search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Minister geethajeevan"

    • வில்லமரத்துப்பட்டி கிராமத்தில் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவி தலைமையில் நடைபெற்றது.
    • இலவச வீட்டுமனை பட்டா, வேளாண் இடு பொருட்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும் அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.

    விளாத்திகுளம்:

    மகாத்மா காந்தியடிகளின் 155-வது பிறந்த நாளை யொட்டி தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வில்லமரத்துப் பட்டி கிராமத்தில் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவி தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண் டார்.

    அப்போது அவர் பேசுகையில்:-

    பெண்கள் சுயமாக முன்னேற கைத்தொழிலை கற்று கொள்ள வேண்டும். அதற்கான வாய்ப்புகளை தி.மு.க. அரசு ஏற்படுத்தி தந்து உள்ளது. தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பு ஏற்ற பின்பு உள்ளாட்சி அமைப்புகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது. மகளிர் உரிமை தொகை நிராகரிப்பட்ட வர்கள் முறையீடு செய்து பரிசீலனை உள்ள பெண்களுக்கு கட்டயம் உரிமை தொகை கிடைக்கும். நிராகரிக்கப்பட்டவர்க ளுக்கு உரிய விளக்கமும் அளிக்கபட்டு உள்ளது.

    தகுதி உள்ள அனைவருக்கும் உரிமை தொகை கிடைக்கும். 18-ந்தேதிகுள் இ-சேவை மையம் மூலமாக மேல் முறையீடு செய்து விடவும். கர்ப்பிணி தாய்மார்கள் ஊட்டசத்து உள்ள உணவை உன்ன வேண்டும். காய்ச்சல் தொடந்து இருந்தால் மருத்துவமனைக்கு உடனடியாக செல்லுங்கள். அலட்சியமாக இருந்து விடாதீர்கள். அரசு மருத்துவமனையில் உயர் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதனைத்தொடர்ந்து இலவச வீட்டுமனை பட்டா, வேளாண் இடு பொருட்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், கோட்டாட்சியர் ஜென் கிறிஸ்டிபாய், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கவேல், சீனிவாசன், திமுக ஒன்றிய செயலா ளர்கள் சின்ன மாரிமுத்து, அன்பு ராஜன், செல்வராஜ், மும்மூர்த்தி, விளாத்திகுளம் பேரூராட்சி தலைவர் சூர்யா அய்யன்ராஜ், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • தமிழகம் முழுவதும் 1 கோடி பனை விதைகள் நடும் நிகழ்ச்சி நடக்கிறது.
    • தூத்துக்குடி கேம்ப்-2 கடற்கரையில் 15 லட்சம் பனை விதைகள் நடும் தொடக்க விழா நடைபெற்றது.

    தூத்துக்குடி:

    கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கடற்கரை மாவட்டங்களில் தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நல வாரியம், கிரீன் நாடா சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் நாட்டு நலப்பணி திட்டம் இணைந்து 1 கோடி பனை விதைகள் நடும் நிகழ்ச்சி நடக்கிறது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பார் முதல் பெரியதாழை வரை 163 கிலோமீட்டர் தூரத்திற்கு 15 லட்சம் பனை விதைகள் நடும் தொடக்க விழா தூத்துக்குடி கேம்ப்-2 கடற்கரையில் நடைபெற்றது.

    விழாவை அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் பனை விதைகள் நட்டு தொ டங்கி வைத்தனர். நிகழ்ச்சி யில் தி.மு.க. மாநகரச் செயலாளர் ஆனந்த சேகரன், சமத்துவ மக்கள் கழகம் சார்பில் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் மாலை சூடி அற்புதராஜ், மாவட்ட அவைத் தலைவர் கண்டிவேல், மாவட்ட பொருளாளர் பழனிவேல், மாவட்ட துணைச் செயலாளர் அருள்ராஜ், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சிவசு முத்துக்குமார், மாவட்ட தொண்டர் அணி செயலாளர் முத்து செல்வம், மாவட்ட பிரதிநிதி பெரியசாமி, மாநகரச் செயலாளர் உதயசூரியன், நாடார் பேரவை தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் அருண் சுரேஷ் குமார், மாநகர வார்டு செயலாளர்கள் செந்தூர் பாண்டி, செல்வராஜ், வாகைகுளம் ராஜா மற்றும் ஆல் கண் டிரஸ்ட் நிறுவனர் அரசு வக்கீல் மோகன்தாஸ் சாமுவேல், காமராஜ் கல்லூரி என்.சி.சி. பேராசிரியர் ஆனந்தராஜ், வேளாண் துறை அதிகாரிகள், தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள், சுகாதாரத்துறை அதிகாரிகள், கல்லூரி மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு பனை விதைகள் நடவு செய்தனர்.

    • கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மீளவிட்டான் பெரியசாமி திடலில் கிரிக்கெட் போட்டி தொடக்க விழா நடைபெற்றது.
    • எல்லாத்துறைகளிலும் தமிழகம் முன்னேற்றம் அடைவது போல் இந்த துறையும் சிறந்து விளங்கும் என்று கீதாஜீவன் பேசினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. விளை யாட்டு மேம்பாட்டு அணி சார்பில் கலைஞர் நூற்றா ண்டு விழாவை முன்னிட்டு மீளவிட்டான் பெரியசாமி திடலில் கிரிக்கெட் போட்டி தொடக்க விழா நடை பெற்றது.

    வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சரு மான கீதாஜீவன் தாங்கினார். மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர்கள் குருராஜ், மாதேஸ்வரன், கணேசன், லவ ராஜா, டினோ, ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளரும், மாநகராட்சி மண்டலத் தலை வருமான வக்கீல் பா லகுருசாமி வரவேற்று பேசி னார். விழாவில் அமைச்சர் கீதாஜீவன் பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எல்லா மாவட்டத்திலும் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி விளையாட்டு போட்டிகள் நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டத்திற்கிணங்க இந்த போட்டி நடை பெறுகிறது. இதில் அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி. காரணம் ஓவ்வொரு அணிகளில் பெயர்களையும் பார்க்கின்ற போது இந்த இளைய சமுதாயத்தினரிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது இருக்கிறது என்பதையும் தெரிந்து கொண்டேன். இளைய சமுதாயத்தினர் சிலர் போதை பொருளுக்கு அடிமையாகி தடம் மாறி செல்கின்றனர். அந்த நிலை மாற வேண்டும்.

    அமைச்சர் உதயநிதி அமைச்சராக பொறுப்பேற்ற பின் விளையாட்டு மேம்பாட்டு த்துறை மேலும் வலு வடைந்துள்ளது. பல்வேறு நாடுகள் மட்டுமின்றி உலகில் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களை ஊக்குவித்து வருகிறார். எல்லாத்துறைகளிலும் தமிழகம் முன்னேற்றம் அடைவது போல் இந்த துறையும் சிறந்து விளங்கும். போட்டியில் வெற்றி ஓன்றுதான் இலக்காக இருக்க வேண்டும். கலந்து கொண்ட முதல் படிக்கெட்டே நமக்கு வெற்றி தான்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ, மேயர் ஜெகன் பெரியசாமி, மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி துணைச்செயலாளர் நம்பி ஆகியோர் பேசினர். பின்னர் போட்டியில் கலந்து கொண்ட 100 அணிகளுக்கும் விளை யாட்டு உப கரணங்களை அமைச்சர் கீதாஜீவன், மார்க்க ண்டேயன் எம்.எல்.ஏ, மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் வழங்கினர்.

