search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kasthuri"

    பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி - ரம்யா நம்பீசன் நடிப்பில் உருவாகும் `தமிழரசன்' படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கஸ்தூரி ஒப்பந்தமாகி இருக்கிறார். #Thamizharasan #VijayAntony
    `கொலைகாரன்', `அக்னிச் சிறகுகள்' படங்களைத் தொடர்ந்து விஜய் ஆண்டனி தற்போது `தமிழரசன்', `காக்கி' படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இதில் தமிழரசன் படத்தை பாபு யோகேஸ்வரன் இயக்குகிறார். விஜய் ஆண்டனி ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். சோனு சூட் வில்லனாகவும், சுரேஷ் கோபி, பூமிகா, சங்கீதா, யோகிபாபு, ரோபோ சங்கர், முனீஸ்காந்த், இயக்குனர் மோகன் ராஜாவின் மகன் மாஸ்டர் பிரணவ் உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள்.

    இந்த நிலையில், ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை கஸ்தூரி ஒப்பந்தமாகி இருக்கிறார். கஸ்தூரி சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு துவங்கிவிட்டதாகவும், அவர் இதில் டாக்டராக நடிப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இதில் விஜய் ஆண்டனியுடன் பல காட்சிகளில் கஸ்தூரி இணைந்து நடிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.



    இசைஞானி இளையராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்க, புவன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கெளசல்யா ராணி இந்த படத்தை தயாரிக்கிறார். #Thamizharasan #VijayAntony #RamyaNambeesan #Kasthuri

    ஒண்ணாம் கிளாஸ் ஆசிரியருக்கு பொறியாளரை விட அதிக சம்பளம் என சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்த நடிகை கஸ்தூரிக்கு ஏராளமானோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். #Kasthuri
    சென்னை:

    நடிகை கஸ்தூரி சமூக வலைதளங்களில் சர்ச்சையான கருத்துகளை தெரிவித்து பரபரப்பு ஏற்படுத்துவார். ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் போராட்டத்தை அவர் விமர்சித்தது டுவிட்டரில் பரபரப்பாகி உள்ளது.

    புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்வது, 21 மாத நிலுவைத்தொகையை வழங்குவது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ அமைப்பு தொடர்ந்து போராடி வருகிறது.

    தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நேற்று தொடங்கியது. இதில் 8 லட்சம் பேர் பங்கேற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டம் காரணமாக அரசு அலுவலகங்கள், அரசுப்பள்ளிகளில் பணிகள் முடங்கியுள்ளன.

    இதுகுறித்து பதிவிட்ட நடிகை கஸ்தூரி, ’தனியார் பள்ளி கல்லூரி ஆசிரியர்களை விட மும்மடங்கு சம்பளம், வேலை பளுவோ குறைவு. மாணவர்கள் வெற்றி குறித்த அழுத்தம், பொறுப்பும் கவலையும் அதினும் குறைவு. செய்தாலும் செய்யாவிட்டாலும் வேலை நிரந்தரம். வேறு எங்கும் இல்லாத ஓய்வூதியம், அரசு விருதுகள், பயணத்தள்ளுபடி, இலவச உணவு உள்ளிட்ட சலுகைகள், அரசு செலவில் கல்வி ஆய்வு அல்லது ஆராய்ச்சி செய்ய வெளியூர், வெளிநாடு பயணம், தேர்தல் பணிக்கு பணம், இப்படி அரசு கல்வித்துறையில் பணிசெய்வோருக்கு ஏராளமான வாய்ப்புக்கள் உள்ளன.

    ஒண்ணாம் கிளாஸ் வாத்தியாருக்கு டைடல் பார்க்கில் வேலை செய்யும் பொறியாளரை விட சம்பளம் அதிகம். சத்துணவுக்கும் சம்பளத்துக்கும் மிக அதிகமாக செலவு செய்வது தமிழகம்தான். வாங்கின காசுக்கு உண்மையா கற்றுக்கொடுத்தா அரசு பள்ளி தரம் எப்பிடி இருக்கணும்?’’ என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

    கஸ்தூரியின் இந்த பதிவுக்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. அரசியல்வாதிகளையும் கார்ப்பரேட் கொள்ளையர்களையும் கேள்வி கேட்க முடியாதவர் என்று கஸ்தூரியை விமர்சித்து வருகிறார்கள். கஸ்தூரியின் கருத்துக்கு சிலர் ஆதரவு தெரிவித்தும் பதிவிட்டு வருகின்றனர். #Kasthuri
    தமிழ் சினிமாவில் நடிகையாக வலம் வந்த கஸ்தூரி, தற்போது அரசியலில் நுழைய இருக்கிறார். #Kasthuri #ActressKasthuri
    கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் பாதிப்பு அடைந்தபோது நிவாரண பணிகளில் ஈடுபட்டவர்களில் நடிகை கஸ்தூரியும் ஒருவர். சமூகவலை தளங்களில் பரபரப்பாக இருக்கும் கஸ்தூரி அரசியலில் நுழைய இருக்கிறார்.

