search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உழவர்"

    • பரமத்தி வட்டாரம் வீர ணாம்பாளையம் கிராமத்தில் உழவர் பயிற்சி நிலையத்தின் மூலம் “கிராம அடிப்படை பயிற்சி” நடைபெற்றது.
    • பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கோவிந்தசாமி தலைமையில் பயிற்சி நடைபெற்றது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வட்டாரம் வீர ணாம்பாளையம் கிராமத்தில் உழவர் பயிற்சி நிலையத்தின் மூலம் "கிராம அடிப்படை பயிற்சி" நடைபெற்றது. பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கோவிந்தசாமி தலைமையில் பயிற்சி நடைபெற்றது.

    இதில் நாமக்கல் வேளாண்மை துணை இயக்குநர் (பொறுப்பு) கவிதா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விவசாயி களை வரவேற்று பயிற்சி அளித்தார்.

    பயிற்சியில் பர மத்தி வட்டார வேளாண்மை அலுவ லர், மோகனபிரியா, துறை சார்ந்த மானிய திட்டங்கள், விவசாயிகளுக்கு உயிர் உரங்கள், உயிரியல் பூஞ்சான கொல்லிகள் மூலம் விதை நேர்த்தி செய்தல், நுண்ணூட்ட கலவைகள் பயிருக்கு இடுவதன் முக்கி யத்துவம் குறித்து கூறினார்.

    இப்பயிற்சியில் வேளாண்மை துணை இயக்குநர், கலெக்டரின் நேர்முக உதவியாளர் முருகன் கலந்துகொண்டு வேளாண் மானிய திட்டம் குறித்து கூறினார். மேலும் கால்நடை உதவி மருத்துவர் நளினி, வனஅலுவலர் ரமேஷ், தோட்டக்கலை அலுவலர் நிவேதா மற்றும் வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறையின் உதவி வேளாண்மை அலுவலர் பாபு ஆகியோர் தங்களது துறையின் சார்பில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் திட்டங்கள் மற்றும் மானியங்கள் குறித்து விளக்கமளித்தனர்.

    முடிவில் உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை அலுவலர் தனலட்சுமி விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கி நன்றி கூறினார்.

    • பூலாம்பாடியில்உழவர் உற்பத்தியாளர்கள் அமைப்பு அலுவலகத்தைதொழிலதிபர் டத்தோ பிரகதீஸ்குமார் திறந்துவைத்தார்
    • வெற்றிகரமாக செயல்படுத்துவதற்கு அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்

    அரும்பாவூர் 

    பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடியில் தலைவாசலில் இருப்பது போன்று மிகப்பெரியஅளவில் தினசரி காய்கறி மார்க்கெட் அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விவசாயிகளின் வாழ்வாதாரம் உயர்ந்திடும் என்பதால் டத்தோபிரகதீஸ்குமார் இந்த முயற்சியை சேவைநோக்குடன்

    முன்னெடுத்துவருகிறார். இதுதொடர்பாக இரண்டு ஆலோசனை கூட்டங்களும் நடந்து முடிந்துள்ளது.இந்த நிலையில் உழவர் உற்பத்தியாளர்கள் அமைப்பு அலுவலகத்தின் திறப்பு வி ழாநடைபெற்றது.அதில் டத்தோ பிரகதீஸ்குமார் கலந்து கொண்டுஅலுவலகத்தை திறந்துவைத்தார்.பின்னர் அவர் பேசும் போது,அனைவரின் கூட்டு முயற்சியோடு இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.இதை வெற்றிகரமாக செயல்படுத்துவதற்கு அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றார்.

    விழாவில் மலேசியா மணிவாசகம், டத்தோ நேர்முக உதவியாளர் மணி,பூலாம்பாடி பேரூராட்சி தலைவர் பாக்யலட்சுமி செங்கு ட்டுவன்,கவுன்சிலர்கள் ராமதாஸ்,மாணிக்கம் மற்றும் கடம்பூர் பாலு, அருண்,ஆறுமுகம்,அக்ரி நவநீதன்

    உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வேளாண் இல்லாது உலகம் வெல்லாது உழவர்களுக்கான பாடலை வெளியிட்டார்.
    • விவசாயம் சார்ந்த படிப்புகளை மாணவர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையை அடுத்த வள்ளாலகரம் ஊராட்சி, லட்சுமிபுரத்தில் உள்ள யூரோ கிட்ஸ் என்ற மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி சார்பில் விவசாயம் மற்றும் அதை சார்ந்த படிப்புகளுக்கான ஆர்வத்தை மாணவ மாணவிகளுக்கு ஏற்படுத்தும் வகையில் நம்ம உழவன் எனும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் பங்கேற்று வேளாண் இல்லாது உலகம் வெல்லாது உழவர்களுக்கான சிறப்பு தீம் பாடலை வெளியிட்டார்.

