search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உரிமம் இல்லாமல் காய், கனி, பயிறு விதைகளை விற்றால் நடவடிக்கை - அதிகாரி எச்சரிக்கை
    X

    கோப்புபடம். 

    உரிமம் இல்லாமல் காய், கனி, பயிறு விதைகளை விற்றால் நடவடிக்கை - அதிகாரி எச்சரிக்கை

    • தட்டைபயறு, கொள்ளு, சூரியகாந்தி மற்றும் காய்கறி விதைகள் விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
    • ஈரோடு விதை ஆய்வு துணை இயக்குனர் அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    தாராபுரம்:

    தாராபுரம், மூலனூர், குண்டடம் பகுதிகளில் உரிமம் பெறாமல் பயிறு வகைகள் மற்றும் காய்கறி விதைகள் விற்றால் விதை விற்பனை செய்த உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என விதை ஆய்வு துணை இயக்குனர் பெ.சுமதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    திருப்பூர் மாவட்டம், தாராபு–ரம், மூலனூர், குண்டடம் வட்டாரத்தில் விதை விற்பனை உரிமம் பெற்ற 198 அரசு மற்றும் தனியார் விதை விற்பனை நிலையங்கள் உள்ளது. உரிமம் பெற்ற விற்பனை நிலையங்கள் மூலம் நெல், சோளம், மக்காச்சோளம், கம்பு, நிலக்கடலை, உளுந்து, பாசிபயறு, தட்டைபயறு, கொள்ளு, சூரியகாந்தி மற்றும் காய்கறி விதைகள் விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    விவசாயிகள் விதைகளை விதை விற்பனை உரிமம் பெற்ற விற்பனை நிலையங்களில் வாங்கும்போது தவறாமல் அதற்கான விற்பனை பட்டியலை உரிய பட்டியலில் நாள், ரகம், குவியல் எண், காலாவதி நாள் குறிப்பிட்டு தருமாறு கோரி விதை வாங்குபவரின் கையொப்பம் இட்ட விற்பனை பட்டியல் பெறப்படவேண்டும். மேலும் விதை விற்பனை உரிமம் பெறாத தானிய மண்டிகளில் விதைகளை வாங்க வேண்டாம்.மேலும் விதை உரிமம் பெறாமல் விதைகள் மற்றும் காய்கறி நாற்றுக்கள் விற்பனை செய்வது சட்டபடி குற்றமாகும். அவ்வாறு உரிமம் இல்லாமல் விதைகளை விற்ற நிறுவனத்தின் மீது விதைகள் சட்டத்தின் படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    விதை உரிமம் விதை கட்டுப்பாட்டு ஆணை 1983-ன் கீழ் தகுதி உடைய விண்ணப்பதாரர்களுக்கு உரிமம் வழங்கப்பட்டு வருகிறது. விதை விற்பனை செய்ய விரும்பு–வர்கள் படிவம் அ, உரிய கட்டணமாக ரூ.1000-க்கான சலான், ஆதார் நகல். வாடகை கட்டிடம் எனில் வாடகை ஒப்பந்த பத்திரம், இடத்தின் வரைபடம், 2 பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் மற்றும் சுயவிவரங்களுடன் ஈரோடு விதை ஆய்வு துணை இயக்குனர் அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×