    இதுபற்றி கூறும்போது, ‘அரசியலில் என் பாதை மகாகவி பாரதியாரின் வழியில் இருக்கும். கஜா புயலால் வீடுகளை இழந்தவர்களுக்கு அரசு ஒரு லட்சம் ரூபாய் அறிவித்துள்ளது. குறைந்த செலவில் வீடு கட்டி தருபவர்களுக்கு இது சரியான வாய்ப்பு.

    கஜா புயல் நிவாரண பணிகளில் என்னுடன் ரஜினி மக்கள் மன்றம், கமலின் மக்கள் நீதி மய்யம், சீமானின் நாம் தமிழர் இயக்கத்தினர் ஆகியோர் கட்சி பாகுபாடு பார்க்காமல் உதவிகள் செய்தனர்’ என்று கூறி உள்ளார்.
    கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்கும் வகையில் வாட்டர் பில்டருடன் செல்வதாக நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார். #GajaCycloneRelief #Kasthuri
    நடிகை கஸ்தூரி கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களுக்கு நிவாரண பொருட்களுடன் கிளம்பினார். இதுகுறித்து டுவிட்டரில் அவர் கூறி இருப்பதாவது:-

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை அள்ளிக்கொடுக்கும் உயர்ந்த உள்ளங்களை வாழ்த்துகிறேன். என்னால் முடிந்த அளவில் நிவாரண பொருட்களை எடுத்துக் கொண்டு நேரடியாக பாதிக்கப்பட்ட இடங்களுக்கு செல்ல உள்ளேன். டெல்டா மாவட்டங்களின் தற்போதைய அத்தியாவசிய தேவை குடிநீர்.

    உணவு பொருட்கள், மருத்துவ உதவி போன்றவை பலதரப்புகளிருந்து வந்துகொண்டிருக்கும் வேளையில், குடிநீர் பற்றாக்குறை பூதாகரமாக தலையெடுத்துள்ளது. நாட்கள் செல்ல செல்லச், சுத்தமான பாதுகாப்பான குடிநீர் மிக பெரிய தேவையாக இருக்கும். இதற்கு அத்தியாவசியமான 1000 நீர் சுத்திகரிப்பு கருவிகளை வழங்க இருக்கிறோம்.



    1000 குடும்பத்திற்கு தேவையான அதிநவீன குடிநீர் சுத்திகரிப்பான்கள், போர்வைகள், கொசுமருந்து, காய்ச்சல் நிவாரணி மாத்திரைகள், சானிடரி நாப்கின்கள் அடங்கிய லாரியை அனுப்புகிறோம். இந்த குடிநீர் சுத்திகரிப்பான்கள் பேரிடர் காலத்தில் பயன்படுத்த மிகவும் உகந்தவை. எங்கும் எடுத்து செல்லலாம், சுலபமாக பயன்படுத்தலாம், எத்தனை மாசுபட்ட தண்ணீரையும் தெளிந்த பாதுகாப்பான சுத்தமான குடிநீராக மாற்றிவிடும். கொதிக்கவைக்க அவசியமில்லை.

    பிளாஸ்டிக் பாட்டில்களையும், கேன்களையும் நாடவேண்டியதில்லை, இரண்டு வருடங்களுக்கு குறையாமல் செலவில்லாமல் குடிநீரை சுத்தப்படுத்திக் கொள்ளலாம். இது வெளிநாட்டில் மட்டுமே இப்போதைக்கு கிடைக்கிறது, இங்கு நம் பயன்பாட்டிற்காக ஆயிரம் சுத்திகரிப்பான்களை உடனடியாக தயாரித்து அனுப்பியிருக்கும் சென்னை ராமா குடிநீர் சுத்திகரிப்பான் நிறுவனத்திற்கு நன்றி. முதல் கட்டமாக 1000 பில்டர்கள் வழங்குகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #GajaCycloneRelief #Kasthuri

    குறிப்பிட்ட துறையில் மட்டுமல்லாமல் அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு பாலியல் பிரச்சனை உள்ளதாக நடிகை கஸ்தூரி கூறினார். #MeToo #Kasthuri
    நெல்லை:

    தாமிரபரணி புஷ்கரத்தை முன்னிட்டு நடிகை கஸ்தூரி இன்று மதியம் நெல்லை வந்தார். பின்னர் அவர் குறுக்குத்துறை சுப்பிரமணிய சாமி கோவில் ஆற்றில் புனித நீராடி சாமி தரிசனம் செய்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    விருட்சிக ராசிக்குரிய நதி தாமிரபரணி. 144 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் புஷ்கர விழாவில் கலந்து கொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது. நேற்று வரை இதன் சிறப்புகள் எனக்கு தெரியாமல் இருந்தது. இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் இங்கு வந்த பிறகே அதன் சிறப்புகளை பற்றி தெரிந்து கொண்டேன். என்னுடைய ராசியும் விருட்சிகம் தான். எனவே இங்கு வந்து நீராடினேன்.


    பெண்களுக்கு ஏற்படும் பாலியல் பிரச்சனை தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும். அதற்கு தீர்வு என்ன என்பதை யோசிக்க வேண்டும். குறிப்பிட்ட துறையில் மட்டுமல்லாமல் அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு பாலியல் பிரச்சனை உள்ளது.

    இதுதான் மீ டூ இயக்கத்தின் மூலம் வெளிவருகிறது. பெண்களுக்கு விரைவில் சம நீதி கிடைக்கும் என நம்பிக்கையுள்ளது. அதன் முதல்படி தான் இன்றைய நிகழ்வுகள். அரசு சட்டங்கள் உள்ளது. அது சரியான திசையில் சென்றடைய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #MeToo #Kasthuri
    அரசியல் மற்றும் சமூக பிரச்சனைகள் பற்றி அவ்வப்போது கருத்து தெரிவித்து வரும் கஸ்தூரி மெரினா அரசியல் பற்றி கருத்து தெரிவித்திருக்கிறார். #Kasthuri
    நடிகை கஸ்தூரி அரசியல் மற்றும் சமூக பிரச்சனைகள் பற்றி சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது பேசி வருகிறார். இதனால் அவருக்கு எதிராக விமர்சனங்களும் வந்த வண்ணமாக உள்ளன.

    இருப்பினும் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், தொடந்து கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் சாமி சிலைகள் கடத்தல் குறித்து பேசினார். சினிமாவில் பலர் சம்பளம் தராமல் தன்னை ஏமாற்றியதாகவும் கூறினார். இந்த நிலையில், தற்போது மெரினா அரசியல் குறித்து கடுமையாக சாடி இருக்கிறார். 

    சென்னை மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆர் நினைவிடம் அருகிலேயே மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்டது. அங்குள்ள அண்ணா நினைவிடத்தின் பின்னால் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.



    மெரினாவில் சில தலைவர்கள் தியானம் செய்கிறார்கள். அரசியல் அறிவிப்புகளையும் வெளியிடுகிறார்கள். இதற்கு நடிகை கஸ்தூரி எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    “கலைஞர் மற்றும் ஜெயலலிதா இல்லாத தமிழகத்தை எல்லோரும் கவனித்துக்கொண்டு இருக்கிறார்கள். தமிழ்நாடு தகப்பன் சொத்துமாதிரி நினைத்து ஆளாளுக்கு அடித்துக் கொள்கிறார்கள். மெரினா என்பது தியானம் செய்வதற்கும், தர்மயுத்தம் நடத்துவதற்கும் அறிவிப்புகளை வெளிடுவதற்குமான இடமாக மாறி விட்டது.

    60 ஆண்டுகளாக சாதி பிரிவினைகள், லஞ்சம், ஊழல் மற்றும் வெறுப்பு அரசியல்தான் இருந்து இருக்கிறது. இதை அவர்களே ஒருவர்மீது ஒருவர் மாறி மாறி குற்றம் சாட்டி சொல்லி வருகிறார்கள். இப்போது ஒரு மாற்றத்துக்கான நேரம் வந்து இருப்பதாக கருதுகிறேன்.” இவ்வாறு கூறியுள்ளார். #Kasthuri

    தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வந்த கஸ்தூரி, என்னை பலர் காசு வி‌ஷயத்துல ஏய்ச்சிருக்காங்க. பேசிய ஊதியத்தையே வாங்காம நாமம் போட்டுகிட்டதுதான் அதிகம் என்று கூறியுள்ளார். #Kasthuri
    1990-களில் முன்னணி நாயகியாக வலம் வந்தார் நடிகை கஸ்தூரி. ஆத்தா உன் கோவிலிலே, செந்தமிழ் பாட்டு, அமைதிப்படை, சின்னவர், புதிய முகம் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, கன்னடம், மலையாள படங்களிலும் நடித்துள்ளார். 
    திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு ஒதுங்கிய இவர் அவ்வப்போது ஒருசில படங்களில் நடிக்கிறார். ஒரு சில பாடல்களுக்கும் நடனமாடி வருகிறார்.

