பழுதடைந்த வி.ஏ.ஓ. அலுவலக கட்டிடங்களை சீரமைக்க வேண்டும்

வாழப்பாடி வட்டார தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கக் கூட்டம், வாழப்பாடி அடுத்த பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோவில் மண்டபத்தில் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்ட நாட்களுக்கான சம்பளத்தை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கக் கூட்டம் நடந்தபோது எடுத்த படம்.
தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கக் கூட்டம் நடந்தபோது எடுத்த படம்.
Published on

வாழப்பாடி:

வாழப்பாடி வட்டார தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கக் கூட்டம், வாழப்பாடி அடுத்த பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோவில் மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு, வாழப்பாடி வட்டத் தலைவர் விஜயராஜ் தலைமை வகித்தார்.

வட்டக் கிளைக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இக்கூட்டத்தில், கிராம உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். பழுதடைந்துள்ள விஏஓ அலுவலக கட்டடங்களை சீரமைக்க வேண்டும். அனைத்து விஏஓ அலுவலகங்களுக்கும் கழிப்பிட வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். 2018 ல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட நாட்களுக்கான சம்பளத்தை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com