search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "license"

    • விதை விற்பனை உரிமம் பெறாத தானிய மண்டிகளில் விதைகளை வாங்க வேண்டாம்.
    • உரிமம் பெறாமல் விதைகள் மற்றும் காய்கறி நாற்றுகள் விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும்.

    காங்கயம்:

    காங்கயம் பகுதிகளில் உரிமம் பெறாமல் பயிறு வகைகள், சோளம் விதைகள், காய்கறி விதைகளை விற்றால் விற்பனை செய்தவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து விதை ஆய்வு துணை இயக்குநா் பெ.சுமதி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    திருப்பூா் மாவட்டம், வெள்ளகோவில் மற்றும் காங்கயம் வட்டாரங்களில் விதை விற்பனை உரிமம் பெற்ற 34 அரசு மற்றும் தனியாா் விதை விற்பனை நிலையங்கள் உள்ளன. உரிமம் பெற்ற விற்பனை நிலையங்கள் மூலம் நெல், சோளம், மக்காச்சோளம், பயிறு வகைகள், நிலக்கடலை, எள், சூரிய காந்தி மற்றும் காய்கறி விதைகள் விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

    விவசாயிகள் உரிமம் பெற்ற விற்பனை நிலையங்களில் விதைகளை வாங்கும்போது தவறாமல் அதற்கான விற்பனைப் பட்டியலை கேட்டு வாங்க வேண்டும். அதில் விதை குவியல் எண், காலாவதி நாள், விற்பனை செய்த நாள், வாங்குபவா் மற்றும் விற்பனை செய்பவரின் கையொப்பம் போன்ற விவரங்கள் உள்ளதா என சரி பாா்த்து வாங்க வேண்டும்.

    விதை விற்பனை உரிமம் பெறாத தானிய மண்டிகளில் விதைகளை வாங்க வேண்டாம். திறந்த நிலையில் சாக்குகளில் வைத்து விற்பனை செய்யும் விதைகளை வாங்கக்கூடாது. உரிமம் பெறாமல் விதைகள் மற்றும் காய்கறி நாற்றுகள் விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும். அவ்வாறு உரிமம் இல்லாமல் விதைகள் மற்றும் நாற்றுகள் விற்றால் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது விதைகள் சட்டம் 1966இன் படி சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளாா். 

    • மேலூர் நகராட்சி பகுதியில் உரிமம் பெறாத கழிவு நீர் அகற்றும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என ஆணையாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    • வாகனங்களை பறிமுதல் செய்வதோடு அவர்கள் மீது வழக்கு தொடரப்படும்

    மேலூர்

    மேலூர் நகராட்சி பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் தனியார் கட்டிடங்களில் உள்ள மனித கழிவு நீர் தொட்டிகளில் இருந்து கழிவுகளை அகற்றும் வாகனங்கள் உடனடியாக உரிமம் பெற வேண்டும் என்று நகராட்சி ஆணையாளர் ஆறுமுகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளார்.

    கழிவுநீர் அகற்றும் வாகனங்களில் அரசு விதிப்படி போதிய பாதுகாப்பு அமைப்புகள் செய்திருக்க வேண்டும்.தகுந்த ஆவணங்களுடன் வாகன உரிமையாளர்கள் ரூ.2 ஆயிரம் கட்டணத்துடன் நகராட்சியில் விண்ணப்பித்து 2 ஆண்டுகள் செல்லத்தக்க உரிமத்தை பெற்றுக் கொள்ளலாம்.

    அவ்வாறு உரிமம் பெறாத கழிவுநீர் அகற்றும் வாகனங்களை பறிமுதல் செய்வதோடு அவர்கள் மீது வழக்கும் தொடரப்படும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

    • செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுவது, போதையில் வாகனம் ஓட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு 6 மாதம் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படுகிறது.
    • போதையில் வாகனம் ஓட்டியவர்களுக்கு ரூ.10 ஆயிரமும், ெஹல்மெட் அணியாத வாகன ஓட்டிகளுக்கு ரூ.1000 அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.

