search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உறுப்பினர் சேர்க்கை"

    • 2 கோடி உறுப்பினர்கள் என்ற இலக்கை நிர்ணயித்துள்ளோம்.
    • சென்னை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் தொடங்கியது.

    தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் கடந்த மாதம் தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். இதைத் தொடர்ந்து கட்சியின் சின்னம், கொடி வடிவமைப்பு ஆகிய பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அடுத்த கட்டமாக கட்சிக்கு 2 கோடி புதிய உறுப்பினர்கள் சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

    இதையொட்டி விஜய் ஆலோசனையின் பேரில் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த், நிர்வாகிகளுடன் நேரடியாகவும், தொலைபேசி மூலமும் ஆலோசனை நடத்தி உறுப்பினர் சேர்க்கைக்கான ஆயத்த பணிகளை மேற்கொண்டு வந்தார்.

    இந்நிலையில் புதிய உறுப்பினர் சேர்க்கைக்காக புதிய நிர்வாகிகளை கட்சி தலைவர் விஜய் நேற்று நியமனம் செய்தார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக வெற்றிக் கழகத்தின் அடிப்படைக் கட்டமைப்புகளை வலுப்படுத்தி வருகின்றோம். 2 கோடி உறுப்பினர்கள் என்ற இலக்கை நிர்ணயித்துள்ளோம்.

    இதன் முதற்கட்டமாக உறுப்பினர்கள் சேர்க்கை அணியை உருவாக்கியுள்ளோம். மகளிர் தலைமையில் முதன் முதலாக உருவாக்கப்பட்டுள்ள இந்த அணியினர் கழக தோழர்களோடு இணைந்து மக்களுக்கு உதவி செய்வார்கள்" என குறிப்பிட்டிருந்தார்.

    இந்நிலையில் கட்சிக்கு புதிய உறுப்பினர் சேர்க்கை இன்று மாலை சென்னை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் தொடங்கியது.

    உறுப்பினர் சேர்க்கைக்காக உருவாக்கப்பட்டுள்ள சிறப்பு செயலி மூலம் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்படுகின்றனர்.

    முதல் உறுப்பினராக கட்சி தலைவர் விஜய் சேர்ந்தார். இதன் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

    வீடியோவில், "தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினராக நான் பதிவு செய்துவிட்டேன், நீங்களும் பதிவு செய்ய வேண்டும்" என தொண்டர்களுக்கு விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    மேலும்,"வாட்ஸ் அப், டெலிகிராம், தொலைபேசி எண் வாயிலாகவும் கட்சியில் உறுப்பினராக இணையலாம் எனவும், தமிழ்நாட்டு வெற்றிக்கான நமது பயணத்தில் தோழர்களாய் ஒன்றிணைவோம்" எனவும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

    • 1 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் பணி கடந்த ஏப்ரல் 3-ந்தேதி தொடங்கி ஜூன் 3-ந்தேதி வரை நடைபெற்றது.
    • உறுப்பினர் உரிமைச் சீட்டுகளை பூர்த்தி செய்து தலைமைக் கழகத்தில் மாவட்டம் வாரியாக வழங்கி இருந்தனர்.

    சென்னை:

    தி.மு.க.வில் 1 கோடியே 10 லட்சத்திற்கு மேல் உறுப்பினர்கள் இருந்த நிலையில் மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி மேலும் 1 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் பணி கடந்த ஏப்ரல் 3-ந்தேதி தொடங்கி ஜூன் 3-ந்தேதி வரை நடைபெற்றது.

    இதில் மேலும் 1 கோடி புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டனர். இதற்கான உறுப்பினர் உரிமைச் சீட்டுகளை பூர்த்தி செய்து தலைமைக் கழகத்தில் மாவட்டம் வாரியாக வழங்கி இருந்தனர்.

