search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Market"

    • தினசரி மார்க்கெட் பயன்பாட்டுக்கு வரும்போது, வெயில், மழை காலங்களில் சிரமமின்றி வியாபாரம் செய்ய முடியும்.
    • பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் வசதிக்காக தினசரி மார்க்கெட் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் நகராட்சியில் வாரந்தோறும் ஞாயிறு அன்று வார சந்தை செயல்பட்டு வருகிறது. தற்போது பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் வசதிக்காக கலைஞர் நகர் புற மேம்பாட்டு திட்டம் 2021 -22, திட்டத்தின் கீழ் ரூ.3 கோடியே 81 லட்சம் மதிப்பீட்டில் தினசரி மார்க்கெட் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இந்த தினசரி மார்க்கெட்டில் 147 கடைகள் மற்றும் பாதுகாவலர் அறை, குடிநீர் வசதி, ஏடிஎம் அறை, உணவகம், கழிப்பறை, பாதுகாப்பு அறை, வாகன நிறுத்தம், சாலை வசதி ஆகியவை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது குறித்து விவசாயிகள் கூறுகையில், இந்த தினசரி மார்க்கெட் பயன்பாட்டுக்கு வரும்போது, வெயில், மழை காலங்களில் சிரமமின்றி வியாபாரம் செய்ய முடியும். இந்த பணியானது மே மாதம் இறுதிக்குள் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.

    • நெல்லை, தென்காசி மாவட்டத்தில் பல்லாரி, சின்ன வெங்காயம் அதிகளவு பயிரிடப்பட்டு வருகிறது.
    • மராட்டியம், கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இந்த ஆண்டு அதிகளவு மழை பெய்துள்ளது.

    நெல்லை:

    வீட்டு சமையலில் முக்கிய இடம் பிடிப்பது பல்லாரி மற்றும் சாம்பார் வெங்காயம் எனப்படும் சின்ன வெங்காயம். சுப நிகழ்ச்சி விருந்துகளிலும், ஓட்டல் சமையல்களிலும் இவற்றின் தேவை இன்றியமையாததாக உள்ளது.எனவே இவற்றின் தேவை தினந்தோறும் அதிகரித்து வருகிறது.

    நெல்லை, தென்காசி

    நெல்லை, தென்காசி மாவட்டத்தில் பல்லாரி, சின்ன வெங்காயம் அதிகளவு பயிரிடப்பட்டு வருகிறது. குறிப்பாக பாவூர்சத்திரம், சுரண்டை சுற்று வட்டார பகுதிகளில் விவசாயிகள் இதனை அதிகம் பயிரிடுகின்றனர்.

    பெரும்பாலும் தீபாவளி யை யொட்டிய 3 மாதங்கள் நெல்லை , தென்காசியில் அதிகளவு விளைச்சல் இருக்கும். மற்ற நாட்களில் வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யப்படும்.

    விளைச்சல் அதிகம்

    மராட்டியம், கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இந்த ஆண்டு அதிகளவு மழை பெய்துள்ளது. இதனால் அங்கு பல்லாரி மற்றும் சின்ன வெங்காயத்தின் விளைச்சல் வழக்கத்தை விட அதிகளவு உள்ளது.

    வெளி மாநிலங் களில் இருந்து வெங்காயம் வரத்து அதிகரித்துள்ளதால் நெல்லை மார்க்கெட்டு களில் பல்லாரி விலை கிலோ ரூ.10 முதல் 15 வரை குறைந்துள்ளது.

    இறக்குமதி

    இதுதொடர்பாக பாளை மார்க்கெட் வியாபாரி ஒருவர் கூறியதாவது:-

    பாளை, டவுன் மார்க்கெட்டுகளுக்கு நெல்லை, தென்காசி மாவட்டத்தில் விளையும் பல்லாரி, சின்ன வெங்காயம் விற்பனைக்காக கொண்டு வரப்படும். தற்போது இங்கு போதிய விளைச்சல் இல்லை. இதனால் வெளி மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்கிறோம்.

