search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சங்க"

    • முடிதிருத்தும் தொழிலாளர் நல சங்கத்தின் மேட்டூர் கிளை கூட்டம், மேட்டூர் பெரிய பூங்காவில் நடைபெற்றது.
    • ரூ.3000 உதவித்தொகையை ரூ.5000 ஆக உயர்த்தி வழங்குவது.

    மேட்டூர்:

    தமிழ்நாடு மருத்துவர் நலச் சங்கம் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர் நல சங்கத்தின் மேட்டூர் கிளை கூட்டம், மேட்டூர் பெரிய பூங்காவில் நடைபெற்றது.

    இதில், மேட்டூர் நகர தலைவர் எஸ்.பி.ராஜா தலைமை வகித்தார். சங்க செயலாளர் சந்திரசேகரன், பொருளாளர் ஜெகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில், வீட்டுமனை இல்லாத சங்க உறுப்பினர்களுக்கு தமிழக அரசு இலவசமாக வீட்டுமனை வழங்க வேண்டும். சங்க உறுப்பினர்கள் இறந்தால் அவருடைய குடும்பத்தாருக்கு சங்கம் சார்பில் வழங்கப்பட்டு வந்த ரூ.3000 உதவித்தொகையை ரூ.5000 ஆக உயர்த்தி வழங்குவது. சங்க உறுப்பினர்களின் குடும்ப பெண்கள் பிரசவ செலவிற்கு ரூ.3000, திருமணம், வளைகாப்பு போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கு ரூ.1500 சங்கத்தின் சார்பாக வழங்குவது என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் சங்க உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.

    • மாட்டுவண்டி உரிமையாளர் தலைமைச் சங்க உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும்.
    • கூட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டி உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்ட மாட்டு வண்டி உரிமையா ளர் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம் பொத்தனூர் சங்க அலுவ லக வளாகத்தில் நடை பெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் முருகன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் குண சேகரன் வரவேற்றார். கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    பரமத்திவேலூர் வட்டாரத்திற்கு உட்பட்ட பகுதியில் மணல் குவாரி அமைக்க அனுமதி வழங்கிய தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங், மாவட்ட கனிம வள அலுவ லர் மற்றும் பொதுப்பணித்துறை நீர் வள ஆதாரத்துறை அலுவலர் ஆகி யோருக்கு சங்கம் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்வது.

    மாட்டுவண்டி உரிமையா ளர் தலைமைச் சங்க உறுப்பி னர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும். மாட்டு வண்டி உரிமையாளர்களின் சூழ்நிலை கருதி வங்கி மூலம் வண்டி மற்றும் மாடு வாங்குவதற்கு ரூ.3 லட்சம் வழங்க வேண்டும். தமிழக அரசின் தொழிலாளர் நல வாரியத்தில் மாட்டு வண்டி தொழிலாளர்களை இணைந்து நலவாரிய கார்டு வழங்க வேண்டும்.

    மாட்டுவண்டி உரிமை யாளரின் குழந்தைகளின் படிப்பு செலவினை தமிழக அரசே ஏற்க வேண்டும். மாட்டு வண்டி தொழிலா ளர்களுக்கு குடும்ப பாது காப்பு நிதி மற்றும் இன்சூ ரன்ஸ் ஆகியவை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.

    முடிவில் மாவட்ட துணைத் தலைவர் நாகராஜ் நன்றி கூறினார். கூட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டி உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

    • வாழப்பாடி வட்டார தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கக் கூட்டம், வாழப்பாடி அடுத்த பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோவில் மண்டபத்தில் நடைபெற்றது.
    • போராட்டத்தில் ஈடுபட்ட நாட்களுக்கான சம்பளத்தை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    வாழப்பாடி:

    வாழப்பாடி வட்டார தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கக் கூட்டம், வாழப்பாடி அடுத்த பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோவில் மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு, வாழப்பாடி வட்டத் தலைவர் விஜயராஜ் தலைமை வகித்தார்.

    வட்டக் கிளைக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இக்கூட்டத்தில், கிராம உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். பழுதடைந்துள்ள விஏஓ அலுவலக கட்டடங்களை சீரமைக்க வேண்டும். அனைத்து விஏஓ அலுவலகங்களுக்கும் கழிப்பிட வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். 2018 ல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட நாட்களுக்கான சம்பளத்தை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    வாழப்பாடியில் மின்வாரிய ஓய்வூதியர் சங்க கூட்டம் நடந்தது.

    வாழப்பாடி:

    சேலம் மண்டல மின்வாரிய ஓய்வூதியர் சங்கத்தின் வாழப்பாடி கிளை பொது உறுப்பினர் பேரவை கூட்டம் வாழப்பாடி அரசினர் மாதிரி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு, கிளை தலைவர் வடிவேலு தலைமை வகித்தார். ராமலிங்கம் வரவேற்றார். ஓய்வு பெற்ற தலைமை பொறியாளர் குமார் முன்னிலை வகித்தார். பாலசுப்பிரமணியன் வரவு செலவு ஆண்டறிக்கை சமர்ப்பித்தார். இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை மேலாளர் சுகந்தவேல் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். மாநில நிர்வாகிகள் முத்துசாமி, கோபால் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    கூட்டத்தில், மூத்த உறுப்பினர்கள், 70 முதல் 90 வயது நிரம்பியவர்களுக்கு நினைவு பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டனர். உதவித்தொகை ரூ.1.50 லட்சம் உயர்த்தி வழங்க வேண்டும். புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தின்படி மருத்துவ செலவுகளை ஓய்வூதியர்க்கு தாமதிக்காமல் உடனடியாக வழங்க வேண்டும்.

    மாதந்திர மருத்துவப்படி ரூ.300 லிருந்து மத்திய அரசில் வழங்கப்படுவதை போல் ரூ.1000 வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. நிறைவாக, சையத் யாசின் நன்றி கூறினார்.

    ×