மேட்டூரில் முடி திருத்தும் தொழிலாளர் சங்க கூட்டம்

முடிதிருத்தும் தொழிலாளர் நல சங்கத்தின் மேட்டூர் கிளை கூட்டம், மேட்டூர் பெரிய பூங்காவில் நடைபெற்றது. ரூ.3000 உதவித்தொகையை ரூ.5000 ஆக உயர்த்தி வழங்குவது.
மேட்டூரில் முடி திருத்தும் தொழிலாளர் சங்க கூட்டம்
Published on

மேட்டூர்:

தமிழ்நாடு மருத்துவர் நலச் சங்கம் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர் நல சங்கத்தின் மேட்டூர் கிளை கூட்டம், மேட்டூர் பெரிய பூங்காவில் நடைபெற்றது.

இதில், மேட்டூர் நகர தலைவர் எஸ்.பி.ராஜா தலைமை வகித்தார். சங்க செயலாளர் சந்திரசேகரன், பொருளாளர் ஜெகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், வீட்டுமனை இல்லாத சங்க உறுப்பினர்களுக்கு தமிழக அரசு இலவசமாக வீட்டுமனை வழங்க வேண்டும். சங்க உறுப்பினர்கள் இறந்தால் அவருடைய குடும்பத்தாருக்கு சங்கம் சார்பில் வழங்கப்பட்டு வந்த ரூ.3000 உதவித்தொகையை ரூ.5000 ஆக உயர்த்தி வழங்குவது. சங்க உறுப்பினர்களின் குடும்ப பெண்கள் பிரசவ செலவிற்கு ரூ.3000, திருமணம், வளைகாப்பு போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கு ரூ.1500 சங்கத்தின் சார்பாக வழங்குவது என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் சங்க உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com