search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cart"

    • சங்கராந்தி பண்டிகையின் போது பல்வேறு ஊர்களில் நடைபெறும் ஆட்டுப்பந்தயத்திலும் பங்கேற்க செய்கிறார்.
    • ஆட்டுக்கிடாய்கள் மூலம் புள்ளையா கணிசமாக பணம் சம்பாதித்து வருகிறார்.

    திருப்பதி:

    ஆந்திரா மாநிலம், கிருஷ்ணா மாவட்டம், பாபுல பாடு அடுத்த வீரவல்லியை சேர்ந்தவர் புள்ளையா. இவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு 2 ஆட்டுக்கிடா குட்டிகளை விலைக்கு வாங்கி வந்தார். அவற்றுக்கு ராம், லட்சுமண் என பெயரிட்டார்.

    சிறிய பாரத்தை இழுக்க ஆட்டுக்கிடாய்களுக்கு பயிற்சி அளித்தார். பின்னர் ஆட்டுக்கிடாய்களுக்கு ஏற்றவாறு பிரத்தியோகமாக வண்டி ஒன்றை தயார் செய்தார்.

    அதன் மூலம் வயலில் இருந்து விளைவிக்கப்படும் காய்கறி, நெல் மற்றும் புல்லைக் கொண்டு வர பயன்படுத்தினார்.

    மேலும் ஆட்டுக்கிடாய்களை வைத்து ஏர் ஓட்டி வருகிறார். உள்ளூர் கிராம மக்களுக்கு நகர்புறங்களில் இருந்து சிமெண்ட் மூட்டைகள், சிமெண்ட் பைப்புகள் வண்டியை ஏற்று வந்து பணம் சம்பாதித்து வருகிறார். சங்கராந்தி பண்டிகையின் போது பல்வேறு ஊர்களில் நடைபெறும் ஆட்டுப்பந்தயத்திலும் பங்கேற்க செய்கிறார்.

    ஆட்டுக்கிடாய்கள் மூலம் புள்ளையா கணிசமாக பணம் சம்பாதித்து வருகிறார். மாட்டு வண்டிக்கு ஒன்றும் குறைவில்லாமல் விவசாய வேலைகளில் அயராது உழைத்து வருமானம் ஈட்டி தரும் எந்த ஆட்டுக்கிடாய்களை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.

    • மாட்டுவண்டி உரிமையாளர் தலைமைச் சங்க உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும்.
    • கூட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டி உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்ட மாட்டு வண்டி உரிமையா ளர் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம் பொத்தனூர் சங்க அலுவ லக வளாகத்தில் நடை பெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் முருகன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் குண சேகரன் வரவேற்றார். கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    பரமத்திவேலூர் வட்டாரத்திற்கு உட்பட்ட பகுதியில் மணல் குவாரி அமைக்க அனுமதி வழங்கிய தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங், மாவட்ட கனிம வள அலுவ லர் மற்றும் பொதுப்பணித்துறை நீர் வள ஆதாரத்துறை அலுவலர் ஆகி யோருக்கு சங்கம் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்வது.

    மாட்டுவண்டி உரிமையா ளர் தலைமைச் சங்க உறுப்பி னர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும். மாட்டு வண்டி உரிமையாளர்களின் சூழ்நிலை கருதி வங்கி மூலம் வண்டி மற்றும் மாடு வாங்குவதற்கு ரூ.3 லட்சம் வழங்க வேண்டும். தமிழக அரசின் தொழிலாளர் நல வாரியத்தில் மாட்டு வண்டி தொழிலாளர்களை இணைந்து நலவாரிய கார்டு வழங்க வேண்டும்.

    மாட்டுவண்டி உரிமை யாளரின் குழந்தைகளின் படிப்பு செலவினை தமிழக அரசே ஏற்க வேண்டும். மாட்டு வண்டி தொழிலா ளர்களுக்கு குடும்ப பாது காப்பு நிதி மற்றும் இன்சூ ரன்ஸ் ஆகியவை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.

    முடிவில் மாவட்ட துணைத் தலைவர் நாகராஜ் நன்றி கூறினார். கூட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டி உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

    மாட்டு வண்டி மூலமாக மணல் அள்ள அனுமதி வழங்க வேண்டும் என்று அரியலூர் மாவட்ட கலெக்டரிடம் தொழிலாளர்கள் மனு அளித்தனர்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பட்டா மாற்றம், தொழில் தொடங்க கடனுதவி, வேலை வாய்ப்பு, வீட்டுமனை பட்டா உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 378 மனுக்களை கலெக்டரிடம் நேரடியாக அளித்தனர்.

    பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்ட அவர் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் மனுக்கள் குறித்த விவரங்களை கேட்டறிந்து குறித்த காலத்திற்குள் மனுக்களின் மீது தக்க நடவடிக்கை மேற்கொண்டு, மனுதாரருக்கு உரிய பதிலை அளிக்குமாறு அறிவுறுத்தினார்.

    மாட்டு வண்டி தொழிலாளர்கள் திரண்டு வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அதில், திருமானூர் கொள்ளிடம் கரையோரம் உள்ள சுள்ளங்குடி ஊராட்சியில் 500-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டி தொழிலாளர்கள் வசித்து வருகிறோம். தங்களது குடும்ப வாழ்க்கையை நடத்துவதற்கு மாட்டு வண்டி மூலம் கொள்ளிட கரையோரம் மணல் அள்ளி பிழைப்பு நடத்தி வந்தோம். ஆனால் தற்போது மணல் அள்ளுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் அன்றாட வாழ்க்கை நடத்த மிகவும் சிரமப்பட்டு வருவதாகவும், தங்களது குடும்பம் வறுமைக்கு தள்ளப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட கலெக்டர் தங்களுக்கு மணல் அள்ளுவதற்கு அதற்குரிய கட்டணத்தை நிர்ணயித்து மணல் அள்ள அனுமதி அளித்து குடும்பத்தை நடத்துவதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்று கூறியிருந்தனர்.

    பின்னர் மாற்றுத்திறனாளிகள் வரிசையில் காத்திருக்காமல் அவர்களுக்கான தனி இருக்கையில் அமர்ந்திருந்த மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்களை பெற்று மனுக்களின் மீது நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலருக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

    இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி தனசேகரன், சமூக பாதுகாப்பு துணை கலெக்டர் பூங்கோதை உள்பட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். 
    ×