search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Loksabhaelection"

    பாராளுமன்ற தேர்தலில் சிவசேனா கட்சி முதன் முறையாக மேற்கு வங்கத்தில் தனித்துப் போட்டியிடுகிறது. வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர். #Loksabhaelections2019 #SivasenaContestWestbengal
    கொல்கத்தா:

    பாராளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள சிவசேனா கட்சி, மேற்கு வங்கத்தில் தனித்துப் போட்டியிட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. மேற்கு வங்கத்தில் போட்டியிடுவது இதுவே முதன்முறையாகும்.



    இது குறித்து சிவசேனா கட்சியின் மாநில பொதுச் செயலாளர் அசோக் சர்கார் கூறுகையில்,  ‘மேற்கு வங்கத்தில் சிவசேனா சார்பில் போட்டியிடவிருக்கும் 15 வேட்பாளர்களில் 11 வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்துள்ளோம். மீதமுள்ள 4 வேட்பாளர்கள் பட்டியல் விரைவில் அறிவிக்கப்படும்.

    மேற்கு வங்கத்தில் உள்ள பாஜக தலைமை, மாநிலத்தை ஆளும் திரிணாமுல் காங்கிரசிடம் போட்டியிட முடியாததால் தான், இந்த தேர்தலில் சிவசேனா தனித்து களமிறங்கியிருக்கிறது. மேலும்  திரிணாமுல் காங்கிரசில் இருந்த ஊழல் கறைப்படிந்த தலைவர்கள் பாஜகவில் சமீபத்தில் இணைந்துள்ளனர்’ என்றார்.

    மேற்கு வங்கத்தின் தம்லுக், கந்தாய், மித்னாபூர், வடக்கு கொல்கத்தா, பராக்பூர், பங்குரா, பராசாத், பீஷ்னுபூர், வடக்கு மல்டா, ஜதாவ்பூர் ஆகிய தொகுதிகளில் இந்து வேட்பாளர்களை மட்டுமே நிறுத்தப்போவதாக சிவசேனா கூறியுள்ளது.

    மித்னாபூர் தொகுதியில், பாஜகவின் மாநில தலைவர் திலீப் கோஷ், மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மானஸ் புனியா ஆகியோரை எதிர்த்து அசோக் சர்கார் போட்டியிடுவதாக தெரிய வந்துள்ளது. #Loksabhaelections2019 #SivasenaContestWestbengal


    மோடி அரசால் இந்தியா வளர்ச்சி அடையவில்லை என்றும் தளர்ச்சி அடைந்திருப்பதாகவும், மதுரை பிரசார பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கடுமையாக குற்றம்சாட்டினார். #MKStalin #DMK #LoksabhaElections2019
    மதுரை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

    இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று மதுரையில் உள்ள வண்டியூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு. வெங்கடேசனை ஆதரித்து பேசியதாவது:

    இந்தியா 45 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுக் கொண்டிருக்கிறது. மோடி அரசால் இந்தியா வளர்ச்சி அடையவில்லை. தளர்ச்சிதான் அடைந்துள்ளது. வேலைவாய்ப்பின்மையை அதிகரித்தது தான் இந்த மோடி அரசின் சாதனை. இதனை நான் கூறவில்லை. ஆய்வு அறிக்கை ஒன்றில் இதுவரை இல்லாத அளவில் இந்தியாவில் 6.1% வேலை வாய்ப்பின்மை அதிகரித்துள்ளது என கூறப்பட்டுள்ளது.

    மத்தியில் மோடியின் ஆட்சியை ஒழிக்கவே நீங்களும் இங்கு திரண்டு உள்ளீர்கள். ஏற்கனவே சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் தேர்தல் அறிக்கை வெளியிடும் போது , இந்த தேர்தல் அறிக்கை கதாநாயகன் மட்டுமல்ல, கதாநாயகியும் இது தான் என கூறினேன். இதில் கீழடியிலே அகழாய்வு தொய்வில்லாமல் தொடங்கப்பட்டு முறையாக நடத்தப்படும் என வாக்குறுதியினை அளித்தோம்.

