search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Minister Geetha Jeevan"

    • அமைச்சர் கீதாஜீவனிடம் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை மனுவாக அளித்தனர்.
    • அதில், 2-ம் கேட் பகுதியில் குறைகளை கேட்ட அமைச்சரிடம் 3 சக்கர சைக்கிள் கேட்டு முதியவர் ஒருவர் மனு அளித்தார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினரும், வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், அமைச்சருமான கீதாஜீவன் கடந்த 2 நாட்களாக தூத்துக்குடியில் ஆய்வு செய்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டு வருகிறார்.

    3-வது நாளாக ஆய்வு

    இந்நிலையில் 3-வது நாளாக மாநகராட்சி 28-வது வார்டுக்குட்பட்ட இரண்டாம் கேட் பகுதியில் கொளுத்தும் வெயிலில் நடந்து சென்று பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார். அப்போது அமைச்சர் கீதாஜீவனிடம் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை மனுவாக அளித்தனர். அதில் வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, சாலை வசதி, குடிநீர் வசதி, மின்விளக்கு வசதி, கால்வாய் வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கியிருந்தது.

    2-ம் கேட் பகுதியில் குறைகளை கேட்ட அமைச்சரிடம் 3 சக்கர சைக்கிள் கேட்டு முதியவர் ஒருவர் மனு அளித்தார். மற்றொருவர் அப்பகுதியில் சில தெருக்களில் குண்டும், குழியுமாக இருப்பதாக கூறி மனு அளித்த பின் அதனால் ஏற்பட்ட சம்பவத்தில் பலர் பாதிக்கப்பட்டதும் சிலர் காயம் அடைந்த வீடியோவையும் காண்பித்தார்.

    அமைச்சர் உறுதி

    பின்னர் அப்பகுதியில் ஏற்கனவே நடைபெற்று வரும் கழிவுநீர் கால்வாய் கட்டும் பணியை அமைச்சர் கீதாஜீவன் நடந்தே சென்று பார்வையிட்டர். தொடர்ந்து ராஜமன்னார் தெருவில் பாதிப்புக்குள்ளான பகுதியில் முழுமையாக ஆய்வு மேற்கொண்டு அடிப்படை வசதிகள் அனைத்தும் நிறைவேற்றி தருவேன் என்று உறுதியளித்தார்.

    நிகழ்ச்சியில் மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்தசேகரன், மாநகராட்சி மண்டல தலைவர் கலைச்செல்வி, அரசு வக்கீல் சுபேந்திரன், மாநகர மருத்துவ அணி அமைப்பாளர் அருண்குமார், கவுன்சிலர் ராமுத்தம்மாள், வட்ட செயலாளர் அந்தோணி லாசர், மாவட்ட பிரதிநிதிகள் செந்தில்குமார், நாராயணன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் நாகராஜன், முன்னாள் கவுன்சிலர்கள் குருசாமி, மீனாட்சி சுந்தரம், வட்ட பிரதிநிதி பாஸ்கர் மற்றும் சிவா, மாரியப்பன், அல்பட், மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பூபால்ராயர்புரம் 1,2,3, ஆகிய பகுதிகளில் அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் நடந்து சென்று பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தனர்.
    • நல்லமுறையில் மக்கள் பயன்பாட்டிற்கு அந்த பூங்காவை சீரமைத்து தரவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினரும், வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாள ரும், சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத் துறை அமைச்சருமான கீதாஜீவன் சட்டமன்ற தொகுதி க்குட்பட்ட பொதுமக்கள் குறைகளை தெரிவிப்பதற்கு ஏற்கனவே வாட்ஸ் அப் எண் கொடுக்கப்பட்டு அதன் மூலம் பொதுமக்கள் பலர் தங்கள் பகுதிகளில் உள்ள குறைகளை தெரிவித்து வருகின்றனர். அமைச்சர் உள்ளிட்ட அலுவலர்கள் அதன் குறைபாடுகளை சம்பந்தப்பட்ட அதிகாரி களுக்கும் உடனுக்குடன் தெரிவித்து தீர்த்து வைக்கின்றனர்.

