search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "womens missing"

    • சுபா ஆர்.எஸ்.புரத்தை உள்ள அவரது தாயார் வீட்டில் இருந்து வந்தார்.
    • குடும்பத்தினருடன் சேர்ந்து அக்கம் பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடி பார்த்தனர்.

    குனியமுத்தூர்,

    கோவை இடையர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பிரதிப்குமார் (வயது 25). தொழிலாளி. இவரது மனைவி சுபா (24).

    சுபா நிறைமாத கர்ப்பமாக உள்ளார். இதனால் அவர் ஆர்.எஸ்.புரத்தை உள்ள அவரது தாயார் வீட்டில் இருந்து வந்தார். சம்பவத்தன்று சுபா வீட்டில் மருத்துவ பரிசோதனைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார்.

    அதன்பின்னர் அவர் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனே பிரதிப்குமாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர் குடும்பத்தினருடன் சேர்ந்து அக்கம் பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடி பார்த்தனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.

    இதையடுத்து பிரதிப்குமார் ஆர்.எஸ்.புரம் போலீசில் புகார் அளித்தார். போத்தனூர் அருகே உள்ள வெள்ளலூர் முனியப்பன் கோவில் வீதியை சேர்ந்தவர் முருகன் (52). இவரது மகள் கார்குழலி (27).

    இவர் சரவணம்பட்டியில் உள்ள ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கார் குழலின் கணவர் அஜித்குமார் (27). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சம்பவத்தன்று அஜித்குமார் தனது மூத்த மகனை அழைத்துக் கொண்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக திருவண்ணாமலை சென்றார்.

    இந்நிலையில் கார்குழலி ஒருவரிடம் கடன் வாங்கியதாக தெரிகிறது. கடன் கொடுத்தவர் பணத்தை திருப்பி கேட்டு திட்டியதால் மனவேதனையுடன் இருந்து வந்தார். சம்பவத்தன்று அவர் தனது 2-வது குழந்தையை தூக்கிக் கொண்டு வீட்டை விட்டு சென்றார்.

    அவரது தந்தை முருகன் அவரை அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. பின்னர் இதுகுறித்து அவர் போத்தனூர் போலீசில் புகார் அளித்தார். 

    மீஞ்சூர் மற்றும் பொன்னேரியில் 3 பெண்கள் திடீரென மாயமானது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பொன்னேரி:

    மீஞ்சூரை அடுத்த சோமஞ்சேரி அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் சிவகுமார். இவரது மகள் சோபனா (வயது 15).

    கடந்த 5-ந் தேதி வீட்டில் இருந்து கடைக்கு சென்ற சோபனா வீடு திரும்பவில்லை. உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து மீஞ்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    பொன்னேரியை அடுத்த கிருஷ்ணாபுரம் அருந்ததி நகரைச்சேர்ந்தவர் முனுசாமி. இவரது மகள் சரிதா (19). வீட்டில் இருந்து வெளியே சென்ற சரிதா காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து பொன்னேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    பொன்னேரி அடுத்த ஆலாடு பூந்தோட்டகாலனியைச் சேர்ந்தவர் சம்பத். இவரது மனைவி புனிதா (22) கடந்த 23-ந் தேதி புனிதா உடல்நிலை சரிஇல்லாததால் பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்று வருவதாக கூறி சென்றார். பின்னர் வீட்டுக்கு திரும்பவில்லை.

    சம்பத் பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு சென்று விசாரித்த போது புனிதாவை மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பியதாக டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.

    ஆனால் புனிதா எங்கு சென்றார். என்ன ஆனார் என்று தெரியவில்லை.

    மாயமான 3 பெண்களும் கடத்தப்பட்டனரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 2 மாதத்துக்கு முன்பு 100-க்கும் மேற்பட்ட பெண்கள், மாணவிகள் மாயமானார்கள். தற்போது பெண்கள் மாயமாகும் சம்பவம் குறைந்து இருந்தது.

    இப்போது பெண்கள் மீண்டும் மாயமாகும் சம்பவம் அதிகரித்து இருப்பது பெற்றோரை அதிர்ச்சி அடைய செய்து உள்ளது. #Tamilnews
    ×