    இதனை  இங்கு சொல்ல காரணம், இந்த தொகுதியிலே பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் சு. வெங்கடேசன் இதற்கு முக்கியமான காரணமாவார். தமிழக எழுத்தாளர்கள் நாடாளுமன்றத்திற்கு செல்ல வேண்டும். தமிழர்களின் புகழ் ஓங்க வேண்டும். இவர் மதுரையை காப்பாற்ற துடித்துக் கொண்டிருக்கக்கூடிய ஒருவர் ஆவார். இவர்  பாராளுமன்றம் செல்வது எங்களுக்கு மட்டுமல்ல.  உங்களுக்கும் பெருமை ஆகும்.



    அண்மையில் கூட பிரதமர் மோடி, மதுரையில் எய்ம்ஸ் அமைக்க அடிக்கல் நாட்டிவிட்டுச் சென்றார்.  அந்த விழா வெறும் அடிக்கல் நாட்டு விழா தான். அடிக்கல் நாட்டினால் போதுமா? அதற்கு பணம் ஒதுக்க வேண்டாமா? மருத்துவமனை தானாக வந்து விடுமா? ஏற்கனவே அறிவித்திருந்தபடி, உத்தரபிரதேசத்திற்கே தராதவர், மதுரைக்கா தரப்போகிறார்?

    இந்தியாவில் 100 ஸ்மார்ட் சிட்டி உருவாக்கப்படும் என அறிவித்தார். ஆனால் இப்போது தமிழகத்தில் ஒன்று கூட இல்லை. ஆட்சிக்கு வந்தால் அதை செய்வேன் இதை செய்வேன் என கூறுகிறாரே தவிர, ஒன்று கூட செய்யவில்லை. கழக தலைவர் மு கருணாநிதி ஆட்சியிலே, விவசாயிகள் கடன் தள்ளுபடி, இலவச மின்சாரம், மினி பஸ்கள், என அனைத்தையும் தாய் உள்ளத்தோடு நடத்தினார். இன்று எடப்பாடி பேய் ஆட்சி நடத்துகிறார்.

    தேர்தல் நேரத்தில் மட்டும் தமிழகத்திற்கு வந்து செல்லும் மோடி அரசு , மதுரைக்கு என்ன செய்திருக்கிறது? என சிந்தித்து செயலாற்றுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார். #MKStalin #DMK #LoksabhaElections2019

    திரிபுரா முதல் மந்திரி பிப்லப் குமார் தேப், பிரசார கூட்டங்களில் தேர்தல் விதிகளை மீறி காங்கிரஸ் கட்சியினரை தகாத வார்த்தைகளால் பேசுவதாக அவர் மீது புகார் கொடுத்துள்ளனர். #TripuraCM #Biblapkumardep #Congresscomplaints
    அகர்தலா:

    பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்து தேர்தல் பணிகளை தொடங்கி உள்ளன. ஏற்கனவே சில அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை முழுவதுமாக அறிவித்த நிலையில், சில கட்சிகள் ஒவ்வொரு கட்டமாக வெளியிட்டு வருகின்றன. மேலும் சில கட்சியினர் பிரச்சார பொதுக் கூட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் திரிபுரா முதல் மந்திரி பிப்லப் குமார் தேப், காங்கிரஸ் கட்சியினரை ‘கொள்ளையர்கள்’, ‘சாத்தான் கூட்டத்தினர்’, ‘தரகர்கள்’, ‘தந்திர நரிகள்’ என தகாத வார்த்தைகளினால் கடுமையாக தாக்கி பேசினார்.

    இந்த செயலுக்கு திரிபுரா முதல் மந்திரி பிப்லப் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்தினர். இதுவரை மன்னிப்பு கேட்காத நிலையில், திரிபுரா காங்கிரஸ் கட்சியினர் இன்று  பிப்லப்  மீது புகார் கொடுத்துள்ளனர்.