    இவ்வாறு தலைமைக் கழகத்திற்கு வரப்பெற்ற படிவங்கள் முறைப்படி பரிசீலனை செய்யப்பட்டு புதிதாக சேர்க்கப்பட்டவர்களுக்கு உறுப்பினர் உரிமைச் சீட்டுகளை தலைமைக் கழகம் தயாரித்துள்ளது.

    இதில் 1 முதல் 1000 வரை எண் கொண்ட ரசீதுகள் வைத்திருக்கும் நிர்வாகிகள், தங்களிடம் உள்ள உறுப்பினர் சேர்த்தல் பட்டியலையும், ஒரிஜினல் ரசீதையும் நவம்பர் 7-ந்தேதி முதல் 10-ந்தேதிக்குள் அறிவாலயம் வந்து பட்டியலை சரிபார்த்து உரிமைச் சீட்டுகளை பெற்றுச் செல்ல வேண்டும் என்று தலைமைக் கழகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

    புதிய உறுப்பினர் உரிமை சீட்டுகளை தலைமைக்கழகத்தில் பெற்றுக் கொள்பவர்கள் அதை உரியவரிடம் ஒப்படைத்து அத்தாட்சி கடிதம் பெற்று அதை தலைமைக் கழகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டு உள்ளது.

    • இளைஞரணி சார்பில் இல்லம் தோறும் இளைஞர் அணிக்கு உறுப்பினர்கள் சேர்க்கை நிகழ்ச்சி நடைபெற்றது.
    • உறுப்பினர்கள் சேர்க்கை நிகழ்ச்சியில் தி.மு.க., நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    பல்லடம்

    பல்லடத்தில் திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி சார்பில் இல்லம் தோறும் இளைஞர் அணிக்கு உறுப்பினர்கள் சேர்க்கை நிகழ்ச்சி நடைபெற்றது. திருப்பூர் வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளரும், பல்லடம் நகராட்சி 2 -வது வார்டு நகர் மன்ற உறுப்பினருமான ராஜசேகரன் தலைமையில் 14வது வார்டு பகுதியில் இல்லம் தோறும் இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் வார்டு செயலாளர் சண்முகம், நகர இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் சிலம்பரசன், தாமோதரன் மற்றும் கவின்,ஆர்யா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படை யிலே அமலாக்க துறையினால் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளார்.
    • அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்றுகிறோம்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டியில் அ.தி.மு.க. புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான இரா.காமராஜ் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் பேசியதாவது :-

    தி.மு.க ஆட்சிக்கு வரும் போது பிரச்சினையும் கூடவே வரும். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படை யிலே அமலாக்க துறையினால் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டு ள்ளார்.

    ஆதாரம் இருந்தால் யாரை வேண்டுமானாலும் அமலாக்கத்துறை கைது செய்யலாம். சீல் வைக்கலாம் என்ற அதிகாரத்தை ப.சிதம்பரம் உள்துறை அமைச்சராக இருந்தபோது கொண்டு வந்தார்.

    உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் இரண்டு மாதத்திற்குள் விசாரணை செய்து முடிக்க வேண்டும். முகாந்திரம் இருக்கிறது என உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அமலாக்க துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

    அரசு ஊழியர்கள், ஆசிரியர்க ளுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்றுகிறோம் என முதலமைச்சர் தேர்தல் வாக்குறுதி கொடுத்தார்.

    ஆனால் இதுவரை எந்த வாக்குறுதியையும் தி.மு.க. அரசு நிறைவேற்றவில்லை.

    தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலை ந்துள்ளதை கண்டித்தும், செந்தில்பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தியும் நாளை (புதன்கிழமை), திருவாரூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த கூட்டத்தில் திருத்துறைப்பூண்டி நகர செயலாளர் டி. சி. சமூக சுந்தர், ஒன்றிய செயலாளர் சிங்காரவேல், முத்துப்பேட்டை ஒன்றிய செயலாளர் நடராஜன், முத்துப்பேட்டை நகர செயலாளர் அன்பழகன், மற்றும் பொறுப்பாளர்கள், கிளை பொறுப்பாளர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    • அ.தி.மு.க.வை பின்னுக்கு தள்ளி, 2 கோடி தொண்டர்களுடன் அந்த பட்டியலில் தி.மு.க. முதலிடம் பிடித்து உள்ளது.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் நல்லாட்சியையும், மாநில மக்களுடன் அவர் மேற்கொண்ட பயணத்தை யும் கண்டு, நாள் தோறும் ஏராளமானோர் கட்சியில் இணைந்து வருகின்றனர்.

