search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாஜக போராட்டம்"

    • பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் சார்பில் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது.
    • பேனர்களை நள்ளிரவு மர்ம நபர்கள் சிலர் கிழித்து சேதப்படுத்தி உள்ளனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் மாதப்பூரில் வருகிற 27-ந்தேதி நடைபெறும் பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி வருகை தர உள்ளார். அவரை வரவேற்று திருப்பூரில் பல்வேறு பகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் சார்பில் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது.


    இந்நிலையில் திருப்பூர் புதிய பேருந்து நிலையம் எதிரே வைக்கப்பட்டிருந்த பேனர்களை நள்ளிரவு மர்ம நபர்கள் சிலர் கிழித்து சேதப்படுத்தி உள்ளனர். இதையறிந்த அக்கட்சி நிர்வாகிகள் இன்று காலை புதிய பேருந்து நிலையம் முன் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பேனர்களை கிழித்த நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து பா.ஜ.க.வினர் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வரும் 18-ந் தேதி முதல் ஒவ்வொரு ஊரிலும் மக்கள் சக்தியுடன் கண்டன ஆர்ப்பாட்டங்கள் பல்வேறு தேதிகளில் நடைபெற இருக்கின்றன.
    • விழுப்புரம் பெருங்கோட்ட பா.ஜ.க. நிர்வாகிகளும் தொண்டர்களும் போராட்டத்தில் பெருந்திரளாக கலந்து கொண்டு வெற்றியடையச் செய்ய கேட்டுக்கொள்கிறேன்.

    சென்னை:

    தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ஆயிரம் வீதம் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று தி.மு.க. அறிவித்த வாக்குறுதியும் மக்களின் பெரும் கோபத்திற்கும் ஏமாற்றத்திற்கும் இடையே பல குழப்பங்களுடன் அரைகுறையாக செயல்படுத்தப்படுகிறது.

    பெண்களுக்கு திருமண வயது 18 என்ற நிலையில், திருமணமாகி குடும்பத் தலைவிகளாகிவிட்ட 18 முதல் 21 வயது வரை உள்ள பெண்களை குடும்பத் தலைவிகளாக அங்கீகரிக்க இந்த தி.மு.க. அரசு மறுக்கிறது.

    விழுப்புரம் மாவட்டத்திலும் சுற்றுப்பகுதிகளிலும் திறனற்ற தி.மு.க. அரசின் திடீர் தகுதி அறிவிப்பால் ஏமாற்றமடைந்த ஏழை கிராம மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் வேண்டுகோளுக்கிணங்க விழுப்புரம் பெருங்கோட்டத்திற்கு உட்பட்ட மாவட்டங்களில் பெருங்கோட்டப் பொறுப்பாளர் வினோத் பி.செல்வம், ஒருங்கிணைப்பில் திண்டிவனம், விழுப்புரம் பண்ருட்டி கங்கைகொண்டான், ஸ்ரீபெரும்புதூர், முடிச்சூர், செய்யூர், திருவள்ளூர், செங்குன்றம் ஆகிய பகுதிகளில் வரும் 18-ந் தேதி முதல் ஒவ்வொரு ஊரிலும் மக்கள் சக்தியுடன் கண்டன ஆர்ப்பாட்டங்கள் பல்வேறு தேதிகளில் நடைபெற இருக்கின்றன. விழுப்புரம் பெருங்கோட்ட பா.ஜ.க. நிர்வாகிகளும் தொண்டர்களும் இந்த போராட்டத்தில் பெருந்திரளாக கலந்து கொண்டு வெற்றியடையச் செய்ய கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • உதயநிதி ஸ்டாலின் கூறியது 80 சதவீத இந்திய மக்களை இனப்படுகொலை செய்வோம் என சொல்வதற்கு ஒப்பானது.
    • தமிழகத்தில் திராவிட இயக்கங்களை அழித்து பாஜக ஆட்சிக்கு வரும்.

