search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் முதல்-அமைச்சர் பணியாற்றி வருகிறார்-  அமைச்சர் கீதாஜீவன் பேச்சு
    X

    கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் பேசியபோது எடுத்தபடம். அருகில் மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் பலர் உள்ளனர்.

    தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் முதல்-அமைச்சர் பணியாற்றி வருகிறார்- அமைச்சர் கீதாஜீவன் பேச்சு

    • தூத்துக்குடி மாநகர தி.மு.க. சார்பில் தெருமுனை பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது.
    • 2024-ம் ஆண்டு தேர்தலில் 40 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெறுவோம் என்று அமைச்சர் கீதாஜீவன் பேசினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகர தி.மு.க. சார்பில் பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு தெருமுனை பிரச்சார பொதுக்கூட்டம் சண்முகபுரம், அண்ணாநகர் ஆகிய இடங்களில் நடைபெற்றது.

    வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் இதில் கலந்து கொண்டு பேசியதாவது:-

    தமிழ் மொழி வளர்ச்சிக்காக தலைவர் கலைஞருடன் மாணவ பருவமுதல் பேராசிரி யர் அன்பழகன் கொள்கைப் பிடிப்போடு சுய மரியாதை யுடன் பல நூல்களை எழுதினார். அதற்கு பெருமை சேர்க்கும் நூற்றாண்டு பணியை பாராட்டும் வகையில் கல்வி இயக்க வளாகத்திற்கு அன்பழகன் பெயர் சூட்டப்பட்டு கவுரவிக்கப்பட்டுள்ளது.

    நமது மாவட்டத்தில் 3 பெரிய தொழிற்சாலைகள் வரவுள்ளன. அதன் மூலம் படித்த இளைஞர்களுக்கு நேரடியாகவும் மறைமுக மாகவும் வேலை வாய்ப்பு கிடைக்கவுள்ளது. விவசாயி களுக்கு என தனி பட்ஜெட் உள்ளன.

    தி.மு.க. ஆட்சியின் சாதனைகளை நாங்கள் சொல்ல தயார். மோடி ஆட்சியின் சாதனைகளை நீங்கள் சொல்ல தயாரா? வேலை வாய்ப்பு இல்லை உரிமைகள் பறிப்பு அனைத்து பொதுத்துறை நிறுவனங்களும் தனியா ருக்கு விற்பனை இது தான் உங்கள் சாதனை பல்வேறு கருத்துக்களை கூறி குழப்பத்தை ஏற்படுத்தி குட்டையில் மீன்பிடிக்கலாம் என்று நினைப்பார்கள். அதற்கு நாம் இடம் அளிக்க கூடாது.

    தி.மு.க. ஆட்சியில் கல்வி வேலை வாய்ப்பு மகளிர் என அனைத்து தரப்பினரும் பயன் அடையும் வகையில் முதல்-அமைச்சர் ஸ்டாலின் பணியாற்றி வருகிறார். கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து என்று தேர்தல் நேரத்தில் கொடுத்த அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும்.

    2024-ம் ஆண்டு தேர்தலில் 40 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெறுவோம். இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி, மாநில பேச்சாளர் சரத்பாலா, மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், துணை மேயர் ஜெனிட்டா, மாவட்ட துணைச்செயலளார்கள் ராஜ்மோகன்செல்வின், ஆறுமுகம், பொருளாளர் ரவிந்திரன், மாநகராட்சி மண்டலத்தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, நிர்மல்ராஜ், அன்னலட்சுமி, கலைச் செல்வி, பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, மாநகர துணை செயலாளர்கள் கீதாமுருகேசன், கனக ராஜ், மாவட்ட அணி அமைப்பா ளர்கள் மதியழகன், அந்தோணி ஸ்டாலின், அன்பழகன், ரமேஷ், அபிராமிநாதன், கஸ்தூரிதங்கம், உமாதேவி, துணை அமைப்பாளர்கள் நலம் ராஜேந்திரன், வக்கீல் சீனிவாசன், அருணா தேவி, ஜீவன்ஜேக்கப், அந்தோணி கண்ணன், சங்கர், ராமர், பார்வதி, சரவணன், கவிதாதேவி, மாநகர அணி அமைப்பாளர்கள் வக்கீல் ஆனந்தகேபரியேல்ராஜ், அருண்குமார், முருகஇசக்கி, ஜெயக்கனி, டேனி, பிரபு, தேவதாஸ், சக்திவேல், சுரேஷ், துணை அமைப்பாளர்கள் சிவக்குமார் என்ற செல்வின், வக்கீல் கிறிஸ்டோபர் விஜயராஜ், பால்ராஜ், டைகர்வினோத், அருண்சுந்தர், பால்மாரி, ஆர்த ர்மச்சாது, சங்கர நாராயணன், பிக்அப் தனபால், பகுதி செயலாளர்கள் ஜெயக்குமார், மேகநாதன், ராமகிருஷ்ணன், சுரேஷ் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×