    விழாவில் தி.மு.க. மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், துணைச்செயலளார் கீதா முருகேசன், மாவட்ட துணைச்செயலாளர் ஆறு முகம், மாநில நெசவாளர் அணி துணை செயலாளர் வசந்தம் ஜெயக்குமார், மாநில மீன வரணி துணைச் செய லாளர் புளோரன்ஸ், மாநகராட்சி மண்டல தலைவர் கலைச்செல்வி, அரசு வக்கீல் மோகன்தாஸ் சாமுவேல், மாவட்ட பொறியாளர் அணி அமை ப்பாளர் அன்பழகன், துணை அமைப்பாளர் சின்னத்துரை, சிறுபான்மை அணி அமைப்பாளர் பொன்சீலன், மகளிர் அணி அமைப்பாளர் கவிதாதேவி, சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ஜெபசிங், நெசவாளர் அணி அமைப்பாளர் பாண்டியராஜன், மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார், இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன் ஜேக்கப், பகுதி செயலாளர்கள் மேகநாதன், ராமகிருஷ்ணன், மாநகர மகளிர் அணி அமைப்பாளர் ஜெயக்கனி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர்கள் அருணா தேவி, நாகராஜன், கவுன்சி லர்கள் சரவணக்குமார், விஜயகுமார், பட்சிராஜ், சுயம்பு, ஜெயசீலி, நாகே ஸ்வரி, அந்தோணி பிரகாஷ் மார்ஷல், ராஜதுரை, மாநகர நெசவாளர் அணி அமைப்பாளர் சீதாராமன், துணை அமைப்பாளர் குமரன், இளைஞர் அணி துணை அமைப்பாளர் ரவி, தொழிலாளர் அணி துணைத்தலைவர் செந்தில்குமார், இலக்கிய அணி தலைவர் நலம் ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் ராஜாகண்ணு, மாவட்ட பிரதிநிதிகள் சக்திவேல், மீனாட்சி சுந்தரம், முன்னாள் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் இம்மானு வேல், மாநகர விளையாட்டு மேம்பாட்டு அணி அமை ப்பாளர் ஆரோக்கிய ராபின் அசோகன், துணை அமைப்பா ளர்கள் செல்வகுமார், ராஜா, அன்பழகன், பிரதீப், சில்வெஸ்டர் சாமுவேல், வட்டச்செயலாளர்கள் கதிரேசன், பாலகுருசாமி, சதீஷ்குமார், முத்துராஜா, செல்வம், முனியசாமி, மனோ, பகுதி பொருளாளர் உலகநாதன், மகளிர் அணி ரேவதி, சத்யா, சந்தனமாரி, மற்றும் கருணா, மணி, கணேசன், மகேஸ்வரசிங், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி பயிற்சி பட்டறை கலைஞர் அரங்கில் மாவட்ட அமைப்பாளர் அபிராமிநாதன் தலைமையில் நடைபெற்றது.
    • ஓவ்வொரு நாளும் முதல்-அமைச்சர் அறிவிக்கும் திட்டங்கள், அறிக்கைகள் அனைத்தையும் சமூகவலைதளங்களில் தெரியப்படுத்த வேண்டும் என்று கீதாஜீவன் கூறினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி பயிற்சி பட்டறை கலைஞர் அரங்கில் மாவட்ட அமைப்பாளர் அபிராமிநாதன் தலைமையில் நடைபெற்றது. வடக்கு மாவட்ட செயலாளரும், சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் கலந்து கொண்டு பேசியதாவது:-

    உடனடி பதிலடி

    தமிழக முதல்-அமைச்சரின் திட்டங்கள், செயல்பாடுகள் அனைத்தையும் வெளி உலகத்திற்கு எடுத்து சொல்லும் தகவல் தொழில்நுட்பத்துறையின் பணி மிகவும் மகத்தானது. ஓவ்வொரு நாளும் முதல்-அமைச்சர் அறிவிக்கும் திட்டங்கள், அறிக்கைகள் அனைத்தையும் சமூகவலைதளங்களில் தெரியப்படுத்த வேண்டும்.

    பா.ஜ.க.வினர் பல்வேறு பழைய தகவல்களையும், நடைபெறாத சம்பவங்களையும் நமது திட்டங்களுக்கும், கட்சிக்கும் எதிராக பதிவு செய்து வருகின்றனர். அதற்கு உடனடியாக நாமும் பதிலடி கொடுக்கும் வகையில் நமது சாதனைகளை பதிவு செய்ய வேண்டும்.