    அதே போல் மாநகராட்சி பகுதியில் உள்ள குறைகளை தீர்த்து வைக்க பொதுமக்களுக்கு வாட்ஸ் அப் எண் கொடுக்கப்பட்டு அதன் மூலம் வரும் குறைபாடுகளை மேயர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அலுவலர்களுக்கு தெரிவிக்க ப்பட்டு குறைகள் தீர்த்து வைக்கப்படுகிறது.

    இந்நிலையில் 2-வது நாளாக மாநகராட்சி 23-வது வார்டு பனை வெல்லம் சங்கம் அருகில் அமைக்கப்பட்ட இடத்தில் அமைச்சர் கீதாஜீவனிடம் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை மனுவாக அளித்தனர்.

    பின்னர் முத்துகிருஷ்ணா புரம், 2 மற்றும் 6-வது தெரு, பூபால்ராயர்புரம் 1,2,3, ஆகிய பகுதிகள் உள்பட பக்கிள் ஓடை இடங்களில் அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி, ஆகியோர் நடந்து சென்று பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தனர். அதில் வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, சாலை வசதி, குடிநீர் வசதி, மின்விளக்கு வசதி, கால்வாய் வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். அதை அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் பெற்றுக் கொண்டு, விரைவில் நிறைவேற்றி தருவதாக உறுதியளித்தார்கள்.

    அப்போது இந்த பகுதிகளில் முறையாக சாலை வசதியும், கழிவுநீர் கால்வாய் வசதியும் செய்து கொடுக்க வேண்டும். அதே போல் இந்த பகுதியில் உள்ள ரவுண்டான பகுதியும் இரண்டு பூங்காக்கள் இருந்து வருகின்றன. அதில் ஒன்று தேவையற்ற அசம்பாவித செயல்களில் சிலர் ஈடுபடுவதால் அதில் ஒன்றை சமப்படுத்தி மற்றொன்றை மட்டும் நல்லமுறையில் மக்கள் பயன்பாட்டிற்கு அந்த பூங்காவை சீரமைத்து தரவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

    அப்போது அமைச்சர் கீதாஜீவன் நேரடியாக குறிப்பெடுத்துக்கொண்டு மேயர் ஜெகன் பெரியசாமியிடம் இப்பகுதி ஆய்வின் போது இந்த குறைபாடுகளை எப்படி தீர்த்து வைக்கலாம் என்று இருவரும் பொதுமக்கள் மத்தியில் கலந்து ஆலோசித்து பேசினர்.

    நிகழ்ச்சியில் தி.மு.க. மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாநகராட்சி மண்டல தலைவர்கள் நிர்மல்ராஜ், கலைச்செல்வி, மாநகர மருத்துவ அணி அமைப்பாளர் அருண் குமார், பகுதி செயலாளர் ஜெயக்குமார், கவுன்சிலர் தனலட்சுமி, வட்ட செயலா ளர்கள் சேகர், கருப்பசாமி, மாவட்ட பிரதிநிதிகள் செந்தில்குமார், நாராயணன், வட்ட பிரதிநிதிகள் பாஸ்கர், சீதாராமன், ஜோஸ்வா, சங்கர், அனந்தப்பன், சரவணன், பகுதி இளைஞரணி அமைப்பாளர்கள் சூர்யா, ரவி மற்றும் அல்பட், மணி, உலகநாதன், ஜோஸ்பர், இந்திய கம்யூனிஸ்கட்சி மாநகர செயலாளர் ஞானசேகர், முன்னாள்; கவுன்சிலர்கள் ரவீந்திரன், பொன்னையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தூத்துக்குடியில் சமூக நலத்துறை சார்பில் திருமண நிதியுதவி, தாலிக்கு தங்கம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
    • வருவாய்த்துறை மூலம் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளி உதவித்தொகைக்கான உத்தரவு 21 பேருக்கு வழங்கப்பட்டு உள்ளது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் சமூக நலத்துறை சார்பில் திருமண நிதியுதவி, தாலிக்கு தங்கம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:-

    தமிழ்நாடு அரசு ஏழை எளிய மக்களின் நலனுக்காக தேவைப்படும் அத்தனை திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற திராவிட மாடல் ஆட்சியினை நடத்தி வருகிறார்.