    இது குறித்து திரிபுரா காங்கிரஸ் கமிட்டியின் செய்தி தொடர்பாளர் தப்பாஸ் டே கூறியதாவது:-

    மார்ச் 20 அன்று நடைபெற்ற பாஜக பிரச்சார கூட்டங்களில் பிப்லப், வாக்காளர்களை மிரட்டும் வகையில், மோடி மீண்டும் ஆட்சிக்கு வராவிட்டால், திரிபுரா மற்றும் அகர்தலா என்றுமே நவீன நகரங்களாக மாற சாத்தியமே இல்லை என கூறியுள்ளார்.



    இலவச கேஸ் சிலிண்டர் சேவை நிறுத்தப்பட்டு, பணம் வசூலிக்கப்படும். மேலும் மத்திய அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச ஆதார விலைக்கு அரிசி வாங்குவதை இந்திய உணவு கழகம் நிறுத்தி விடும் எனவும் பிப்லப் பேசினார். மக்களை அச்சுறுத்தும் வகையில் பேசியதுடன், காங்கிரஸ் கட்சியினரையும் மிகவும் அவதூறாக பேசியுள்ளார்.

    இவ்வாறு தப்பாஸ் டே கூறினார்.#TripuraCM #Biblapkumardep #Congresscomplaints
    தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக, திமுக, பாஜக, மக்கள் நீதி மய்யம், காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் இன்று வேட்பு மனுக்கள் தாக்கல் செய்தனர். #LokSabhaElections2019 #CandidatesNomination
    சென்னை:

    பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நெருங்கும் வேளையில் வேட்பு மனு தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அனைத்து கட்சியினரும் வேட்பாளர்களை தேர்வு செய்து, போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை ஒவ்வொரு கட்டமாக வெளியிட்டு பிரசாரத்தை தீவிரப்படுத்தி உள்ளனர். தமிழகத்தில் அதிமுக திமுக ஆகிய கட்சிகள் ஒரே கட்டமாக வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட நிலையில், மற்ற கட்சிகளிலும் பட்டியல் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றது.

    இந்நிலையில் இன்று தமிழகம் முழுவதும் வேட்பு மனு தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்றது. அதிமுக, பாஜக, பாமக, திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் அந்தந்த தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். அதிமுக வேட்பாளர்கள் அனைவரும் இன்று மனு தாக்கல் செய்கின்றனர்.

    வேட்பு மனு தாக்கல் செய்த முக்கிய வேட்பாளர்கள் வருமாறு:

    ஸ்ரீபெரும்புதூர் திமுக வேட்பாளர் - டி ஆர் பாலு

    பொள்ளாச்சி திமுக வேட்பாளர்- சண்முக சுந்தரம்

    மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர்-சு. வெங்கடேசன்

    கள்ளக்குறிச்சி தேமுதிக வேட்பாளர்- எல்.கே.சுதீஷ்

    தர்மபுரி பாமக வேட்பாளர்- அன்புமணி ராமதாஸ்



    திண்டுக்கல் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் - மன்சூர் அலிகான்

    மதுரை நாம் தமிழர் கட்சி வேட்பாளர்- பாண்டியம்மாள்

    கடலூர் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்- சித்ரா

    புதுச்சேரி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் - என்.ஏ.எஸ். சுப்ரமணியன்

    ஈரோடு அதிமுக வேட்பாளர் - மணிமாறன்

    கன்னியாகுமரி  பாஜக வேட்பாளர் - பொன். ராதாகிருஷ்ணன்



    தென்சென்னை அதிமுக வேட்பாளர் - ஜெயவர்த்தன்

    தேனி அதிமுக வேட்பாளர் - ரவீந்திரநாத் ( ஒபிஎஸ் மகன் )

    வட சென்னை தேமுதிக வேட்பாளர் -  மோகன் ராஜ்

    புதுச்சேரி காங்கிரஸ் வேட்பாளர் - வைத்தியலிங்கம் #LokSabhaElections2019 #CandidatesNomination


    சேலத்தில் மூன்றாவது நாளாக இன்று பிரசாரம் செய்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சேலம் திமுகவின் கோட்டை என குறிப்பிட்டுள்ளார். #MKStalin #DMK #LoksabhaElections2019
    சேலம்:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

    இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதலில் திருவாரூர் சென்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். மூன்றாவது நாளான இன்று சேலத்தில் உள்ள கோட்டை மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்டு, பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் எஸ். ஆர். பார்த்திபனை ஆதரித்து பேசியதாவது:



    திமுகவின் சார்பில் என் பயணத்தை இன்று 3வது நாளாக நடத்தி கொண்டிருக்கிறேன்.  ஒவ்வொரு பகுதிக்கும் நான் செல்லும் போதும் ஒன்றை ஒன்று மிஞ்சக்கூடிய அளவுக்கு மக்கள்  திரண்டு ஆதரவு அளித்து வருகின்றீர்கள்.  இதன் மூலம் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் நாம் தான் வெற்றி பெறுவோம் என தெரிகிறது.

    இதற்கான காரணம் திமுகவின் மீது நீங்கள் கொண்டுள்ள அசைக்க முடியாத நம்பிக்கையே ஆகும். மேலும் மத்தியிலே ஆட்சியில் இருக்கக்கூடிய பாஜக, மாநிலத்தில் உள்ள அதிமுக மீது உள்ள வெறுப்பையும் இந்த கூட்டம் நிரூபித்துள்ளது. இந்த கோட்டை மைதானம் நிறைந்து இருப்பதை பார்த்தால், கோட்டையை நாம் பிடிப்பது உறுதி.



    சேலம் திமுகவின் மாபெரும் கோட்டை. இந்த கோட்டையிலே இவ்வளவு மக்கள் ஆதரவு தர மிக முக்கியமான காரணம்  மறைந்த வீரபாண்டியார் ஆவார். கடந்த 2014ம் ஆண்டு இதே சேலத்தில் கலைஞர் கருணாநிதியின்  முத்து விழா மாநாட்டினை வீரபாண்டியார் முன்னின்று நடத்தினார். தோல்வியே அறியாமல் தொடர்ந்து வெற்றி பெற்ற சின்னம் தான் உதய சூரியன். திமுக சார்பில் யார் வேட்பாளர் என்றாலும் அவர் கலைஞர் தான் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

    தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்கள் நமது திமுக ஆட்சியிலே வேலை பெற முடிந்தது. தன்னம்பிக்கை உருவானது. கல்லூரிகள், பள்ளிகள் அதிகம் திறக்கப்பட்டன. கோட்டை மைதானத்திற்கு அருகில் உள்ள சையத் அபீத் தெருவில் தான் தொடக்க காலத்தில் கழக தலைவர் ஒன்றரை ஆண்டு காலம் இருந்திருக்கிறார்.

    இந்த திராவிட இயக்கத்திற்கு அடித்தளம் சேலம் தான். சுயமரியாதை இயக்கம், நீதி கழகம் இணைத்து 1944 ம் ஆண்டு திராவிட கழகம் என மாற்றப்பட்டது இந்த சேலத்தில் தான்.

    விவசாயிகளுக்கு 7 ஆயிரம் கோடி ரூபாய் ரத்து, மாற்று திறனாளிகளை மேம்படுத்தியது, ஏராளமான மருத்துவ கல்லூரிகள் திறப்பு, சேலத்தில் புதிய ரயில்வே மண்டலம், மோகன் குமாரமங்கலம் மருத்துவ கல்லூரி சூப்பர் ஸ்பெஷாலிட்டியாக மாறியது என பல்வேறு சாதனைகள் திமுக ஆட்சியில் தான் நடைபெற்றது.

    இந்த சேவைகள் தொடர,  பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் உங்களில் ஒருவராக இங்கு நிற்கும், எஸ். ஆர். பார்த்திபனை வெற்றி பெற செய்யுமாறு பணிவன்புடனும், உரிமையுடனும் வேண்டுகோள் விடுக்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார். #MKStalin #DMK #LoksabhaElections2019


    திருவாரூரில் இன்று பிரச்சாரம் தொடங்கிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடி இரும்பு மனிதர் அல்ல கல் மனிதர் என்று கடுமையாக சாடினார். #MKStalin #DMK #LoksabhaElections2019
    திருவாரூர்:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

    இந்நிலையில் நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தேர்தல் அறிக்கையினை வெளியிட்ட முக ஸ்டாலின், இன்று திருவாரூரில் இருந்து பிரசாரத்தை தொடங்கினார். முதலில் திருவாரூரில் உள்ள கழக தலைவர் கருணாநிதி வீட்டிற்கு சென்று ஆசிப்பெற்று, வீதிவீதியாக சென்று, வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.



