search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "membership"

    • நிகழ்ச்சிக்கு செஞ்சி ஒன்றிய குழுத்தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார்
    • அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு தி.மு.க. வில் புதிய உறுப்பினர் சேர்க்கும் முகாமை தொடங்கி வைத்தார்

    விழுப்புரம்: 

    விழுப்புரம் வடக்கு மாவட்டம் செஞ்சி கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் தி.மு.க.வில் புதிய உறுப்பி னர்கள் சேர்க்கும் சிறப்பு முகாம் கோனை ஊராட்சி அப்பம்பட்டில் நடை பெற்றது. நிகழ்ச்சிக்கு செஞ்சி ஒன்றிய குழுத்தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். ஒன்றிய அவைத் தலைவர் ஆறுமுகம் வரவேற்றார். நிகழ்ச்சியில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு தி.மு.க. வில் புதிய உறுப்பினர் சேர்க்கும் முகாமை தொடங்கி வைத்தார்.  இந்த முகாமில் செஞ்சி வட்டார காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்த அஞ்சாஞ்சேரி சரவணன் அக்கட்சியிலிருந்து விலகி அமைச்சர் செஞ்சி மஸ்தான் முன்னிலையில் தி.மு.க.வில் இணைத்துக்கொண்டார். தி.மு.க.வில் இணைந்த சரவணனுக்கு அமைச்சர் செஞ்சி மஸ்தான் சால்வை அணிவித்து வரவேற்று வாழ்த்து தெரிவித்தார். நிகழ்ச்சியில மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழு மலை விவசாய அணி அஞ்சாஞ்சேரி கணேசன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆனந்த், பொதுக்குழு உறுப்பினர் மணிவண்ணன், ஒன்றிய குழு துணைத் தலைவர் ஜெயபாலன், ஒன்றிய அவைத் தலைவர் வாசு, துணை செயலாளர்கள் மதியழகன், அனுசுயா மணிபாலன், பொருளாளர் இக்பால், மாவட்ட பிரதி நிதிகள் குணசேகரன், கோடீஸ்வரன், ஒன்றிய இளைஞரணி அமைப் பாளர் ஜம்போதி பழனி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பழனி, மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் ரிஸ்வான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  முன்னதாக செஞ்சி கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் அமைக்கப்பட்டி ருந்த நீர்மோர் பந்தலை அமைச்சர் செஞ்சி மஸ்தான் திறந்து வைத்து பொது மக்களுக்கு தர்பூசணி, வெள்ளரிப்பிஞ்சு, ரொட்டி, நீர்மோர் ஆகிவற்றை வழங்கினார்.

    • தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.
    • சிறப்பு அழைப்பாளர்களா மணிமாறன் கலந்து கொண்டார்.

    திருமங்கலம்

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழா, தி.மு.க. புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம், வாக்குசாவடி முகவர்கள் நியமிப்பது தொடர்பான கள்ளிக்குடி தெற்கு ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

    ஒன்றிய செயலாளர் மதன்குமார் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக தெற்குமாவட்ட தி.மு.க செயலாளர் மணிமாறன், வர்த்தகர் அணி செயலாளர் ராமர் கலந்து கொண்டனர். மாவட்ட செயலாளர் பேசுகையில், அதிக உறுப்பினர்களை சேர்க்கும் ஒன்றியம் மற்றும் ஒன்றிய செயலாளருக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் பரிசளிக்கப்படும்.

    விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ளது. கடந்த விருதுநகர் பாராளுமன்ற தேர்தலில் திருமங்கலம் தொகுதியில் தான் கூடுதலாக 30 ஆயிரம் வாக்குகள் பெற்றுதந்தோம். வருகிற எம்.பி. தேர்தலில் தலைமை அறிவிக்கும் வேட்பாளருக்கு திருமங்கலம் தொகுதியில் 50 ஆயிரம் வாக்குகள் கூடுதலாக பெற்றுதரவேண்டும் என்றார்.

    தெற்குமாவட்ட அவைத்தலைவர் நாகராஜன், திருமங்கலம் தெற்கு ஒன்றிய செயலாளர் சண்முகம், திருமங்கலம் நகரசெயலாளர் ஸ்ரீதர், பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதிமூலம், சிவமுருகன், நகராட்சி தலைவர் ரம்யாமுத்துக்குமார், துணைத்தலைவர் ஆதவன் அதியமான், கள்ளிக்குடி தெற்கு ஒன்றிய அவைத்தலைவர் சுந்தரமூர்த்தி, துணை செயலாளர்கள் அழகா்சாமி, பால்பாண்டி, ராஜசுலோசனா, பொருளாளர் தேசிங்குராஜன், மாவட்ட பிரதிநிதிகள் ராதாகிருஷ்ணன் ஹரிகரன், பாண்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • சிவகங்கையில் அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர். செந்தில்நாதன் தலைமை தாங்கினார்.

