search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Karnataka assembly election"

    • காங்கிரஸ் கட்சி மாநிலத்தின் பல்வேறு தொகுதிகளில் முன்னிலை வகித்து வந்தது.
    • ஆட்சி அமைக்க தேவையான இடங்களை விட அதிக தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

    கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு துவங்கியது. பெங்களூருவில் உள்ள 28 தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை 6 மையங்களிலும், மற்ற தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை மாநிலத்தில் உள்ள 30 வாக்கு எண்ணும் மையங்களிலும் நடைபெற்று வருகிறது.

    ஒட்டுமொத்தமாக மாநிலம் முழுவதும் 36 மையங்களில் ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது. காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கிய நிலையில், சில மணி நேரங்களிலேயே காங்கிரஸ் கட்சி மாநிலத்தின் பல்வேறு தொகுதிகளில் முன்னிலை வகித்து வந்தது.

     

    மொத்தமுள்ள 224 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி தற்போது வரை 134 தொகுதிகளில் வெற்றி பெற்று இருக்கிறது. மேலும் இரண்டு தொகுதிகளில் முன்னணியில் உள்ளது. மாநிலத்தில் ஆட்சி அமைக்க தேவையான இடங்களை விட அதிக தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. அதன் படி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க இருக்கிறது.

    கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதால் அக்கட்சி தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். எனினும், கர்நாடக மாநிலத்தின் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. முதல்வரை தேர்வு செய்வதற்கான கூட்டம் நாளை மாலை 5.30 மணிக்கு பெங்களூருவில் நடைபெற இருக்கிறது.

    இந்த கூட்டத்தை நடத்துவதற்காக அகில இந்திய காங்கிரஸ் பார்வையாளர்கள் பெங்களூரு வருகின்றனர். முதல்வரை தேர்வு செய்த பின் அடுத்த வாரத்தில் புதிய முதல்வர் பதவி ஏற்பு விழா நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதை அடுத்து கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று இருப்பது, அம்மாநிலம் மட்டுமின்றி நாடு முழுக்க காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. 

    • கர்நாடகா தேர்தலில் வெற்றி பெற்றுள்ள காங்கிரசுக்கு கனிமொழி எம்.பி. வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    • காங்கிரஸ் பெற்ற வெற்றியானது மதச்சார்பற்ற சக்திகளை நம்புபவர்களுக்கு, நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக விளங்குகிறது என கூறியுள்ளார்.

    இந்தியா முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய கர்நாடகா சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது. மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் காங்கிரஸ் 223 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் காங்கிரஸ் 84 தொகுதிகளில் வெற்றியும் 54 தொகுதிகளில் முன்னிலையும் வகிக்கிறது.

    இந்நிலையில் கர்நாடகா தேர்தலில் வெற்றி பெற்றுள்ள காங்கிரசுக்கு கனிமொழி எம்.பி. வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது:-

    கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் பெற்ற வெற்றியானது மதச்சார்பற்ற சக்திகளை நம்புபவர்களுக்கு, நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக விளங்குகிறது என கூறியுள்ளார்.

    • மைசூருவில் மட்டும் 11 தொகுதிகளில் 8 தொகுதிகளை காங்கிரஸ் தன் வசப்படுத்தியுள்ளது.
    • பெல்லாரி மாவட்டத்தை காங்கிரஸ் முழுமையாக கைப்பற்றியது.

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஒற்றுமை யாத்திரை தொடங்கினார். இந்த யாத்திரையானது கர்நாடக மாநிலத்தில் உள்ள 7 மாவட்டங்களில் நடைபெற்றது.

    இந்நிலையில், கர்நாடக தேர்தலில் ராகுல் காந்தியின் யாத்திரை கை கொடுத்துள்ளது.

    சாம்ராஜ் நகர், மைசூரு, மாண்டியா, தும்கூரு, பெல்லாரி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் உள்ள 51 தொகுதிகளில் 36 தொகுதியை காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது.

    மைசூருவில் மட்டும் 11 தொகுதிகளில் 8 தொகுதிகளை காங்கிரஸ் தன் வசப்படுத்தியுள்ளது.

    பெல்லாரி மாவட்டத்தை காங்கிரஸ் முழுமையாக கைப்பற்றியது.