    எந்த மதத்தையும் குறைத்து மதிப்பிடும் கட்சி தி.மு.க. கிடையாது. எல்லா மதத்தையும் மதிக்கிறோம். மதவெறியை எதிர்க்கிறோம். பொதுவாழ்வில் ஈடுபட்டுள்ள எங்களுக்கு எம்மதமும் சம்மதம். ஓன்றே குலம் ஓருவனே தேவன் என்ற வழியில் பணியாற்றி வருகிறோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. பேசும் போது, ஓவ்வொரு சட்டமன்ற தொகுதிகளிலும் குறைந்தபட்சம் 50 ஆயிரம் பேரிடம் சென்று சேரும் வகையில் முதல்-அமைச்சரின் திட்டங்களை, செயல்பாடுகளை, தி.மு.க.வின் வரலாறுகளை கொண்டு சேர்க்க வேண்டும். அப்படி சேர்க்கும் பட்சத்தில் 75 ஆயிரம் வாக்குகளை நாம் பெற்றால் எல்லா தொகுதிகளிலும் வெற்றி பெற்று விடலாம். அதற்கு உங்களுடைய பங்கு அவசியம் என்று கேட்டுக்கொண்டார்.

    கலந்து கொண்டவர்கள்

    கூட்டத்தில் மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்தசேகரன், துணைச்செயலாளர் பிரமிளா, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர்கள் அந்தோணி கண்ணன், பிரபு, நாகராஜன், அருணாதேவி, மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் வக்கீல் பாலகுருசாமி, பொறியாளர் அணி அமைப்பாளர் அன்பழகன், பகுதி செயலாளர்கள் ஜெயக்குமார், ராமகிருஷ்ணன், மாகராட்சி மண்டலத்தலைவர் கலைச்செல்வி, கவுன்சிலர்கள் வைதேகி, ஜெயசீலி, சரண்யா, சுப்புலட்சுமி, விஜயகுமார், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கவிதாதேவி, மாநகர அணி அமைப்பாளர் ஜெயக்கனி, மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார், மாநகர வர்த்தக அணி துணை அமைப்பாளர் கிறிஸ்டோபர் விஜயராஜ், தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அண்ணாதுரை, பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், மாவட்ட பிரதிநிதி சக்திவேல், தகவல் தொழில்நுட்ப அணி பகுதி அமைப்பாளர்கள் மார்க்கிஸ்ட்ராபட், சுரேஷ்குமார், மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    • மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் மாபெரும் கிரிக்கெட் போட்டியை அமைச்சர் கே.என். நேரு மற்றும் கனிமொழி எம்.பி. ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர்.
    • தொடர்ந்து காலை 8.30 மணிக்கு தூத்துக்குடி அம்பேத்கர் நகரில் ஸ்டீம் பார்க்கை திறந்து வைக்கின்றனர்.

    தூத்துக்குடி:

    அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான கீதாஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அமைச்சர் நேரு-கனிமொழி எம்.பி.

    தி.மு.க. முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாகம் மற்றும குடிநீர் வழங்கல் துறை அமைச்சருமான கே.என். நேரு, தி.மு.க. துணைப் பொதுச்செயலளாளரும், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி ஆகியோர் வருகிற 30-ந் தேதி (சனிக்கிழமை) தூத்துக்குடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கின்றனர்.

    அந்த வகையில் அன்று காலை 7 மணிக்கு தூத்துக்குடி மீளவிட்டான் என். பெரியசாமி திடலில் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் மாபெரும் கிரிக்கெட் போட்டியை அமைச்சர் கே.என். நேரு மற்றும் கனிமொழி எம்.பி. ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர்.

    பஸ் நிலையம் திறப்பு

    தொடர்ந்து காலை 8.30 மணிக்கு தூத்துக்குடி அம்பேத்கர் நகரில் ஸ்டீம் பார்க்கை திறந்து வைக்கின்றனர். பின்னர் காலை 9 மணிக்கு தூத்துக்குடி அண்ணா பஸ் நிலைய வளாகத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்பட்டுள்ள அண்ணா பஸ் நிலைய திறப்பு விழா மற்றும் பள்ளிக் கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டுதல், அரசு சார்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகின்றனர்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் புதிய தார்சாலை பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டு வருகின்றன.
    • தனசேகரன்நகர் கிழக்கு பகுதியில் புதிய தார்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் புதிய தார்சாலை பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டு வருகின்றன. அப்பணிகள் முழுமையாக நல்ல முறையில் நடைபெறு கிறதா? என்று சூழற்சி முறையில் எல்லா பகுதி களிலும் ஆய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இந்நிலையில் 13-வது வார்டுக்குட்பட்ட தனசேகரன்நகர் கிழக்கு பகுதியில் புதிய தார்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அப்பணியை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்த சேகரன், மாநகராட்சி மண்டலத்தலைவர் வக்கீல் பாலகுருசாமி, மாவட்ட பிரதிநிதி செல்வகுமார், வட்டப்பிரதிநிதி பாஸ்கர், மணி, அல்பட் உள்பட பலர் உடனிருந்தனர்.

    • தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. மருத்துவரணியினர் பல்வேறு மருத்துவ உபகரண பொருட்களை வழங்கி வருகின்றனர்.
    • இதன் முதல் கட்டமாக கோவில்பட்டி, விளாத்திக்குளம், புதூர் பகுதியில் உள்ள சுகாதார நிலையங்களுக்கு உபகரண பொருட்கள் கடந்த வாரம் வழங்கப்பட்டன.

    தூத்துக்குடி:

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் உள்ள சுகாதார நிலை யங்களுக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. மருத்துவரணியினர் பல்வேறு மருத்துவ உபகரண பொருட்களை வழங்கி வருகின்றனர்.

    உபகரண பொருட்கள்

    வடக்கு மாவட்ட தி.மு.க மருத்துவரணி சார்பில் முதல் கட்டமாக கோவில் பட்டி, விளாத்திக்குளம், புதூர் பகுதியில் உள்ள சுகா தார நிலையங்களுக்கு உப கரண பொருட்கள் கடந்த வாரம் வழங்கப் பட்டன.

    இந்நிலையில் தூத்துக்குடி மாநகராட்சி கணேஷ் நகர் பகுதியில் உள்ள நகர்நல ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பொதுமக்களின் நலன் காக்கும் வகையில் எடை பரிசோதனை எந்திரம், போர்வைகள், நாற்காலிகள், ரத்தம், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்ற வைகள் பரிசோத னைக்கான உபகரண பொருட்களை ஆரம்ப சுகா தார மருத்துவ அலுவலர் ஆர்த்தியிடம் வடக்கு மாவட்ட தி.மு.க. செய லாளரும், சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.

    கலந்து கொண்டவர்கள்

    விழாவில் மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்த சேகரன், துணை மேயர் ஜெனிட்டா, சுகாதாரத்துறை இணை இயக்குநர் பொற் செல்வன், பகுதி செய லாளரும், கவுன்சிலருமான ராமகிருஷ்ணன், பெருமாள் கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் செந்தில்குமார், மாநகராட்சி நகர்நல அலுவலர் சுமதி, கவுன்சிலர்கள் சரவணக்குமார், வைதேகி, பொன்னப்பன், கண்ணன், வடக்கு மாவட்ட தி.மு.க. மருத்துவ அணி தலைவர் அருண்குமார், துணை தலைவர் ஜூடி ஜீவன்குமார், மாவட்ட பிரதிநிதி நாராயணன், மாவட்ட சிறுபாண்மை அணி துணை அமைப்பாளர் பெனில்டஸ், வட்ட செயலாளர்கள் சுப்பையா, மூக்கையா, சிங்கராஜ், மாநகர மருத்துவ அணி துணைத்தலைவர் மாரிமுத்து, நெசவாளர் அணி துணை அமைப்பாளர் குமரன், வர்த்தக அணி துணை அமைப்பாளர் கிறிஸ்டோபர் விஜயராஜ், பகுதி பிரதிநிதி சாமுவேல் செல்வராஜ், தெற்கு மாவட்ட ம.தி.மு.க. இளைஞரணி செயலாளர் சரவணப்பெருமாள் மற்றும் மணி, அல்பர்ட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பெண்கள் இம்முகாம்களில் கலந்து கொண்டு, தங்கள் விண்ணப்பங்களின் நிலை தொடர்பான சந்தேகங்கள் மற்றும் கேள்விகளை கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
    • சிலர் தங்களது பெற்றோர்களின் வங்கி கணக்கு விவரங்களை கொடுத்ததால் பிரச்சனை உள்ளது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தாசில்தார் அலுவலகத்தில் மகளிருக்கு மாதந்தோறும் ரூ. 1,000 வழங்கிடும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் குறித்து பொதுமக்களிடம் இருந்து வரப்பெறும் விண்ணப்பங்களின் நிலை தொடர்பான சந்தேகங்கள் மற்றும் கேள்விகளை நிவர்த்தி செய்திடவும், மேல்முறையீடு தொடர்பாக தெளிவுரை வழங்கிடவும் உதவி மையம் அமைக்கப்ப ட்டுள்ளது.

