சேலம் அருகே தீப்பிடித்து எரிந்த மாட்டு கொட்டகை

செங்கோடன் வயது (67), விவசாயியான இவர் வீட்டு அருகே மாட்டு கொட்டகை அமைத்திருந்தார். நேற்றிரவு திடீரென மாட்டு கொட்ட கையில் தீப்பிடித்து எரிந்தது. இதனை பார்த்த வீட்டில் இருந்தவர்கள் தீயைஅணைக்க முயன்றனர்.
சேலம் அருகே தீப்பிடித்து எரிந்த மாட்டு கொட்டகை
Published on

சேலம்:

சேலம் கொண்டலாம் பட்டியை அடுத்த பனங்காடு லட்சுமி நகரை சேர்ந்தவர் செங்கோடன் வயது (67), விவசாயியான இவர் வீட்டு அருகே மாட்டு கொட்டகை அமைத்திருந்தார்.

இந்தநிலையில் நேற்றிரவு திடீரென மாட்டு கொட்ட கையில் தீப்பிடித்து எரிந்தது. இதனை பார்த்த வீட்டில் இருந்தவர்கள் தீயைஅணைக்க முயன்ற னர். அப்போது தீ கொழுந்து விட்டு எரிந்ததால் அருகில் செல்ல முடியவில்லை.

உடனே செவ்வாய்ப் பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெவித்தனர். உடனே தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்றனர். ஆனால் அதற்குள் அருகில் இருந்த மாட்டு தீவனத்திற்கும் தீ பரவியது. இதனால் அந்த பகுதியே புகை மூட்டமாக காட்சி அளித்தது.

தொடர்ந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து அக்கம் பக்கம் பரவாமல் தடுத்து தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். ஆனாலும் இந்த தீ விபத்தில் ரூ.10 ஆயிரம் மதிப்பிலான மாட்டு தீவனங்கள் எரிந்து சாம்பலானது.

தீ விபத்துக்கான காரணம் குறித்து கொண்டலாம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

X

Maalai Malar
www.maalaimalar.com