search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உரிமையாளர்கள்"

    • கோவிந்தநாட்டடுசேரி ஊராட்சி தமிழக அரசு விதிப்படி மணல் அள்ளப்பட்டு வருகிறது.
    • கிராமங்களுக்கு மணல் கிடைப்பதில்லை என கூறப்படுகிறது.

    கபிஸ்தலம்:

    கபிஸ்தலம் அருகே உள்ள கோவிந்தநாட்டடுசேரி ஊராட்சி, புத்தூர், குடிகாடு கிராமத்தில் தமிழக அரசு விதிப்படி மணல் அள்ளப்பட்டு வருகிறது.

    இந்த மணல் தமிழ் நாட்டில் அனைத்து மாவட்டங்களுக்கும் ஆன்லைன் மூலமாக புதுப்பிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

    இருந்தும் பாபநாசம் தாலுகாவிற்கு உட்பட்ட கிராமங்களுக்கு மணல் கிடைப்பதில்லை என கூறப்படுகிறது.

    கடந்த வருடம் ஜூலை மாதம் முதல் நடப்பு 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை டிராக்டர் எளிமையாக கிடைக்கப்பெற்றது. தற்போது டிராக்டர் மணல் கிடைப்பதில்லை.

    ஆகவே மீண்டும் டிராக்டரில் மணல் வேண்டி கனிம வள அதிகாரிகளிடம் பாதிக்கப்பட்ட டிராக்டர் உரிமையாளர்கள் சென்று முறையிட்டதற்கு சரியான பதில் கிடைக்கவில்லை.

    எனவே மணல் குவாரியில் டிராக்டரில் மணல் அள்ள அனுமதிக்க கோரி வருகின்ற 28ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) மணல் குவாரி முன்பு மறியல், முற்றுகை போராட்டம் நடத்துவதென கபிஸ்தலம் மற்றும் அதனை சுற்றியுள்ள சிறு குறு கட்டுமான பணியாளர்கள், டிராக்டர் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் அறிவித்துள்ளனர்.

    • கட்டிட உரிமையாளர்கள் தாமாக முன் வந்து அவற்றை சரி செய்து கொள்ள கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
    • அடுத்த கட்டமாக தனியார் நிறுவனம் மூலம் நேரடியாக கள ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி பகுதியில் வரி விதிப்பு செய்யப்படாத மற்றும் குறைந்த வரி விதிப்பு செய்த கட்டிட உரிமையாளர்கள் தாமாக முன் வந்து அவற்றை சரி செய்து கொள்ள கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

    இது குறித்து மேயர் தினேஷ்குமார் கூறியதாவது:-

    மாநகராட்சி பகுதியில் வணிக மற்றும் தொழிற்சாலை கட்டிடங்கள் பெருமளவு உரிய வகையில் வரி விதிப்பு செய்யப்படாமல் உள்ளது. இதனால் நிர்வாகத்துக்கு உரிய வருவாய் இழப்பு ஏற்படுகிறது.ஏராளமான கட்டிடங்கள் குறைந்த வரி விதிப்பு செய்தும், வரி விதிப்பே செய்யாமலும் பயன்பாட்டில் உள்ளது. இரு வார்டுகளில் நடத்திய ஆய்வில் 309 சதவீதம் அளவு வரி விதிப்பில் முறைகேடு கண்டறியப்பட்டுள்ளது. வருவாய் பிரிவினருக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    தங்கள் பகுதியில் உள்ள கட்டிடங்களை ஆய்வு செய்து இதனை சரி செய்து, முறையான வரி விதிப்பு செய்ய அறிவுறுத்தப்பட்டது. கால அவகாசம் இம்மாத இறுதி வரை வழங்கப்பட்டது. இந்த அவகாசம் வரும் செப்டம்பர் 15ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    உரிமையாளர்கள் தாமாகவே முன் வந்து அதற்கு முன்னதாக உரிய வரிவிதிப்பு செய்து கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில், கடும் அபராதம் விதிக்கப்படும். முதல் கட்டமாக வணிக மற்றும் தொழிற்சாலை கட்டிடங்களுக்கான வரி விதிப்புகள் மீது இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இப்பணிக்காக ஓராண்டுக்கும் மேலாக தற்காலிக மற்றும் வணிகரீதியான மின் இணைப்புகள் பெற்ற கட்டிடங்கள் குறித்த விவரங்கள் மின் வாரியம் மூலம் பெறப்பட்டுள்ளது.அடுத்த கட்டமாக தனியார் நிறுவனம் மூலம் நேரடியாக கள ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.அதனடிப்படையில் அனைத்து கட்டிடங்களும் ஆய்வு செய்து வரி விதிப்புக்கு உட்படுத்தப்படும் என்றார்.

