search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பல்லடம் கிழக்கு ஒன்றிய தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை ஆலோசனைக்கூட்டம்
    X

    ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற காட்சி.

    பல்லடம் கிழக்கு ஒன்றிய தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை ஆலோசனைக்கூட்டம்

    • பூத் கமிட்டி ஆய்வு மற்றும் புதிய உறுப்பினர் சேர்க்கை சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
    • பல்லடம் தொகுதியில் தி.மு.க.விற்கு 1 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்.

    பல்லடம் :

    பல்லடம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் கரைப்புதூர்,கணபதிபாளையம்,ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சியில் பூத் கமிட்டி ஆய்வு மற்றும் புதிய உறுப்பினர் சேர்க்கை சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் என்.சோமசுந்தரம் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட கழக துணை செயலாளரும், பொங்கலூர் ஒன்றிய குழு தலைவருமான வழக்கறிஞர் எஸ்.குமார் முன்னிலை வகித்தார். ஒன்றிய இளைஞரணி அமைப்பாளரும், பல்லடம் ஊராட்சி ஒன்றிய குழு துணைத்தலைவருமான பாலசுப்பிரமணியம் வரவேற்றார்.

    இந்த கூட்டத்தில் மாநில சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு துணை செயலாளர் அன்வர்கான் பேசுகையில், பல்லடம் தொகுதியில் தி.மு.க. அசுர வளர்ச்சி அடைந்து வருகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியின் பல்வேறு திட்டங்கள் மக்களை மிகவும் கவர்ந்துள்ளது. வரும் பாராளுமன்ற மன்ற தேர்தலில் 40க்கு 40 இடங்களிலும் தி.மு.க. கூட்டணி தான் மகத்தான வெற்றியை பெறும். கோவை எம்.பி.தொகுதியில் பல்லடம் சட்டமன்ற தொகுதி அதிக வாக்குகளை பெற்று தர வேண்டும். தி.மு.க.வில் சேர இளைஞர்கள், மகளிர் வெகு ஆர்வமாக உள்ளனர். பல்லடம் தொகுதியில் தி.மு.க.விற்கு 1 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்றார்.

    இந்த கூட்டத்தில் ஒன்றிய அவைத்தலைவர் பரமசிவம், ஒன்றிய பொருளாளர் கந்தசாமி, மாவட்ட பிரதிநிதி செந்தில்தியாகராஜன், கணபதிபாளையம் ஊராட்சி தலைவர் நாகேஸ்வரி சோமசுந்தரம், துணைத்தலைவர் முத்துக்குமார், 63வேல ம்பாளையம் ஊராட்சி தலைவர் நடராஜ், ஆறு முத்தாம்பாளையம் ஊராட்சி தலைவர் பாரதி சின்னப்பன், முத்துக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×