search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓசூர், தளி பகுதியில் அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை பணி
    X

    தளி ஒன்றியத்தில், நிர்வாகிகளுக்கு, முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி, ஆலோசனை வழங்கியபோது எடுத்த படம்

    ஓசூர், தளி பகுதியில் அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை பணி

    • உறுப்பினர் சேர்க்கையை பாலகிருஷ்ணரெட்டி நேரில் பார்வையிட்டு ஆலோசனைகளை வழங்கினார்.
    • வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் தங்களை அ.தி.முகவில் உறுப்பினர்களாக இணைத்து கொண்டனர்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில், ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    நேற்று, சூளகிரி மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட பேரிகை, பி.குருபரப்பள்ளி உள்ளிட்ட கிராம பகுதிகளில் நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கையை, மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ணரெட்டி நேரில் பார்வையிட்டார். அப்போது, பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் தங்களை அ.தி.முகவில் உறுப்பினர்களாக இணைத்து கொண்டனர்.

    அதனை தொடர்ந்து ஒசூர் வடக்கு, தெற்கு ஒன்றியங்களுக்குட்பட்ட சூடாபுரம், பாகலூர் மற்றும் தளி சட்டமன்ற தொகுதி நாகசந்திரம், தளி கொத்தனூர், பென்னங்கூர், ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட பெரிய எலசகிரி உள்ளிட்ட பகுதிகளிலும் உறுப்பினர் சேர்க்கையை பாலகிருஷ்ணரெட்டி நேரில் பார்வையிட்டு ஆலோசனைகளை வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சிகளில், மாவட்ட துணைசெயலாளர் கே.மதன், மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற இணை செயலாளர் ஜெயப்பிரகாஷ், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் ஜே.எம்.சீனிவாசன், சூளகிரி மேற்கு ஒன்றிய செயலாளர் பாபு என்ற வெங்கடாசலம், மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×