search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Grama saba meeting"

    • கூட்டத்தில் மார்கண்டேயன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்ட றிந்து அதை மனுக்களாக பெற்றுக்கொண்டார்.
    • நிகழ்ச்சிக்கு முன்னதாக ஊராட்சி மன்ற கட்டிடம் அருகில் மருத்துவ முகாம் நடைபெற்றது.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் அருகே உள்ள புதூர் ஊராட்சி ஒன்றியம், தாப்பாத்தி ஊராட்சியில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு, கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் பெருமாளம்மாள் பால்பாண்டி தலைமையில் நடைபெற்றது.

    மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ.

    இந்த கிராம சபை கூட்டத்தில் சிறப்பு விருந்தி னராக மார்கண்டேயன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்ட றிந்து அதை மனுக்களாக பெற்றுக் கொண்டார்.

    பின்னர் வேளாண் இடு பொருட்கள், கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பரிசு பெட்டகம் உள்பட பல்வேறு நலத்திட்ட உதவி களை வழங்கினார். மேலும் தூய்மை காவலர்களுக்கு பொதுமக்கள் முன்னிலை யில் சால்வை அணிவித்து கவுரவிக்கப்பட்டு ஊக்கத் தொகை வழங்கினார்.

    மருத்துவ முகாம்

    நிகழ்ச்சிக்கு முன்னதாக ஊராட்சி மன்ற கட்டிடம் அருகில் மருத்துவ முகாம் நடைபெற்றது. அதில் ரத்த கொதிப்பு, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய்கான பரிசோதனை நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் எட்டையா புரம் தாசில்தார் மல்லிகா, சமூக பாதுகாப்பு துறை தாசில்தார் ரகுபதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சசிகுமார், வெங்க டேசன், உதவி செயற் பொறியாளர் செந்தில் குமார், உதவி மின் பொறி யாளர் செல்வகுமார், வேளாண்மை துறை உதவி இயக்குனர் சின்னக்கண்ணு, தோட்டக்கலைத் துறை உதவி இயக்குனர் நஸிமா, புதூர் மேற்கு ஒன்றிய செய லாளர் மும்மூர்த்தி, புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், தூத் துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல், மாவட்ட பிரதிநிதி சோலைசாமி, புதூர் மேற்கு ஒன்றிய ஆதி திராவிடர் நல அணி அமைப்பாளர் கணேச பாண்டியன், கிளைச் செய லாளர் வள்ளியப்பன், எட்டையபுரம் நகர இளை ஞரணி துணை அமைப் பாளர் அருள் சுந்தர், விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கி ணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட துறை சார்ந்த அதிகாரிகள் கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • நட்டாத்தி இ-சேவை மைய வளாகத்தில் பஞ்சாயத்து தலைவர் சுதாகலா தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
    • விவசாயிகளுக்கு இடுபொருட்கள், வேளாண்மை கருவிகள், மகளிர் சுய உதவிக் கடன் உட்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி கலெக்டர் பேசினார்.

    சாயர்புரம்:

    நட்டாத்தி இ-சேவை மைய வளாகத்தில் பஞ்சாயத்து தலைவர் சுதாகலா தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி, பஞ்சாயத்து துணை தலைவர் எஸ்.வி.பி.எஸ். பண்டாரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு பார்வையாளராக மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி கலந்து கொண்டு அரசு துறை சார்பில் அமைக்கபட்டிருந்த கண்காட்சியை பார்வையிட்டார்.

    தொடர்ந்து பஞ்சாயத்து தூய்மை பணியாளர்களுக்கு மழை கோர்ட் மற்றும் சால்வை கொடுத்து கவுரவபடுத்தினார். மேலும் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தில் தனி நபர் வேலை அடையாள அட்டை, சிறப்பாக செயல்பட்டு வரும் மகளிர் சுய உதவிக் குழுவினர்களுக்கு பாராட்டி பரிசு வழங்கினார். பலவேறு அரசு துறை சார்பில் விவசாயிகளுக்கு மரக்கன்று, விவசாயிகளுக்கு இடுபொருட்கள், வேளாண்மை கருவிகள், மருந்து மாத்திரைகள், மகளிர் சுய உதவிக் கடன் உட்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.