    மும்பை, புனே, பெங்களூரு, ஓசூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து வெங்காயம் நெல்லைக்கு கொண்டு வரப்படுகிறது. உள்ளூர் பகுதியில் விளைச்சல் இல்லாத போதும் வெளி மாநிலங்களில் இருந்து தேவைக்கு அதிகமாக விற்பனைக்கு கொண்டு வரப்படுவதால் விலை கணிசமாக குறைந்துள்ளது.

    கிலோ ரூ.10 முதல் 15

    இன்று 1 கிலோ பல்லாரி ரூ.10 முதல் 15 வரை தரத்திற்கேற்ப விற்பனை செய்கிறோம். இதே போல் சின்ன வெங்காயம் கிலோ ரூ.25 முதல் 40 வரை விற்கப்படுகிறது.

    வெளி மாநிலங்களில் இருந்து பல்லாரி கிலோ ரூ.6-க்கு வாங்கப்பட்டு வாகன வாடகை, இறக்குமதி கூலி உள்ளிட்டவைகளுடன் ரூ.10 முதல் தரத்திற்கேற்ப விற்று வருகிறோம் என்றார்.

    • மாடுகள் விற்பனைக்கு குவிந்தன மாட்டு சந்தையில் இறைச்சி மாடுகள், எருமை மாடுகள், காளை மாடுகள் விற்பனைக்கு வந்தன.
    • மாடுகளின் வரத்து குறை–வால் விலை அதிகரித்து 2.5 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.

    கொல்லிமலை:

    நாமக்கல் மாவட்டம் புதன்சந்தை மாட்டு சந்தை நேற்று (செவ்வாய்கிழமை) அதிகாலை 5 மணிக்கு தொடங்கி, மாலை 3 மணி வரை நடந்தது.

    மாடுகள் விற்பனைக்கு குவிந்தன மாட்டு சந்தையில் இறைச்சி மாடுகள், எருமை மாடுகள், காளை மாடுகள் விற்பனைக்கு வந்தன.

    கோவை, சேலம், நாமக்கல், நீலகிரி, திண்டுக்கல், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாடுகளை வாங்க, விற்க வியாபாரிகள், விவசாயிகள் வந்தனர்.

    இறைச்சி பசு மாடுகளின் விலை 18 ஆயிரம் ரூபாயிலிருந்து, 20 ஆயிரத்திற்கும், எருமை மாடுகள் விலை உயர்ந்து 35 ஆயிரம் ரூபாயிலிருந்து, 45 ஆயிரத்திற்கும், கன்று குட்டிகள் விலை குறைந்து 9 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையானது. வளர்ப்பு பசு வத்தகறவை மாடுகள் விலை உயர்ந்து 35 ஆயிரம் ரூபாய்க்கும், வளர்ப்பு கன்று குட்டிகள் 10 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையானது. மாடுகளின் வரத்து குறை–வால் விலை அதிகரித்து 2.5 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.

    • நெல்லை மேலப்பாளையத்தில் திங்கள்கிழமை தோறும் மாட்டுச்சந்தை செயல்படுகிறது.
    • பக்கத்து மாவட்டங்களில் இருந்தும் 500-க்கும் மேற்பட்ட வாகனங்களில் மாடுகள் கொண்டு வரப்படுகிறது.

    நெல்லை:

    நெல்லை மேலப்பா ளையத்தில் திங்கள் கிழமை தோறும் மாட்டுச்சந்தை செயல்படுகிறது.

    லஞ்சம் கேட்பதாக புகார்

    இங்கு நெல்லை மாவட்டம் மட்டுமல்லாமல் பக்கத்து மாவட்டங்களில் இருந்தும் 500-க்கும் மேற்பட்ட வாகனங்களில் மாடுகள் கொண்டு வரப்படுகிறது.

    இந்நிலையில் இங்கு மாடுகளை ஏற்றி வரும் வாகனங்களுக்கு ரூ. 700- ஐ லஞ்சமாக நாங்குநேரி மற்றும் கயத்தாறு சுங்கசாவடியில் ஒரு இயக்கத்தினர் கேட்பதாக கூறி வியாபாரிகள் இன்று மாட்டுச்சந்தையில் ஆர்ப் பாட்டம் நடத்த போவதாக தெரிவித்தனர்.