    திருச்சி:

    சனாதனத்தை ஒழிப்போம் என கூறிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்தும், சனாதன தர்ம ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு பதவி விலக கோரியும், திருச்சி திருவானைக்கோவில் இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் அலுவலகம் முன்பாக இன்று (திங்கட்கிழமை) திருச்சி மாநகர் மாவட்ட பா.ஜ.க. சார்பில் முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.

    அதன்படி இன்று பாஜகவினர் கட்சியின் முன்னாள் தேசிய செயலாளர் எச். ராஜா தலைமையில் அங்கு திரண்டனர்.

    ஏற்கனவே பாஜக போராட்டம் அறிவித்த நிலையில் அலுவலகத்துக்குள் நுழைந்து விடாமல் தடுப்பதற்காக போலீசார் தடுப்பு கட்டைகள் அமைத்து பாதுகாப்பில் ஈடுபட்டனர்.

    அதைத்தொடர்ந்து தடையை மீறி முற்றுகை போராட்டத்திற்கு முயன்ற எச்.ராஜா, மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகரன் உள்ளிட்ட நூற்றுக்கு மேற்பட்ட பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை போலீசார் கைது செய்து வேனில் அழைத்து சென்றனர்.

    முன்னதாக எச்.ராஜா நிருபர்களிடம் கூறும்போது,

    சனாதன தர்மத்தை மலேரியா, டெங்கு கொசு போன்று ஒழிப்போம் என உதயநிதி ஸ்டாலின் கூறியது 80 சதவீத இந்திய மக்களை இனப்படுகொலை செய்வோம் என சொல்வதற்கு ஒப்பானது.

    சனாதனத்தில் இருக்கும் 4 வர்ணங்களையும் திருவள்ளுவர் சொல்லியிருக்கிறார். திருவள்ளுவர் ஒரு சனாதனி.

    ஆனால் வைரமுத்து தவறான தகவலை சொல்கிறார். இன்றைக்கு சனாதனம் என்பது இல்லை. அதனை அளவீடு செய்வது யார்?

    புராண காலத்தில் இருந்து வர்ணங்கள் மாறி திருமணங்கள் செய்திருக்கிறார்கள். ஏற்றத்தாழ்வுகளும் ஆணவ கொலைகளும் திருமாவளவன், சுப வீர பாண்டியன் போன்றவர்கள் பிறந்த பின்னரே நடந்துள்ளது.

    திராவிடம் என்பது ஒரு சித்தாந்தம். சனாதனம் என்பது மனிதர்கள் சார்ந்தது. ஆகவே இனப்படுகொலை செய்வதாக கூறிய உதயநிதி ஸ்டாலினை கைது செய்ய வேண்டும்.

    தமிழகத்தில் திராவிட இயக்கங்களை அழித்து பாஜக ஆட்சிக்கு வரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று மாலையில் அண்ணாமலை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
    • தமிழகம் முழுவதும் இன்று அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    சென்னை:

    சனாதன தர்மத்தை ஒழிப்பதாக பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்ம ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் மீது நடவடிக்கை கோரி பா.ஜனதாவினர் கவர்னரை சந்தித்து மனு கொடுத்தனர்.

    10-ந்தேதிக்குள் அமைச்சர் சேகர்பாபு பதவி விலகாவிட்டால் 11-ந்தேதி அவரை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்று அண்ணாமலை அறிவித்து இருந்தார்.

    அதன்படி இன்று மாலையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அண்ணாமலை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

    இதில் பா.ஜனதா மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர்ரெட்டி மற்றும் சென்னை மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் அதிக அளவில் பங்கேற்கிறார்கள்.