    தொடர்ந்து ஊர் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநர் பொற்செல்வன், ஏரல் வட்டார மருத்துவ அலுவலர் தினேஷ், ஏரல் தாசில்தார் கைலாச குமாரசாமி, ஆதிதிராவிட நலத்துறை தாசில்தார் கோபால கிருஷ்ணன், சாயர்புரம் ஆர்.ஐ. விஜய் ஆனந்த், திட்ட இயக்குநர் வீரபுத்திரன், மாவட்ட பஞ்சாயத்து உதவி இயக்குநர் உலகநாதன், செயலர் ஜெயஸ்ரீ, திருவை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவராஜன் பானு.ஒன்றிய பணி மேற்பார்வையாளர் சிவகலா, ஸ்ரீவை யூனியன் துணை தலைவர் விஜயன், பஞ்சாயத்து முன்னாள் தலைவர் எஸ்.வி.பி.எஸ். ஜெயக்குமார், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் விஜய், பற்றாளர் ஜோசப், வட்டார ஒருங்கிணைப்பாளர் சாம்துரை, திட்ட ஒருங்கிணைப்பாளர் வெள்ளைசாமி, பஞ்சாயத்து உறுப்பினர்கள் அன்னகனி, ஜான்சிராணி, சுப்புலட்சுமி, சரோஜா, கொம்புகாரன் பொட்டல் பண்டாரம், பிரியா, மணிமந்திரம் மற்றும் பல்வேறு அரசு துறை அதிகாரிகள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் பஞ்சாயத்து செயலர் முத்துராஜ் நன்றி கூறினார்.

    • வெங்காடம்பட்டி ஊராட்சியில் உள்ளாட்சி தின கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
    • இதில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பொருள் செல்வி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    கடையம்:

    கடையம் யூனியன் வெங்காடம்பட்டி ஊராட்சியில் உள்ளாட்சி தின கிராம சபை கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் சாருகலா ரவி தலைமை தாங்கினார். மாவட்ட உதவி இயக்குனர் தணிக்கை ருக்மணி, வட்டார வளர்ச்சி அலுவலர் வட்டார ஊராட்சி திருமலை முருகன், வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சி கண்ணன் மற்றும் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சித்ரா பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பொருள் செல்வி, அம்பிகா , சரஸ்வதி, விஜயா, ரேகா, பற்றாளர் அசோக், ஊராட்சி செயலர் பாரத், வேளாண் துறை அதிகாரி, பொறியியல் துறை உதவி பொறியாளர், கால்நடை மருத்துவர் , வெங்காடம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் உள்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • கூட்டத்தில் முதல்-அமைச்சரின் கிராம சபை கூட்டம் குறித்த உரை தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது.
    • அந்தோணியார்புரத்தில் குடிநீர், தெரு விளக்கு உள்ளிட்ட கோரிக்கைகள் உடனடியாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் மறவன்மடம் ஊராட்சியில் கிராமசபை கூட்டம் ஊராட்சித் தலைவர் லில்லி மலர் தலைமையில் நடைபெற்றது.

    ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், ஊராட்சி துணைத் தலைவர் பொன்வேல் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர்.

    ஊராட்சி செயலர் சத்திய ராஜ் வரவேற்று வளர்ச்சி பணி தீர்மானங்களை நிறை வேற்றினார். சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார்.

    கூட்டத்தில் முதல்-அமைச்சரின் கிராம சபை கூட்டம் குறித்த உரை தொலைக்காட்சியின் ஒளிபரப்பப்பட்டது. இதனைத்தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி பேசிய பொது மக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டு அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் பேசுகையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை யிலான அரசு பொறுப்பேற்ற பிறகு மக்களின் தேவை அறிந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி நல்லாட்சி நடத்தி வருகிறது.

    தற்போது கலைஞரின் மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை வழங்கப்பட்டுள்ளது. விடு பட்டவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள தி.மு.க. அரசு பொறுப்பேற்பதற்கு முன்பு ஆண்டுக்கு 4 முறை நடந்து வந்த கிராம சபை கூட்டங்கள் தற்போது 2 நாட்கள் கூடுதலாக சேர்த்து ஆண்டுக்கு 6 முறை நடத்தப்பட்டு வருகிறது.

    கிராமசபை கூட்டங்களில் மக்கள் பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி மனு அளித்துள்ளனர். அந்த மனுக்களை உடனடியாக பரிசீலனை செய்து நிறை வேற்றப்படும். அந்தோணி யார்புரத்தில் குடிநீர், தெரு விளக்கு, நாச்சியார்புரத்தில் அங்கன்வாடி, இலவசவீடு, மயான பாதை உள்ளிட்ட கோரிக்கைகள் உடனடியாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    நிகழ்ச்சியில் ஊராட்சிகள் உதவி இயக்குனர் உலக நாதன், தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஹெலன் பொன்மணி, வசந்தா, வேளாண்மை இணை இயக்குனர் பால சுப்ரமணியன், கால்நடை பராமரிப்புத் துறை சஞ்சீவன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட மாவட்ட அலுவலர் சரஸ்வதி, சுகாதாரப் பணிகள் இயக்குனர் லிங்கம், மாவட்ட வழக்கலர் அபுல் காசிம், தாசில்தார் பிரபாகரன், மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் உமரிசங்கர், மாவட்ட அவைத் தலைவர் அருணாச் சலம், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு அமைப்பாளர் மாவட்ட கவுன்சிலர் வக்கீல் முள்ளக்காடு செல்வகுமார், இளைஞர் அணி செயலாளர் ராமஜெயம், மாவட்ட ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் டிடிசி.ராஜேந்திரன், மாநகர கவுன்சிலர் ரெங்கசாமி, ஒன்றிய தி.மு.க. செய லாளர்கள் ஜெயக்கொடி, சுப்பிரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வில்லமரத்துப்பட்டி கிராமத்தில் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவி தலைமையில் நடைபெற்றது.
    • இலவச வீட்டுமனை பட்டா, வேளாண் இடு பொருட்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும் அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.