    இதையடுத்து மேலப்பா ளையம் போலீஸ் இன்ஸ் பெக்டர் பொன்ராஜ் தலை மையில் ஏராளமான காவல் துறையினர் அங்கு பாது காப்பு பணியில் ஈடுபட்டனர்.

    பரபரப்பு

    அப்போது ஆர்ப்பாட் டத்திற்கு வியாபாரிகளை ஒன்று திரட்ட முயன்ற ஆதித்தமிழர் பேரவை புறநகர் மாவட்ட செயலாளர் இளமாறன் மற்றும் சிலரை பிடித்து காவல்துறையினர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

    இதனால் மாட்டுச் சந்தையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • பொங்கல் பண்டிைகயை முன்னிட்டு திருமங்கலம் ஆட்டுச்சந்தையில் ரூ.5 கோடிக்கு மேல் வர்த்தகமானது.
    • கூடுதலாக ரூ. 5 ஆயிரம் வரை ஆடுகள் விற்பனையானது.

    திருமங்கலம்,

    மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை ஆட்டுச்சந்தை நடை பெறுவது வழக்கம். தமிழ கத்தில் பொள்ளாட்சிக்கு அடுத்த பெரிய சந்தையாக கருதப்படும் இந்த ஆட்டு சந்தையில் ஒவ்வொரு வாரமும் 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரையிலான ஆடுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    தென்மாவட்டங்களில் மதுரை, விருதுநகர், ராம நாதபுரம், சிவகங்கை, கோவில்பட்டி, திருநெல் வேலி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து இங்கு வியாபாரிகள் ஆடுகள், கோழிகளை வாங்கி செல்வது வழக்கம். ஆட்டுச்சந்தை நடக்கும் நாளன்று அதிகாலை 4 மணியிலிருந்து 9 மணி வரை கட்டுக்கடங்காத கூட்டம் காணப்படும்.

    இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணிக்கு தொடங்கிய ஆட்டு சந்தையில் வழக்கத்தைவிட அதிகளவு கூட்டம் காணப்பட்டது. வழக்கமாக ஆட்டின் விலை ரூபாய் 10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் வரை விற்கப்படும். ஆனால் தற்போது ரூ. 15 ஆயிரம் முதல் ரூ. 25 ஆயிரம வரை விற்கப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்த னர். இன்று ரூ.5 கோடி ரூபாய்க்கு மேல் ஆடுகள் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    கடந்த ஒரு மாத காலமாக ஆடுகளின் விலை கூடுதலாக விற்பனையாவதாகவும் பொங்கல் பண்டிகை முடிந்த பின் ஆட்டின் விலை கட்டுக்குள் வரும் எனவும் வியாபாரிகள் தெரிவித்தனர். தற்போது ஆடுகளின் வரத்து கூடுதலாக இருப்பதாலும் ஆடுகள் தொடர்ந்து விலை ஏற்றத்தின் காரணமாக ஆடு வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் தென்காசி மாவட்டம் முழுவதும் உள்ள காய்கறி சந்தைகளுக்கு காய்கறிகளின் வரத்து அதிகரித்தும், அதன் விலையும் அதிகரிக்க தொடங்கி உள்ளது.
    • பாவூர்சத்திரத்தில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் தினசரி சந்தையில் வெளியூரில் இருந்து உருளை, கத்தரி, பீட்ரூட், கேரட் முள்ளங்கி போன்ற காய்கறிகள் அதிகளவில் லாரிகளில் வந்து இறங்கிய வண்ணம் உள்ளது.

    தென்காசி:

    பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் தென்காசி மாவட்டம் முழுவதும் உள்ள காய்கறி சந்தைகளுக்கு காய்கறிகளின் வரத்து அதிகரித்தும், அதன் விலையும் அதிகரிக்க தொடங்கி உள்ளது.