    100 பெண்கள்

    இந்த விழாவில் ஈ.வே.ரா. மணியம்மையார் நினைவு விதவை மகள் திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ் 86 பேர், அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண் திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ் 2 பேர், டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி நினைவு கலப்புத் திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ் 12 பேர் என மொத்தம் 100 பெண்களுக்கு ரூ.43.75 லட்சம் மதிப்பில் தாலிக்கு தங்க நாணயம் மற்றும் நிதியுதவி வழங்கப்பட்டு உள்ளது. அதுபோல் அன்னை சத்திய வாணிமுத்து அம்மையார் நினைவு இலவச தையல் எந்திரம் வழங்கும் திட்டத்தின்கீழ் 77 பயனாளிகளுக்கு இலவச தையல் எந்திரமும் வழங்கப்பட்டு உள்ளது.

    மேலும், வருவாய்த்துறை மூலம் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளி உதவித்தொகைக்கான உத்தரவு 21 பேருக்கு வழங்கப்பட்டு உள்ளது. மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் 12 பயனாளிகளுக்கு ரூ.3.15 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் மூலம் 30 பேருக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களும் வழங்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி கமிஷனர் தினேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், மாவட்ட சமூக நல அலுவலர் ரதிதேவி, தூத்துக்குடி தாசில்தார் செல்வக்குமார், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சரஸ்வதி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    • முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா நாளை (புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது.
    • மார்ச் மாதம் முழுவதும் நகரம், ஒன்றியம், பேரூர் கழகங்கள் வாரியாக ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    முதல்-அமைச்சர் பிறந்தநாள் விழா

    முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா நாளை (புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது.

    இதனை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட தூத்துக்குடி, விளாத்திகுளம், கோவில்பட்டி ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட அனைத்து கிளைக்கழகங்கள் மற்றும் வார்டு கழகங்கள் தோறும் கட்சி கொடியேற்றியும், இனிப்புகள் வழங்கியும், கட்சி கொள்கை விளக்க பாடல்கள் ஒலிபரப்பியும் உற்சாகமாக கொண்டாடப்பட இருக்கிறது.

    குழந்தைகளுக்கு தங்கமோதிரம்

    அன்றைய தினம் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கோவில்பட்டி, விளாத்திகுளம் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்கமோதிரம் அணிவிக்கும் நிகழ்ச்சியும், மதியம் 12 மணிக்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து முதியோர் இல்லங்கள், ஆதரவற்றோர், மாற்றுதிறனாளிகள் இல்லங்களில் அறுசுவை விருந்து அளிக்கப்படுகிறது.

    மேலும் மார்ச் மாதம் முழுவதும் நகரம், ஒன்றியம், பேரூர் கழகங்கள் வாரியாக ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியும், பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கும் விழாவும் நடக்கிறது.

    அதே போன்று நாளை மாலை 6 மணிக்கு சென்னை ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெறும் பாராட்டுவிழா பொதுக்கூட்டத்துக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் இருந்து நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டு மாவட்டத்துக்கு பெருமை சேர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • சத்துணவு திட்டத்தில் அழுகிய முட்டைகள் வழங்கப்படுவதாக பா.ஜ.க.வினர் தவறான பிரசாரம் செய்து வருகிறார்கள்.
    • இதுவரை 9 லட்சம் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

    நெல்லை:

    கர்ப்பிணி பெண்களுக்கு அரசு சார்பில் சமுதாய வளைகாப்பு விழா நெல்லை மாவட்டம் மானூர் யூனியன் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு பேசினார்.

    நிகழ்ச்சியில் நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ., மேயர் சரவணன், மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவர் செல்வலட்சுமி அமிதாப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் அமைச்சர் கீதாஜீவன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகம் முழுவதும் கர்ப்பிணி பெண்களுக்கு கர்ப்ப காலத்தின் முக்கியத்துவம் குறித்தும், ஆரோக்கியமான குழந்தைகளை பெற்றெடுப்பதை குறித்தும் உணர்த்திடும் வகையில் அரசு சார்பில் இந்த விழா நடத்தப்பட்டு வருகிறது.

    குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு இல்லாமல் வளரும் விதமாக தமிழகம் முழுவதும் 36 லட்சம் அங்கன்வாடிகளில் முதல்-அமைச்சரின் ஊட்டச்சத்து உறுதி செய்யும் திட்டத்தின் கீழ் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இதுவரை 9 லட்சம் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்களுக்கு போதிய ஊட்டச்சத்து கிடைக்கும் வகையில் சத்தான உணவு வழங்க ஆலோசனை வழங்கப்பட்டு, அதனை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    45 ஆயிரம் குழந்தைகளுக்கு இதயத்தில் ஓட்டை, காது செவித்திறன் குறைபாடு உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகள் உள்ளது. அவர்களுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை மூலமாக உயர்தர சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு உள்ளதை தாய்மார்களே அறிந்திடாத நிலையில் தமிழக அரசு சார்பில் அவர்களுக்கு தரமான ஊட்டச்சத்து மற்றும் உயர்தர சிகிச்சை வழங்கப்படுகிறது.

    சத்துணவு திட்டத்தில் அழுகிய முட்டைகள் வழங்கப்படுவதாக பா.ஜ.க.வினர் தவறான பிரசாரம் செய்து வருகிறார்கள். காலம் காலமாக, அழுகிய முட்டைகளை தண்ணீரில் போட்டு கண்டுபிடித்து அதனை திருப்பி அனுப்புவதற்காக தனியாக சேமித்து வைக்கப்படும். இந்த நடைமுறை 1996-ம் ஆண்டு முதல் இருந்து வருகிறது.

    திருப்பி அனுப்ப வைக்கப்பட்டிருந்த முட்டைகளை போட்டோ எடுத்து பா.ஜ.க.வினர் அவதூறு பரப்பி வருகிறார்கள். இதுகுறித்து அவர்களுக்கு புரிதல் இல்லாமல் உள்ளது. தமிழகத்தில் எந்த ஒரு இடத்திலும் அங்கன்வாடிகளுக்கு அழுகிய முட்டை வழங்கப்படவில்லை.

    தமிழகத்தில் குழந்தை திருமணங்களை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தூத்துக்குடி மாநகர தி.மு.க. சார்பில் தெருமுனை பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது.
    • 2024-ம் ஆண்டு தேர்தலில் 40 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெறுவோம் என்று அமைச்சர் கீதாஜீவன் பேசினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகர தி.மு.க. சார்பில் பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு தெருமுனை பிரச்சார பொதுக்கூட்டம் சண்முகபுரம், அண்ணாநகர் ஆகிய இடங்களில் நடைபெற்றது.

    வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் இதில் கலந்து கொண்டு பேசியதாவது:-

    தமிழ் மொழி வளர்ச்சிக்காக தலைவர் கலைஞருடன் மாணவ பருவமுதல் பேராசிரி யர் அன்பழகன் கொள்கைப் பிடிப்போடு சுய மரியாதை யுடன் பல நூல்களை எழுதினார். அதற்கு பெருமை சேர்க்கும் நூற்றாண்டு பணியை பாராட்டும் வகையில் கல்வி இயக்க வளாகத்திற்கு அன்பழகன் பெயர் சூட்டப்பட்டு கவுரவிக்கப்பட்டுள்ளது.

    நமது மாவட்டத்தில் 3 பெரிய தொழிற்சாலைகள் வரவுள்ளன. அதன் மூலம் படித்த இளைஞர்களுக்கு நேரடியாகவும் மறைமுக மாகவும் வேலை வாய்ப்பு கிடைக்கவுள்ளது. விவசாயி களுக்கு என தனி பட்ஜெட் உள்ளன.

    தி.மு.க. ஆட்சியின் சாதனைகளை நாங்கள் சொல்ல தயார். மோடி ஆட்சியின் சாதனைகளை நீங்கள் சொல்ல தயாரா? வேலை வாய்ப்பு இல்லை உரிமைகள் பறிப்பு அனைத்து பொதுத்துறை நிறுவனங்களும் தனியா ருக்கு விற்பனை இது தான் உங்கள் சாதனை பல்வேறு கருத்துக்களை கூறி குழப்பத்தை ஏற்படுத்தி குட்டையில் மீன்பிடிக்கலாம் என்று நினைப்பார்கள். அதற்கு நாம் இடம் அளிக்க கூடாது.