    விளாத்திகுளம்:

    மகாத்மா காந்தியடிகளின் 155-வது பிறந்த நாளை யொட்டி தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வில்லமரத்துப் பட்டி கிராமத்தில் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவி தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண் டார்.

    அப்போது அவர் பேசுகையில்:-

    பெண்கள் சுயமாக முன்னேற கைத்தொழிலை கற்று கொள்ள வேண்டும். அதற்கான வாய்ப்புகளை தி.மு.க. அரசு ஏற்படுத்தி தந்து உள்ளது. தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பு ஏற்ற பின்பு உள்ளாட்சி அமைப்புகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது. மகளிர் உரிமை தொகை நிராகரிப்பட்ட வர்கள் முறையீடு செய்து பரிசீலனை உள்ள பெண்களுக்கு கட்டயம் உரிமை தொகை கிடைக்கும். நிராகரிக்கப்பட்டவர்க ளுக்கு உரிய விளக்கமும் அளிக்கபட்டு உள்ளது.

    தகுதி உள்ள அனைவருக்கும் உரிமை தொகை கிடைக்கும். 18-ந்தேதிகுள் இ-சேவை மையம் மூலமாக மேல் முறையீடு செய்து விடவும். கர்ப்பிணி தாய்மார்கள் ஊட்டசத்து உள்ள உணவை உன்ன வேண்டும். காய்ச்சல் தொடந்து இருந்தால் மருத்துவமனைக்கு உடனடியாக செல்லுங்கள். அலட்சியமாக இருந்து விடாதீர்கள். அரசு மருத்துவமனையில் உயர் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதனைத்தொடர்ந்து இலவச வீட்டுமனை பட்டா, வேளாண் இடு பொருட்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், கோட்டாட்சியர் ஜென் கிறிஸ்டிபாய், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கவேல், சீனிவாசன், திமுக ஒன்றிய செயலா ளர்கள் சின்ன மாரிமுத்து, அன்பு ராஜன், செல்வராஜ், மும்மூர்த்தி, விளாத்திகுளம் பேரூராட்சி தலைவர் சூர்யா அய்யன்ராஜ், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • வடக்கு சொட்டையன் தோப்பில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
    • தீர்மானங்களை ஊராட்சி செயலர் ஜெயக்குமார் வாசித்தார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் மாப்பிள்ளையூரணி ஊராட்சி தலைவர் சரவணகுமார் தலைமையில் குடியரசு தின விழா கிராம சபை கூட்டம் வடக்கு சொட்டையன் தோப்பில் நடைபெற்றது. துணைத் தலைவர் தமிழ்ச்செல்வி, உறுப்பினர்கள் மகேஸ்வரி, ஜீனத்பீவி, பாரதிராஜா, அந்தோணி பாலம்மாள், தங்கப்பாண்டி, சக்திவேல், ராணி, வசந்தகுமாரி, பாண்டியம்மாள், மிக்கேல்அருள்ஸ்டாலின், உமா மகேஸ்வரி,தங்கமாரிமுத்து, ஜேசுராஜா,ஜேசுஅந்தோணி பெலிக்ஸ் மற்றும் அரசு துறையினர் உட்பட பல்வேறு துறை சார்ந்தவர்கள் கலந்து கொண்டனர் ஊராட்சி செயலர் ஜெயக்குமார் ஊராட்சி தீர்மானங்களை வாசித்தார்.

    கூட்டத்தில் புதிய சாலைகள் அமைத்த ஊராட்சி தலைவர் சரவணக்குமாருக்கு பாராட்டு தெரிவித்த பொதுமக்கள் மேலும் புதிய சாலைகள் அமைக்க கோரிக்கை விடுத்தனர். கூட்டத்தில் ஊராட்சி தலைவர் சரவணகுமார் பேசும்போது, பொதுமக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்,அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு முறையான போக்குவரத்து வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.


    ×