search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Minjur"

    மீஞ்சூர் அருகே மதுபோதையில் கோவில் குளத்தில் மூழ்கி ஆட்டோ டிரைவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொன்னேரி:

    மீஞ்சூரில் உள்ள பச்சையம்மன் கோவில் அருகே குளம் உள்ளது. இந்த குளத்தில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்து கிடந்தார்.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் மீஞ்சூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    இதில் பிணமாக கிடந்தது மீஞ்சூரை அடுத்த ராமரெட்டி பாளையத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சுரேஷ் என்பது தெரிந்தது.

    மது போதைக்கு அடிமையான அவர் அடிக்கடி மனைவி சுஜாதாவிடம் தகராறில் ஈடுபட்டு உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சுஜாதா கடந்த மாதம் கணவரை பிரிந்து குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டுக்கு சென்றார்.

    இந்த நிலையில் மதுபோதையில் வந்த சுரேஷ் கோவில் குளத்தில் மூழ்கி இறந்து இருப்பது விசாரணையில் தெரியவந்தது.

    இது குறித்து மீஞ்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மீஞ்சூர் அருகே ஆற்றின் கரையை உடைத்து மணல் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொன்னேரி:

    மீஞ்சூரை அடுத்த சீமாவரம் ஆற்றில் ஆற்றின்கரையை உடைத்து ஆற்றுப்பாலத்தின் அடியில் மணல் எடுப்பதாக மீஞ்சூர் போலீசுக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் மற்றும் போலீசார் அங்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது ஜே.சி.பி. எந்திரம் மூலம் மர்ம நபர்கள் மணல் அள்ளிகொண்டிருப்பது தெரியவந்தது.

    போலீசாரை கண்டதும் மணல் கடத்தல் கும்பல் தப்பி ஓட்டம் பிடித்தனர். இதில் ஒருவரை மட்டும் மடக்கினர்.

    விசாரணையில் அவர் பொன்னேரி அடுத்த சோமஞ்சேரியைச் சேர்ந்த நாகராஜ் (26) என்பது தெரிந்தது. அவரை சிறையில் அடைத்தனர்.

    தப்பி ஓடிய மீஞ்சூர் அடுத்த கொண்டக்கரையை சேர்ந்த சிவகுமாரை போலீசார் தேடி வருகின்றனர். மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய ஜே.சி.பி. எந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது.

    மீஞ்சூர் அருகே சாலையை சீரமைக்க கோரி மின் கம்பத்தை ரோட்டின் குறுக்கே போட்டு கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
    மீஞ்சூர்:

    மீஞ்சூரை அடுத்த அத்திபட்டு ஊராட்சிக்குட்பட்ட கரையான் மேடு பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    கடந்த 10ஆணடுக்கு மேலாக கரையான் மேடு பகுதியில் உள்ள சாலை குண்டும் குழியுமாக காணப்படுகிறது. மழை காலங்களில் தண்ணீர் தேங்கி வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    சேதமடைந்த சாலையால் அப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இதனால் கல்லூரி, பள்ளி மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

    இது குறித்து கிராம மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனை கண்டித்தும், உடனடியாக சாலையை சீரமைக்க வலியுறுத்தியும் அப்பகுதி பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் காரடையான் மேடு-அத்திபட்டு ரெயில்வே சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.

    அப்போது திடீரென சாலை ஓரம் கிடந்த மின் கம்பத்தை ரோட்டின் குறுக்கே போட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தகவல் அறிந்ததும் மீஞ்சூர் போலீசார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர், கிராம ஊராட்சி ராஜேந்திரபாபு, அத்திபட்டு ஊராட்சி செயலாளர் பொற்கொடி ஆகியோர் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    சாலையை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது
    மீஞ்சூர் மற்றும் பொன்னேரியில் 3 பெண்கள் திடீரென மாயமானது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பொன்னேரி:

    மீஞ்சூரை அடுத்த சோமஞ்சேரி அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் சிவகுமார். இவரது மகள் சோபனா (வயது 15).

    கடந்த 5-ந் தேதி வீட்டில் இருந்து கடைக்கு சென்ற சோபனா வீடு திரும்பவில்லை. உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து மீஞ்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    பொன்னேரியை அடுத்த கிருஷ்ணாபுரம் அருந்ததி நகரைச்சேர்ந்தவர் முனுசாமி. இவரது மகள் சரிதா (19). வீட்டில் இருந்து வெளியே சென்ற சரிதா காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து பொன்னேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    பொன்னேரி அடுத்த ஆலாடு பூந்தோட்டகாலனியைச் சேர்ந்தவர் சம்பத். இவரது மனைவி புனிதா (22) கடந்த 23-ந் தேதி புனிதா உடல்நிலை சரிஇல்லாததால் பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்று வருவதாக கூறி சென்றார். பின்னர் வீட்டுக்கு திரும்பவில்லை.

    சம்பத் பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு சென்று விசாரித்த போது புனிதாவை மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பியதாக டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.

    ஆனால் புனிதா எங்கு சென்றார். என்ன ஆனார் என்று தெரியவில்லை.

    மாயமான 3 பெண்களும் கடத்தப்பட்டனரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 2 மாதத்துக்கு முன்பு 100-க்கும் மேற்பட்ட பெண்கள், மாணவிகள் மாயமானார்கள். தற்போது பெண்கள் மாயமாகும் சம்பவம் குறைந்து இருந்தது.