    • பல்வேறு தொகுதிகளில் முன்னிலை பெற்றதை அடுத்து காங்கிரஸ் கட்சியின் வெற்றி உறுதியாகி விட்டது.
    • காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராகுல் காந்தி, அம்மாநில மக்களுக்கு தனது நன்றியை தெரிவித்தார்.

    கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை துவங்கியது. வாக்கு எண்ணிக்கை தொடங்கிய சில மணி நேரங்களிலேயே காங்கிரஸ் கட்சி மாநிலத்தின் பல்வேறு தொகுதிகளில் முன்னிலை வகித்து வந்தது. மொத்தமுள்ள 224 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 138 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.

     

    பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை பெற்று வருவதை அடுத்து காங்கிரஸ் கட்சியின் வெற்றி உறுதியாகி இருக்கிறது. கர்நாடக தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராகுல் காந்தி, அம்மாநில மக்களுக்கு தனது நன்றியும், வாழ்த்துக்களையும் தெரிவித்தார். இது குறித்து பேசிய அவர் மேலும் கூறியதாவது..,

    "வெறுப்புணர்வுகளை எதிர்த்து கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. வெறுப்பு உணர்வு இல்லாமல் கர்நாடக தேர்தலில் போட்டியிட்டோம். மக்களின் சக்தி வெற்றி பெற்று இருக்கிறது. இதே நிலை மற்ற மாநிலங்களிலும் தொடரும். காங்கிரஸ் கட்சி ஏழை மக்களின் பிரச்சனைகளுக்காக போராடி வந்தது. தேர்தலில் காங்கிரஸ் கட்சி கொடுத்த வாக்குறுதிகள் விரைந்து நிறைவேற்றப்படும்" என்று அவர் தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கர்நாடகாவில் வெற்றி வாகை சூடிய காங்கிரஸ் கட்சிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    • கர்நாடக மாநில தலைவர் டி.கே.சிவக்குமார், சித்தராமையா ஆகியோரை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு மு.க.ஸ்டாலின் வாழ்த்து கூறியுள்ளார்.

    இந்தியா முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய கர்நாடகா சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது. கர்நாடகாவில் ஆட்சி அமைக்க தேவையான இடங்களில் காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது.

    இந்நிலையில் கர்நாடகாவில் வெற்றி வாகை சூடிய காங்கிரஸ் கட்சிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, கர்நாடக மாநில தலைவர் டி.கே.சிவக்குமார், சித்தராமையா ஆகியோரை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு மு.க.ஸ்டாலின் வாழ்த்து கூறியுள்ளார்.

    • பொதுவாக கர்நாடகாவில் தேர்தல் வெற்றியின் முக்கிய பகுதி சமுதாய அடிப்படையிலான அரசியல்.
    • கர்நாடக மக்கள் கடந்த காலங்களில் எந்தவொரு கட்சிக்கும் தொடர்ச்சியாக வாய்ப்பு அளித்ததே இல்லை.

    கர்நாடக தேர்தலில் பல்வேறு கட்சிகள் போட்டியிட்டாலும், ஆளும் பா.ஜ.க. எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், ம.ஜ.த. இடையே மும்முனைப் போட்டி நிலவியது. இதுவரை 15 முறை நடந்த கர்நாடகா சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியே வென்று ஆட்சியமைத்துள்ளது. ஆனால் கடைசி 30 ஆண்டுகளில் இரு கட்சிகளும் மாறி மாறித்தான் ஆட்சி செய்து வருகின்றன. இந்தமுறை 16-வது சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களை பெற்று ஆட்சி அமைக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

    அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்னோட்டமாக இந்த தேர்தல் கருதப்பட்டது. தென்னிந்தியாவை பொறுத்தவரையில் பா.ஜ.க. ஆளும் ஒரே மாநிலம் கர்நாடகம் என்பதால் இந்த தேர்தல் பா.ஜ.க.வை பொறுத்தவரை மிகவும் முக்கியமான தேர்தலாக கருதப்பட்டது. ராகுலின் நடைபயணம், எம்.பி. பதவி பறிப்பு போன்ற விஷயங்களும், பா.ஜ.க.வின் கண்கவர் தேர்தல் அறிக்கைகளும் தேர்தல் சூழலை மாற்றிக்கொண்டே இருந்தன. என்றாலும் பெரும்பான்மை மக்கள் காங்கிரசை ஆதரித்துள்ளனர். இதனால் காங்கிரஸ் அறுதி பெரும்பான்மை பெறும் நிலை உருவாகி உள்ளது.