    இதே போல் தமிழகம் முழுவதும் இன்று அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    கன்னியாகுமரியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தூத்துக்குடியில் எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ., தூத்துக்குடி வடக்கில் முன்னாள் எம்.பி., சசிகலா புஷ்பா, நெல்லை தெற்கு மீனாதேவ், நெல்லை வடக்கு நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., தென்காசி-நீலமுரளி யாதவ், மதுரை-ராமசீனிவாசன், திருச்சி-எச்.ராஜா, பெரம்பலூர்-தடா பெரியசாமி, மயிலாடுதுறை-ஆதவன், திருவாரூர்-முருகானந்தம், கடலூர்-அஸ்வத்தாமன் உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    • அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக திருவள்ளூர் டவுன் போலீசார் பா.ஜனதா கட்சியினர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
    • 30 பெண்கள் உட்பட 90 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி அருகே பாரதிய ஜனதா கட்சி சார்பில் நேற்று நூதன போராட்டம் நடைபெற்றது.

    இந்த நிலையில் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக திருவள்ளூர் டவுன் போலீசார் பா.ஜனதா கட்சியினர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

    இதுதொடர்பாக பட்டியல் அணி மாவட்ட பொதுச்செயலாளர் லட்சுமி காந்த், மாநில செயலாளர் வினோஜ் பி.செல்வா, மாநில ஓ.பி.சி. அணி செயலாளர் ராஜ்குமார், மாவட்டத் தலைவர் அஸ்வின் ராஜசிம்மா, மாவட்ட பொதுச்செயலாளர்கள் கருணாகரன், ஆர்யா சீனிவாசன், மாவட்டச் செயலாளர் பாலாஜி மற்றும் 30 பெண்கள் உட்பட 90 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    • மீட்கப்பட்ட சாமி சிலைகளை அருங்காட்சியகங்களில் வைக்கக்கூடாது.
    • மீண்டும் சம்பந்தப்பட்ட கோவில்களில் பிரதிஷ்டை செய்ய வேண்டும்.

    சென்னை:

    சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே பா.ஜனதா ஆன்மீக ஆலய மேம்பாட்டு பிரிவு சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

    துணைத்தலைவர் நாச்சியப்பன் தலைமை தாங்கினார். லியோ சுந்தரம், கண்ணபரமாத்மா, கோவிந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாநில பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, எச்.ராஜா. சி.பி.ராதா கிருஷ்ணன், கனல் கண்ணன், வேலூர் இப்ராகிம், அமைப்பு செயலாளர் கேசவ விநாயகன், வி.பி.துரைசாமி, கருநாகராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.

    இந்து ஆலயங்களை அறநிலையத்துறை மேற்பார்வையிடலாம். நிர்வாகம் செய்யக்கூடாது. குத்தகை என்ற பெயரில் கோவில் நிலங்கள் தாரை வார்க்கப்படுவதை தடுக்க வேண்டும்.

    4 லட்சம் ஹெக்டேர் சொத்துக்கள் உள்ளன. ஆண்டுதோறும் சொத்து விபரங்களை பட்டியலிட வேண்டும். ஆகம விதிமுறைகளில் அரசு தலையிட கூடாது. அறங்காவலர்களாக அரசியல் சார்பற்றவர்களை நியமிக்க வேண்டும்.

    மீட்கப்பட்ட சாமி சிலைகளை அருங்காட்சியகங்களில் வைக்கக்கூடாது. மீண்டும் சம்பந்தப்பட்ட கோவில்களில் பிரதிஷ்டை செய்ய வேண்டும். காலி பணியிடங்களை உரிய பணியிடங்களை உரிய விதிமுறைப்படி நிரப்ப வேண்டும்.

    கோவில்கள் பெயரில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க வேண்டும். மீட்கப்படும் சில சொத்துக்களும் மீண்டும் தாரை வார்க்கப்படுகிறது. இதை வன்மையாக கண்டிக்கிறோம் என்றனர்.

    உண்ணாவிரதத்தில் மாநில செயலாளர் வினோத் ஆன்மீக பிரிவு மாநில துணைத்தலைவர் சங்கர், ஹேமமாலினி, ரங்கராஜ், முருகேசன், குருஜி, தென்சென்னை மாவட்ட துணைத் தலைவர் நாச்சிகுப்பம் சரவணன், சென்னை மேற்கு மாவட்ட தமிழ் வளர்ச்சி பிரிவு தலைவர் பொன்.பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பா.ஜ.க. தலைவர் சித்ராங்கதன் தலைமையில், தொண்டர்கள் தூத்துக்குடியில் உள்ள கட்சி அலுவலகத்தில் திரண்டனர்.
    • பா.ஜனதா தொண்டர்கள் அமைச்சர் கீதாஜீவன் வீட்டை முற்றுகையிடுவதற்காக ஊர்வலமாக புறப்பட்டனர்.