    பின்னர் திருவாரூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் நாகை மக்களவை தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர்  செல்வராசு மற்றும் திருவாரூர் சட்டமன்ற தொகுதி திமுக  வேட்பாளர் பூண்டி கலைவாணன் ஆகியோரை ஆதரித்து பேசினார்.

    மறைந்த தலைவர் கருணாநிதியின் வசனங்களைக் குறிப்பிட்டு தனது உரையைத் தொடங்கிய ஸ்டாலின் பேசியதாவது:-

    திருவாரூர் தொகுதிக்கு பிரசாரத்திற்காக வர வேண்டிய அவசியமே இல்லை. ஆனால், தொகுதி மக்கள் நம்ம வீட்டுப்பிள்ளை நம்ம ஊருக்கு வரவில்லை என எண்ணிவிடக் கூடாது என்பதற்காகவே முதலில் வந்தேன். ஜூன் 3ம் தேதி நம் கழக தலைவர் மு.கருணாநிதி அவர்களின் பிறந்த தினம் ஆகும். அன்று பிரதமர் மோடியின் ஆட்சி முடிவுக்கு வண்டு விடும்.

    மோடி இரும்பு மனிதர் அல்ல. கல் மனிதர். மத்தியில் இருக்கும் பாசிச மோடி அரசை நிச்சயம் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் எனும் முனைப்போடு செயல்பட்டு வருகின்றோம்.

    இந்தியாவில் கருப்புப் பணம் முற்றிலும் அழிக்கப்படும், இந்தியர்களின் வங்கிக்கணக்கில் ரூ.15 லட்சம் போடப்படும் என கூறியது என்னவாயிற்று? இளைஞர்களுக்கு வேலை வழங்கப்படும் என கூறிய வாக்குறுதி என்ன ஆனது? இவற்றில் ஏதேனும் ஒன்று நடந்ததா?

    மேலும் தமிழகத்திலே ஆட்சி புரிகின்ற இந்த அதிமுகவை நாம் தான் குற்றம் சாட்டவேண்டும் என்பது அல்ல. அவர்களின் செயல்களே போதும். சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானத்தை எதிர்த்து, அவரது கட்சியை சேர்ந்த 11 எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்தனர். அவர்கள் இப்போது பதவியில் உள்ளனர். ஆனால், ஆதரவாக வாக்களித்த 18 பேரின் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன.

    இதேபோல் அதிமுகவில், கூட்டணியில் இணைந்துள்ள இதர கட்சியினரும் அவர்களை எப்படியெல்லாம் பேசினார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். அதிமுக பொதுச் செயலாளர் ஜெ.ஜெயலலிதா மறைவிற்கு பின்னர், அக்கட்சி 2, 3 ஆக உடைந்து விட்டது.

    கழக தலைவரை ஈன்ற ஊர் இந்த ஊர். நம்முடைய தாய் தமிழ் மொழியை காத்திட வேண்டும் என இதே திருவாரூரில் பல்வேறு போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தினார். இந்த திருவாரூர் தொகுதியில் தான், கடந்த 2011 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தலில் அவரை அமோக வெற்றி பெற வைத்தீர்கள். அந்த தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஒரே தலைவர் மு கருணாநிதி ஆவார்.  

    இதேபோல் தற்போது சகோதரர்கள் செல்வராசு மற்றும் பூண்டி கலைவாணன் ஆகியோரை மகத்தான வெற்றி பெற செய்வீர்கள் என நம்புகிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார். #MKStalin #DMK #LoksabhaElections2019

    ×