    சிவகங்கை

    சிவகங்கையில் உள்ள அ.தி.மு.க. மாவட்ட அலுவலகத்தில் புதிய உறுப்பினர் சேர்க்கை தொடர்பான ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர்-சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர். செந்தில்நாதன் தலைமையில் நடந்தது.

    முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட செயலாளர் பேசுகையில், எடப்பாடி பழனிசாமி சிவகங்கை மாவட்டத்திற்கு வந்து சென்ற பின்னர் சோதனைகளை எல்லாம் தகர்த்து பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கு சிவகங்கை மாவட்டம் பெற்ற புண்ணியமாகும் . சிவகங்கை மாவட்டத்தில் 3 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்றார்.

    முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் குணசேகரன், நாகராஜன், நகரசெயலாளர் ராஜா, ஒன்றிய செய லாளர்கள் கருணாகரன், செல்வமணி, ஸ்டீபன்அருள்சாமி, சேவிவியர்தாஸ், சிவாஜி, கோபி, ஜெகதீஸ்வரன், பாரதிராஜன், சோனைரவி.

    மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் இளங்கோவன், மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் தமிழ்செல்வன், கூட்டுறவு சங்க தலைவர் சங்கர் ராமநாதன், தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் குழந்தை, மாவட்ட பாசறை இணை செயலாளர் மோசஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் அ.தி.மு.க. புதிய உறுப்பினர் சேர்க்கை படிவங்களை மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் நிர்வாகிகளுக்கு வழங்கினார்.

    • கமுதியில் தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாமை காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. பங்கேற்றார்.
    • மத்திய ஒன்றிய செயலாளர் சண்முகநாதன் வரவேற்றார்.

    கமுதி

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் தி.மு.க. புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் பஸ் நிலையம் முன்பு நடந்தது. மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான காதர் பாட்சா முத்துராமலிங்கம் தலைமை தாங்கினார். முதுகுளத்தூர் தொகுதி பொறுப்பாளரும், மதுரை முன்னாள் மேயருமான குழந்தைவேலு, முகாமை தொடங்கி வைத்தார். கமுதி பேரூர் செயலாளர் பாலமுருகன், வடக்கு ஒன்றிய செயலாளர் வாசுதேவன் முன்னிலை வகித்தனர். ஊராட்சி ஒன்றியகுழு தலைவர் தமிழ் செல்விபோஸ், துணைத் தலைவர் சித்ராதேவி அய்யனார், ஊராட்சி மன்ற தலைவர் காவடிமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதே போல் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் நடந்த புதிய உறுப்பினர் சேர்க்கை முகாமிற்கு மாவட்டச் செயலாளர் காதர்பாட்சாமுத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.தொகுதி பொறுப்பாளர் குழந்தைவேலு தொடங்கி வைத்தார்.மத்திய ஒன்றிய செயலாளர் சண்முகநாதன் வரவேற்றார்.

    • தி.மு.க. பூத் கமிட்டி உறுப்பினர் சேர்க்கைக்காக பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
    • பாராளுமன்ற தேர்தலுக்கான பணிகளை தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உடனடியாக தொடங்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்தார்.

    விருதுநகர்

    பாராளுமன்ற தேர்தலுக்கான பணிகளை தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உடனடியாக தொடங்க வேண்டும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் சென்னையில் நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அறிவுறுத்தியிருந்தார். அதன்படி தமிழ்நாட்டில் உள்ள 236 சட்டமன்ற தொகுதிகளிலும் பூத் கமிட்டி உறுப்பினர்களை சேர்ப்பதற்கான பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கும் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதிக்கு மகளிரணி துணை செயலாளர் பவானி ராஜேந்திரன், அருப்புக்கோட்டை தொகுதிக்கு நியமனக்குழு உறுப்பினர் சரவணன், சாத்தூர் தொகுதிக்கு விவசாய தொழிலாளர் அணி துணை செயலாளர் கொடி சந்திரசேகர், சிவகாசி தொகுதிக்கு ஐ.டி.அணி துணை செயலாளர் மதுரை எஸ்.பாலா, விருதுநகர் தொகுதிக்கு ஐ.டி.அணி துணை செயலாளர் விஜய கதிரவன், திருச்சுழி தொகுதிக்கு இளைஞரணி துணை செயலாளர் ராஜா என்ற பிரதீப்ராஜா, ராஜபாளையம் தொகுதிக்கு வர்த்தக அணி இணை செயலாளர் முத்துலட்சுமி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    • அதிகளவு உறுப்பினர்கள் சேர்க்கும் நிர்வாகிகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்படும்.
    • ராமநாதபுரம் தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் தி.மு.க. மாவட்டசெயல்வீரர்கள் கூட்டம் அவைத்தலைவர் சத்தியமூர்த்தி தலைமையில் நடந்தது.