    வாக்குப்பதிவு முடிந்த சிறிது நேரத்தில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பினை பல்வேறு நிறுவனங்கள் நடத்தி அதன் முடிவை வெளியிட்டன. மொத்தம் உள்ள 224 இடங்களில் 113 இடங்களை பிடித்தால் மட்டுமே தனிப்பெரும்பான்மை பலம் பெற்று ஆட்சி அமைக்க முடியும். ஆனால் பெரும்பான்மையான கருத்துக்கணிப்புகள் அங்கு எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை பலம் கிடைக்காது, தொங்கு சட்டசபை அமையும் என்றும், காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக வரும் என்றும் பலவாறு கூறின.

    கருத்துக்கணிப்புகள் கூறியபடி காங்கிரஸ் கட்சி அறுதி பெரும்பான்மையை பெற்று உள்ளது. இந்த தேர்தலை பொறுத்தவரை ராகுல் காந்தி மேற்கொண்ட இந்திய ஒற்றுமை நடைப்பயணம் காங்கிரசின் செல்வாக்கை மேம்படுத்தியது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் உதவித்தொகை, ஒரு வீட்டுக்கு மாதம் 200 யூனிட் இலவச மின்சாரம், பெண்களுக்கு அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணம். பிபிஎல் குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் 10 கிலோ இலவச அரிசி, வேலையில்லா பட்டதாரிகளுக்கு 2 ஆண்டுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் வேலையில்லா பட்டயதாரிகளுக்கு 2 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.1,500 உதவித்தொகை போன்ற திட்டங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன.

    சித்தராமையா தலைமையிலான முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட அன்னபாக்யா, இலவச பால், மாணவர் விடுதி உதவித்தொகை, விளைநில மேம்பாட்டுத் திட்டம் இந்திரா உணவகம் போன்றவை கிராமப்புற மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தன. சிறுபான்மையின மக்களின் ஆதரவு காங்கிரஸூக்கு சாதகமான சூழலை உருவாக்கின. காங்கிரஸ் தேசியத் தலைவராக கர்நாடகத்தைச் சேர்ந்த மல்லிகார்ஜூன கார்கே பொறுப்பேற்றது. தாழ்த்தப்பட்டவர்களின் வாக்குகள் காங்கிரசுக்கு மாற வாய்ப்பாக இருந்தது.

    பொதுவாக கர்நாடகாவில் தேர்தல் வெற்றியின் முக்கிய பகுதி சமுதாய அடிப்படையிலான அரசியல். மாநிலத்தில் பல்வேறு சமுதாய அமைப்புகள் உள்ளன. இருப்பினும், மிகவும் முக்கியமானவர்கள் லிங்காயத்துகள் மற்றும் ஒக்கலிகாக்கள். பொதுவான அரசியல் வாக்குறுதிகளை பிரதான கட்சிகளான பா.ஜ.க.வும், காங்கிரசும் அளித்தாலும் சமுதாய வாக்குகள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இங்கு லிங்காயத்து மற்றும் ஒக்கலிகர்கள் சமூகத்தினரின் வாக்குகள்தான் வெற்றியை தீர்மானித்து வருகிறது. கர்நாடக மக்கள் தொகையில் 17 சதவீத மக்கள் லிங்காயத்து சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். ஒக்கலிகர்கள் 15 சதவீதமும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 35 சதவீதமும் உள்ளனர். எஸ்.சி,எஸ்.டி. சமூகத்தினர் 18 சதவீதமும், இஸ்லாமியர்கள் 12.92 சதவீதமும் உள்ளனர். மீதமுள்ளவர்கள் பிராமணர்கள் ஆவர். கடந்த 2018-ம் ஆண்டு தேர்தலில் லிங்காயத்து சமூகத்தினர் மட்டும் 67 பேர் சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்வாகினர். இதில் பாஜகவில் 40 பேர், காங்கிரசில் 20 பேர் மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியைச் சேர்ந்த 6 பேர் மற்றும் பிற கட்சியைச் சேர்ந்த ஒருவர் அடங்குவர்.