    சென்னை:

    மறைந்த முதலமைச்சர் அண்ணாவால் தோற்றுவிக்கப்பட்ட தி.மு.க. வில் தற்போது 2 கோடி தொண்டர்கள் இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் நூற்றாண்டு தொடக்க விழாவையொட்டி தி.மு.க.வில் மேலும் 1 கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மார்ச் மாதம் நடை பெற்ற தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கேட்டுக் கொண்டார். இதற்காக அந்த கூட்டத்தில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

    இதைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் 4-ந்தேதி புதிய உறுப்பினர் சேர்க்கையை சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ஒவ்வொரு மாவட்டத்திலும் அன்றைய தினமே உறுப்பினர் சேர்க்கை தொடங்கியது. கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3 ந் தேதிக்குள் 1 கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்பதால் ஒன்றியம், நகரம், பேரூர், பகுதி, கிளை கழகம் வாரியாக உறுப்பினர் சேர்க்கை தீவிரமாக நடந்து வந்தது. இப்போது இந்த பணி முடிவடைந்துள்ளது.

    இதையொட்டி தி.மு.க.வின் புதுப்பிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ இணையதளத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். அதில் தி.மு.க.தொடர்பான பல்வேறு சுவாரஸ்ய தகவல்கள் இடம் பெற்று உள்ளன. குறிப்பாக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. வில் 2 கோடி கட்சி உறுப்பினர்கள், 23 சார்பு அணிகள், 125 சட்டமன்ற உறுப்பினர்கள், 20 மக்களவை உறுப்பினர்கள், 10 மாநிலங்களவை உறுப்பினர்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு 1.5 கோடி தொண்டர்களுடன் கொண்ட கட்சி அ.தி.மு.க. தான் என்று கூறப்பட்டு வந்தது. தற்போது அ.தி.மு.க.வை பின்னுக்கு தள்ளி, 2 கோடி தொண்டர்களுடன் அந்த பட்டியலில் தி.மு.க. முதலிடம் பிடித்து உள்ளது.

    இது குறித்து அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறுகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் நல்லாட்சியையும், மாநில மக்களுடன் அவர் மேற்கொண்ட பயணத்தை யும் கண்டு, நாள் தோறும் ஏராளமானோர் கட்சியில் இணைந்து வருகின்றனர். அந்த வகையில் எங்கள் இலக்கான 2 கோடி கட்சி உறுப்பினர்கள் தி.மு.க.வில் இடம் பெற வேண்டும் என பாடுபட்டோம். அந்த இலக்கை இப்போது நாங்கள் அடைந்துவிட்டோம் என்று தெரிவித்தார்.

    • 1 கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று கட்சித் தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டச் செயலாளர்களுக்கு கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டார்.
    • சட்டமன்ற தொகுதியிலும் 10 ஆயிரம், 20 ஆயிரம் புதிய உறுப்பினர்களை தான் சேர்த்துள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    சென்னை:

    தி.மு.க.வில் கிட்டத்தட்ட 1 கோடி உறுப்பினர்கள் உள்ளனர். இந்த நிலையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மேலும் 1 கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று கட்சித் தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டச் செயலாளர்களுக்கு கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டார்.

    கருணாநிதியின் பிறந்த நாளான ஜுன் 3-ந் தேதிக் குள் இப்பணியை நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

    இதன்படி ஒவ்வொரு மாவட்டச் செயலாளர்களும் தலைமைக் கழகத்தில் இருந்து விண்ணப்ப படிவங்களை பெற்று தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்களிடம் கொடுத்திருந்தனர்.