    அமைச்சர் ஆய்வு

    அதன் செயல்பாடுகள் குறித்து வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரு மான கீதாஜீவன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் பேசியதாவது:-

    கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் ரூ.1,000 மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்கள் மீண்டும் விண்ணப்பம் செய்யலாம். தூத்துக்குடி மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகம், தூத்துக்குடி சப்-கலகெ்டர் அலுவலகம், ஆர்.டி.ஓ. அலுவலகங்கள் மற்றும் அனைத்து தாசில்தார் அலுவலகங்களிலும் அமைக்கப்பட்டுள்ள உதவி மையத்தின் வாயிலாக சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.

    வங்கி கணக்கு பிரச்சினை

    பெண்கள் இம்முகாம் களில் கலந்து கொண்டு, தங்கள் விண்ணப்பங்களின் நிலை தொடர்பான சந்தேகங்கள் மற்றும் கேள்விகளை கேட்டு தெரிந்து கொள்ளலாம். சிலருக்கு வங்கி கணக்கில் பிரச்சனை உள்ளது. சிலர் தங்களது பெற்றோர்களின் வங்கி கணக்கு விவரங்களை கொடுத்ததால் பிரச்சனை உள்ளது. சிலர் மேலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி, கீழுர் தொ டக்க வேளாண்மை கூட்டு றவு வங்கியில் கணக்கு தொடங்கி யுள்ளார்கள்.

    மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியில் கணக்கு தொடங்க வே ண்டும். சிலர் தபால் நிலை யங்களில் கணக்கு வைத்து ள்ளார்கள். இதுபோன்ற வங்கி கணக்கு தொடர்பான பிரச்சனைகள் எல்லாம் உள்ளது.

    எனவே இதுமாதிரியான தவறையெல்லாம் ஆன்லைனில் சரி செய்யும் பணிகள் இந்த முகாம் மூலம் நடைபெற்று வரு கிறது. கள ஆய்வு பணியின் போது சிலரும், வருமான வரி செலுத்திய தாலும் சிலருக்கும் விண்ணப்ப படிவங்கள் தள்ளுபடி செய்யப்பட்டி ருக்கிறது. இன்னும் 30 நாட்கள் இருப்பதால் இ-சேவை மையம் மூலம் மேல்முறையீடு செய்யலாம். மேல் முறையீடு செய்வ தற்கான கட்ட ணங்கள் எதுவும் இ-சேவை மைய த்தில் வசூலிக்கக் கூடாது என்று முதல்-அமைச்சர் தெரிவித்து ள்ளார்

    இவ்வாறு அவர் பேசினார்.

    ஆய்வில் டி.ஆர்.ஓ. அஜய் சீனிவாசன், தாசில்தார்கள் பிரபாகரன், ஜான்சன், தேவசகாயம், மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார், பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், ராமகிருஷ்ணன், மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் அருண்சுந்தர், கவுன்சிலர்கள் கந்தசாமி, ராமுத்த ம்மாள், வட்ட செயலாளர் செந்தில்குமார், வட்ட பிரதிநிதி பாஸ்கர், தகவல் தொழில்நுட்ப அணி மாக்கின் ராபட் மற்றும் கருணா, மணி, அல்பட், செய்தி மக்கள் தொடர்பு உதவி அலுவலர் முத்துக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • போத்தி விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு போத்தி விநாயகருக்கு வருஷாபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
    • அதனை தொடர்ந்து அனைத்து தரப்பு பொதுமக்களும் கலந்து கொண்ட சமபந்தி அன்னதான விருந்தை அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள போத்தி விநாயகர் கோவில் தர்மகர்த்தாவாக முன்னாள் தி.மு.க. மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பெரியசாமி 40 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வந்தார்.