    ஒக்கலிகர்கள் சமூகத்தினர் 44 இடங்களில் வெற்றி பெற்றனர். இதில் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியினருக்குத்தான் அதிக எம்.எல்.ஏ.க்கள் கிடைத்தனர். அந்த கட்சியில் மட்டும் 21 பேர் ஒக்கலிகர்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். பா.ஜ.க.வில் கடந்த முறை தேர்தலில் 14 பேரும், காங்கிரசில் 9 எம்.எல்.ஏ.க்களும் ஒக்கலிகர்கள் ஆவர். இதேபோல் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் மக்கள் தொகையில் அதிகம் இருந்தாலும் கடந்த தேர்தலில் 24 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே தேர்வாகினர். மொத்தம் 18 இஸ்லாமிய எம்.எல்.ஏ.க்கள் கடந்த முறை சட்டமன்றம் சென்றனர். காங்கிரஸ் கட்சியில் 11 எம்.எல்.ஏ.வும், பா.ஜ.க.வில் 6, மதசார்பற்ற ஜனதாதளத்தில் ஒரு எம்.எல்.ஏ. இஸ்லாமியர் இருந்தனர்.

    பாரதிய ஜனதாவின் வாக்கு வங்கியாக கருதப்படும் லிங்காயத் சமூகத்தினர் வட கர்நாடகத்திலும், கடலோர மாவட்டங்களிலும் அதிகமாக வசிக்கிறார்கள். இந்த சமுதாய மக்களிடையே செல்வாக்கு பெற்று விளங்கும் எடியூரப்பா வயது மூப்பு காரணமாக இந்த தேர்தலில் போட்டியிடவில்லை. முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர், முன்னாள் துணை முதல்-மந்திரி லட்சுமண் சவதி ஆகியோரும் லிங்காயத் சமூகத்தினரிடையே செல்வாக்கு பெற்ற தலைவர்களாக உள்ளனர்.

    இவர்களில் ஜெகதீஷ் ஷெட்டரும், லட்சுமண் சவதியும் 'டிக்கெட்' கிடைக்காததால் பாரதிய ஜனதாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு காங்கிரசுக்கு தாவி அக்கட்சியின் சார்பில் போட்டியிட்டனர். இதெல்லாம் பாரதிய ஜனதாவுக்கு பின்னடைவாக இருந்தது. காங்கிரஸ் கட்சியை பொறுத்தமட்டில் அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலித் சமூகத்தையும், மாநில தலைவர் டி.கே.சிவக்குமார் ஒக்கலிக சமூகத்தையும், முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா குருபா சமூகத்தையும் சேர்ந்தவர்கள்.

    தங்கள் சமூகத்தினரிடையே அவர்கள் செல்வாக்கு பெற்று விளங்குகிறார்கள். அதிரடி அரசியலில் கில்லாடியான டி.கே.சிவக்குமார் பாரதிய ஜனதாவுக்கு பெரும் சவாலாக திகழ்ந்தார். பாரதிய ஜனதா அரசின் மீது மக்களுக்கு இருக்கும் அதிருப்தி, அரசுக்கு எதிரான ஊழல் புகார்கள், அந்த கட்சியில் நிலவும் உட்கட்சி பூசல், சுமார் 13 சதவீதம் உள்ள சிறுபான்மையினர் வாக்குகள் ஆகிய அம்சங்கள் காங்கிரசுக்கு சாதகமாக மாறின.

    கர்நாடக மக்கள் கடந்த காலங்களில் எந்தவொரு கட்சிக்கும் தொடர்ச்சியாக வாய்ப்பு அளித்ததே இல்லை. கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சிக்கு சித்தராமையா-டிகே சிவக்குமார் என இரு வலிமையான தலைமையைக் காங்கிரஸ் கொண்டிருக்கிறது.

    கர்நாடகாவில் ஹைதரபாத் கர்நாடகா, மும்பை கர்நாடகா, பழைய மைசூர், கடலோர கர்நாடகா, மத்திய கர்நாடகா, பெங்களூரு என 6 மண்டலங்கள் உள்ளன. இதில் மும்பை கர்நாடகா மண்டலத்தில் மொத்தம் 50 தொகுதிகள் உள்ளன. இவற்றில் பாதிக்கும் மேற்பட்ட தொகுதிகள் காங்கிரஸ் வசம் வந்துள்ளது. பழைய மைசூர் மண்டலத்தில் மொத்தம் 55 தொகுதிகள் உள்ளன. இந்த மண்டலம் ஜே.டி.எஸ். கட்சியின் கோட்டையாகும். ஆனால் இங்கு ஜே.டி.எஸ். கோட்டை தகர்ந்துள்ளது எனலாம். இந்த பகுதிகளில் அதிகமான இடங்களை பா.ஜ.க. கைப்பற்றி உள்ளது.