    பாவூர்சத்திரத்தில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் தினசரி சந்தையில் வெளியூரில் இருந்து உருளை, கத்தரி, பீட்ரூட், கேரட் முள்ளங்கி போன்ற காய்கறிகள் அதிகளவில் லாரிகளில் வந்து இறங்கிய வண்ணம் உள்ளது.

    கத்தரிக்காய் கிலோ ரூ.60-ல் இருந்து 130 வரையிலும், தக்காளி ரூ.22-ல் இருந்து 28 ஆகவும், வெண்டை-66, புடலை-30,பீர்க்கு-50, பாகல்-40, சுரைக்காய்-10, தடியங்காய்-16, பூசணி-14, டிஸ்கோ பூசணி-24, அவரை-52, கொத்தவரை-30, மிளகாய்-44, முள்ளங்கி-30, முருங்கைக்காய்-180, தேங்காய்-32, வாழைக்காய்-40, வாழைஇலை-15, சின்ன வெங்காயம்-80, பெரிய வெங்காயம்-32/26, இஞ்சி-60, மாங்காய்-80, மல்லிஇலை-45, கோவைக்காய்-32, சேனைக்கிழங்கு-25,சேம்பு-60, கருணைகிழங்கு-25, உருளைக்கிழங்கு-30,கேரட்-48, பீட்ரூட்-36, முட்டைக்கோஸ்-20, சவ்சவ்-24, பீன்ஸ்-48, பச்சைப்பட்டாணி-48, குடமிளகாய்-64, காலிப்ளவர்-40 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    தென்காசி மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகளிலும் இதே விலைகள் நீடிக்கிறது. காய்கறிகளின் விலை ஏறுமுகமாக இருந்தாலும் சிறு சிறு வியாபாரிகள் விற்பனை செய்வதற்காக ஆர்வமுடன் காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனர்.

    20 எண்ணிக்கை கொண்டபனங்கிழங்கு கட்டுகள் ரூ.100-க்கும், கரும்புக்கட்டுகள் ரூ. 500 வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


    • கோவை டி.கே.மார்க்கெட்டில் தொடர் ெகாள்ளை சம்பவம் அரங்கேறியது
    • கொள்ளையர்கள் இரும்பு கம்பியால் தொழிலாளியின் மண்டையை உடைத்து அங்கிருந்து தப்பி சென்றனர்.

    கோவை,

    தூத்துக்குடியை சேர்ந்தவர் மணி (35). இவர் கோவை டி.கே மார்க்கெட்டில் உள்ள கடையில் வேலை பார்த்து வருகிறார்.சம்பவத்தன்று இரவு மணி கடையில் தூங்கி கொண்டிருந்தார்.அப்போது மர்மநபர்கள் 3 பேர் கடைக்குள் புகுந்து பொருட்கள் மற்றும் பணத்தை கொள்ளை அடித்தனர்.

    இதை பார்த்த மணி அவர்களை பிடிக்க முயற்சித்தார். ஆத்திரம் அடைந்த கொள்ளையர்கள் தாங்கள் வைத்திருந்த இரும்பு கம்பியால் மணியின் மண்டையை உடைத்து அங்கிருந்து தப்பி சென்றனர்.

    இது தொடர்பாக மணி கொடுத்த புகாரின் பேரில் பெரியகடைவீதி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வந்தனர்.

    இந்த பகுதியில் தொடர்ந்து திருட்டு மற்றும் ெகாள்ளை சம்பவங்கள் நடப்பதாக வியாபாரிகளிடம் இருந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.

    இதையடுத்து திருட்டு சம்பவங்களில் ஈடுபடுபவர்களை பிடிக்க போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில், ஆர்.எஸ்.புரம் உதவி கமிஷனர் ரவிகுமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் மாரிமுத்து, உமா, போலீ–ஸ்காரர்கள் கார்த்தி, பூபதி ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் சாதாரண உடையில் இரவு மற்றும் பகல் நேரங்களில் டி.கே. மார்க்கெட்டில் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    சம்பவத்தன்றும் தனிப்படையினர் ரோந்தில் ஈடுபட்டிருந்த போது, ஒரு கடையில் 3 கொள்ளையர்கள் உள்ளே புகுந்து கொள்ளை அடித்து கொண்டு இருந்தனர்.