    தி.மு.க. ஆட்சியில் கல்வி வேலை வாய்ப்பு மகளிர் என அனைத்து தரப்பினரும் பயன் அடையும் வகையில் முதல்-அமைச்சர் ஸ்டாலின் பணியாற்றி வருகிறார். கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து என்று தேர்தல் நேரத்தில் கொடுத்த அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும்.

    2024-ம் ஆண்டு தேர்தலில் 40 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெறுவோம். இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி, மாநில பேச்சாளர் சரத்பாலா, மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், துணை மேயர் ஜெனிட்டா, மாவட்ட துணைச்செயலளார்கள் ராஜ்மோகன்செல்வின், ஆறுமுகம், பொருளாளர் ரவிந்திரன், மாநகராட்சி மண்டலத்தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, நிர்மல்ராஜ், அன்னலட்சுமி, கலைச் செல்வி, பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, மாநகர துணை செயலாளர்கள் கீதாமுருகேசன், கனக ராஜ், மாவட்ட அணி அமைப்பா ளர்கள் மதியழகன், அந்தோணி ஸ்டாலின், அன்பழகன், ரமேஷ், அபிராமிநாதன், கஸ்தூரிதங்கம், உமாதேவி, துணை அமைப்பாளர்கள் நலம் ராஜேந்திரன், வக்கீல் சீனிவாசன், அருணா தேவி, ஜீவன்ஜேக்கப், அந்தோணி கண்ணன், சங்கர், ராமர், பார்வதி, சரவணன், கவிதாதேவி, மாநகர அணி அமைப்பாளர்கள் வக்கீல் ஆனந்தகேபரியேல்ராஜ், அருண்குமார், முருகஇசக்கி, ஜெயக்கனி, டேனி, பிரபு, தேவதாஸ், சக்திவேல், சுரேஷ், துணை அமைப்பாளர்கள் சிவக்குமார் என்ற செல்வின், வக்கீல் கிறிஸ்டோபர் விஜயராஜ், பால்ராஜ், டைகர்வினோத், அருண்சுந்தர், பால்மாரி, ஆர்த ர்மச்சாது, சங்கர நாராயணன், பிக்அப் தனபால், பகுதி செயலாளர்கள் ஜெயக்குமார், மேகநாதன், ராமகிருஷ்ணன், சுரேஷ் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பா.ஜ.க. தலைவர் சித்ராங்கதன் தலைமையில், தொண்டர்கள் தூத்துக்குடியில் உள்ள கட்சி அலுவலகத்தில் திரண்டனர்.
    • பா.ஜனதா தொண்டர்கள் அமைச்சர் கீதாஜீவன் வீட்டை முற்றுகையிடுவதற்காக ஊர்வலமாக புறப்பட்டனர்.

    தூத்துக்குடி:

    பா.ஜனதா மாநில துணைத் தலைவர் சசிகலா புஷ்பா வீடு மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், மாநில தலைவர் அண்ணாமைலை குறித்து அவதூறாக பேசிய அமைச்சர் கீதாஜீவன் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி தெற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் சித்ராங்கதன் தலைமையில், பா.ஜனதா தொண்டர்கள் இன்று தூத்துக்குடியில் உள்ள கட்சி அலுவலகத்தில் திரண்டனர்.

    தொடர்ந்து அவர்கள் தனசேகரன் நகரில் இருந்து போல் பேட்டையில் உள்ள அமைச்சர் கீதாஜீவன் வீட்டை முற்றுகையிடுவதற்காக ஊர்வலமாக புறப்பட்டனர். இதில் பொதுச்செயலாளர் உமரி சத்தியசீலன், துணைத்தலைவர்கள் வக்கீல் வாரியார், சுவைதர், மாவட்ட வக்கீல் பிரிவு தலைவர் சுரேஷ்குமார், மாநில நிர்வாகிகள் விவேகம் ரமேஷ், வக்கீல் நாகராஜன் உள்பட திரளானோர் சென்றனர்.

    புதிய பஸ்நிலையம் அருகே சென்றபோது அவர்களை டி.எஸ்.பி. சத்தியராஜ் தலைமையில் போலீசார், அனுமதி இல்லாமல் ஊர்வலமாக செல்லக்கூடாது எனவும், திரும்பி செல்லுமாறு அறிவுறுத்தினர்.