    துண்டறிக்கைகள், திண்ணை பிரசாரங்கள் முக்கிய இடங்களில் முகாம்கள், வீடு தோறும் தேடிச் சென்று புதிய உறுப்பினர்களை தி.மு.க.வில் சேர்ப்பது என்று மாவட்டச் செயலாளர்கள் முடிவு செய்து பணிகளை துவக்கினார்கள்.

    இந்த புதிய உறுப்பினர் சேர்க்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் கடந்த மாதம் தொடங்கி வைத்தார். ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 50 ஆயிரம் புதிய உறுப்பினர்கள் வீதம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 234 தொகுதிகளிலும் உறுப்பினர் சேர்க்கை பணி தீவிரப்படுத்தப்பட்டது.

    உறுப்பினர் சேர்க்கையில் டபுள் என்ட்ரி இருக்ககூடாது, போலியாக பெயர்களை எழுதக் கூடாது, வாக்காளர் அட்டை ஜெராக்ஸ் நகல் இணைக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டதால் உறுப்பினர் சேர்க்கை எதிர்பார்த்த அளவுக்கு இன்னும் முடிவடையவில்லை.

    ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் 10 ஆயிரம், 20 ஆயிரம் புதிய உறுப்பினர்களை தான் சேர்த்துள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    புதிய உறுப்பினர் சேர்க்கை படிவத்துக்கான பணத்தை பொது மக்களிடம் இருந்து வாங்க முடியாது என்பதால் அதையும் சொந்த பணத்தில் கட்சிக்காரர்கள் தலைமையில் செலுத்தி வருகின்றனர்.

    கட்சி தேர்தலின்போது ஏற்கனவே சேர்த்திருந்த உறுப்பினர்களை இந்த பட்டியலுடன் சேர்க்கக் கூடாது என்று கூறுவதால் எதிர்பார்த்த அளவுக்கு புதிய உறுப்பினர்களை சேர்க்க முடியாமல் தவித்து வருவதாக கட்சி நிர்வாகிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    சென்னையில் அடுக்கு மாடி வீடுகள் அதிகம் உள்ளதால் வீடு வீடாக ஏறி இறங்கி உறுப்பினர்களை சேர்ப்பது சிரமமாக உள்ளதாகவும் வாக்காளர் அடையாள அட்டை வேண்டும் என்று சொல்லும் போது சிலர் உறுப்பினராக சேர தயங்குவதாகவும் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    ஆனால் அ.தி.மு.க.வில் சத்தமின்றி வீடு வீடாக விண்ணப்ப படிவத்தை கொடுத்து புதிய உறுப்பினர்களை சேர்த்து வருகின்றனர்.

    எனவே அதிக உறுப்பினர்களை தி.மு.க. சேர்க்குமா? அல்லது அ.தி.மு.க. சேர்க்குமா? என்பது அடுத்த வாரம் தெரிந்துவிடும்.

    • உறுப்பினர் சேர்க்கையை பாலகிருஷ்ணரெட்டி நேரில் பார்வையிட்டு ஆலோசனைகளை வழங்கினார்.
    • வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் தங்களை அ.தி.முகவில் உறுப்பினர்களாக இணைத்து கொண்டனர்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில், ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    நேற்று, சூளகிரி மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட பேரிகை, பி.குருபரப்பள்ளி உள்ளிட்ட கிராம பகுதிகளில் நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கையை, மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ணரெட்டி நேரில் பார்வையிட்டார். அப்போது, பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் தங்களை அ.தி.முகவில் உறுப்பினர்களாக இணைத்து கொண்டனர்.