    நிகழ்ச்சியில் பேசிய பொன்ராஜ் உழவர்களை முன்னெடுத்துச் சென்றால் டாக்டர் அப்துல் கலாம் கண்ட கனவு இந்தியா விரைவில் மலரும் என்று தெரிவித்தார். தொடர்ந்து விவசாயத்தின் பெருமையை உணர்த்தும் வகையில் பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் சின்னத்திரை கலைஞர் அறந்தாங்கி நிஷா, நாகை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி, சுற்றுச்சூழல் ஆர்வலர் நிமல் ராகவன் குத்தாலம் சாதிக் பாட்ஷா உள்ளிட்ட பலர் பங்கேற்று விவசாயத்தின் முக்கியத்துவம் குறித்தும் அதனை சார்ந்த வேலை வாய்ப்புகளையும் மாணவர்களுக்கு எடுத்துக் கூறி விவசாயம் சார்ந்த படிப்புகளை மாணவர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

    இதில் ஒன்றிய கவுன்சிலர் மோகன், ஊராட்சி மன்ற தலைவர் ஜெயசுதா ராபர்ட் ஜெயகரன், பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், ஆசிரியைகள் மாணவர்–களின் பெற்றோர்கள் என ஏராளமானவர்கள் கலந்துக்கொன்டனர்.

    • நாமக்கலில் நகரின் மையப்பகுதியில் உழவர் சந்தை செயல்பட்டு வரு கிறது. இந்த உழவர் சந்தைக்கு நாமக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் காய்கறிகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகிறார்கள்.
    • ஆனால் இந்த உழவர் சந்தையில் முன்பு சாக்கடை தண்ணீர் ஆறாக ஓடுகிறது அதன் அருகிலையும் விவசாயிகள் காய்கறி போட்டு விற்பனை செய்து வருகிறார்கள் .இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    நாமக்கல்:

    தமிழக முழுவதும் விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் பொருட்களை தாங்களே விற்கும் வகையில் உழவர் சந்தை திறக்கப்பட்டது அந்த வகையில் விவசாயிகள் தங்கள் பொருட்களை தாங்களே கொண்டு பொதுமக்களிடம் விற்பனை செய்து வருகிறார்கள். அந்த வகையில் நாமக்கலில் நகரின் மையப்பகுதியில் உழவர் சந்தை செயல்பட்டு வரு கிறது. இந்த உழவர் சந்தைக்கு நாமக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் காய்கறிகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகிறார்கள். வெளி மார்க்கெட்டை விட உழவர் சந்தையில் காய்கறிகள் விலை சற்று குறைவாக இருக்கும் என்பதால் நகரில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் ஓட்டல் உரிமையாளர்கள் உட்பட ஏராளமானவர் வந்து காய்கறிகளை வாங்கி செல்கிறார்கள். இதனால் நாள் ஒன்றுக்கு சுமார் 7 லட்சம் டன் வரை காய்கறிகள் இந்த உழவர் சந்தை மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    ஆனால் இந்த உழவர் சந்தையில் முன்பு சாக்கடை தண்ணீர் ஆறாக ஓடுகிறது அதன் அருகிலையும் விவசாயிகள் காய்கறி போட்டு விற்பனை செய்து வருகிறார்கள் .இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் உழவர் சந்தை முன்பு சாக்கடை நீர் அதிகமாக அளவில் தேங்கியுள்ளதால் துர்நாற்றமும் வீசி வருகிறது .இதனால் உழவர் சந்தைக்கு வரும் விவசாயிகளும் பொதுமக்களும் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள்.

    எனவே நகராட்சி அதிகாரிகள் உடனே தலையிட்டு சாக்கடை கால்வாய் நீர் தேங்குவதை தடுக்கவும் சாக்கடை கால்வாய் நீரை வேறு பாதைக்கு திருப்பி விடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உழவர் சந்தைக்கு வரும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அமைச்சர் ராமச்சந்திரன் உறுதி அளித்தார்.
    • வியாபாரிகள் சங்கம் மற்றும் மார்கெட் வியாபாரிகள் சங்கம் சார்பிலும் மனு அளிக்கப்பட்டது.

    அரவேணு,

    கோத்தகிரி கடைவீதி பகுதியில் கடந்த 2009-ம் ஆண்டு அலுவலகம், கடைகள், கழிப்பிட வசதி, வாகனம் நிறுத்துமிடம், பாதுகாப்பு சுற்றுச் சுவர் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் உழவர் சந்தை அமைக்கப்பட்டது.