    சேலம்:

    தமிழகத்தில் வாகன விபத்துக்களை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுவது, போதையில் வாகனம் ஓட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு 6 மாதம் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படுகிறது. போதையில் வாகனம் ஓட்டியவர்களுக்கு ரூ.10 ஆயிரமும், ெஹல்மெட் அணியாத வாகன ஓட்டிகளுக்கு ரூ.1000 அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.

    சேலம் சரகத்தில் கடந்த மாதத்தில் அதிவேகமாக வாகனம் ஓட்டிய 49 பேர், அதிகபாரம் ஏற்றி வந்த 9 டிரைவர்கள், சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றி வந்த 19 டிரைவர்கள், சிக்னலை மீறிய 57 பேர், செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டிய 45 பேர் உள்ளிட்ட 216 பேரின் லைசென்சை ரத்து செய்ய, வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு போலீசார் பரிந்துரை செய்தனர்.

    அதன்படி போதையில் வாகனம் ஓட்டிய 216 பேரின் லைசென்ஸ் 3 மாதங்களுக்கு தற்காலிமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

    • விதை விவர அட்டை இல்லாமல் விற்பனை செய்யப்படும் விதைகளை விவசாயிகள் வாங்க வேண்டாம்.
    • உரிமம் பெறாமல் விதைகளை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுஜாதாபாய் தெரிவித்துள்ளார்.

    நெல்லை:

    நெல்லை விதை ஆய்வு துணை இயக்குனர் சுஜாதாபாய் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நெல்லை, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் உரிமம் பெறாமலும், விற்பனை பட்டியல் இல்லாமலும். விதை விவர அட்டை இல்லாமலும் விற்பனை செய்யப்படும் விதைகளை விவசாயிகள் வாங்க வேண்டாம். ஒவ்வொரு அரசு மற்றும் தனியார் விதை உற்பத்தியாளர் தாங்கள் விற்கும் புதிய ரக விதை களுக்கு சான்று பெற்றிருக்க வேண்டும். மேலும், பதிவு எண் மற்றும் முளைப்புத் திறன் அறிக்கை இல்லாமல் விற்பனை செய்தால் விதைச் சட்டம் 1966 மற்றும் விதைகள் கட்டுப்பாட்டு ஆணை 1983-ன்படி நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகள் தாங்கள் விதைகளை வாங்கும்போது விதைச் சட்டம் 1966-ல் குறிப்பிட்ட 14 காரணிகளும் விவர அட்டையில் குறிப்பிடப்ப ட்டுள்ளதா? என்பதை உறுதி செய்த பின்னரே வாங்க வேண்டும்.

    மேலும். உரிமம் பெறாமல் விதைகளை விற்பனை செய்தாலோ, விற்பனை பட்டியல் இல்லாமல் விற்பனை செய்தாலோ சம்மந்தப்பட்ட விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதனால் தகுந்த உரிமம் பெறாமல் அல்லது உரிமம் புதுப்பிக்கா மல் விற்பனை செய்து வரும் நிறுவனங்கள் தங்கள் பகுதியில் உள்ள விதை ஆய்வாளர்களை அணுகி seedcertificationtn.gov.in என்ற வலைதள முகவரியில் முறையாக விண்ணப்பித்து பதிவு கட்டணம் செலுத்தி, உரிமம் பெற்று விற்பனை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    இதற்கிைடயே நெல்லை விதை ஆய்வு துணை இயக்குனர் சுஜாதாபாய் வெளி யிட்டுள்ள மற்றொரு செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நெல்லை மாவட்டத்தில் பாப்பாக்குடி வட்டாரத்தி லும், தென்காசி மாவ ட்டத்தில் கடையம் மற்றும் கடையநல்லூர் வட்டாரத்திலும் கோடை நெல் சாகுபடியும், மாவட்டத்தின் பிற பகுதிகளில் உளுந்து, பருத்தி மற்றும் காய்கறி பயிர்கள் சாகுபடியும் மேற்கொள்ள விவசாயிகள் தற்போது தயாராகி வருகின்றனர். தரமான விதைகளை பயன்படுத்துவதால் 15 முதல் 20 சதவீதம் மகசூல் அதிகரிக்கும். எனவே விதை வாங்கும் விவசாயிகள் கீழ்கண்ட அறிவுரைகளை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும்.