    உடனடியாக போலீசார் விரைந்து சென்றனர். போலீசார் வருவதை பார்த்த 3 பேரும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். போலீசார் விரட்டி சென்று, 3 பேரையும் பிடித்து விசாரித்தனர்.

    விசாரணையில் அவர்கள் கேரளாவை சேர்ந்த ரபீக் (வயது 50), ஈரோட்டை சேர்ந்த முத்துகுமார் மற்றும் கோகுல் என்பதும், இவர்கள் 3 பேரும் டி.கே. மார்க்கெட்டில் தொடர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இந்த கும்பலுக்கு ரபீக் தலைவனாக இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

    தொடர்ந்து அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் பல தகவல்கள் தெரியவந்தன. ரபீக் கடந்த சில வருட–ங்களுக்கு முன்பு கோவை டி.கே மார்கெட்டில் கூலி வேலை பார்த்துள்ளார்.

    ஆனால் அதில் அவருக்கு போதுமான வருமானம் கிடைக்காததால், கஞ்சா விற்க தொடங்கி உள்ளார். கஞ்சா வழக்கில் ரபீக் கைது செய்ய ப்பட்டு சிறையில் அடைக்க ப்பட்டார். அப்போது அவருக்கு, ஈரோட்டை சேர்ந்த முத்துகுமார் மற்றும் கோகுல் என்பவர்களின் அறிமுகம் கிடைத்துள்ளது. அவர்கள் மோட்டார் சைக்கிள் திருடுவது மற்றும் பூட்டு உடைப்பதில் வல்லவர்களாக இருந்துள்ளனர்.

    ரபீக் அவர்களுடன் நண்பராகி உள்ளார். அப்போது, அவர்களிடம், நீங்கள் மோட்டார் சைக்கிள் திருடுவதில் அதிகளவு சிரமம் உள்ளது. நாம் 3பேரும் சேர்ந்து கடைகளில் கொள்ளையடிக்கலாம் என கூறியுள்ளார்.

    அதற்கு அவர்கள் எங்கு போய் அடிப்பது என்று கேட்டதற்கு, ரபீக் நான் டி.கே. மார்க்கெட்டில் வேலை பார்த்துள்ளேன். அங்கு ஏராளமான கடைகள் உள்ளன. அங்ககு பணமும் அதிகளவில் இருக்கும். நாம் அங்கு சென்று கொள்ளையடித்து ஜாலியாக வாழலாம் என கூறியுள்ளார்.

    அவர்களும் இதற்கு சம்மதம் தெரிவித்தனர். உடனே ரபீக் நான் முதலில் வெளியில் சென்று நீங்கள் தங்குவதற்கு இடம் மற்றும் கொள்ளையடிக்கும் திட்டத்தை தயார் படுத்தி வைக்கிறேன். நீங்கள் வந்த பின்னர் 3 பேரும் சேர்ந்து கொள்ளையடிக்கலாம் என கூறியுள்ளார்.

    அதன்படியே வெளியில் வந்த ரபீக் நேராக கேரளாவில் தனது மகன் வேலை பார்க்கும் ரப்பர் தோட்டத்தில் வீடு பார்த்தார்.

    இவர் விடுதலையான சில தினங்களில் கோகுலும், முத்துக்குமாரும் விடுதலையானார்கள். வெளியில் வந்த அவர்கள் 2 பேரும், ஈரோட்டில் மோட்டார் சைக்கிளை திருடி விட்டு நேராக அட்டப்பாடி வந்தனர்.

    அவர்களை ரபீக் தனது வீட்டில் தங்க வைத்து அவர்களுக்கு தேவையான அனைத்தையும் செய்து கொடுத்துள்ளார். பின்னர் 3 பேரும் சேர்ந்து கொள்ளையடிக்க திட்டம் தீட்டியுள்ளனர். அப்போது புத்தாண்டை இங்கு கொண்டாடி விட்டு, அதற்கு மறுநாள் சென்று கொள்ளையடிக்கலாம் என 3 பேரும் திட்டமிட்டுள்ளனர்.