    • தமிழ்நாடு பலா பழம் கமிஷன் மண்டி உரிமையாளர்கள் நல சங்கம் தொடக்க விழா நடந்தது
    • சங்க தலைவர் சி. ஆர். மாயவேல் விழாவிற்கு தலைமை வகித்தார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் தமிழ்நாடு பலா பழம் கமிஷன் மண்டி உரிமையாளர்கள் நல சங்கம் தொடக்க விழா நடந்தது சங்க தலைவர்சி. ஆர். மாயவேல் விழாவிற்கு தலைமை வகித்தார். துணைத்தலைவர் கே.பாலமுருகன்மு ன்னிலை வகித்தார். செயலாளர் சுரேஷ் அனைவரையும் வரவேற்றார். கவுரவ தலைவர் சூசைமரி சங்கப் பெயர் பலகையை திறந்து வைத்தார் துணைச் செயலாளர் கே .ஆர். விஜயகுமார், பொருளாளர்ஏ.டி. சுந்தரமூர்த்தி, தியாகி டிரான்ஸ்போர்ட் அதிபர் காமராஜ் மற்றும் புதிய நிர்வாகிகள் பலா கமிஷன் மண்டி அதிபர்கள் திரளாக கலந்து கொண்டனர் .

    கூட்டத்தில் பலா உற்பத்தி மற்றும் ஏற்றுமதி தொழிலுக்கு மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும். விவசாயிகள் பலா காய்களை பலா மார்க்கெட்டில் பலா கமிஷன் மண்டி மூலம் மட்டுமே விற்பனை செய்யவேண்டும்.சங்கத்தின் மூலம் நிர்ணயிக்கப்பட்டுள்ள கூலி,மாமுல்,மேஸ்திரி மற்றும் சுமை தூக்கும் தொழிலாளிகள் பெற்றுக் கொள்ள வேண்டும். கூலி, மாமூல் ஆகியவைகளை வியாபாரிகளிடம் கேட்கக் கூடாது. பலா கமிஷன் மண்டிஉரிமையாளர்க ளிடம் மட்டும் கேட்டுவாங்க வேண்டும் என்பது உட்பட பல தீர்மானங்கள்நி றைவேற்றப்பட்டது. முடிவில்சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்குசங்க அடையாள அட்டைவழங்கப்பட்டது.

    • வாகன ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
    • வாகனத்தின் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

    சுவாமிமலை:

    கும்பகோணம் உட்கோட்ட போலீசார் சார்பில் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை மாவட்டத்தில் தற்போது விவசாய அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது.

    சிலர் விதிகளை மீறி அளவுக்கு அதிகமாகவும், அதிக உயரமாகவும் வைக்கோலை ஏற்றிச்செல்கின்றனர்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருப்புறம்பியம் பகுதியில் அதிக உயரத்தில் வைக்கோல் ஏற்றிச்சென்ற லாரி மின்கம்பியில் உரசி தீப்பற்றி எரிந்து சேதமானது. இதற்கு வாகனத்தில் அதிக உயரத்தில் வைக்கோலை ஏற்றிச்சென்றதே காரணம் ஆகும்.

    எனவே, இது போன்று அதிக பாரம் மற்றும் உயரத்தில் வைக்கோல் ஏற்றிச்செல்லும் வாகனங்கள் பிடிபட்டால் வாகனங்களை பறிமுதல் செய்வதோடு மட்டுமல்லாமல் சம்மந்தப்பட்ட வாகன ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    மேலும் வாகனத்தின் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்திய மாடுகளை ஏலம் விட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
    • 16 மாடுகளை அழைத்து செல்வதற்கு மாடுகளின் உரிமையாளர்கள் இதுவரை வரவில்லை.

    ராமேசுவரம்

    ராமேசுவரம் ராம நாதசாமி கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக 4 ரத வீதிகள், அக்னி தீர்த்தக் கடற்கரை ஆகிய பகுதிகளில் அதிகமான மாடுகள் சுற்றி திரிகின்றன.

    பக்தர்கள் கொண்டு வரும் பொருட்களை பறிக்கும் முயற்சியிலும், பக்தர்கள் மீது மோதும் முயற்சியிலும் மாடுகள் ஈடுபடுகின்றன. இதனையடுத்து மாடுகளை அந்த பகுதியில் விடுவதற்கு அனுமதிக்க கூடாது எனவும், உடனடியாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தனர்.

    அதன்பேரில் கலெக்டரின் உத்தரவின் பேரில் ராமேசுவரம் நகராட்சி நிர்வாகம், நகர் மன்ற தலைவர் நாசர் கான் தலைமையில் ஆணையாளர் கண்ணன், சுகாதார ஆய்வாளர் தியாகராஜன் மற்றும் நகராட்சி ஊழியர்கள் கடந்த 9-ந் தேதி முதல் கோவிலை சுற்றி 4 ரத வீதிகளிலும், கடற்கரை பகுதிகளிலும் சுற்றி திரிந்த 22 மாடுகளை பிடித்து கோவிலுக்கு சொந்தமான அக்னி தீர்த்த கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள பிர்லா காட்டேஜ் வளாகத்தில் அடைத்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த மாடுகளின் உரிமையாளர்கள் 6 பேர் மட்டும் அபராதம் கட்டி மாடுகளை அழைத்து சென்றனர். மேலும் மாடுகளின் உரிமையாளர்களிடம் மாடுகள் சாலைகளுக்கு வரக்கூடாது என்றும், தனி இடங்களில் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும், நகராட்சி அலுவலர்கள் எச்சரித்து அனுப்பினர்.

    இதனை யடுத்து இந்த வளாகத்தில் கடந்த 5 நாட்களாக அடைக்கப்பட்டுள்ள மீதமுள்ள 16 மாடுகளை அழைத்து செல்வதற்கு மாடுகளின் உரிமையாளர்கள் இதுவரை வரவில்லை.

    இந்த மாடுகளுக்கு அன்றாட உணவுப் பொரு ட்கள், தண்ணீர் கொடுத்து பராமரிக்கும் பணியை நகராட்சி நிர்வாகம் செய்து வருகிறது. உடனடியாக 16 மாடுகளையும் அபராதம் செலுத்தி உரிமையாளர்கள் அழைத்துச் செ ல்ல வேண்டும். இல்லையென்றால் நகராட்சி நிர்வாகம் பொது ஏலத்தில் விடும் என்றும் நகராட்சி ஆணையர் கண்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    • சுரங்கப்பாலத்தை சுற்றி புறம்போக்கு நிலத்திலுள்ள ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றி பாதை அமைக்கப்படாததால், இப்பகுதி மக்கள் போக்கு வரத்துக்கு வழியின்றி அவதிக்குள்ளாகினர்.
    • இதற்கு எதிர்ப்பு தெரிவித்த வீட்டு உரிமையாளர்கள் சிலர், பொக்லைன் எந்திரத்திற்கு அடியில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    வாழப்பாடி:

    வாழப்பாடி பேரூராட்சி காளியம்மன் நகர் அருகே, சேலம்-விருதாச்சலம் ரெயில்பாதையில் குறுக்கிடும் ஆளில்லாத ரெயில்வே கேட்டிற்கு மாற்றாக 3 ஆண்டுகளுக்கு முன் ரெயில்வே சுரங்க ப்பாலம் அமைக்கப்பட்டது. ஆனால், சுரங்கப்பாலத்தை சுற்றி புறம்போக்கு நிலத்திலுள்ள ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றி பாதை அமைக்கப்படாததால், இப்பகுதி மக்கள் போக்கு வரத்துக்கு வழியின்றி அவதிக்குள்ளாகினர்.

    இந்நிலையில், இப்பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் இறந்து போனதால், அவரது சடலத்தை மயானத்திற்கு எடுத்துச் செல்ல வழி இல்லாததால், ஏரி புறம்போக்கு நிலத்திலுள்ள ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றி, பாதை அமைத்துத் தர நடவடிக்கை எடுக்கக் கோரி, இப்பகுதி மக்கள் வீடுகளில் கருப்புக் கொடிக் கட்டி கடந்த 3-ந் தேதி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனையடுத்து, நேற்று, வாழப்பாடி தாசில்தார் கோபாலகிருஷ்ணன் தலைமையில், டி.எஸ்.பி. (பொ) சக்கரபாணி, இன்ஸ்பெக்டர் உமாசங்கர், துணை தாசில்தார் செல்வராஜ்,பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன், வருவாய் ஆய்வாளர் கார்த்திக், கிராம நிர்வாக அலுவலர் சக்திவேல் ஆகியோர் கொண்ட குழுவினர், பொக்லைன் எந்திரத்தை பயன்படுத்தி ஆக்கிரமிப்பு வீடுகள், கடை மற்றும் கொட்டகைகளை அகற்றினர்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்த வீட்டு உரிமையாளர்கள் சிலர், பொக்லைன் எந்திரத்திற்கு அடியில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், பட்டா நிலத்துடன் இணைத்து கட்டப்பட்டுள்ள புறம்போக்கு இடத்திலுள்ள கட்டுமானங்களை அகற்றிக்கொள்ள அதிகாரிகள் கால அவகாசம் கொடுத்ததால் பிரச்சினை முடிவுக்கு வந்தது.

    ×