    சமீபத்தில் திரைக்கு வந்த தமிழ் படம்-2 படத்திலும் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருந்தார். சமூக மற்றும் அரசியல் வி‌ஷயங்கள் குறித்து சமூக வலைத்தளத்தில் கருத்துக்கள் பதிவிட்டு அவ்வப்போது ட்விட்டர் சண்டையிலும் ஈடுபட்டு வருகிறார். 



    ஒரு ரசிகர், ‘‘நீங்கள் நடித்து வாங்கிய சம்பளத்துக்கு உரிய வருமான வரி செலுத்தி இருக்கிறீர்களா?’’ என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த கஸ்தூரி, ‘‘நான் வரி ஏய்ச்சதில்லை. என்னை பலர் காசு வி‌ஷயத்துல ஏய்ச்சிருக்காங்க. பேசிய ஊதியத்தையே வாங்காம நாமம் போட்டுகிட்டதுதான் அதிகம். தமிழ் படம்-2 காட்டுறாங்களே, வெயிலு மழையில கஷ்டப்பட்டு பாடி ஆடி கடைசில மூணு ரூபா சம்பளம். அதுபோலத்தான்’’ என்று கூறியுள்ளார். 

    கஸ்தூரி ஏமாந்ததை கேட்டு ரசிகர்கள் அவர் மீது பரிதாபப்பட்டு ஆதரவாக கருத்து பதிவிட்டு வருகிறார்கள். #Kasthuri

    அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்திற்கு பிறகு தமிழ்படம் 2.0 படத்தில் குத்துப்பாட்டு ஒன்றுக்கு ஆடியிருக்கும் கஸ்தூரி, இந்த படத்தில் இடம்பெற்றது பற்றி பேசினார். #TP2Point0 #TamizhPadam2
    நல்ல தலைவனை தேடிக் கொண்டிருக்கிறேன் ஒரு பக்கம் அரசியலில் அதிரடி கருத்துகள், இன்னொரு பக்கம் சினிமாவில் கவர்ச்சி அவதாரம் என்று பரபரப்பாக இருக்கும் கஸ்தூரியுடன் பேசும் போது, 

    தமிழ்படம்-2 படத்தில் டான்ஸ் ஆடிய அனுபவம்?

    அந்த படத்துக்கு பூஜை போட்ட உடனேயே எடுத்தது என்னுடைய பாடல் தான். பாடல் முழுக்க 3 சேலைகள் தான் எனக்கு காஸ்ட்யூம். ஆனால் செம கவர்ச்சியாக இருக்கும். முதல் பாகத்தில் நான் ஆடியதால் ஆஸ்திரேலியாவில் இருந்த என்னை அழைத்து செண்டிமெண்ட் ஆக ஆடவைத்து இருக்கிறார் சி.எஸ்.அமுதன்.

    அதிரடியாக பல வி‌ஷயங்கள் பேசுகிறீர்களே... இந்த துணிச்சல் எப்படி வந்தது?

    மரணத்தையே மூன்று முறை கூப்பிடும் தூரத்தில் சந்தித்துவிட்டேன். எனவே எனக்கு பயம் இல்லை.

    மகனுக்கு என்னை பற்றி கேட்டால் அம்மா என்று சொல்வான். அவ்வளவுதான் அவனுக்கு தெரியும். என் கணவர் உயிரை காப்பாற்றும் மருத்துவராக இருக்கிறார். அவர் இதைபற்றி கண்டுகொள்ளவே மாட்டார். வீட்டில் அமெரிக்க கலாசாரத்தை கொண்டவர்கள். அவர்கள் தனி மனித சுதந்திரத்தை பெரிதும் மதிப்பவர்கள்.



    உங்களை வைத்து அமைதிப்படை 3 எடுக்கலாமா?

    கொஞ்சம் பொறுங்கள். அமைதிப்படை சத்யராஜ் வேடத்துக்கு நிகரான ஒரு வேடத்தில் அக்கினி என்ற படத்தில் நடிக்கிறேன். இதில் நான் வில்லி அரசியல்வாதி.

