என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

தூத்துக்குடியில் புதிதாக கட்டப்பட்ட பஸ் நிலையம் 30-ந் தேதி திறப்பு - அமைச்சர் கீதாஜீவன் அறிக்கை

- மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் மாபெரும் கிரிக்கெட் போட்டியை அமைச்சர் கே.என். நேரு மற்றும் கனிமொழி எம்.பி. ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர்.
- தொடர்ந்து காலை 8.30 மணிக்கு தூத்துக்குடி அம்பேத்கர் நகரில் ஸ்டீம் பார்க்கை திறந்து வைக்கின்றனர்.
தூத்துக்குடி:
அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான கீதாஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அமைச்சர் நேரு-கனிமொழி எம்.பி.
தி.மு.க. முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாகம் மற்றும குடிநீர் வழங்கல் துறை அமைச்சருமான கே.என். நேரு, தி.மு.க. துணைப் பொதுச்செயலளாளரும், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி ஆகியோர் வருகிற 30-ந் தேதி (சனிக்கிழமை) தூத்துக்குடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கின்றனர்.
அந்த வகையில் அன்று காலை 7 மணிக்கு தூத்துக்குடி மீளவிட்டான் என். பெரியசாமி திடலில் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் மாபெரும் கிரிக்கெட் போட்டியை அமைச்சர் கே.என். நேரு மற்றும் கனிமொழி எம்.பி. ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர்.
பஸ் நிலையம் திறப்பு
தொடர்ந்து காலை 8.30 மணிக்கு தூத்துக்குடி அம்பேத்கர் நகரில் ஸ்டீம் பார்க்கை திறந்து வைக்கின்றனர். பின்னர் காலை 9 மணிக்கு தூத்துக்குடி அண்ணா பஸ் நிலைய வளாகத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்பட்டுள்ள அண்ணா பஸ் நிலைய திறப்பு விழா மற்றும் பள்ளிக் கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டுதல், அரசு சார்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகின்றனர்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.