    இதில் மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. பங்கேற்று பேசினார். மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பிறந்தநாளை ஆண்டு முழுவதும் கொண்டாடுவது, வருகிற நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும்/

    தொகுதிக்கு 50 ஆயிரம் புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும், அதிகளவில் உறுப்பினர்கள் சேர்க்கும் நிர்வாகிகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்படும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    தொகுதி பொறுப்பாளர்கள் முத்துராமலிங்கம், குழந்தை வேலு, ஜூடு, பரமக்குடி எம்.எல்.ஏ. முருகேசன், மாவட்ட துணைச்செயலாளர் கருப்பையா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    • புதிதாக சேருபவரின் குடும்பத்தில் வேறு யாரும் தி.மு.க.வில் இருந்தால் அது பற்றியும் அந்த விண்ணப்பத்தில் குறிப்பிடலாம்.
    • முக்கியமாக கல்லூரி மாணவ-மாணவிகளை அதிகமாக சேர்க்கும் வகையில் சிறப்பு முகாம்கள் நடத்த மாவட்டச் செயலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    சென்னை:

    மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு தொடக்க விழாவையொட்டி, தி.மு.க.வில் மேலும் 1 கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தினார். இதற்கான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

    இந்த பணியை அடுத்த மாதம் 3-ந்தேதி (ஏப்ரல்) தொடங்கி ஜூன் மாதம் 3-ந்தேதிக்குள் உறுப்பினர் சேர்கையை முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    இதையொட்டி உறுப்பினர் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவம் தலைமைக் கழகம் சார்பில் அச்சடிக்கப்பட்டு வருகிறது.

    அந்த விண்ணப்பத்தில் உறுப்பினர் பெயர், வயது, தந்தை பெயர், முகவரி, படிப்பு, தொழில் ஆகியவற்றுடன் வாக்காளர் அடையாள அட்டை எண், ஆதார் எண், தொலைபேசி நம்பர் ஆகியவற்றையும் குறிப்பிடும் வகையில் படிவம் தயாராகி வருகிறது. பாஸ்போர்ட் அளவு புகைப் படம் ஒட்டவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    புதிதாக சேருபவரின் குடும்பத்தில் வேறு யாரும் தி.மு.க.வில் இருந்தால் அது பற்றியும் அந்த விண்ணப்பத்தில் குறிப்பிடலாம். அதற்கேற்ப விண்ணப்ப படிவம் தயாராகி வருகிறது.

    தி.மு.க.வில் ஏற்கனவே 1 கோடி பேர் உறுப்பினர்களாக உள்ள நிலையில் இப்போது ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் 50 ஆயிரம் உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இதில் முக்கியமாக கல்லூரி மாணவ-மாணவிகளை அதிகமாக சேர்க்கும் வகையில் சிறப்பு முகாம்கள் நடத்த மாவட்டச் செயலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    கல்லூரிகள் இல்லாத இடமாக இருந்தால் வீடு வீடாக சென்று திண்ணை பிரசாரம் செய்து புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

    உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் இளைஞர் அணி, மாணவர் அணி, மகளிரணியினர் அதிகமாக ஈடுபட வேண்டும் என்றும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் செயல்படுத்தி வரும் திட்டங்களை மக்கள் மத்தியில் பேசி புதிய உறுப்பினர்களை சேர்க்கும் வகையில் உறுப்பினர் சேர்க்கை திருவிழாவை நடத்த வேண்டும் என்றும் ஆலோசனை வழங்கப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து மாவட்டச் செயலாளர் கூறுகையில், கடந்த முறை உறுப்பினர் சேர்க்கையின் போது அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்பதற்காக போலியாக உறுப்பினர்களை சேர்த்ததாக கணக்கு காட்டினர்.

    அந்தந்த முகவரிக்கு சென்று பார்த்தபோது அந்த பெயரில் உறுப்பினர் அங்கு இல்லை என்று தெரிய வந்தது.