    அதன்படி கேரளாவில் புத்தாண்டை கொண்டாடிவிட்டு மறுநாள் கோவை வந்து டி.கே.மார்க்கெட்டில் பொருட்கள் மற்றும் பணத்தை எடுத்து சென்றது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். இதேபோல் டி.கே.மார்க்கெட்டில் மோட்டார் சைக்கிள்களை திருடி வந்த குனியமுத்தூரை சேர்ந்த அரவிந்த் (32), விமல்ராஜ் (25) என்பவர்களையும் போலீசார் கைது செய்து, ஜெயிலில் அடைத்தனர். போலீசாரின் இந்த நடவடிக்கையால் வியாபாரிகள் நிம்மதி அடைந்து உள்ளனர்.

    • நாமக்கல் மாவட்டம் சேர்ந்தமங்கலம் அடுத்த புதன்சந்தை மாட்டு சந்தையில் நேற்று காலை 5 மணிக்கு கூடிய சந்தை மாலை 3 மணி வரை நடந்தது.
    • இங்கு 800-க்கும் மேற்பட்ட மாடுகள் ரூ.2 கோடிக்கு வர்த்தகமானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் சேர்ந்தமங்கலம் அடுத்த புதன்சந்தை மாட்டு சந்தையில் நேற்று காலை 5 மணிக்கு கூடிய சந்தை மாலை 3 மணி வரை நடந்தது. இங்கு கருப்பு வெள்ளை மாடுகள், ஜெர்சி, சிந்து மாடுகள், நாட்டு மாடுகள், எருமைகள் ஆகியவற்றை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

    கருப்பு வெள்ளை மாடு ஒன்று ரூ.45 ஆயிரம் முதல் ரூ.75 ஆயிரம் வரையும், ஜெர்சி ரூ.35 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரையும், சிந்து ரூ.38 ஆயிரம் முதல் ரூ.52,000 வரையும், நாட்டு மாடு ரூ.29 ஆயிரம் முதல் ரூ.80 ஆயிரம் வரையும், எருமை மாடுகள் ரூ.19 ஆயிரம் முதல் ரூ.33 ஆயிரம் வரையும் விற்பனையானது.

    கோவை, சேலம், நாமக்கல், நீலகிரி, திண்டுக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடக மாநிலங்களைச் சேர்ந்த வியாபாரிகளும் வந்திருந்து கால்நடைகளை வாங்கிச் சென்றனர். இங்கு 800-க்கும் மேற்பட்ட மாடுகள் ரூ.2 கோடிக்கு வர்த்தகமானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • 500-க்கும் மேற்பட்ட ஆடுகளும், கோழிகளும் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன
    • வியாபாரிகள் மகிழ்ச்சி

    வேலூர்:

    பொய்கைச் சந்தைக்கு செவ்வாய்க்கிழமை கால்நடைகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதன்மூலம், சுமார் ரூ.1 கோடிக்கு கால் நடை விற்பனை நடைபெற்றதாக வியா பாரிகள் தெரிவித்தனர்.

    பொய்கையில் வாரந்தோறும் செவ் வாய்க்கிழமை நடைபெறும் கால்நடைச் சந்தையில் உள்ளூர் மட்டுமன்றி, வெளி மாவட்டங்கள், அண்டை மாநிலங்க ளில் இருந்தும் ஆயிரக்கணக்கான மாடு கள், ஆடுகள், கோழிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுவது வழக்கம். இந்தச் சந்தையில் ரூ.1 கோடி முதல் ரூ.3 கோடி வரை வர்த்தகம் நடைபெறும்.

    இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கால்நடை சந்தைக்கு கறவை மாடுகள்,காளைகள், உழவு மாடுகள், எரு மைகள் என 2,000-க்கும் அதிகமான மாடு கள், 500-க்கும் மேற்பட்ட ஆடுகளும், கோழிகளும் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. இதில், சுமார் ரூ.1 கோடிக்கு கால்நடை வர்த்தகம் நடைபெற் றது.

    இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில்:-

    கடந்த சில வாரங்களாகபொய்கைச் சந்தையில் கால்நடை வர்த்தகம் எதிர் பார்த்த அளவுக்கு இல்லை. இந்த வாரம் நடைபெற்ற சந்தைக்கு கால்நடைகள் வரத்து அதிகரி த்திருந்தது. விற்பனையும் அதிகளவில் நடைபெற்றது.

    குறிப்பாக, கறவை மாடுகள் விற்பனை அதிகளவில் நடைபெற்றது. சுமார் ரூ.1 கோடிக்கு விற்பனை நடைபெற்றது என்றனர்.

    • நாமக்கலில் நகரின் மையப்பகுதியில் உழவர் சந்தை செயல்பட்டு வரு கிறது. இந்த உழவர் சந்தைக்கு நாமக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் காய்கறிகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகிறார்கள்.
    • ஆனால் இந்த உழவர் சந்தையில் முன்பு சாக்கடை தண்ணீர் ஆறாக ஓடுகிறது அதன் அருகிலையும் விவசாயிகள் காய்கறி போட்டு விற்பனை செய்து வருகிறார்கள் .இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    நாமக்கல்:

    தமிழக முழுவதும் விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் பொருட்களை தாங்களே விற்கும் வகையில் உழவர் சந்தை திறக்கப்பட்டது அந்த வகையில் விவசாயிகள் தங்கள் பொருட்களை தாங்களே கொண்டு பொதுமக்களிடம் விற்பனை செய்து வருகிறார்கள். அந்த வகையில் நாமக்கலில் நகரின் மையப்பகுதியில் உழவர் சந்தை செயல்பட்டு வரு கிறது. இந்த உழவர் சந்தைக்கு நாமக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் காய்கறிகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகிறார்கள். வெளி மார்க்கெட்டை விட உழவர் சந்தையில் காய்கறிகள் விலை சற்று குறைவாக இருக்கும் என்பதால் நகரில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் ஓட்டல் உரிமையாளர்கள் உட்பட ஏராளமானவர் வந்து காய்கறிகளை வாங்கி செல்கிறார்கள். இதனால் நாள் ஒன்றுக்கு சுமார் 7 லட்சம் டன் வரை காய்கறிகள் இந்த உழவர் சந்தை மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    ஆனால் இந்த உழவர் சந்தையில் முன்பு சாக்கடை தண்ணீர் ஆறாக ஓடுகிறது அதன் அருகிலையும் விவசாயிகள் காய்கறி போட்டு விற்பனை செய்து வருகிறார்கள் .இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் உழவர் சந்தை முன்பு சாக்கடை நீர் அதிகமாக அளவில் தேங்கியுள்ளதால் துர்நாற்றமும் வீசி வருகிறது .இதனால் உழவர் சந்தைக்கு வரும் விவசாயிகளும் பொதுமக்களும் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள்.

    எனவே நகராட்சி அதிகாரிகள் உடனே தலையிட்டு சாக்கடை கால்வாய் நீர் தேங்குவதை தடுக்கவும் சாக்கடை கால்வாய் நீரை வேறு பாதைக்கு திருப்பி விடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உழவர் சந்தைக்கு வரும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வரத்தை பொறுத்து வெங்காய விலை அவ்வப்போது ஏறி இறங்கி வருகிறது.
    • பெரிய வெங்காயம் 5 கிலோ ரூ. 100 என்ற அளவுக்கு விலை குறைந்திருந்தது.

    நெல்லை:

    சாம்பாரில் தொடங்கி பொரியல், அவியல், ஆம்லெட், பிரியாணி என சமையலில் வெங்காயம் தவிர்க்க முடியாத உணவு பொருளாக இருந்து வருகிறது.

    வெங்காயம்

    அதேசமயம் வெங்காயம் உற்பத்தி என்பது குறைந்து வருகிறது. எனவே வரத்தை பொறுத்து வெங்காய விலை அவ்வப்போது ஏறி இறங்கி வருகிறது.

