search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாட்டு"

    • செங்கோடன் வயது (67), விவசாயியான இவர் வீட்டு அருகே மாட்டு கொட்டகை அமைத்திருந்தார்.
    • நேற்றிரவு திடீரென மாட்டு கொட்ட கையில் தீப்பிடித்து எரிந்தது. இதனை பார்த்த வீட்டில் இருந்தவர்கள் தீயைஅணைக்க முயன்றனர்.

    சேலம்:

    சேலம் கொண்டலாம் பட்டியை அடுத்த பனங்காடு லட்சுமி நகரை சேர்ந்தவர் செங்கோடன் வயது (67), விவசாயியான இவர் வீட்டு அருகே மாட்டு கொட்டகை அமைத்திருந்தார்.

    இந்தநிலையில் நேற்றிரவு திடீரென மாட்டு கொட்ட கையில் தீப்பிடித்து எரிந்தது. இதனை பார்த்த வீட்டில் இருந்தவர்கள் தீயைஅணைக்க முயன்ற னர். அப்போது தீ கொழுந்து விட்டு எரிந்ததால் அருகில் செல்ல முடியவில்லை.

    உடனே செவ்வாய்ப் பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெவித்தனர். உடனே தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்றனர். ஆனால் அதற்குள் அருகில் இருந்த மாட்டு தீவனத்திற்கும் தீ பரவியது. இதனால் அந்த பகுதியே புகை மூட்டமாக காட்சி அளித்தது.

    தொடர்ந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து அக்கம் பக்கம் பரவாமல் தடுத்து தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். ஆனாலும் இந்த தீ விபத்தில் ரூ.10 ஆயிரம் மதிப்பிலான மாட்டு தீவனங்கள் எரிந்து சாம்பலானது.

    தீ விபத்துக்கான காரணம் குறித்து கொண்டலாம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • மாட்டுவண்டி உரிமையாளர் தலைமைச் சங்க உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும்.
    • கூட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டி உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்ட மாட்டு வண்டி உரிமையா ளர் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம் பொத்தனூர் சங்க அலுவ லக வளாகத்தில் நடை பெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் முருகன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் குண சேகரன் வரவேற்றார். கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    பரமத்திவேலூர் வட்டாரத்திற்கு உட்பட்ட பகுதியில் மணல் குவாரி அமைக்க அனுமதி வழங்கிய தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங், மாவட்ட கனிம வள அலுவ லர் மற்றும் பொதுப்பணித்துறை நீர் வள ஆதாரத்துறை அலுவலர் ஆகி யோருக்கு சங்கம் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்வது.

    மாட்டுவண்டி உரிமையா ளர் தலைமைச் சங்க உறுப்பி னர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும். மாட்டு வண்டி உரிமையாளர்களின் சூழ்நிலை கருதி வங்கி மூலம் வண்டி மற்றும் மாடு வாங்குவதற்கு ரூ.3 லட்சம் வழங்க வேண்டும். தமிழக அரசின் தொழிலாளர் நல வாரியத்தில் மாட்டு வண்டி தொழிலாளர்களை இணைந்து நலவாரிய கார்டு வழங்க வேண்டும்.

    மாட்டுவண்டி உரிமை யாளரின் குழந்தைகளின் படிப்பு செலவினை தமிழக அரசே ஏற்க வேண்டும். மாட்டு வண்டி தொழிலா ளர்களுக்கு குடும்ப பாது காப்பு நிதி மற்றும் இன்சூ ரன்ஸ் ஆகியவை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.

    முடிவில் மாவட்ட துணைத் தலைவர் நாகராஜ் நன்றி கூறினார். கூட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டி உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

    • மாடுகள் விற்பனைக்கு குவிந்தன மாட்டு சந்தையில் இறைச்சி மாடுகள், எருமை மாடுகள், காளை மாடுகள் விற்பனைக்கு வந்தன.
    • மாடுகளின் வரத்து குறை–வால் விலை அதிகரித்து 2.5 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.

    கொல்லிமலை:

    நாமக்கல் மாவட்டம் புதன்சந்தை மாட்டு சந்தை நேற்று (செவ்வாய்கிழமை) அதிகாலை 5 மணிக்கு தொடங்கி, மாலை 3 மணி வரை நடந்தது.

    மாடுகள் விற்பனைக்கு குவிந்தன மாட்டு சந்தையில் இறைச்சி மாடுகள், எருமை மாடுகள், காளை மாடுகள் விற்பனைக்கு வந்தன.

    கோவை, சேலம், நாமக்கல், நீலகிரி, திண்டுக்கல், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாடுகளை வாங்க, விற்க வியாபாரிகள், விவசாயிகள் வந்தனர்.

    இறைச்சி பசு மாடுகளின் விலை 18 ஆயிரம் ரூபாயிலிருந்து, 20 ஆயிரத்திற்கும், எருமை மாடுகள் விலை உயர்ந்து 35 ஆயிரம் ரூபாயிலிருந்து, 45 ஆயிரத்திற்கும், கன்று குட்டிகள் விலை குறைந்து 9 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையானது. வளர்ப்பு பசு வத்தகறவை மாடுகள் விலை உயர்ந்து 35 ஆயிரம் ரூபாய்க்கும், வளர்ப்பு கன்று குட்டிகள் 10 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையானது. மாடுகளின் வரத்து குறை–வால் விலை அதிகரித்து 2.5 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.

    • நாமக்கல் மாவட்டம் சேர்ந்தமங்கலம் அடுத்த புதன்சந்தை மாட்டு சந்தையில் நேற்று காலை 5 மணிக்கு கூடிய சந்தை மாலை 3 மணி வரை நடந்தது.
    • இங்கு 800-க்கும் மேற்பட்ட மாடுகள் ரூ.2 கோடிக்கு வர்த்தகமானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் சேர்ந்தமங்கலம் அடுத்த புதன்சந்தை மாட்டு சந்தையில் நேற்று காலை 5 மணிக்கு கூடிய சந்தை மாலை 3 மணி வரை நடந்தது. இங்கு கருப்பு வெள்ளை மாடுகள், ஜெர்சி, சிந்து மாடுகள், நாட்டு மாடுகள், எருமைகள் ஆகியவற்றை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

    கருப்பு வெள்ளை மாடு ஒன்று ரூ.45 ஆயிரம் முதல் ரூ.75 ஆயிரம் வரையும், ஜெர்சி ரூ.35 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரையும், சிந்து ரூ.38 ஆயிரம் முதல் ரூ.52,000 வரையும், நாட்டு மாடு ரூ.29 ஆயிரம் முதல் ரூ.80 ஆயிரம் வரையும், எருமை மாடுகள் ரூ.19 ஆயிரம் முதல் ரூ.33 ஆயிரம் வரையும் விற்பனையானது.

    கோவை, சேலம், நாமக்கல், நீலகிரி, திண்டுக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடக மாநிலங்களைச் சேர்ந்த வியாபாரிகளும் வந்திருந்து கால்நடைகளை வாங்கிச் சென்றனர். இங்கு 800-க்கும் மேற்பட்ட மாடுகள் ரூ.2 கோடிக்கு வர்த்தகமானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    தொடர் மழையால் தாராளமாய் கிடைக்கும் பசுந்தீவனங்கள்: மின்னாம்பள்ளி மாட்டு சந்தைக்கு கால்நடைகள் வரத்து குறைந்தது.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி, அயோத்தியாப்பட்டணம், பெத்தநாயக்கன்பாளையம் பேளூர் பகுதியில் பெரும்பாலான கிராமங்களில், விவசாயிகளும், விவசாய கூலித்தொழிலாளர்களும், பால் உற்பத்தியில் வருவாய் ஈட்டி கொடுக்கும் கறவை மாடுகளை விரும்பி வளர்த்து வருகின்றனர்.