    இந்த உழவர் சந்தை வழித்தடத்தில் மினி பஸ்களை இயக்கவும் உத்தரவிடப்பட்டது. ஆனால் பஸ்கள் அந்த வழியாக இயக்கப்படாததாலும், விவசாயிகளுக்கு பதிலாக வியாபாரிகளுக்கு கடைகள் ஒதுக்கப்பட்டதாலும் உழவர் சந்தை சில மாதங்களில் செயலிழந்தது. பின்னர் பல முறை வேளாண் வணிகத்துறை அதிகாரிகள் உழவர் சந்தையை திறக்க முயற்சி மேற்கொண்டும், விவசாயிகள் போதிய ஆர்வம் காண்பிக்கவில்லை. இதனால் உழவர் சந்தை மூடப்பட்டது.

    இந்நிலையில் கடந்த இரு மாதங்களுக்கு முன் மார்கெட்டை ஒட்டியுள்ள பகுதியில் தற்போது செயல்பட்டு வரும் சுமார் 50 கடைகளை அகற்றி புதியதாக உழவர் சந்தை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். இதனால் வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதுடன், பேரூராட்சிக்கு கிடைத்து வரும் வருவாயும் பாதிக்கப்படும். எனவே பழைய உழவர் சந்தையை புதுப்பிக்கவோ அல்லது மாற்று இடத்தில் உழவர் சந்தையை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். மேலும் பழங்குடியின மக்களும் இங்கு உழவர் சந்தை அமைக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இந்நிலையில் புதிய உழவர் சந்தை அமைக்க தேர்வு செய்யப்பட்ட இடத்தை வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆய்வு செய்தார்.

    அப்போது அமைச்சரிடம், கடை இழந்து பாதிப்புக்கு ள்ளாகும் வியாபாரிகள் சுமார் 50 க்கும் மேற்பட்டோர் தங்களுக்கு பாதிப்பில்லாத வகையில் வேறு பகுதியில் உழவர் சந்தை அமைக்க வேண்டும் எனத் தனித்தனியாக கோரிக்கை மனுக்களை அளித்தனர். மேலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி கோத்தகிரி அனைத்து வியாபாரிகள் சங்கம் மற்றும் மார்கெட் வியாபாரிகள் சங்கம் சார்பிலும் மனு அளிக்கப்பட்டது.

    மனுக்களைப் பெற்றுக் கொண்ட அமைச்சர் அவர்க ளிடம், வியாபாரிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் புதிய உழவர் சந்தை அமைக்கப்படும் என உறுதி அளித்து விட்டு, இது குறித்து அதிகாரிகளிடம் விரிவான ஆலோசனை செய்வதற்காக கோத்தகிரி பேரூராட்சி விருந்தினர் மாளிகைக்கு புறப்பட்டுச் சென்றார். 

    • சந்தைகளில் வழக்கத்தை விட அமாவாசை நாட்களில் கூடுதலாக காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனையாவது வழக்கம்.
    • உழவர் சந்தைகளிலும் அதிகாலை முதலே பொது மக்கள் கூட்டம் அலை மோதியது.

    அன்னதானப்பட்டி:

    சேலம் மாநகரில் சூரமங்கலம், தாதகாப்பட்டி, அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை மற்றும் மாவட்டத்தில் ஆத்தூர், மேட்டூர், ஜலகண்டாபுரம் , எடப்பாடி, இளம்பிள்ளை, தம்மம்பட்டி , ஆட்டையாம்பட்டி ஆகிய 11 இடங்களில் உழவர் சந்தைகள் உள்ளன. இந்த சந்தைகளில் வழக்கத்தை விட அமாவாசை நாட்களில் கூடுதலாக காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனையாவது வழக்கம்.

    அதன்படி, இன்று ஆவணி மாத அமாவாசையையொட்டி அனைத்து உழவர் சந்தைகளிலும் அதிகாலை முதலே பொது மக்கள் கூட்டம் அலை மோதியது. முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கவும், வீடுகளில் முன்னோர்கள், மற்றும் சாமிக்கு பூஜைகள் செய்து, படையலிட்டு சமைப்பதற்காகவும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள், பூக்கள் உள்ளிட்டவற்றை அதிகளவில் வாங்கி சென்றனர். பழங்கள், தேங்காய், வாழை இலை , கீரை வகைகள் , பூசணிக்காய் , காய்கறிகள் உள்ளிட்டவை அதிகளவில் விற்பனை ஆனது . இதே போல் , பூக்கள் வியாபாரமும் வழக்கத்தை விட அதிகரித்து காணப்பட்டது.

    சேலம் மாவட்டத்தில் உள்ள 11 உழவர் சந்தைகளிலும் இன்று 1013 விவசாயிகள், பல்வேறு வகையான 4924 காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவற்றை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். காய்கறிகள், பழங்களின் மொத்த வரத்து 247.293 மெட்ரிக் டன் ஆகும். அவற்றை 55,282 நுகர்வோர்கள் வாங்கிச் சென்றனர். இதன் மூலம் இன்று ஒரே நாளில் ரூ.69, 11, 292 லட்சம் மதிப்பிலான காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை ஆனதாக வேளாண்மைத் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

    ×