    அதனை தொடர்ந்து ஒசூர் வடக்கு, தெற்கு ஒன்றியங்களுக்குட்பட்ட சூடாபுரம், பாகலூர் மற்றும் தளி சட்டமன்ற தொகுதி நாகசந்திரம், தளி கொத்தனூர், பென்னங்கூர், ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட பெரிய எலசகிரி உள்ளிட்ட பகுதிகளிலும் உறுப்பினர் சேர்க்கையை பாலகிருஷ்ணரெட்டி நேரில் பார்வையிட்டு ஆலோசனைகளை வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சிகளில், மாவட்ட துணைசெயலாளர் கே.மதன், மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற இணை செயலாளர் ஜெயப்பிரகாஷ், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் ஜே.எம்.சீனிவாசன், சூளகிரி மேற்கு ஒன்றிய செயலாளர் பாபு என்ற வெங்கடாசலம், மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • கூட்டத்துக்கு மாவட்ட செயலாளரும், தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான க.செல்வராஜ் தலைமை தாங்கி பேசினார்.
    • இளைஞர்களை அதிகம் சேர்க்கும் வகையில் பணியாற்ற வேண்டும் என்றார்.

    ருப்பூர்:

    தி.மு.க., திருப்பூர் வடக்கு மாவட்டத்தின் தெற்கு தொகுதி, தெற்கு மாநகரத்துக்கு உட்பட்ட 21 வார்டுகளில் புதிய உறுப்பினர் சேர்க்கை தொடர்பான நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் திருப்பூரில் உள்ள கட்சியின் வடக்கு மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட செயலாளரும், தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான க.செல்வராஜ் தலைமை தாங்கி பேசினார்.

    வீடு, வீடாக சென்று தி.மு.க. அரசின் சாதனைகளை விளக்கி கூறி புதிய உறுப்பினர் சேர்க்கை பணியை தீவிரப்படுத்த வேண்டும். இளைஞர்களை அதிகம் சேர்க்கும் வகையில் பணியாற்ற வேண்டும் என்றார். இந்த கூட்டத்தில் தெற்கு சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ், தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி.மு.நாகராஜன், வடக்கு மாநகர செயலாளரும், மேயருமான தினேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அவைத்தலைவர் நடராஜன், துணை செயலாளர்கள் சேகர், நந்தினி, பகுதி செயலாளர்கள் நாகராஜ், உசேன், மேங்கோ பழனிசாமி, கவுன்சிலர் செந்தூர் முத்து, மாநகர அவைத்தலைவர் ஈஸ்வரமூர்த்தி, வட்ட செயலாளர்கள், மாநகர, பகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • பெரிய செவலை செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் தலைவர் இளந்துறை ராமலிங்கம் தலைமை தாங்கினார்.
    • ஒவ்வொரு கிளை நிர்வாகிகளிம் புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான படிவத்தினை வழங்கி சிறப்புரையாற்றினார் .

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கும் படிவம் வழங்கும் நிகழ்ச்சி இளம்துறை தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது கூட்டத்திற்கு திருவெண்ணை நல்லூர் மேற்கு ஒன்றிய செயலாளரும் பெரிய செவலை செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் தலைவருமான இளந்துறை ராமலிங்கம் தலைமை தாங்கினார்.ஒன்றிய அவைத் தலைவர் பாபு, மாவட்ட அண்ணா தொழிற்சங்க தலைவர் ஸ்ரீதர், மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற துணைச் செயலாளர் பாலச்சந்திர விநாயகம், ஒன்றிய இணைச் செயலாளர் பழனியம்மாள் சுப்பராயன், ஒன்றிய துணைச் செயலாளர் அனிதா சதீஷ் ,ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் பலராமன் அனைவரையும் வரவேற்றார் .சிறப்பு அழைப்பாளராக கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளரும், திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினரும் உளுந்தூர்பேட்டை முன்னாள் எம்.எல்.ஏ.வமான இரா. குமரகுரு கலந்துகொண்டு திருவெண்ணை நல்லூர் மேற்கு ஒன்றியத்தில் உள்ள ஒவ்வொரு கிளை நிர்வாகிகளிம் புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான படிவத்தினை வழங்கி சிறப்புரையாற்றினார் .

    இதில் ஒன்றிய துணைச் செயலாளர் ரகோத்தமன், ஒன்றிய பொருளாளர் பழனி, மாவட்ட பிரதிநிதிகள் கோதண்டபாணி,கார்த்திகேயன், மலர்விழி தனசேகரன், ஒன்றிய விவசாய அணி செயலாளர் குமார், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் தேவேந்திரன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் கிருஷ்ணமூர்த்தி ,ஆறுமுகம், முன்னாள் கவுன்சிலர்கள் மாயவன், கோவிந்தம்மாள் சக்கரவர்த்தி, சிறு மதுரை சங்கர் ,தலைமை கழக பேச்சாளர்அசலான், பெரிய செவலை ஏழுமலை மற்றும் பிற அணி மாவட்ட செயலாளர் ,ஒன்றிய செயலாளர் மகளிர் அணி பாசறை செயலாளர், கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • அ.தி.மு.க. சார்பில் வழங்கினர்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கை படிவம் வழங்கும் நிகழ்ச்சி ஏரி கோடி பகுதியில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு அ.தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் டாக்டர் என்.திருப்பதி தலைமை வகித்தார். அனைவரையும் டிவி.சிவன் வரவேற்றார்.

    ஒன்றிய பொறுப்பா ளர்கள் கருணாகரன், நாகராஜ், முன்னிலை வகித்தனர் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சரும் மாவட்ட செயலாளர் கே.சி.வீரமணி கலந்து கொண்டு புதிய உறுப்பினர் படிவங்களை வழங்கி பேசினர்.

    நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ கே. ஜி.ரமேஷ், டிடிசி சங்கர், நாகேந்திரன், ஒன்றிய கவுன்சிலர்கள் டாக்டர் திருப்பதி, யுவராஜ், மாவட்ட பிரதி பழனி உட்பட மாவட்ட ஒன்றிய மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • பூத் கமிட்டி ஆய்வு மற்றும் புதிய உறுப்பினர் சேர்க்கை சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
    • பல்லடம் தொகுதியில் தி.மு.க.விற்கு 1 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்.

    பல்லடம் :

    பல்லடம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் கரைப்புதூர்,கணபதிபாளையம்,ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சியில் பூத் கமிட்டி ஆய்வு மற்றும் புதிய உறுப்பினர் சேர்க்கை சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் என்.சோமசுந்தரம் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட கழக துணை செயலாளரும், பொங்கலூர் ஒன்றிய குழு தலைவருமான வழக்கறிஞர் எஸ்.குமார் முன்னிலை வகித்தார். ஒன்றிய இளைஞரணி அமைப்பாளரும், பல்லடம் ஊராட்சி ஒன்றிய குழு துணைத்தலைவருமான பாலசுப்பிரமணியம் வரவேற்றார்.

    இந்த கூட்டத்தில் மாநில சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு துணை செயலாளர் அன்வர்கான் பேசுகையில், பல்லடம் தொகுதியில் தி.மு.க. அசுர வளர்ச்சி அடைந்து வருகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியின் பல்வேறு திட்டங்கள் மக்களை மிகவும் கவர்ந்துள்ளது. வரும் பாராளுமன்ற மன்ற தேர்தலில் 40க்கு 40 இடங்களிலும் தி.மு.க. கூட்டணி தான் மகத்தான வெற்றியை பெறும். கோவை எம்.பி.தொகுதியில் பல்லடம் சட்டமன்ற தொகுதி அதிக வாக்குகளை பெற்று தர வேண்டும். தி.மு.க.வில் சேர இளைஞர்கள், மகளிர் வெகு ஆர்வமாக உள்ளனர். பல்லடம் தொகுதியில் தி.மு.க.விற்கு 1 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்றார்.