    இதுபோன்ற தவறுகள் நடைபெறாமல் உண்மையான நபர்களை கட்சியில் உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும் என்று தலைமை அறிவுறுத்தி உள்ளது.

    தி.மு.க.வில் பெண்களை விட ஆண்கள்தான் அதிகமாக உள்ளனர். எனவே இப்போது உறுப்பினர்களை சேர்க்கும் போது பெண்களையும் அதிகமாக கட்சி உறுப்பினர்களாக சேர்க்க ஏற்பாடு செய்யுமாறு அறிவுறுத்தி உள்ளனர்.

    தி.மு.க.வின் பலம் இதன் மூலம் கண்டிப்பாக அதிகரிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வரும் நாடாளுமன்ற தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியை தி.மு.க. வெற்றி பெறபாடுபட வேண்டும்.
    • மயிலாடுதுறை மாவட்டத்தில் உறுப்பினர் சேர்க்கையை நிர்வாகிகள், தொண்டர்கள் தீவிரப்படுத்த வேண்டும்.

    சீர்காழி;

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் ஒரு தனியார் திருமண மண்டபத்தில் சீர்காழி கிழக்கு ஒன்றிய தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய அவைத் தலைவர் நெடுஞ்செழியன் தலைமை வைத்தார்.

    தி.மு.க. உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் குத்தாலம் கல்யாணம், சீர்காழி எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் முத்துமகேந்திரன், ஜி. என்.ரவி, தலைமை பொதுக்குழு உறுப்பினர் சாமிநாதன், ஒன்றிய குழு தலைவர் கமலஜோதி தேவேந்திரன் முன்னிலை வகித்தனர்.

    தி.மு.க. ஒன்றிய செயலாளர் பஞ்சு குமார் வரவேற்றார். மயிலாடுதுறை மாவட்ட செயலாளரும் பூம்புகார் எம்.எல்.ஏ.வுமான நிவேதா முருகன் கலந்து கொண்டு பேசுகையில், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியை தி.மு.க. வெற்றி பெறபாடுபட வேண்டும். மயிலாடுதுறை மாவட்டத்தில் உறுப்பினர் சேர்க்கையை நிர்வாகிகள், தொண்டர்கள் தீவிர படுத்த வேண்டும் என்றார்

    கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. மூர்த்தி மாவட்ட அவைத் தலைவர் சீனிவாசன் ஒன்றிய செயலாளர்கள் பிரபாகரன் மலர்விழி திருமாவளவன்,ரவிக்குமார் ரவிக்குமார் மாவட்டத் துணைச் செயலாளர் ஞானவேலன், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் ரவி, மாவட்ட கவுன்சிலர்கள் ஆனந்தன், இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஜிபையர் அகமது, நிர்வாகிகள் துரைராஜன், சசிகுமார், குலோத்துங்கன், ரவிச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • வீடு வீடாகச் சென்று இளைஞ ர்களை தங்களை இணைத்துக் கொண்டனர்.
    • வேதா ரண்யம் மேற்குஒன்றிய தி.மு.க. செயலாளர் உதயம் முருகையன் உறுப்பினர் சேர்க்கையைதொடங்கி வைத்தார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் மேற்கு ஓன்றியம் சார்பில் இல்லம் தேடி இளைஞரணி உறுப்பி னர்கள் சேர்க்கும் முகாம் நகர மன்ற தலைவரும் நகர தி.மு.க. செயலாளருமான புகழேந்தி தலைமையில் நடைபெற்றது.

    ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் விக்னேஷ்காமராஜ் முன்னிலை வகித்தார். வேதா ரண்யம் மேற்குஒன்றிய தி.மு.க. செயலாளர் உதயம் முருகையன் உறுப்பினர் சேர்க்கையைதொடங்கி வைத்தார்.

    வேதாரண்யம் மேற்கு ஒன்றியம் ஆயக்காரன்புலம் ஒன்றுஊராட்சிக்கு உட்பட்ட பழையகரம், முதலியார் குத்தகை, பெரிய குத்தகை கொச்சிகுத்தகைஉள்ளிட்ட பல்வேறு இடங்களில் வீடு வீடாகச் சென்று இல்லம் தேடி இளைஞரணிஉறுப்பினர்கள் சேர்க்கும்பணி நடைபெற்றது. இதில் வீடு வீடாகச் சென்று இளைஞர்களை தங்களை இணைத்துக் கொண்டனர்.

