். கபில்தேவ், கவாஸ்கர் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டும் அவர்கள் கலந்து கொள்ளவில்லை.

    இம்ரான்கான் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்ற சித்து அந்நாட்டு ராணுவ தளபதியை கட்டி தழுவினார். இதுமிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது.

    பஞ்சாப் முதல் மந்திரி அம்ரீந்தர் சிங்கும் இதற்கு கண்டனம் தெரிவித்தார். பாகிஸ்தான் ராணுவ தளபதியை கட்டி தழுவியதை சித்து தவிர்த்திருக்க வேண்டும் என்று அவர் கருத்து தெரிவித்து இருந்தார்.

    பா.ஜனதாவினர் சித்துவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏற்கனவே போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவரது கொடும்பாவியும் எரிக்கப்பட்டது.

    இந்த நிலையில் இம்ரான் கான் பதவியேற்பில் பங்கேற்ற சித்துவின் தலையை கொண்டு வருபவருக்கு ரூ.5 லட்சம் பரிசு தொகை வழங்குவதாக இந்து அமைப்பு ஒன்று அறிவித்துள்ளது.

    உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ராஷ்ட்ரிய பஞ்ரங் தளம் கட்சியின் ஆக்ரா பிரிவு தலைவர் சஞ்சய் ஜாட் இதுதொடர்பாக கூறியதாவது:-

    பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பதவியேற்பு விழாவில் சித்து பங்கேற்றதன் மூலம் நாட்டுக்கு துரோகம் இழைத்துவிட்டார். அவரது தலையை யாராவது வெட்டிக் கொண்டுவந்தால் அவருக்கு ரூ.5 லட்சம் பரிசு தொகை வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அவரது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    இதற்கிடையே பீகார் மாநிலத்தில் சித்துவுக்கு எதிராக கோர்ட்டில் புகார் மனு அளிக்கப்பட்டு உள்ளது. அவர் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்ய உத்தரவிடக்கோரி வலியுறுத்தப்பட்டுள்ளது. #NavjotSinghSidhu
    பீகார் மாநிலம் முசாபர்பூர் நகரில் உள்ள தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வக்கீல் சுதிர்குமார் என்பவர் தேச துரோகத்தில் ஈடுபட்டதாக சித்து மீது புகார் மனு தாக்கல் செய்தார். #NavjotSinghSidhu
    முசாபர்பூர்:

    கடந்த 18-ந்தேதி நடந்த பாகிஸ்தான் பிரதமர் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொண்ட இந்தியாவின் பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரரும், பஞ்சாப் மந்திரியுமான நவ்ஜோத் சிங் சித்து பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜாவித் பாஜ்வாவை கட்டித் தழுவினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.



    சித்துவின் இந்த செயலுக்கு எதிராக பீகார் மாநிலம் முசாபர்பூர் நகரில் உள்ள தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வக்கீல் சுதிர்குமார் என்பவர் புகார் மனு தாக்கல் செய்தார்.

    அதில், ‘எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதத்தை தூண்டிவிட்டு வருகிறது. இந்திய ராணுவ வீரர்கள் பலர் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டதற்கு காரணமான பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜாவித் பாஜ்வாவை சித்து கட்டித் தழுவி இருப்பது என்னைப்போன்ற ஏராளமான இந்தியர்களின் உணர்வை காயப்படுத்துவதாக அமைந்துள்ளது. இது, நாட்டுக்கு தியாகம் செய்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினரை கேலி செய்வதாகவும் உள்ளது. எனவே சித்து மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிடவேண்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது.

    இந்த மனு வருகிற 24-ந்தேதிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று மாஜிஸ்திரேட்டு தெரிவித்தார்.  #NavjotSinghSidhu
    பாகிஸ்தானின் பிரதமராக இம்ரான் கான் நாளை பதவியேற்க உள்ள நிலையில், இந்த விழாவில் பங்கேற்க பஞ்சாப் மந்திரியும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத்சிங் சித்து பங்கேற்க உள்ளார். #Pakistan #ImranKhan
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் தெக்ரீக்- இ- இன்ஷாப் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. சிறிய கட்சிகள், மற்றும் சுயேட்சைகள் ஆதரவுடன் அந்த கட்சி ஆட்சி அமைக்கிறது. அந்நாட்டின் பிரதமராக இம்ரான் கான் நாளை பதவியேற்க உள்ளார். 
     
    இந்த பதவி ஏற்பு விழாவுக்காக இந்திய அணியின் முன்னாள் வீரர்களும், தனது நெருங்கிய நண்பர்களுமான கபில்தேவ், கவாஸ்கர், நவ்ஜோத்சிங் சித்து ஆகியோருக்கு அவர் அழைப்பு விடுத்திருந்தார். இம்ரான்கானின் அழைப்பை சித்து ஏற்று, இன்று பாகிஸ்தான் சென்றடைந்தார்.

    இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு நல்லெண்ண தூதராக நான் பாகிஸ்தான் செல்ல உள்ளேன். எனது பயணத்தின் மூலம் இரு நாடுகளிடையே உள்ள உறவு மேம்படும் என நான் நம்புகிறேன் என அவர் வாஹா - அட்டாரி எல்லையில் செய்தியாளர்களிடம் கூறியிருந்தார். 
    பாகிஸ்தான் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள இம்ரான் கான், வரும் 18-ம் தேதி அந்நாட்டின் பிரதமராக பதவியேற்கும் விழாவில் பங்கேற்க வருமாறு இந்திய கிரிக்கெட் வீரர் சித்துவுக்கு அழைப்பு விடுத்துள்ளார். #Pakistan #ImranKhan #NavjotSinghSidhu
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் இம்ரான் கான் தலைமையிலான தெஹ்ரீப் இ இன்சாப் கட்சி பல்வேறு தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதனால் முன்னாள் கிரிக்கெட் வீரரும், தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான் வரும் 18-ம் தேதி பாகிஸ்தானின் பிரதமராக பதவியேற்க உள்ளார்.

    இந்நிலையில், பதவியேற்பு விழாவில் பங்கேற்க முதலில் பல்வேறு நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், பிறகு அந்த முடிவு மாற்றப்பட்டு, இம்ரான் கானின் முக்கிய நண்பர்களை மட்டுமே அழைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள், கபில் தேவ் உள்ளிட்ட இந்திய வீரர்கள் சிலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதுபோக தனது நெருங்கிய நண்பர்களை இம்ரான் கான் தொலைப்பேசி மூலமும் அழைப்பு விடுத்து வருகிறார்.



    அந்த வகையில், முன்னாள் கிரிக்கெட் வீரரும், தற்போதைய பஞ்சாப் மாநிலத்தின் மந்திரியுமான நவ்ஜோத் சிங் சித்துவுக்கு செல்போன் மூலம் அழைப்பு விடுத்துள்ளார். முன்னதாக அதிகாரப்பூர்வ அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், தனிப்பட்ட முறையில் இம்ரான் கான் செல்போன் மூலம் அழைப்பு விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது. #Pakistan #ImranKhan #NavjotSinghSidhu
    1988-ம் ஆண்டு சாலையில் சண்டையிட்டு முதியவரை தாக்கிய வழக்கில் பஞ்சாப் மந்திரி நவ்ஜோத்சிங் சித்து குற்றவாளி என சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. #NavjotSinghSidhu
    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், தற்போதைய பஞ்சாப் மந்திரியுமான நவ்ஜோத்சிங் சித்து, கடந்த 1988-ம் ஆண்டு
    பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் உள்ள சாலையில் குர்னம் சிங், என்பவருடன் ஏற்பட்ட சண்டையில், அவரது தலையில், நவ்ஜோத் சிங் சித்து பலமாக தாக்கினார்.

    இதில் படுகாயமடைந்த, குர்னம் சிங், சில நாட்களுக்கு பின் உயிரிழந்தார். இந்த வழக்கை விசாரித்த பாட்டியாலா கோர்ட், சித்துவை விடுவித்தது. இருப்பினும், மேல்முறையீடு செய்யப்பட்டதில் அரியானா ஐகோர்ட் 2007-ம் ஆண்டு, சித்துவை குற்றவாளி என அறிவித்தது. அவருக்கு, மூன்று ஆண்டு சிறைத் தண்டனையும்,ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

    இதனை எதிர்த்து சித்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் செல்லமேஸ்வர், எஸ்.கே கவுல் அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. கொலை செய்யும் நோக்கத்துடன் தாக்கப்பட்டதாக அவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில் இருந்து சித்து விடுவிக்கப்பட்டார்.

    அதே வேளையில், கொடூரமாக தாக்கப்பட்டதாக அவர் மீது உள்ள வழக்கில் சித்து குற்றவாளி என நீதிபதிகள் அறிவித்தனர்.  
    அவருக்கான தண்டனை விபரங்கள் பின்னர் அறிவிக்கப்பட உள்ளது.

    முன்னதாக, கடந்த மாதம் 14-ம் தேதி வழக்கு விசாரணையின் போது, “சித்துவுக்கு மூன்று ஆண்டு சிறைத் தண்டனை விதித்து, ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவில் தவறு இல்லை” என பஞ்சாப் மாநில அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. 
    ×