    அன்னதானம்

    இந்நிலையில் போத்தி விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு போத்தி விநாயகருக்கு வருஷாபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து அனைத்து தரப்பு பொதுமக்களும் கலந்து கொண்ட சமபந்தி அன்னதான விருந்தை சாமி தரிசனம் செய்து வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    விழாவில் தர்மகர்த்தா ராஜா பெரியசாமி, செயலாளர்கள் செல்வராஜ், செல்வகுமார், பொருளாளர் வேல்சாமி, நிர்வாகக்குழு உறுப்பினர்கள் செல்லப்பாண்டி, ரத்தினசாமி, பேச்சிமுத்து, ஜீவானந்தம், ஆழ்வார்ராஜ், மந்திரமூர்த்தி, இளஞ்சூரியன், ராஜ்குமார், முருகேசன், ராம்குமார், சேகர், மணி, கணேஷ், சண்முகசுந்தரம், அசோக் பெரியசாமி, சரவணன், தங்கசந்திரன், சித்திரைசெல்வன், பெரியசாமி, மாணிக்கம், மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்தசேகரன், பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டுராஜா, ராஜா, கவுன்சிலர்கள் கீதாமுருகேசன், ரெங்கசாமி, தொண்டரணி துணை அமைப்பாளர் ராமர், மாநில பேச்சாளர் சரத்பாலா, விவசாய அணி தங்கராஜ், முன்னாள் கவுன்சிலர்கள் ராஜாமணி, முத்துச்செல்வம், செல்வகுமார், ரவீந்திரன், செந்தில்குமார், மற்றும் கருணா, பிரபாகர், மணி, ஜோஸ்பர், லிங்கராஜா, அல்பட் உள்பட பலர் கலந்து கொண்டனர். அன்னதானத்தில் 10 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.

    • தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதி முழுவதும் ஒவ்வொரு பகுதியாக பொதுமக்களின் குறைகளை அமைச்சர் கீதாஜீவன் நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்று வருகிறார்.
    • புதியசாலை வசதி, கழிவுநீர் தேங்காதவாறு கால்வாய் வசதி அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதி முழுவதும் ஒவ்வொரு பகுதியாக பொதுமக்களின் குறைகளை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாள ரும், சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் பொதுமக்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக் களை பெற்று வருகிறார்.

    அதன்படி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 45-வது வார்டு லெவிஞ்சிபுரம் பகுதிகளில் உள்ள பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்து அப்பகுதியில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு செய்தார். அப்போது புதியசாலை வசதி, கழிவுநீர் தேங்காதவாறு கால்வாய் வசதி அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

    பின்னர் பொது மக்களிடம் அமைச்சர் கீதாஜீவன் கூறுகையில், மக்களுக்கு தேவையான அடிப்படை பணிகள் வசதிகள் அனைத்தும் 10 ஆண்டுகளாக அ.தி.மு.க. ஆட்சியில் முறையாக நடைபெறாமல் இருந்ததால் பல்வேறு குறைபாடுகள் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. அதை முழுமையாக அதிகாரிகளிடம் எடுத்துக்கூறி அனைத்து குறைகளையும் முழுமையாக நிறைவேற்றி தருவேன். இந்த பகுதிக்கு தி.மு.க. ஆட்சி வந்த பிறகு புதிய தார்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. விடுபட்ட பகுதிக்கும் முழுமையாக சாலை, கால்வாய் வசதிகள் அமைத்து தரப்படும். மேலும் குடிதண்ணீர் சீரான முறையில் வழங்க ப்பட்டு வருகிறது. எந்த குறைபாடுகள் இருந்தாலும் அதை முழுமையாக செய்து தருவேன் என்று உறுதி அளித்தார்.

    அப்போது, மாநகராட்சி பொறியாளர் சரவணன், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், பகுதி செய லாளரும் கவுன்சில ருமான ராமகிருஷ்ணன், மாவட்;ட பிரதிநிதி செந்தில் குமார், வட்டச்செயலாளர் சுரேஷ், வட்டப்பிரதிநிதிகள் பாஸ்கர், ரஜினிமுருகன், மற்றும் நடராஜன், மணி, அல்பட் உள்பட பலர் உடனிருந்தனர்.