    இதில் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்அசோக் குமார்ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ஆசைத்தம்பி, வழக்கறிஞர் அணி அன்பரசு, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் குமார் முன்னாள் மாவட்ட பிரதிநிதி பாபு ஊராட்சி செயலாளர் தமிழ்செல்வன் மேற்கு ஒன்றியதுணை செயலாளர் அருள்அரசன் உள்ளிட்ட தி.மு.க. நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    • வேதாரண்யம் கிழக்கு ஒன்றிய செயலாளர்சதாசிவம் தலைமையில் இல்லம் தேடி உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் ஜோதி.செல்லபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தி.மு.க. கிழக்கு ஒன்றியத்தின் சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், நாகை மாவட்ட செயலாளர்கவுதமன் ஆகியோர் அறிவுறுத்தலின்படி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மலர்வண்ண ன்வழிகாட்டுதல்படி, வேதாரண்யம் கிழக்கு ஒன்றிய செயலாளர்சதாசிவம் தலைமையில் இல்லம் தேடி உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது .

    நிகழ்ச்சியில் ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் ஜோதி.செல்லபாண்டியன், மாவட்ட கவுன்சிலர் சோழன், மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் சத்தியமூர்த்தி , மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் தாமோதரன் , மாணவரணி துணை அமைப்பாளர் செந்தாமரைச்செல்வன், அயலக அணி துணை அமைப்பாளர் சம்பத், மகளிர் தொண்டரணி துணை அமைப்பாளர் மோகனா தசமணி, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கலைக்கோவன், ஒன்றிய கழக அவைத் தலைவர் ஏகாம்பரம் , மாவட்ட பிரதிநிதிசெல்வம், ஒன்றிய துணைச் செயலாளர் சேதுராஜன், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர்கள் கவியரசன், ரெத்தினசாமி மற்றும் கத்தரிப்புலம், கிளை செயலாளர்கள் கலந்துகொண்டனர்.

    • மானாமதுரை பகுதியில் தி.மு.க. இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.
    • இந்த முகாமை தமிழரசி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஒன்றியத்தில் தி.மு.க. இளைஞரணி சார்பில் உறுப்பினர்கள் சேர்க்கும் பணி கன்னார் தெரு மாரியம்மன் கோவிலில் தொடங்கியது. இதை மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசி புதிய உறுப்பினர்கள் பெயர்களை எழுதி தொடங்கி வைத்தார். நகரசெயலாளர் பொன்னுசாமி வரவேற்றார். முத்தனேந்தல் பகுதியில் ஒன்றியசெயலாளர் வழக்கறிஞர் அண்ணாதுரை, ஒன்றியகுழு துணைத்தலைவர் முத்துசாமி ஆகியோர் வரவேற்றனர். திருப்புவனம் ஒன்றிய பகுதியில் மாவட்ட துணை செயலாளர்-திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன் வரவேற்றார். அனைத்து இடங்களுக்கு சென்று இளைஞரணி உறுப்பினர் சேர்க்கும் பணியை தமிழரசி எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.

    • விளாத்தி குளத்தில் பனைமர தொழிலாளர் நல வாரியத்திற்கு உறுப்பினர் சேர்க்கும் முகாம் நடை பெற்றது.
    • தூத்துக்குடி மாவட்ட செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் உள்ளிட்டோர் பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றனர்.

    தூத்துக்குடி:

    சமத்துவ மக்கள் கழகம் நிறுவனர் தலைவரும், தமிழ்நாடு பனைமர தொழிலாளர்கள் நலவாரிய தலைவருமான எர்ணாவூர் நாராயணன் ஆணையின்படி தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் விளாத்தி குளம் ஒன்றியம் கு. சுப்பிரமணியபுரத்தில் பனைமர தொழிலாளர் நல வாரியத்திற்கு உறுப்பினர் சேர்க்கும் முகாம் நடை பெற்றது.

    ஊர் தலைவர் அரிபாகரன் தலைமை தாங்கினார். ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்க மாவட்ட தலைவர் ஞான சேகர், சமத்துவ மக்கள் கழகம் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றனர். நிகழ்ச்சியில் மாவட்ட அவை தலைவர் கண்டிவேல், மாவட்ட பொருளாளர் அருண் சுரேஷ் குமார், துணைச் செயலாளர் மில்லை தேவராஜ், வர்த்தக அணி செயலாளர் சிவசு முத்துக்குமார், மாநகரச் செயலாளர் உதயசூரியன், மாவட்ட மாணவரணி துணை செயலாளர் பிரகாஷ் மற்றும் சுந்தர், காமராஜ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ×