search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொழிற்சாலை உரிமத்தை புதுப்பிக்க வேண்டும், தொழிலக பாதுகாப்பு -  சுகாதார இணை இயக்குனர் அறிவிப்பு
    X

    கோப்புபடம்.

    தொழிற்சாலை உரிமத்தை புதுப்பிக்க வேண்டும், தொழிலக பாதுகாப்பு - சுகாதார இணை இயக்குனர் அறிவிப்பு

    • 2023-ம் ஆண்டுக்கான தொழிற்சாலை உரிமத்தை ஆன்லைன் மூலமாக மட்டுமே புதுப்பித்து கொள்ள வேண்டும்.
    • புதுப்பித்து கொள்ள வேண்டிய கடைசி நாள் 31.10.2022 ஆகும்.

    திருப்பூர் :

    திருப்பூர் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் வீ.புகழேந்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது:-

    தொழிற்சாலைகள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து தொழிற்சாலைகளும் 2023-ம் ஆண்டுக்கான தொழிற்சாலை உரிமத்தை ஆன்லைன் மூலமாக மட்டுமே புதுப்பித்து கொள்ள வேண்டும். புதுப்பித்து கொள்ள வேண்டிய கடைசி நாள் 31.10.2022 ஆகும். எனவே திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகள் சட்டத்தின் கீழ் பதிவு பெற்ற தொழிற்சாலைகள் http://dish.tn.gov.in என்ற இணையதள முகவரிக்குள் சென்று உரிய உரிமத்தொகையை ஆன்லைன் மூலம் செலுத்தி, விண்ணப்பத்தை சமர்ப்பித்து புதுப்பிக்கப்பட்ட உரிமத்தை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×