    அரசியலில் இப்போது நான் ஒரு பார்வையாளராக, விமர்சகியாக இருக்கிறேன். நான் எதிர்பார்த்த மாற்றத்தை தருபவர் இன்னும் அகப்படவில்லை. அப்படி ஒரு நல்லவர் கிடைத்தால் நிச்சயம் வருவேன். இரட்டை வேடம் போடாமல் மனசாட்சிபடி நடப்பவரை தான் நான் தலைவராக ஏற்றுக்கொள்வேன்.

    நடிகர் ரஜினிக்கு நான் தீவிர விசிறி. ஆனால் அரசியலில் அவரது கொள்கைகளும், பேச்சுகளும் ஏற்புடையதாக இல்லை.

    திருமணத்துக்கு பின் நடிக்க வந்தாலும் பாடல், கவர்ச்சி வேடங்கள் என்று கலக்குகிறீர்கள்?

    கதாநாயகர்களை பார்த்து நீங்கள் இப்படி கேட்பதில்லை. ஆனா நடிகைகள் என்றால் மட்டும் திருமணமானாலே அக்கா, அண்ணியாக நடிக்க வேண்டுமா? என்னுடைய அழகையும், உடல் கட்டுக்கோப்பையும் வைத்து தான் இந்த மாதிரி வேடங்கள் வருகின்றன. எனக்கு இதில் சந்தோ‌ஷம் தான். #TP2Point0 #TamizhPadam2 #Kasthuri
    வெளியில் நின்று வேடிக்கை பார்ப்பதை விட அரசியல் களத்தில் இறங்கி மக்களை சந்திக்கலாம் என்று நடிகை கஸ்தூரி தூத்துக்குடி கலவரம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். #SterliteProtest
    கன்னியாகுமரி:

    நடிகை கஸ்தூரி இன்று காலை கன்னியாகுமரிக்கு வந்தார். அவர் பகவதி அம்மன் கோவில் சாமி தரிசனம் செய்தார்.

    எனது சொந்த மாவட்டம் தூத்துக்குடி தான். இங்குள்ள உறவினர்களை பார்ப்பதற்காக நான் இங்கு வந்தேன். ஆனால் தற்போது அங்கு சந்தர்ப்ப சூழ்நிலை சரியில்லை என்பதால் நான் தூத்துக்குடிக்கு செல்லவில்லை.

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் மிகவும் வருத்தமளிக்கிறது. அது கண்டனத்துக்குரியது. அரசு இந்த போராட்டத்தை அமைதியான முறையில் மனிதாபிமான ரீதியில் தீர்த்து வைத்து இருக்கலாம். ஆனால் அதற்கு பதில் துப்பாக்கிச்சூடு நடத்தியதை ஏற்றுக் கொள்ள முடியாது.

    தங்கள் வாழ்வாதார பிரச்சினைக்காக தூத்துக்குடியில் போராட்டம் நடந்து வருகிறது. 100 நாட்கள் இந்த போராட்டம் நடந்தும் அரசு கண்டுகொள்ளாமல் உதாசீனம் செய்து வந்தது. இதுவரை போராட்டம் எதுவுமே நடைபெற்றதாகவே அரசு கருதவில்லை. இதனால் தற்போது போராட்டம் பெரிதாக வெடித்து விட்டது. போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது எனக்கு வருத்தத்தை அளிக்கிறது.


    தூத்துக்குடி மாவட்டத்தில் இயல்பு நிலை திரும்பும் வரை அங்கு சட்டத்தை மீறி செல்ல விரும்பவில்லை. அங்குள்ள எனது உறவினர்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு விவரங்களை கேட்டு அறிந்துள்ளேன்.

    நான் அரசியலுக்கு வர வேண்டும் என்று நினைக்கவில்லை. இப்போது நடைபெறுவதை பார்க்கும்போது வெளியில் நின்று வேடிக்கை பார்ப்பதை விட களத்தில் இறங்கி மக்களை சந்திக்கலாம் என்று விரும்புகிறேன். ஆனாலும் எனது அரசியல் வருகையை காலம் தான் தீர்மானிக்கும். ரஜினி, கமல் போன்றவர்கள் அரசியலுக்கு வந்துள்ளதை வரவேற்கிறேன். நடிகர்களுக்கு நடிக்க மட்டும் தான் தெரியும் என்று நினைக்க கூடாது. அவர்கள் அரசியலுக்கும் தகுதியானவர்கள் தான். யார் அரசியலுக்கு வந்தாலும் நான் வரவேற்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #SterliteProtest
    ×