search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "selam"

    சேலத்தில் இன்று நடைபெற்ற பிரசாரப் பொதுக் கூட்டத்தில் கலந்துக் கொண்டு பேசிய மு.க.ஸ்டாலின், வெற்றி என்பது திமுக கூட்டணிக்கு உறுதி என கூறியுள்ளார். #MKStalin #DMK #LoksabhaElections2019
    சேலம்:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

    இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று சேலத்தில் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற பிரசாரப் பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்டு,  திமுக, காங்கிரஸ் மற்றும் மதிமுக  வேட்பாளர்களை ஆதரித்து  பேசியதாவது:

    இங்கு வருகை தந்திருக்கும் காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவர் ராகுல் காந்தியை வரவேற்கிறேன். ராகுல் காந்தியை இளம் தலைவர் என கூறுவதை விட வருங்கால பிரதமர் என கூறுவதே பொருத்தமாக இருக்கும்.



    மத்தியில் அமைந்திருக்கும் பாஜக அரசின் ஆட்சியும், மாநிலத்திலே ஆளும் அதிமுக அரசின் செயல்பாடுகளும் மக்களை எந்த அளவிற்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்பதை தினமும் பார்க்கிறேன். அவர்கள் ஆட்சியிலே செய்த சாதனையை கூறாமல் தொடர்ந்து எங்களையே குற்றம் சாட்டிக் கொண்டிருக்கிறார்கள். 

    ஏதேனும் நல்லது செய்திருந்தால் தானே சொல்லமுடியும்? மோடி தலைமையிலான பாசிச ஆட்சி முடிவுக்கு வர வேண்டும். இதற்காக மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். அதன்பின்னர் தமிழ்நாடு வளர்ச்சி அடையும்.

    மோடி ஆட்சியினை அப்புறப்படுத்திய பின்னர், ஆளும் அதிமுகவின் ஆட்சியும் கலையும். நாட்டில் நல்ல ஆட்சி மலர மக்களாகிய நீங்கள் துணை நிற்க வேண்டும்.  எடப்பாடியின் உதவாக்கரை ஆட்சியையும், மோடியின் சர்வாதிகார ஆட்சியையும் நீங்கள் கவிழ்க்க தயாராகி விட்டீர்கள். வரும் 18ம் தேதி முக்கிய பங்கு ஆற்றவிருக்கும் நீங்கள், மறக்காமல் செய்து விடுங்கள்.

    மத்திய, மாநில ஆட்சியில் மாற்றத்தை உருவாக்கக்கூடிய தேர்தல், இந்த தேர்தல் தான். பாஜக வெளியிட்ட தேர்தல் அறிக்கை ஜீரோ. ஆனால் காங்கிரஸ் மற்றும் திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கை ஹீரோவை போல் உள்ளது. மத்தியில் நாம் கை காட்டியவர்களுக்கு தான் ஆட்சி.  நாட்டில் வறுமையை ஒழிக்க மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வாக்களிப்பீர்கள் என நம்புகிறேன்.   

    இவ்வாறு அவர் பேசினார். #MKStalin #DMK #LoksabhaElections2019  
    சேலத்தில் மூன்றாவது நாளாக இன்று பிரசாரம் செய்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சேலம் திமுகவின் கோட்டை என குறிப்பிட்டுள்ளார். #MKStalin #DMK #LoksabhaElections2019
    சேலம்:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

    இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதலில் திருவாரூர் சென்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். மூன்றாவது நாளான இன்று சேலத்தில் உள்ள கோட்டை மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்டு, பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் எஸ். ஆர். பார்த்திபனை ஆதரித்து பேசியதாவது:



    திமுகவின் சார்பில் என் பயணத்தை இன்று 3வது நாளாக நடத்தி கொண்டிருக்கிறேன்.  ஒவ்வொரு பகுதிக்கும் நான் செல்லும் போதும் ஒன்றை ஒன்று மிஞ்சக்கூடிய அளவுக்கு மக்கள்  திரண்டு ஆதரவு அளித்து வருகின்றீர்கள்.  இதன் மூலம் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் நாம் தான் வெற்றி பெறுவோம் என தெரிகிறது.