    விதைச்சான்றுத்துறை மூலம் விதை விற்பனை உரிமம் பெற்ற விற்பனை யாளரிடம் இருந்து மட்டுமே விதைகள் வாங்க வேண்டும். விதைக்குரிய விற்பனை பட்டியலை விற்பனையாளரிடம் கேட்டு வாங்க வேண்டும். விற்பனை ரசீதில் விற்பனையாளர் மற்றும் வாங்கும் விவசாயி கையொப்பம் இட வேண்டும்.

    ஒன்றுக்கு மேற்பட்ட ரகங்களை பயிர் செய்யு ம்போது விதை சிப்பங்களை தனித்தனியே ஊற வைக்க வேண்டும். வேளாண் விரிவாக்க மையங்கள் மற்றும் உரிமம் பெற்ற தனியார் விற்பனை நிலையங்களில் ஏற்கனவே விநியோகி க்கப்பட்ட மற்றும் தற்சமயம் இருப்பில் உள்ள விதைகளின் மாதிரிகள் எடுக்கப்பட்டு அவற்றின் தரம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. எனவே விவசா யிகள் தரமான விதைகளை பயன்படுத்தி அதிக மகசூல் பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • வாகன ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
    • வாகனத்தின் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

    சுவாமிமலை:

    கும்பகோணம் உட்கோட்ட போலீசார் சார்பில் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை மாவட்டத்தில் தற்போது விவசாய அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது.

    சிலர் விதிகளை மீறி அளவுக்கு அதிகமாகவும், அதிக உயரமாகவும் வைக்கோலை ஏற்றிச்செல்கின்றனர்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருப்புறம்பியம் பகுதியில் அதிக உயரத்தில் வைக்கோல் ஏற்றிச்சென்ற லாரி மின்கம்பியில் உரசி தீப்பற்றி எரிந்து சேதமானது. இதற்கு வாகனத்தில் அதிக உயரத்தில் வைக்கோலை ஏற்றிச்சென்றதே காரணம் ஆகும்.

    எனவே, இது போன்று அதிக பாரம் மற்றும் உயரத்தில் வைக்கோல் ஏற்றிச்செல்லும் வாகனங்கள் பிடிபட்டால் வாகனங்களை பறிமுதல் செய்வதோடு மட்டுமல்லாமல் சம்மந்தப்பட்ட வாகன ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    மேலும் வாகனத்தின் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தட்டைபயறு, கொள்ளு, சூரியகாந்தி மற்றும் காய்கறி விதைகள் விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
    • ஈரோடு விதை ஆய்வு துணை இயக்குனர் அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    தாராபுரம்:

    தாராபுரம், மூலனூர், குண்டடம் பகுதிகளில் உரிமம் பெறாமல் பயிறு வகைகள் மற்றும் காய்கறி விதைகள் விற்றால் விதை விற்பனை செய்த உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என விதை ஆய்வு துணை இயக்குனர் பெ.சுமதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    திருப்பூர் மாவட்டம், தாராபு–ரம், மூலனூர், குண்டடம் வட்டாரத்தில் விதை விற்பனை உரிமம் பெற்ற 198 அரசு மற்றும் தனியார் விதை விற்பனை நிலையங்கள் உள்ளது. உரிமம் பெற்ற விற்பனை நிலையங்கள் மூலம் நெல், சோளம், மக்காச்சோளம், கம்பு, நிலக்கடலை, உளுந்து, பாசிபயறு, தட்டைபயறு, கொள்ளு, சூரியகாந்தி மற்றும் காய்கறி விதைகள் விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    விவசாயிகள் விதைகளை விதை விற்பனை உரிமம் பெற்ற விற்பனை நிலையங்களில் வாங்கும்போது தவறாமல் அதற்கான விற்பனை பட்டியலை உரிய பட்டியலில் நாள், ரகம், குவியல் எண், காலாவதி நாள் குறிப்பிட்டு தருமாறு கோரி விதை வாங்குபவரின் கையொப்பம் இட்ட விற்பனை பட்டியல் பெறப்படவேண்டும். மேலும் விதை விற்பனை உரிமம் பெறாத தானிய மண்டிகளில் விதைகளை வாங்க வேண்டாம்.மேலும் விதை உரிமம் பெறாமல் விதைகள் மற்றும் காய்கறி நாற்றுக்கள் விற்பனை செய்வது சட்டபடி குற்றமாகும். அவ்வாறு உரிமம் இல்லாமல் விதைகளை விற்ற நிறுவனத்தின் மீது விதைகள் சட்டத்தின் படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    விதை உரிமம் விதை கட்டுப்பாட்டு ஆணை 1983-ன் கீழ் தகுதி உடைய விண்ணப்பதாரர்களுக்கு உரிமம் வழங்கப்பட்டு வருகிறது. விதை விற்பனை செய்ய விரும்பு–வர்கள் படிவம் அ, உரிய கட்டணமாக ரூ.1000-க்கான சலான், ஆதார் நகல். வாடகை கட்டிடம் எனில் வாடகை ஒப்பந்த பத்திரம், இடத்தின் வரைபடம், 2 பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் மற்றும் சுயவிவரங்களுடன் ஈரோடு விதை ஆய்வு துணை இயக்குனர் அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.  

    • நெல்லை மாநகர பகுதியில் 4,052 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • விதிமுறைகளை மீறிய 563 வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் பதவியேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.

    சாலை விதிகளை பின்பற்றாமல் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு கடுமையான அபராதம் விதிப்பதுடன் அந்த வாகன ஓட்டுனர்களின் உரிமத்தையும் ரத்து செய்து வருகிறார்.

    இதுதொடர்பாக கமிஷனர் ராஜேந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    உரிமம் ரத்து

    கடந்த ஆண்டு அதிவேகமாக வாகனத்தை ஓட்டுதல், மதுபோதையில் வாகனம் ஓட்டுதல், செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுதல், சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றிச்செல்லுதல், அதிக அளவில் சரக்குகள் ஏற்றிச்செல்லுதல் ஆகிய குற்றங்களின் கீழ் நெல்லை மாநகர பகுதியில் 4,052 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் அவர்களது ஓட்டுனர் உரிமம் ரத்து செய்ய வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு பரிந்துரை செய்தேன். அதன்பேரில் அவர்களது உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பிப்ரவரி 10-ந் தேதி வரை விதிமுறைகளை மீறிய வாகன ஓட்டிகள் 563 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் சென்ற 1,665 பேர் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களது ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தொழிற்சாலை சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு உள்ள அனைத்து தொழிற்–சாலைகளும் தொழிற்சாலை உரிமத்தை ஆன்லைன் மூலம் மட்டுமே புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.
    • http://dish.tn.gov.in என்ற இணையதள முகவரி வழியாக வருகிற 31-ந் தேதிக்குள்

    சேலம்:

    தொழிற்சாலை சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு உள்ள அனைத்து தொழிற்–சாலைகளும் 2023-ம் ஆண்டிற்கான தொழிற்சாலை உரிமத்தை ஆன்லைன் மூலம் மட்டுமே புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.

    தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலை சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு உள்ள தொழிற்சாலைகள் http://dish.tn.gov.in என்ற இணையதள முகவரி வழியாக வருகிற 31-ந் தேதிக்குள் உரிய உரிமத் தொகையை ஆன்லைன் மூலம் செலுத்தி விண்ணப்பத்தை சமர்பித்து, புதுப்பிக்கப்பட்ட உரிமத்தை தரவிறக்கம் செய்து கொள்ள–லாம் என ஓசூர் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் சபீனா தெரிவித்துள்ளார்.

    • 2023-ம் ஆண்டுக்கான தொழிற்சாலை உரிமத்தை ஆன்லைன் மூலமாக மட்டுமே புதுப்பித்து கொள்ள வேண்டும்.
    • புதுப்பித்து கொள்ள வேண்டிய கடைசி நாள் 31.10.2022 ஆகும்.

    திருப்பூர் :

    திருப்பூர் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் வீ.புகழேந்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது:-

    தொழிற்சாலைகள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து தொழிற்சாலைகளும் 2023-ம் ஆண்டுக்கான தொழிற்சாலை உரிமத்தை ஆன்லைன் மூலமாக மட்டுமே புதுப்பித்து கொள்ள வேண்டும். புதுப்பித்து கொள்ள வேண்டிய கடைசி நாள் 31.10.2022 ஆகும். எனவே திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகள் சட்டத்தின் கீழ் பதிவு பெற்ற தொழிற்சாலைகள் http://dish.tn.gov.in என்ற இணையதள முகவரிக்குள் சென்று உரிய உரிமத்தொகையை ஆன்லைன் மூலம் செலுத்தி, விண்ணப்பத்தை சமர்ப்பித்து புதுப்பிக்கப்பட்ட உரிமத்தை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • 3 தனியார் உரக்கடைகளின் விற்பனை உரிமம் ரத்து செய்யப்பட்டது.
    • அதிக விலைக்கு உரம் விற்றதால்

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு யூரியா உரத்தை அதிக விலைக்கு விற்பனை செய்வதாக வந்த புகாரை அடுத்து கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா வேளாண்மை துறையின் மூலம் சிறப்பு பறக்கும் படை அமைத்து தொடர் கண்காணிப்பில் ஈடுபட உத்தரவிட்டார். அதன்படி வேளாண்மை இணை இயக்குனர் கருணாநிதி தலைமையில் சிறப்பு பறக்கும் படை அமைத்து சோதனையில் ஈடுபட்டனர். வேளாண்மை உதவி இயக்குனர் (தகவல் மற்றும் தரக்கட்டுப்பாடு) மற்றும் வேப்பந்தட்டை வட்டார வேளாண்மை அலுவலர்கள் வேப்பந்தட்டை வட்டாரத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டதில் 3 தனியார் உரக்கடைகளில் அதிக விலைக்கு உரம் விற்பனை செய்வதை கண்டுபிடித்தனர். பின்னர் அவர்கள் அந்த கடைகளின் விற்பனை முடக்கம் மற்றும் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்து உத்தரவிட்டனர்."

    • இளைஞர்கள், பெண்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலருக்கு கார் டிரைவிங் கற்று கொடுக்கப்பட்டது.
    • 140-க்கும் மேற்பட்டோருக்கு லைசென்ஸ் வழங்கும் விழா நடைபெற்றது.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் மத்திய அரசின் ஸ்வாபிமான் திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புடன் கூடிய இலவச பயிற்சி கொடுக்கப்பட்டது.

    அந்தத் திட்டத்தின் கீழ் தஞ்சை டி.பி.ஸ்கில்ஸ் மையத்தில் இளைஞர்கள், பெண்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலருக்கு கார் டிரைவிங் கற்று கொடுக்கப்பட்டது. 45 நாட்கள் இந்த இலவச பயிற்சி நடைபெற்றது. முடிவில் 140-க்கும் மேற்பட்டோருக்கு இன்று சான்றிதழ், லைசென்ஸ் வழங்கும் விழா தஞ்சையில் நடைபெற்றது.