    தூத்துக்குடி:

    பா.ஜனதா மாநில துணைத் தலைவர் சசிகலா புஷ்பா வீடு மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், மாநில தலைவர் அண்ணாமைலை குறித்து அவதூறாக பேசிய அமைச்சர் கீதாஜீவன் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி தெற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் சித்ராங்கதன் தலைமையில், பா.ஜனதா தொண்டர்கள் இன்று தூத்துக்குடியில் உள்ள கட்சி அலுவலகத்தில் திரண்டனர்.

    தொடர்ந்து அவர்கள் தனசேகரன் நகரில் இருந்து போல் பேட்டையில் உள்ள அமைச்சர் கீதாஜீவன் வீட்டை முற்றுகையிடுவதற்காக ஊர்வலமாக புறப்பட்டனர். இதில் பொதுச்செயலாளர் உமரி சத்தியசீலன், துணைத்தலைவர்கள் வக்கீல் வாரியார், சுவைதர், மாவட்ட வக்கீல் பிரிவு தலைவர் சுரேஷ்குமார், மாநில நிர்வாகிகள் விவேகம் ரமேஷ், வக்கீல் நாகராஜன் உள்பட திரளானோர் சென்றனர்.

    புதிய பஸ்நிலையம் அருகே சென்றபோது அவர்களை டி.எஸ்.பி. சத்தியராஜ் தலைமையில் போலீசார், அனுமதி இல்லாமல் ஊர்வலமாக செல்லக்கூடாது எனவும், திரும்பி செல்லுமாறு அறிவுறுத்தினர்.

    தொடர்ந்து அவர்கள், அமைச்சர் வீட்டை முற்றுகையிடுவதற்காக சென்றனர். இதைய டுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் மற்றும் அதிரடிப்படையினர் அங்கு விரைந்து வந்தனர்.

    அப்போது முற்றுகையிட சென்றால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி. எச்சரிக்கை விடுத்தார். எனினும் அதனை மீறி பா.ஜ.க.வினர் ஊர்வலமாக சென்றனர். இதைத்தொடர்ந்து மாவட்ட தலைவர் சித்ராங்கதன் உள்ளிட்ட 100 பேரை போலீசார் கைது செய்தனர்.

    • சோளகர் சமூகத்தை சேர்ந்த மலைவாழ் மக்களான பூமிகா-வெள்ளையன் என்பவரது வீட்டில் மதிய உணவாக களி உணவை அண்ணாமலை விரும்பி சாப்பிட்டார்.
    • மலைவாழ் மக்களுடன் செல்போனில் புகைப்படம் எடுத்து கொண்டு அங்கிருந்து கிளம்பி சென்றார்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூரில் பால் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வை கண்டித்து பாரதிய ஜனதா கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கி பேசினார். பின்னர் ஆர்ப்பாட்டத்தை முடித்து கொண்டு அண்ணாமலை அங்கிருந்து மலைவாழ் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியான பர்கூர் தாமரைகரை பகுதிக்கு சென்றார்.

    அப்போது மலைவாழ் மக்களில் உள்ள சோளகர், லிங்காயத்து, இந்து மலையாளி என்ற சமூக மக்கள் வாழ்ந்து வரும் நிலையில் இந்து மலையாளி என்ற சமூகத்தை சேர்ந்த மலைவாழ் மக்களுக்கு மற்ற மாவட்டத்தில் கொடுப்பது போல சாதி சான்றிதழ் கொடுப்பது இல்லை என்று கூறி அந்த சமூகத்தை சேர்ந்த ஒருவர் அண்ணாமலையின் காலில் விழுந்தார்.