    இதற்கான காரணம் திமுகவின் மீது நீங்கள் கொண்டுள்ள அசைக்க முடியாத நம்பிக்கையே ஆகும். மேலும் மத்தியிலே ஆட்சியில் இருக்கக்கூடிய பாஜக, மாநிலத்தில் உள்ள அதிமுக மீது உள்ள வெறுப்பையும் இந்த கூட்டம் நிரூபித்துள்ளது. இந்த கோட்டை மைதானம் நிறைந்து இருப்பதை பார்த்தால், கோட்டையை நாம் பிடிப்பது உறுதி.



    சேலம் திமுகவின் மாபெரும் கோட்டை. இந்த கோட்டையிலே இவ்வளவு மக்கள் ஆதரவு தர மிக முக்கியமான காரணம்  மறைந்த வீரபாண்டியார் ஆவார். கடந்த 2014ம் ஆண்டு இதே சேலத்தில் கலைஞர் கருணாநிதியின்  முத்து விழா மாநாட்டினை வீரபாண்டியார் முன்னின்று நடத்தினார். தோல்வியே அறியாமல் தொடர்ந்து வெற்றி பெற்ற சின்னம் தான் உதய சூரியன். திமுக சார்பில் யார் வேட்பாளர் என்றாலும் அவர் கலைஞர் தான் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

    தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்கள் நமது திமுக ஆட்சியிலே வேலை பெற முடிந்தது. தன்னம்பிக்கை உருவானது. கல்லூரிகள், பள்ளிகள் அதிகம் திறக்கப்பட்டன. கோட்டை மைதானத்திற்கு அருகில் உள்ள சையத் அபீத் தெருவில் தான் தொடக்க காலத்தில் கழக தலைவர் ஒன்றரை ஆண்டு காலம் இருந்திருக்கிறார்.

    இந்த திராவிட இயக்கத்திற்கு அடித்தளம் சேலம் தான். சுயமரியாதை இயக்கம், நீதி கழகம் இணைத்து 1944 ம் ஆண்டு திராவிட கழகம் என மாற்றப்பட்டது இந்த சேலத்தில் தான்.

    விவசாயிகளுக்கு 7 ஆயிரம் கோடி ரூபாய் ரத்து, மாற்று திறனாளிகளை மேம்படுத்தியது, ஏராளமான மருத்துவ கல்லூரிகள் திறப்பு, சேலத்தில் புதிய ரயில்வே மண்டலம், மோகன் குமாரமங்கலம் மருத்துவ கல்லூரி சூப்பர் ஸ்பெஷாலிட்டியாக மாறியது என பல்வேறு சாதனைகள் திமுக ஆட்சியில் தான் நடைபெற்றது.

    இந்த சேவைகள் தொடர,  பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் உங்களில் ஒருவராக இங்கு நிற்கும், எஸ். ஆர். பார்த்திபனை வெற்றி பெற செய்யுமாறு பணிவன்புடனும், உரிமையுடனும் வேண்டுகோள் விடுக்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார். #MKStalin #DMK #LoksabhaElections2019


    சேலம் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, விபத்துக்களில் இருந்து மக்களின் உயிரை காக்கவே 8 வழிச்சாலை அமைக்கப்படுவதாக தெரிவித்தார். #Greenwayroad #EdappadiPalaniswami
    சேலம்:

    தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலம் விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:

    மாநிலத்தின் வளர்ச்சிக்கு தக்கவாறு சாலைகளை மாற்ற வேண்டும். நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய 8 வழிச்சாலை அமைக்கப்பட உள்ளது. இந்த திட்டம் முழுமையாக நிறைவேற கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் ஆகும். மத்திய அரசின் இந்த 8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த தமிழக அரசு உதவி செய்கிறது.

    நிலம் அளிக்கும் உரிமையாளர்களுக்கு தகுந்த இழப்பீடு பெற்று தரப்படும். அனைத்து பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய சாலையாக சென்னை, சேலம் இடையேயான 8 வழிச்சாலை இருக்கும். அதிகரிக்கும் வாகன விபத்துக்களால் மக்கள் உயிரிழப்பை தடுக்கவே இந்த 8 வழிச்சாலை திட்டம் கொண்டு வரப்பட்டது. காழ்ப்புணர்ச்சி காரணமாகவே எதிர்க்கட்சிகள் இந்த திட்டத்தை எதிர்த்து வருகின்றன.

    இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார். #Greenwayroad #EdappadiPalaniswami
    ×