    • தூத்துக்குடி மாநகர தி.மு.க. விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளராக ஆரோக்கிய ராபின் அசோகன், துணை அமைப்பாளர்களாக செல்வக்குமார், ராஜா உள்ளிட்டோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
    • 2024-ல் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் விளையாட்டு மேம்பாட்டு அணியின் பங்கு அதிகம் இருக்க வேண்டும் என்று கீதாஜீவன் கூறினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகர தி.மு.க. விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளராக ஆரோக்கிய ராபின் அசோகன், துணை அமைப்பாளர்களாக செல்வக்குமார், ராஜா, அன்பழகன், பிரதீப், சில்வெஸ்டர் சாமுவேல் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    இதனையடுத்து அவர்கள் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவனை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

    அப்போது அமைச்சர் கீதாஜீவன் கூறுகையில், தமிழக முதல்-அமைச்சர் ஆட்சியில் செய்த சாதனைகளையும், திட்டங்களையும், மாநில வளர்ச்சி பணிகளையும் அனைத்து தரப்பினர்கள் மத்தியிலும் கொண்டு போய் சேர்க்க வேண்டும். 2024-ல் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் விளையாட்டு மேம்பாட்டு அணியின் பங்கு அதிகம் இருக்க வேண்டும். அதிக உறுப்பினர்களை சேர்த்து மற்ற மாவட்டங்களை காட்டிலும் நமது மாவட்டம் முன்னோடி மாவட்டமாக திகழ்வதற்கு ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும் என்றார்.

    அப்போது மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளரும், மாநகராட்சி தெற்கு மண்டல தலைவருமான வக்கீல் பாலகுருசாமி, மாவட்ட பிரதிநிதி செந்தில்குமார் மற்றும் கருணா, மணி, அல்பட் ஆகியோர் உடனிருந்தனர்.

    • ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் தேசிய ஊட்டச்சத்து மாதமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
    • டூவிபுரத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பு அங்கன்வாடி பணியாளர்கள், அலுவலர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    தூத்துக்குடி:

    சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் தேசிய ஊட்டச்சத்து மாதமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

    அதன் அடிப்படையில் இந்தாண்டு செப்டம்பர் 1-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை ஊட்டச்சத்து மிக்க இந்தியா, எழுத்தறிவு பெற்ற இந்தியா, வலிமையான இந்தியா என்பதை வலியுறுத்தி தூத்துக்குடி டூவிபுரத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பு அங்கன்வாடி பணிய ளர்கள், அலுவலர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். முன்னதாக குத்துவிளக்கு ஏற்றினார்.

    முக்கிய வீதிகள் வழியாக சென்ற விழிப்புணர்வு பேரணி தூத்துக்குடி தாலுகா அலுவலகம் அருகில் நிறைவடைந்தது.

    நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சரஸ்வதி, மாவட்ட சமூக நல அலுவலர் பொறுப்பு ரூபி பெர்ணான்டோ, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விவேக் ராஜா, மாவட்ட திட்ட உதவியாளர் ஜெனிபா கிறிஸ்டி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட வட்டார அலுவலர்கள் ஜெயாதுரை பாண்டியன், தாஜீன்னிஷா பேகம், காயத்ரி, திலகா, சண்முகப்பிரியா, புள்ளியல் ஆய்வாளர் முத்தரசி, சுகாதார பணிகள் துணை இணை இயக்குநர்கள் பொற் செல்வன், ஜெகவீரபாண்டியன், சுகாதார துறை அலுவலர்கள் கன்னியம்மாள், பகவதி, பத்மா, பெரியசாமி, மாவட்ட குழந்தைகள் பாது காப்பு நல அலுவலர்கள் அலெக்ஸ், ஜேம்ஸ், மாவட்ட சமூக நலத்துறை அலுவலக கண்காணிப்பாளர் ஹேம லதா, பாதுகாப்பு அலுவலர் செல்வமெர்சி, உதவியாளர் சுபத்ரா, மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்த சேகரன், மாவட்ட தி.மு.க. பிரதிநிதி செந்தில்குமார், கவுன்சிலர்கள் விஜயகுமார், ரெக்ஸ்லின், வட்ட பிரதிநிதி பாஸ்கர் மற்றும் கருணா, மணி, அல்பர்ட், அரசு அலுவலர்கள், பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×