    இந்த கூட்டத்தில் ஒன்றிய அவைத்தலைவர் பரமசிவம், ஒன்றிய பொருளாளர் கந்தசாமி, மாவட்ட பிரதிநிதி செந்தில்தியாகராஜன், கணபதிபாளையம் ஊராட்சி தலைவர் நாகேஸ்வரி சோமசுந்தரம், துணைத்தலைவர் முத்துக்குமார், 63வேல ம்பாளையம் ஊராட்சி தலைவர் நடராஜ், ஆறு முத்தாம்பாளையம் ஊராட்சி தலைவர் பாரதி சின்னப்பன், முத்துக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தில் புதிய தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நேற்று தொடங்கியது.
    • டி.மதியழகன் தலைமை தாங்கி, புதிய உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார்.

    கிருஷ்ணகிரி,

    தமிழக முதல்- அமைச்சரும், தி.மு.க., தலைவருமான மு.க. ஸ்டாலின் தமிழகம் முழுவதும் தி.மு.க.,வில் புதிய உறுப்பினர்களை சேர்க்க கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டார்.

    அதன்படி கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தில் புதிய தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நேற்று தொடங்கியது.

    கிருஷ்ணகிரி தேவராஜா தொழிற்சாலை வளாகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான டி.மதியழகன் தலைமை தாங்கி, புதிய உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார்.

    சட்டசபை தொகுதி பொறுப்பாளர்கள் கிருஷ்ணகிரி டாக்டர் விஜய், பர்கூர் அரியப்பன், ஊத்தங்கரை டாக்டர் அருண் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அவைத்தலைவர் நாகராஜ், மாவட்ட துணை செயலாளர்கள் கோவிந்தசாமி, சந்திரன், சாவித்திரி கடலரசுமூர்த்தி, நகர செயலாளர் நவாப், தலைமை செயற்குழு உறுப்பினரும், கிருஷ்ணகிரி நகராட்சி தலைவருமான பரிதா நவாப், பொதுக்குழு உறுப்பினர் அஸ்லம், பேரூராட்சி தலைவர்கள், நகராட்சி கவுன்சிலர்கள், ஒன்றிய செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஓசூர்

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் 16-வது வார்டுக்குட்பட்ட அரசனட்டியில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, உறுப்பினர் சேர்க்கை முகாம் நேற்று நடைபெற்றது.,

    மேற்கு மாவட்ட செயலாளர் ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி முகாமினை தொடங்கி வைத்தார். ஓசூர் மாநகர செயலாளரும், மேயருமான எஸ்.ஏ.சத்யா, ஓசூர் தொகுதி பொறுப்பாளரும், கொள்கைபரப்பு குழு துணை செயலாளருமான வேலூர் ரமேஷ், மாவட்ட துணைசெயலாளர் முருகன், தலைமை செயற்குழு உறுப்பினர் கிரீஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மேலும் இதில், துணை மேயர் ஆனந்தய்யா, பொதுக்குழு உறுப்பினர் முனிராஜ், பகுதி செயலாளர்கள், மாநகராட்சி கவுன்சிலர்கள், மற்றும் கட்சியினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.முன்னதாக, மாநகர அவைத்தலைவர் செந்தில்குமார் வரவேற்றார். முடிவில், மாநகராட்சி 2-வது மண்டலக்குழு தலைவர் காந்திமதி கண்ணன் நன்றி கூறினார்.

    நல்லம்பள்ளி

    தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி தி.மு.க. மத்திய ஒன்றிய அலுவலகத்தில் தி.மு.க.வில் புதிய உறுப்பினர் சேர்க்கை கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்திற்கு தருமபுரி தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி தலைமை தாங்கினார்.

    தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளர் ஏ.கே தருண் முன்னிலை வகித்தார். நல்லம்பள்ளி மத்திய ஒன்றிய செயலாளர் மல்லமுத்து ஏற்பாட்டில் இந்த கூட்டம் நடந்தது.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஒன்றிய பேரூர் மற்றும் கிளை நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் தொண்டர்கள் திறளாக கலந்து கொண்டனர்.

    ×