    இதற்கு மகேந்திரா பைனான்ஸ் டிவிஷன் மேலாளர் கார்த்திக் தலைமை தாங்கினார். ஓய்வு பெற்ற திருச்சி சி.இ.ஓ. சுவாமிநாதன், லயன்ஸ் கிளப் மாவட்ட இரண்டாம் நிலை துணை ஆளுநர் சவரிராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் தஞ்சை மாநகர போக்குவரத்து பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் கலந்து கொண்டு பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ், லைசன்ஸ் வழங்கி சிறப்புரையாற்றினார்.

    இந்த நிகழ்ச்சியில் டி.பி.ஸ்கில்ஸ் புராஜெக்ட் மேலாளர் ஜெய்சிங், டி.பி.ஸ்கில்ஸ் ஸ்ரீதர் , பழனி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை தஞ்சை டி.பி.ஸ்கில்ஸ் சென்டர் தலைவர் ஆறுமுகம் செய்திருந்தார்.

    • சேலம் மாவட்டத்தில் மக்கள் தொகை எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சேலம் மாநகரில் வீடுகள் நிறைந்து காணப்படுகிறது.
    • அதை ஏற்று கடந்த மாதம் அதிவேகமாக ஓட்டியதாக 82 பேர், அதிக பாரம் ஏற்றிய 44 பேர், சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றி வந்த 52 பேர் என 178 பேரின் ஓட்டுநர் உரிமத்தை 3 மாதங்களுக்கு வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தற்காலிகமாக ரத்து செய்துள்ளனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் மக்கள் தொகை எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சேலம் மாநகரில் வீடுகள் நிறைந்து காணப்படுகிறது. மேலும் சேலம் மாநகரில் தினமும் புதிது புதிதாக குடியிருப்புகள் முளைத்து வருகின்றன. இதனால் சேலம் மாநகரில் பல லட்சம் மக்கள் வசிக்கின்றனர். இதனால் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருகிறது.

    குறிப்பாக வேலைக்கு செல்வோர், பள்ளி, கல்லூரிக்கு செல்வோர், சொந்த விஷயங்களுக்காக வாகனங்கள் பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதில் பலர் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றாமல் வாகனங்களை ஓட்டுகின்றனர். அவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    அந்த வகையில் சேலம், தருமபுரி மாவட்டங்களில் சாலை விதிமீறி வாகனங்களை இயக்கியவர்களின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய காவல் துறை சார்பில் போக்குவரத்து துறைக்கு பரிந்துரைக்கப்படடது. அதை ஏற்று கடந்த மாதம் அதிவேகமாக ஓட்டியதாக 82 பேர், அதிக பாரம் ஏற்றிய 44 பேர், சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றி வந்த 52 பேர் என 178 பேரின் ஓட்டுநர் உரிமத்தை 3 மாதங்களுக்கு வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தற்காலிகமாக ரத்து செய்துள்ளனர்.

    சரக்கு வாகனங்கள்

    இது குறித்து வட்டார போக்குவரத்து அலுவலர்கள் கூறுகையில், குடிபோதையில் வாகன இயக்கம், அதிவேகம், மொபைல் போன் பேசியபடியே வாகன இயக்கம், சரக்கு வாகனத்தில் அதிக பாரம் ஏற்றிச் செல்வது, சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றிச் செல்வது, ரெட் சிக்னலில் நிற்காமல் செல்வது போன்ற பிரிவுகளில் சிக்கும் வாகன ஓட்டிகளின் டிரைவிங் லைசென்ஸ் தற்காலிகமாக, நிரந்தரமாக முடக்கி வைக்க சென்னை உயர்நீதிமன்றம், சில வழிகாட்டு நெறிமுறைகளை தெரிவித்து உள்ளது. அதன்படி போலீசார் வழக்குகளை பதிவு செய்து, டிரைவிங் லைசென்சை தற்காலிகமாக, நிரந்தரமாக ரத்து செய்யகோரி அனுப்புகின்றனர் என, தெரிவித்தனர்.

    ×