    இப்போது பெண்கள் மீண்டும் மாயமாகும் சம்பவம் அதிகரித்து இருப்பது பெற்றோரை அதிர்ச்சி அடைய செய்து உள்ளது. #Tamilnews
    மீஞ்சூரில் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 70 மூட்டை குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.5 லட்சம் ஆகும்.
    பொன்னேரி:

    தமிழகத்தில் புகையிலை, குட்கா உள்ளிட்ட போதை பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த தடை மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.

    அதிகாரிகளின் கண்காணிப்பையும் மீறி கடைகளில் குட்கா, புகையிலை தாராளமாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. வட மாநிலங்களில் இருந்து லாரி, ரெயில்கள் மூலம் அவை தமிழகத்துக்கு கடத்தி வரப்படுவதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் மீஞ்சூரில் உள்ள குடோனில் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்திக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து பொன்னேரி டி.எஸ்.பி. ராஜா, மீஞ்சூர் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் போலீசார் மளிகை கடை அருகே இருந்த குடோனில் இன்று காலை அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது மூட்டை மூட்டையாக குட்கா, புகையிலை பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கைப்பற்றப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்தனர். மொத்தம் 70 மூட்டைகளில் புகையிலை இருந்தது. இதன் மதிப்பு ரூ.5 லட்சம் ஆகும்.

    குடோன் உரிமையாளர் பாலாஜி தலைமறைவாகி விட்டார். அவரை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அவர் சிக்கினால்தான் குட்கா எங்கிருந்து கொண்டு வரப்பட்டது? எப்படி சப்ளை செய்யப்படுகிறது? இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்? என்ற விபரம் தெரியவரும்.

    மீஞ்சூர் பகுதிக்கு வட மாநிலங்களில் இருந்து ரெயில், கார் மூலம் புகையிலை கொண்டு வரப்படுவதாக கூறப்படுகிறது. இதையடுத்து ரெயில்களை கண்காணிக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

    மீஞ்சூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பொன்னேரி:

    மீஞ்சூரை அடுத்த எண்ணூர் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 31), கூலி தொழிலாளி. அத்திப்பட்டில் வேலை முடித்துவிட்டு நண்பர் ரமேசுடன் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தார்.

    வடசென்னை அனல் மின் நிலையம் 3-ம் நிலை அருகில் வந்த போது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் விஜயகுமார் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.

    ரமேசை அருகில் உள்ளவர்கள் மீட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து மீஞ்சூர் போலீசார் விசாரித்து வருகின்றனர். #Tamilnews
    மீஞ்சூர் அருகே லாரி டிரைவரை தாக்கி பணம் கேட்டு மிரட்டியது தொடர்பாக இரண்டு பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
    தென்காசியை சேர்ந்தவர் சாமுவேல், லாரி டிரைவர்.இவர் கடந்த 1-ந் தேதி மீஞ்சூரில் இருந்து கும்மிடிபூண்டிக்கு லாரியில் நிலக்கரி ஏற்றி வந்தார். பொன்னேரி நெல் காஸ்ட் கம்பெனி அருகில் வந்தபோது பைக்கில் வந்த 2 வாலிபர்கள் லாரியை வழிமறித்து டிரைவர் சாமுவேல், கிளீனர் இம்மானு வேலை தாக்கி பணம் கேட்டு மிரட்டினர். பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.

    இதுகுறித்து டிரைவர் சாமுவேல் பொன்னேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து பொன்னேரியை அடுத்த திருஆயர்பாடியை சேர்ந்த அருண், பொன்னேரியை சேர்ந்த ராஜாவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
    மீஞ்சூர் அருகே வெடிகுண்டு மற்றும் கத்திகளுடன் 12 ரவுடிகளை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொன்னேரி:

    மீஞ்சூரை அடுத்த கேசவபுரத்தில் உள்ள ஒரு வீட்டில் கூலிப்படையினர் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அந்த வீட்டை போலீசார் சுற்றி வளைத்து புகுந்தனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த 12 பேரை மடக்கி பிடித்தனர். அவர்களிடம் இருந்து நாட்டு வெடிகுண்டு, 6 பட்டா கத்திகள், அரிவாள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    விசாரணையில் பிடி பட்டவர்கள் பிரபல ரவுடியான சேது மற்றும் அவரது கூட்டாளிகள் என்பது தெரிந்தது. குற்றச் செயலில் ஈடுபட்ட அவர்கள் திட்டமிட்டு பதுங்கி கண்டுபிடிக்கப்பட்டது. கைதான சேது மீது 2 கொலை வழக்கு, கொலை முயற்சி வழக்குகள் உள்ளன.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு மீஞ்சூர் அருகே திருவெள்ளவாயலில் மனைவியிடம் நகை பறித்ததை தடுத்த ஜெயராமன் என்பவர் கொள்ளை கும்பலால் அடித்து கொலை செய்யப்பட்டார்.

    இந்த வழக்கில் சேது முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டு இருந்தார். பிடிபட்ட ரவுடி கும்பல் வேறு எந்த குற்றச் செயலிலாவது ஈடுபட திட்டமிட்டனரா? அவர்களுடன் தொடர்புடையவர்கள் யார்-யார்? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. #tamilnews

    ×