    பெங்களூரு நகர் மற்றும் பெங்களூரு புறநகர் மாவட்டங்களில் மொத்தம் 32 சட்டசபை தொகுதிகள் உள்ளன. பெங்களூரு மண்டலமான இந்த பகுதியிலும் பா.ஜ.க., ஜே.டி.எஸ். கட்சிகளை விட காங்கிரஸ் கட்சி தான் அதிக இடங்களை கைப்பற்றும் ஏற்கனவே கருத்துக்கணிப்புகள் கூறியிருந்தன. அதன்படி காங்கிரஸ் அதிக இடங்களை பிடித்துள்ளது. ஹைதரபாத் கர்நாடகா மண்டலத்தில் மொத்தம் 31 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த மண்டலத்தில் தான் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரான மல்லிகார்ஜூன கார்கேவின் கலபுரகி மாவட்டம் உள்ளது. மல்லிகார்ஜூன கார்கே காங்கிரஸ் தலைவர் ஆனதில் இருந்தே இந்த மண்டலம் காங்கிரஸ் வசம் ஆனது. பின்பு அவரது பிரசாரம், ராகுல், பிரியங்கா வருகை காங்கிரசின் செல்வாக்கை அதிகரித்தது.

    மாறாக மத்திய கர்நாடகா மற்றும் கடலோர கர்நாடகா மண்டலங்கள் காங்கிரஸ், ஜே.டி.எஸ். கட்சியை விட பா.ஜ.க.வுக்கு அதிக தொகுதிகளை கொடுத்துள்ளன. அதன்படி மத்திய கர்நாடகா மண்டலத்தில் மொத்தம் உள்ள 35 சட்டசபை தொகுதிகளில் 20 தொகுதிகள் வரை பா.ஜ.க. கைப்பற்றி உள்ளது.

    கடலோர கர்நாடகா மண்டலத்தில் மொத்தம் 21 சட்டசபை தொகுதிகள் உள்ளன. பா.ஜ.க. செல்வாக்கு மிகுந்த இந்த தொகுதிகளும் காங்கிரஸ் பக்கம் மாறியுள்ளன. மும்பை கர்நாடகா என்பது மகாராஷ்டிரா மாநிலத்தை ஒட்டியுள்ள விஜயபுரம், பாகல்கோட் உள்ளிட்ட தொகுதிகளை உள்ளடக்கிய பகுதியாகும். மும்பை கர்நாடகா பகுதி பா.ஜ.க. வெற்றி பெறும் இடமாக இருந்து வந்தது, கடந்த தேர்தலிலும் அதே போலதான் நடந்தது. கடந்த முறை கூட 44 சதவிகித வாக்குகளைப் பெற்று 30 இடங்களை அந்த பகுதியில் கைப்பற்றி இருந்தது பாஜக. அப்போது காங்கிரஸ் 17 இடங்களை மட்டுமே வென்றிருந்தது. இங்கு மொத்தம் 50 தொகுதிகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது கடந்த தேர்தலைவிட அதிகமான இடங்களை காங்கிரஸ் வென்றுள்ளது.

    பொதுவாக நகர்ப்புற தொகுதிகளில் பா.ஜ.க. அதிக பின்னடைவை சந்தித்துள்ளது. நகர்ப்புற மக்கள் மத்தியில் பா.ஜ.க. செல்வாக்கை இழந்திருப்பதே இதை காட்டுகிறது. என்றாலும் பா.ஜ.க.வுக்கு பலமான எதிர்க்கட்சி வாய்ப்பை கர்நாடக மக்கள் கொடுத்துள்ளனர்.

    • நாட்டில் தொழில் வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி எல்லாவற்றிலும் மோடி அரசு தோற்று விட்டது.
    • விலைவாசி உயர்வும், வரி விதிப்பும் மக்களை வாட்டி வதைக்கிறது.

    சென்னை:

    கர்நாடகத்தில் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதும் சென்னையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் தொண்டர்கள் திரண்டனர்.

    மாநில நிர்வாகிகள் சுமதி அன்பரசு, தளபதி பாஸ்கர், சிரஞ்சீவி, மாவட்ட தலைவர் சிவராஜ சேகரன் உள்ளிட்டோர் முன்னிலையில் பட்டாசுகள் வெடித்து இனிப்பு வழங்கினார்கள்.