    தொடர்ந்து அவர்கள், அமைச்சர் வீட்டை முற்றுகையிடுவதற்காக சென்றனர். இதைய டுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் மற்றும் அதிரடிப்படையினர் அங்கு விரைந்து வந்தனர்.

    அப்போது முற்றுகையிட சென்றால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி. எச்சரிக்கை விடுத்தார். எனினும் அதனை மீறி பா.ஜ.க.வினர் ஊர்வலமாக சென்றனர். இதைத்தொடர்ந்து மாவட்ட தலைவர் சித்ராங்கதன் உள்ளிட்ட 100 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் அவர்களது கஜானாவை நிரப்பினார்கள்.
    • தமிழகத்தில் புதிதாக முளைத்துள்ள பா.ஜனதாவிற்கு கொள்கையும் தெரியாது, கோட்பாடும் தெரியாது, எதற்கு இருக்கிறோம் என்றும் தெரியாது.

    விளாத்திகுளம்:

    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தி.மு.க. சார்பில் காய்கறி மாா்க்கெட் அருகில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் நடந்தது. மாா்கண்டேயன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

    இந்த பொதுக்கூட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசியதாவது:-

    பாராளுமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு தி.மு.க. அரசை பற்றி தவறான தகவல்களை மாற்றுக் கட்சியினர் பரப்பி வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளில் அ.தி.மு.க. மக்களுக்கு எந்த நலத்திட்ட உதவிகளை உண்மையாக செய்யவில்லை.

    அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் அவர்களது கஜானாவை நிரப்பினார்கள். மக்களால் புறக்கணிக்கப்பட்டவர்கள் எல்லாம் இன்று எங்களது தேர்தல் அறிக்கையை நிறைவேற்றவில்லை என்று கூறுகிறார்கள். வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் 40 இடங்களிலும் வெற்றி பெறுவோம்.

    வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகள் மக்களிடம் குட்டையை கிளப்பி மீன் பிடிக்கலாம் என்று எண்ணுகிறார்கள் பொதுமக்களை குழப்புகிறார்கள்.

    தமிழகத்தில் புதிதாக முளைத்துள்ள பா.ஜனதாவிற்கு கொள்கையும் தெரியாது, கோட்பாடும் தெரியாது, எதற்கு இருக்கிறோம் என்றும் தெரியாது.

    தமிழகத்தில் நம் உரிமைகளை ஆதிக்க சக்தியிடம் அடிமைப்பட்டு இருந்ததை பாரதி, பெரியார் போன்ற பல்வேறு தலைவர்கள் முயற்சியால் தமிழகத்தில் முன்னேற்றம் அடைந்துள்ளது.

    தி.மு.க.வினர் என்றும் மக்களோடு மக்களாக இருப்பவர்கள்.

    வடமாநிலங்களில் எய்ம்ஸ் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டப்பட்டு திறக்கப்பட்டு விட்டது. ஆனால் மதுரை எய்ம்ஸ் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டப்பட்டு திறக்கப்படவில்லை. தமிழகத்தில் வேண்டாதவர்கள் எல்லாம் வந்து ஆட்டம் போடுவதற்கு காரணம் எடப்பாடி பழனி சாமிதான் .

    இவ்வாறு அவர் பேசினார்.

    • கடந்த 2017-ம் ஆண்டு உடல்நலக்குறைவு காரணமாக என்.பெரியசாமி உயிரிழந்தார்.
    • எனினும் என்.பெரியசாமி குடும்பத்தினர் மீதான வழக்கு விசாரணை நடந்து வந்தது.

    தூத்துக்குடி:

    தமிழகத்தில் 1996-2001-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியின் போது தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினராக அப்போதைய மாவட்ட செயலாளர் என்.பெரியசாமி இருந்தார்.

    அதன்பின்னர் அ.தி.மு.க. ஆட்சி காலத்தில், 2002-ம் ஆண்டு வருமானத்திற்கு அதிகமாக ரூ.2 கோடியே 31 லட்சத்து 87 ஆயிரம் சொத்து சேர்த்ததாக என்.பெரியசாமி மீது புகார் தெரிவிக்கப்பட்டது.