    பதிலுக்கு அவரது காலில் திரும்ப விழுந்த அண்ணாமலை கண்ணீர் விட்டு கோரிக்கை விடுத்தவரை தனது தோளில் சாய்த்து ஆறுதல் கூறி, வரும் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைக்கும் போது உங்களது கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்தார்.

    இதனை தொடர்ந்து சோளகர் சமூகத்தை சேர்ந்த மலைவாழ் மக்களான பூமிகா-வெள்ளையன் என்பவரது வீட்டில் மதிய உணவாக களி உணவு விரும்பி சாப்பிட்டார். பின்பு அங்கு உள்ள மலைவாழ் மக்களுடன் செல்போனில் புகைப்படம் எடுத்து கொண்டு அங்கிருந்து கிளம்பி சென்றார்.

    • கட்சியின் நிர்வாக வசதிக்காக ஒவ்வொரு மாவட்டமும் 10-க்கும் மேற்பட்ட மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.
    • அதன்படி 1100 மண்டலங்கள் உள்ளன. எனவே இந்த மண்டலங்கள் வாரியாக ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளார்கள்.

    சென்னை:

    ஆவின் பால் ஆரஞ்சு நிற பாக்கெட் லிட்டருக்கு ரூ.12 உயர்த்தியது மற்றும் மின் கட்டண உயர்வுக்கு பா.ஜனதா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    பால் விலை மற்றும் மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி 15-ந்தேதி மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை அறிவித்து இருந்தார். அதன் படி நாளை (15-ந்தேதி) அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.

    இந்த முறை போராட்டத்தில் அடிமட்ட மக்களும் கலந்து கொள்ளும் வகையில் நடத்த பா.ஜனதா திட்டமிட்டுள்ளது.

    கட்சியின் நிர்வாக வசதிக்காக ஒவ்வொரு மாவட்டமும் 10-க்கும் மேற்பட்ட மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.

    அதன்படி 1100 மண்டலங்கள் உள்ளன. எனவே இந்த மண்டலங்கள் வாரியாக ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளார்கள்.

    நாளை 1100 இடங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். ஈரோட்டில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொள்கிறார்.

    சென்னையில் 66 இடங்களில் நடைபெறுகிறது. அடையாறு டெலிபோன் எக்ஸ்சேன்ஞ் முன்பு நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் கராத்தே தியாகராஜனும், மடிப்பாக்கத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் துணை தலைவர் கரு.நாகராஜனும் கலந்து கொள்கிறார்கள்.

    மேலும் மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகள் உள்பட அனைத்து நிர்வாகிகளும் இந்த போராட்டத்தில் கலந்து கொள்கிறார்கள்.

    • மாவட்ட மார்க்சிஸ்ட் செயலாளருக்கு, மேயர் கடிதம் எழுதியதாக புகார்.
    • மாநகராட்சிக்குள் பாஜக மற்றும் மார்க்சிஸ்ட் கவுன்சிலர்கள் மோதல்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு, திருவனந்தபுரம் மாநகராட்சியில் பணி நியமனம் வழங்க மேயர் ஆர்யா ராஜேந்திரன் சிபாரிசு கோரியதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக நவம்பர் 1ஆம் தேதி கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் அனவூர் நாகப்பனுக்கு மேயர் ஆர்யா ராஜேந்திரன் எழுதிய கடிதம் ஊடகங்களில் வெளியானது.

    திருவனந்தபுரம் மாநகராட்சியின் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் 74 மருத்துவர்கள், 66 பணியாளர்கள் செவிலியர்கள் மற்றும் 64 மருந்தாளுநர்கள் பணியிடங்கள் உள்பட 295 தற்காலிக பணியிடங்களுக்கு கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள் பெயரை சிபாரிசு செய்யும்படி அதில் மேயர் கோரியிருந்ததாக கூறப்படுகிறது.