    கறவைமாடுகளுக்கு 'உறைவிந்து' செலுத்தி, குறைந்த பராமரிப்பு செலவில் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் அதிக பால் கறக்கும் உயர்ரக கலப்பின பசுக்களை, கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் தனியார் பால் பண்ணை நிறுவனங்களும் செயற்கை கருவூட்டல் முறையில் உருவாக்கி கொடுத்ததாலும், சேலம் மாவட்டத்தில் கறவைமாடு வளர்ப்பு மற்றும் பால் உற்பத்தி பெரும் தொழிலாக உயர்ந்தது.

    வாழப்பாடி அடுத்த காரிப்பட்டி கருமாபுரம், அயோத்தியாப்பட்டணம் ராமலிங்கபுரம், முத்தம்பட்டி, ஏத்தாப்பூர் உள்ளிட்ட ஏராளமான இடங்களில் பெரிய அளவில் பிரபல தனியார் நிறுவனங்களில் பால் மற்றும் பால் பொருட்கள், ஐஸ்கிரீம் தயாரிப்பு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கிருந்து நாடு முழுவதும் மதிப்புக்கூட்டப்பட்ட பால், நெய், வெண்ணை, ஐஸ்கிரீம், பால் பொருட்கள் ஏற்றுமதி செய்து வருகின்றன.

    இதனால், வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம், அயோத்தியாப்பட்டணம் பகுதியில், குக்கிராமங்களிலும் அரசு பால் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் பால் பண்ணை நிறுவனங்களும் போட்டிப் போட்டுக் கொண்டு நேரடி பால் கொள்முதல் மற்றும் குளிரூட்டும் நிலையங்கள் அமைத்துள்ளன. கறவைமாடுகள் வளர்க்கும் விவசாயிகளுக்கு பால் உற்பத்தியால் கணிசமான வருவாய் கிடைத்து வருகிறது.

    சேலம் மாவட்டத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமை கூடும் மாட்டுச்சந்தைகளில் ஒன்றான, வாழப்பாடி அடுத்த மின்னாம்பள்ளி மாட்டுச்சந்தை விவசாயிகள் மற்றும் வியாபாரிகளுக்கு, கால்நடைகளுக்கான பிரத்தியேக வர்த்தக மையமாக விளங்கி வருகிறது.

    மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால், கோடைகாலத்திலும் கால்நடைகளுக்குத் தீவனமாக மக்காச்சோளம், சோளத்தட்டை, புற்கள் உள்ளிட்ட பசுந்தீவனங்கள் தாராளமாக கிடைத்து வருகிறது. இதனால், குறைந்த செலவில் பால் உற்பத்தி அதிகரித்து, கால்நடை வளர்ப்போருக்கு கணிசமான வருவாய் கிடைத்து வருகிறது.

    இதனால் விவசாயிகள் கறவை மாடுகளை விற்பனை செய்வதைத் தவிர்த்து வருகின்றனர். இதனால் நேற்று திங்கட்கிழமை கூடிய மின்னாம்பள்ளி மாட்டுச்சந்தையில் கால்நடைகள் விற்பனைக்கு வரத்து குறைந்து வெறிச்சோடி காணப்பட்டது. இதுகுறித்து மின்னாம்பள்ளி சேர்ந்த கால்நடை வியாபாரிகள் சிலர் கூறியதாவது:

    வாரத்திற்கு சராசரியாக 500 மாடுகள் வரை விற்பனைக்கு வந்து கொண்டிருந்த நிலையில், தற்போது 200 மாடுகள் கூட விற்பனைக்கு வரவில்லை. வற்ற கறவை மாடுகளை மட்டுமே விவசாயிகள் விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனர். கேரளாவைச் சேர்ந்த வியாபாரிகள் அடிமாட்டு விலைக்கு வாங்கிச் சென்றனர்.

    ×