    அதன்பேரில் என்.பெரியசாமி, அவரது மனைவி எபனேசர் அம்மாள், இவர்களது மகளும் அப்போதைய மாவட்ட ஊராட்சி தலைவரும், தற்போதைய அமைச்சருமான கீதாஜீவன், அவரது கணவர் ஜீவன்ஜேக்கப், கீதாஜீவனின் அண்ணன் ராஜா, தம்பியும் தற்போதைய மாநகராட்சி மேயருமான ஜெகன்பெரியசாமி ஆகிய 6 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் இதுதொடர்பாக கோர்ட்டில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

    இந்நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு உடல்நலக்குறைவு காரணமாக என்.பெரியசாமி உயிரிழந்தார். எனினும் அவரது குடும்பத்தினர் மீதான வழக்கு விசாரணை நடந்து வந்தது. அந்த வகையில் கடந்த 19 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

    அதன்படி தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நீதிபதி குருமூர்த்தி தீர்ப்பை வாசித்தார். இதற்காக அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் உள்ளிட்ட 4 பேரும் வந்திருந்தனர். அப்போது சொத்து குவிப்பு வழக்கில போதிய முகாந்திரம் இல்லாததால் கீதாஜீவன், ஜெகன் பெரியசாமி உள்ளிட்ட 5 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.

    இதுதொடர்பாக அமைச்சர் கீதாஜீவன் நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அ.தி.மு.க. ஆட்சியில் எங்கள் குடும்பத்தினர் மீது வழக்கு போடப்பட்டது. 21 ஆண்டுகளுக்கு பின்னர் நீதி கிடைத்துள்ளது. இது நீதிக்கும், நியாயத்திற்கும் கிடைத்த வெற்றி என்றார்.

    • சத்துணவு மையங்களை மூடிடும் எண்ணம் இந்த அரசுக்கு அறவே கிடையாது.
    • சத்துணவு திட்டத்தை வலுப்படுத்திடவும், தொடர் கண்காணிப்பு செய்திடவும் தான் இந்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

    சென்னை:

    சமூகநலம்-மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் தற்போது 43,190 பள்ளி சத்துணவு மையங்களில் சுமார் 46 லட்சம் மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர். ஒவ்வொரு பள்ளி சத்துணவு மையங்களில் பயன்பெறும் பயனாளிகளின் எண்ணிக்கை விவரங்களின் அடிப்படையில், தற்போது சத்துணவு மையங்களில் உள்ள காலிப்பணியிடங்களை ஆய்வு செய்து, காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புதல் குறித்து அனைத்து புள்ளி விவரங்களும், கோரப்பட்டுள்ளன.

    28 ஆயிரம் சத்துணவு மையங்களை அரசு மூட திட்டமிடப்பட்டுள்ளதாக செய்தி வெளிவந்துள்ளது. சத்துணவு மையங்களை மூடிடும் எண்ணம் இந்த அரசுக்கு அறவே கிடையாது. பள்ளி, சத்துணவு மையங்களில் எண்ணிக்கை அல்லது பணியாளர்களின் எண்ணிக்கையினை குறைப்பதற்கான எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்பதனை தெரிவித்துக்கொள்கிறேன்.

    சத்துணவு திட்டத்தை வலுப்படுத்திடவும், தொடர் கண்காணிப்பு செய்திடவும் தான் இந்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில் யாருக்கும் எந்தவொரு சந்தேகமும் ஏற்பட வேண்டிய அவசியமில்லை. முதலமைச்சர் மாணவர்களின் நலனுக்காகவும், ஆரோக்கியத்திற்காகவும், அவர்களின் கல்வித் திறனை அதிகரிப்பதற்காகவுமே காலை உணவுத் திட்டத்தை தொடங்கி உள்ளார்கள்.

    அத்திட்டம் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அத்திட்டம் முதலமைச்சரின் அலுவலகத்தின் மூலம் நேரடியாக கண்காணிக்கப்படுகிறது மட்டுமில்லாமல் "வரும் ஆண்டில் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும்" என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார்கள்.