    இந்த கடிதம் கேரளாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. திருவனந்தபுரம் மாநகராட்சி முன்பு பாஜக மற்றும் இளைஞர்கள் காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் அவர்கள் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்ததுடன் கண்ணீர் புகைகுண்டுகளை வீசினர். இதனால் அந்த பகுதியில் பதற்றம் நீடித்தது. 


    மேயரின் கடிதம் தொடர்பாக, திருவனந்தபுரம் மாநகராட்சிக்குள் பாஜக மற்றும் மார்க்சிஸ்ட் கவுன்சிலர்கள் இடையே மோதல் வெடித்தது. ஒருவரை ஒருவர் தாக்கிய நிலையில் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

    இந்த நிலையில், தான் அந்த கடிதத்தை அனுப்பவில்லை, கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தேதியில் திருவனந்தபுரத்தில் நான் இல்லை, இந்த விவகாரம் பற்றி முறையான விசாரணை நடத்தப்படும் என்று மேயர் ஆர்யா ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். 

    • ஆர்ப்பாட்டத்திற்கு மேற்கு மாவட்ட தலைவர் அஸ்வின் (ஏ) ராஜசிம்மா மகேந்திரா தலைமையில் பாஜக நிர்வாகிகள் கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • ஆர்ப்பாட்டத்திற்கு மாநிலத் துணைத் தலைவர் பால் கனகராஜ், ஓபிசி அணி மாநில செயலாளர் ராஜ்குமார் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

    திருவள்ளூர்:

    தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்திய திராவி மாடல் அரசை கண்டித்து திருவள்ளூர் கலெக்டர் அலுவலக அருகே மேற்கு மாவட்ட பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மேற்கு மாவட்ட தலைவர் அஸ்வின் (ஏ) ராஜசிம்மா மகேந்திரா தலைமையில் பாஜக நிர்வாகிகள் கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநிலத் துணைத் தலைவர் பால் கனகராஜ், ஓபிசி அணி மாநில செயலாளர் ராஜ்குமார் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

    இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட பொதுச்செயலாளர்கள் சீனிவாசன், கருணாகரன், ஆர்யா சீனிவாசன், ஜெய்கணேஷ், மாவட்ட பொருளாளர் மதுசூதனன், நகரத் தலைவர் சதீஷ் மற்றும் மாநில நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகிகள் அணி பிரிவு தலைவர்கள் மண்டல் தலைவர்கள் உள்பட 200-க்கும் மேற்பட்ட பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழகம் முழுவதும் தி.மு.க. அரசை கண்டித்து பாரதிய ஜனதா சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
    • வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார்.

    சென்னை:

    தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட வாக்குறுதிகளை தி.மு.க. நிறைவேற்றவில்லை. லஞ்சம், ஊழல் அதிகரித்து விட்டது. சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க தவறிவிட்டது என்று பா.ஜனதா குற்றம் சாட்டி வருகிறது. சில முறைகேடுகள் தொடர்பான பட்டியலையும் தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வெளியிட்டார்.

    இதையடுத்து தி.மு.க. அரசை கண்டித்து தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இன்று உண்ணாவிரதம் நடைபெறும் என்று அறிவித்தார். அதன்படி அனைத்து மாவட்டங்களிலும் இன்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

    சென்னையில் கட்சி மாவட்டங்கள் 7 உள்ளன. அதன்படி 7 இடங்களில் உண்ணாவிரதம் இருக்க அனுமதி கோரப்பட்டது. ஆனால் ஒரு இடத்தில் உண்ணாவிரதம் இருக்கும் படி போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. அதன்படி வள்ளுவர் கோட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது.

    இன்று காலையில் உண்ணாவிரதம் தொடங்கியது. மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார். மாநில நிர்வாகிகள் கரு.நாகராஜன், எம்.என்.ராஜா, கராத்தே தியாகராஜன், சக்கரவர்த்தி, வினோஜ் செல்வம், மாவட்ட தலைவர்கள் காளிதாஸ், சாய்சத்யன், தனசேகர், லதா சண்முகம் மற்றும் திருப்புகழ், லலிதா மோகன், மத்திய சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் விஜய ஆனந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×