    நெல்லை மார்க்கெட்டுகளுக்கு வழக்கமாக தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம், ஆலங்குளம் சுற்றுவட்டார பகுதியில் இருந்து பெரிய வெங்காயம், சாம்பார் வெங்காயம் விற்பனைக்கு கொண்டு வரப்படும்.

    ஆனால் கடந்த சில நாட்களாக வரத்து இல்லாததால் மிகக் குறைந்த அளவே வருகிறது. இதனால் திண்டுக்கல் உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்து வெங்காயம் கொண்டு வரப்படுகிறது. சில வாரங்களுக்கு முன்பு வரை சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயம் அதிகளவு உற்பத்தியானதால் விலை குறைந்து காணப்பட்டது.

    குறிப்பாக பெரிய வெங்காயம் 5 கிலோ ரூ. 100 என வியாபாரிகள் கூவி கூவி விற்கும் அளவுக்கு விலை குறைந்திருந்தது. அதேபோல் சின்ன வெங்காயமும் ரூ. 30 முதல் ரூ. 40 ஆக இருந்து வந்தது.

    விலை உயர்வு

    இந்நிலையில் நெல்லை பாளையங்கோட்டை மார்க்கெட்டில் சின்ன வெங்காய விலை கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து உயர்ந்து வந்தது. 2 நாட்களுக்கு முன்பு ரூ. 40-க்கு விற்கப்பட்டது. நேற்று முன்தினம் ரூ. 67-க்கும், நேற்று ரூ. 75-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    இந்நிலையில் இன்று ஒரு கிலோ ரூ. 100 வரை விற்கப்படுகிறது. இதேபோல் டவுன், தச்சநல்லூர் உள்ளிட்ட நெல்லை மாநகர மற்றும் மாவட்ட பகுதியில் வெங்காயத்தின் விலை ரூ. 100- ஐ தொட்டு உள்ளது.

    இந்த விலை உயர்வை கேட்டு இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து பாளை மார்க்கெட் வியாபாரி செய்யது அலி கூறும்போது,

    பருவமழை காரணமாக தென்காசி மாவட்டத்தில் இருந்து வரும் வெங்காயத்தின் வரத்து பெருமளவு குறைந்துள்ளது. இதனால் தாராபுரம், துறையூர் பகுதிகளில் இருந்து வாங்கி வருகிறோம். அதன்படி பாளை மார்க்கெட்டிற்கு நாள்தோறும் சுமார் 100 மூட்டைகளில் சின்ன வெங்காயம் வரும்.

    ஆனால் இன்று 20 மூட்டை தான் வந்துள்ளது. எனவே வரத்து குறைவால் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது என்றார்.

    அதேசமயம் பெரிய வெங்காயம் கிலோவுக்கு ரூ. 10 முதல் ரூ. 15 உயர்ந்து ஒரு கிலோ ரூ. 40-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    • விவசாயிகள் தங்கள் விளை பொருள்களை தினசரி சந்தைக்கு கொண்டு வந்து மொத்த விற்பனை செய்து வருகின்றனர்.
    • மீதமாகும் காய்கறிகளில் ஏற்படும் கழிவுகள் சந்தை பகுதியிலேயே கொட்டப்பட்டு குப்பை கழிவு கிடங்காக மாறி வருகிறது.

    உடுமலை :

    உடுமலை பஸ் ஸ்டாண்ட் அருகே உடுமலை நகராட்சி வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு உடுமலை மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள் தங்கள் விளை பொருள்களை தினசரி சந்தைக்கு கொண்டு வந்து மொத்த விற்பனை செய்து வருகின்றனர்.

    இங்கு விற்பன செய்து மீதமாகும் காய்கறிகளில் ஏற்படும் கழிவுகள் சந்தை பகுதியிலேயே கொட்டப்பட்டு குப்பை கழிவு கிடங்காக மாறி வருகிறது. இதில் ஆடு மாடுகள் மேய்ந்து பிளாஸ்டிக் உண்பதால் அவற்றுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டு உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் குப்பை கிடங்கால் துர்நாற்றம் ஏற்பட்டு சந்தைக்கு வரும் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே கழிவுகளை உடனு க்குடன் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×