    அப்படியிருக்க சத்துணவுத் திட்டத்துறையில் உள்ள சத்துணவு மையங்களை எப்படி அரசு மூட முயற்சி எடுக்கும். சத்துணவு மையங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிடவும், சத்தான உணவை முறையாக மாணவர்களுக்கு வழங்கிடவும், தொடர் கண்காணிப்பை வலுப்படுத்திடவுமே அரசு திட்டமிட்டுள்ளது என்பதையும் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • உதயநிதி ஸ்டாலின் 45-வது பிறந்தநாளை குறிப்பிடும் வகையில் 45 மரக்கன்றுகள் நடப்பட்டது.
    • அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் 300 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

    தூத்துக்குடி:

    தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பிறந்த நாளை முன்னிட்டு 14-வது வார்டுக்குட்பட்ட சின்னகன்னுபுரம் பாரதி நகரில் நடைபெற்ற விழாவிற்கு மாநகர தி.மு.க. துணை செயயலாளரும், மாநகராட்சி பணிக்குழு தலைவருமான கீதா முருகேசன் தலைமை தாங்கினார்.

    உதயநிதி ஸ்டாலின் 45-வது பிறந்தநாளை குறிப்பிடும் வகையில் அப்பகுதியில் 45 மரக்கன்று களை நடும் திட்டத்தை தொடங்கி வைத்து, 300 பேருக்கு சேலை, நலத்திட்ட உதவிகளை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் வழங்கினர்.

    விழாவில் மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், மாவட்ட வழக்க றிஞர் அணி அமைப்பாளர் மோகன் தாஸ் சாமுவேல், மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் முத்துராமன், வார்டு அவைத்தலைவர் அந்தோணிமுத்து, வட்ட பிரதிநிதிகள் முருகேசன், குமார், தங்கமாரியப்பன், முனியசாமி, ஆல்கன் டிரஸ்ட் நிர்வாகிகள் செந்தில், அய்யப்பன், கேசவன், வேல்பாண்டி, தினேஷ் குமார், ரகுபதி, நாராயணன், கமல் தனசேகரன், மகேஸ்வரசிங், ஊனமுற்றோர் நலச்சங்க தலைவர் மருதபெருமாள், மின்வாரிய தொழிற்சங்க தலைவர் பேச்சிமுத்து, கருணா, பிரபாகர், பாஸ்கர், ரமேஷ், மகளிர் அணி சீதாலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப்பட உள்ளது.
    • 27-ந் தேதி ஆதரவற்றோர் இல்லம் மற்றும் பி அண்ட் டி முதியோர் இல்லங்களில் மதிய உணவு வழங்கப்படுகிறது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், அமைச்சருமான கீதாஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப்பட உள்ளது.

    நாளை மறுநாள் (26-ந் தேதி) தூத்துக்குடி கலைஞர் அரங்கம் முன்பு பிரமாண்ட கேக் வெட்டி கொண்டாடப்படுகிறது. தொடர்ந்து மாநகர தி.மு.க. சார்பில் தூத்துக்குடி கலைஞர் அரங்கிலும், கோவில்பட்டி நகரம் சார்பில் வேலாயுதபுரத்திலும் ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.

    27-ந் தேதி ஆதரவற்றோர் இல்லம் மற்றும் பி அண்ட் டி முதியோர் இல்லங்களில் மதிய உணவு வழங்கப்படுகிறது. தொடர்ந்து, 27-ந் தேதி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்படுகிறது. பின்னர் எட்டையபுரம் மனநல காப்பகம், நாகலா–புரம் முதியோர் இல்லங்களில் மதிய உணவு வழங்கப்படுகிறது.

    28-ந் தேதி கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்கமோதிரம், பாண்டவர்மங்கலம், நாலாட்டின்புதூர் ஆகிய பகுதிகளில் நலத்திட்ட உதவிகள் வழங்குதல், விளாத்திகுளத்தில் மரக்கன்றுகள் நடுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    29-ந் தேதி கயத்தாறு, செட்டிக்குறிச்சி, கழுகுமலை ஆகிய இடங்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.

    30-ந் தேதி புதூர், குறுக்குசாலை ஆகிய பகுதிகளில் ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.

    தொடர்ந்து 28,29 மற்றும் 3-ந் தேதிகளில் பல்வேறு மருத்துவ முகாம்கள் நடைபெறுகிறது.

    தி.மு.க. வடக்கு மாவட்ட நிர்வாகிகள் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×