search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடியில்  கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கிரிக்கெட் போட்டி - அமைச்சர்  கீதாஜீவன் தொடங்கி வைத்தார்
    X

    கிரிக்கெட் போட்டியினை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்த காட்சி.

    தூத்துக்குடியில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கிரிக்கெட் போட்டி - அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்

    • கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மீளவிட்டான் பெரியசாமி திடலில் கிரிக்கெட் போட்டி தொடக்க விழா நடைபெற்றது.
    • எல்லாத்துறைகளிலும் தமிழகம் முன்னேற்றம் அடைவது போல் இந்த துறையும் சிறந்து விளங்கும் என்று கீதாஜீவன் பேசினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. விளை யாட்டு மேம்பாட்டு அணி சார்பில் கலைஞர் நூற்றா ண்டு விழாவை முன்னிட்டு மீளவிட்டான் பெரியசாமி திடலில் கிரிக்கெட் போட்டி தொடக்க விழா நடை பெற்றது.

    வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சரு மான கீதாஜீவன் தாங்கினார். மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர்கள் குருராஜ், மாதேஸ்வரன், கணேசன், லவ ராஜா, டினோ, ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளரும், மாநகராட்சி மண்டலத் தலை வருமான வக்கீல் பா லகுருசாமி வரவேற்று பேசி னார். விழாவில் அமைச்சர் கீதாஜீவன் பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எல்லா மாவட்டத்திலும் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி விளையாட்டு போட்டிகள் நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டத்திற்கிணங்க இந்த போட்டி நடை பெறுகிறது. இதில் அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி. காரணம் ஓவ்வொரு அணிகளில் பெயர்களையும் பார்க்கின்ற போது இந்த இளைய சமுதாயத்தினரிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது இருக்கிறது என்பதையும் தெரிந்து கொண்டேன். இளைய சமுதாயத்தினர் சிலர் போதை பொருளுக்கு அடிமையாகி தடம் மாறி செல்கின்றனர். அந்த நிலை மாற வேண்டும்.

    அமைச்சர் உதயநிதி அமைச்சராக பொறுப்பேற்ற பின் விளையாட்டு மேம்பாட்டு த்துறை மேலும் வலு வடைந்துள்ளது. பல்வேறு நாடுகள் மட்டுமின்றி உலகில் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களை ஊக்குவித்து வருகிறார். எல்லாத்துறைகளிலும் தமிழகம் முன்னேற்றம் அடைவது போல் இந்த துறையும் சிறந்து விளங்கும். போட்டியில் வெற்றி ஓன்றுதான் இலக்காக இருக்க வேண்டும். கலந்து கொண்ட முதல் படிக்கெட்டே நமக்கு வெற்றி தான்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ, மேயர் ஜெகன் பெரியசாமி, மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி துணைச்செயலாளர் நம்பி ஆகியோர் பேசினர். பின்னர் போட்டியில் கலந்து கொண்ட 100 அணிகளுக்கும் விளை யாட்டு உப கரணங்களை அமைச்சர் கீதாஜீவன், மார்க்க ண்டேயன் எம்.எல்.ஏ, மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் வழங்கினர்.

    விழாவில் தி.மு.க. மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், துணைச்செயலளார் கீதா முருகேசன், மாவட்ட துணைச்செயலாளர் ஆறு முகம், மாநில நெசவாளர் அணி துணை செயலாளர் வசந்தம் ஜெயக்குமார், மாநில மீன வரணி துணைச் செய லாளர் புளோரன்ஸ், மாநகராட்சி மண்டல தலைவர் கலைச்செல்வி, அரசு வக்கீல் மோகன்தாஸ் சாமுவேல், மாவட்ட பொறியாளர் அணி அமை ப்பாளர் அன்பழகன், துணை அமைப்பாளர் சின்னத்துரை, சிறுபான்மை அணி அமைப்பாளர் பொன்சீலன், மகளிர் அணி அமைப்பாளர் கவிதாதேவி, சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ஜெபசிங், நெசவாளர் அணி அமைப்பாளர் பாண்டியராஜன், மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார், இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன் ஜேக்கப், பகுதி செயலாளர்கள் மேகநாதன், ராமகிருஷ்ணன், மாநகர மகளிர் அணி அமைப்பாளர் ஜெயக்கனி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர்கள் அருணா தேவி, நாகராஜன், கவுன்சி லர்கள் சரவணக்குமார், விஜயகுமார், பட்சிராஜ், சுயம்பு, ஜெயசீலி, நாகே ஸ்வரி, அந்தோணி பிரகாஷ் மார்ஷல், ராஜதுரை, மாநகர நெசவாளர் அணி அமைப்பாளர் சீதாராமன், துணை அமைப்பாளர் குமரன், இளைஞர் அணி துணை அமைப்பாளர் ரவி, தொழிலாளர் அணி துணைத்தலைவர் செந்தில்குமார், இலக்கிய அணி தலைவர் நலம் ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் ராஜாகண்ணு, மாவட்ட பிரதிநிதிகள் சக்திவேல், மீனாட்சி சுந்தரம், முன்னாள் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் இம்மானு வேல், மாநகர விளையாட்டு மேம்பாட்டு அணி அமை ப்பாளர் ஆரோக்கிய ராபின் அசோகன், துணை அமைப்பா ளர்கள் செல்வகுமார், ராஜா, அன்பழகன், பிரதீப், சில்வெஸ்டர் சாமுவேல், வட்டச்செயலாளர்கள் கதிரேசன், பாலகுருசாமி, சதீஷ்குமார், முத்துராஜா, செல்வம், முனியசாமி, மனோ, பகுதி பொருளாளர் உலகநாதன், மகளிர் அணி ரேவதி, சத்யா, சந்தனமாரி, மற்றும் கருணா, மணி, கணேசன், மகேஸ்வரசிங், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×