    தேர்தல் வெற்றி பற்றி தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியதாவது:-

    கர்நாடகத்தில் காங்கிரஸ் மகத்தான வெற்றி பெறும் என்பதை தேர்தல் பிரசாரத்தின் போதே உணர்ந்தோம்.

    ராகுல் காந்தியின் ஒற்றுமை பயணம் மிகப்பெரிய வெற்றியை ஈட்டி தந்துள்ளது. அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக அல்ல. மக்களிடையே ஒற்றுமையை உருவாக்கத்தான் ராகுல் காந்தி தன்னை வருத்தி அந்த நடைபயணத்தை மேற்கொண்டார். அதன் பலன்தான் இப்போது கர்நாடகத்தில் கிடைத்திருக்கும் வெற்றி.

    மக்கள் பா.ஜனதா மீதான நம்பிக்கையை இழந்து விட்டார்கள். கடந்த 7, 8 ஆண்டுகளில் வளர்ச்சியை நோக்கிய அரசியலை பா.ஜனதா முன்னெடுக்கவில்லை. எதிர்மறையான அரசியலை, சின்ன சின்ன பிளவுகளை மையப்படுத்தி அரசியல் செய்தார்கள். அது ஆரம்பத்தில் வெற்றியை கொடுத்தாலும் காலப்போக்கில் வெற்றி பெறாது என்பதை ராகுல் உணர்ந்தார். அதனால்தான் காந்திய வழியில் அதிகாரத்தை நோக்கிய அரசியல் இல்லாமல் மக்களிடையே ஒற்றுமையை நோக்கிய அரசியலை கையில் எடுத்தார். அதன் முதல் வெற்றிதான் இது.

    நாட்டில் தொழில் வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி எல்லாவற்றிலும் மோடி அரசு தோற்று விட்டது. விலைவாசி உயர்வும், வரி விதிப்பும் மக்களை வாட்டி வதைக்கிறது.

    இந்த நெருக்கடியில் இருந்து நாட்டையும், மக்களையும் ராகுலால்தான் காப்பாற்ற முடியும் என்று மக்கள் உணர்ந்து விட்டார்கள்.

    இந்த வெற்றிக்கு மல்லிகார்ஜூன கார்கே மிகப்பெரிய தூணாக விளங்கினார். ராகுலின் இளமை வேகம். கார்கேவின் முதுமை அனுபவம் ஆகிய இரண்டும் வெற்றிக்கு முக்கிய காரணம்.

    மக்கள் பா.ஜனதாவை நிராகரிக்க தொடங்கி விட்டார்கள். அடுத்து வரும் பாராளுமன்ற தேர்தலில் பாராளுமன்றமும் காங்கிரஸ் வசமாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நாளை நடக்கிறது.
    • எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முதல்-மந்திரியை தேர்வு செய்வார்கள்.

    கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நாளை நடக்கிறது. இந்த கூட்டத்தில் முதல்-மந்திரியை தேர்வு செய்வார்கள்.

    முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் ஆகியோர் இடையே முதல்-மந்திரி பதவிக்கான போட்டி நிலவுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் நேரடி மேற்பார்வையில் எம்.எல்.ஏ.க்கள் கண்காணிக்கப்படுவார்கள்.
    • காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் எந்தெந்த ஓட்டல், விடுதியில் தங்க வைக்கப்படுவார்கள் என்பது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

    பெங்களூரு:

    கர்நாடகா சட்டசபை தேர்தலில் தொடக்கத்தில் ஆளும் பா.ஜனதாவுக்கும், காங்கிரசுக்கும் இடையே இழுபறி காணப்பட்டது. நேரம் செல்ல செல்ல காங்கிரஸ் கூடுதல் இடங்களில் முன்னிலை பெற்றது.

    ஆட்சி அமைப்பதற்கு தேவையான இடங்களை பெற மொத்தம் உள்ள 224 தொகுதியில் 113 உறுப்பினர்கள் தேவை. ஒரு கட்டத்தில் காங்கிரஸ் அதைவிட அதிகமான தொகுதிகளில் முன்னிலையில் இருந்தது.

    வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை நட்சத்திர ஓட்டல், விடுதிகளில் தங்க வைக்கப்படுகிறார்கள். எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் முயற்சியில் பா.ஜனதா ஈடுபடும் என்பதால் அவர்களை தங்கள் கைவசம் வைத்திருக்க காங்கிரஸ் இந்த ஏற்பாட்டை செய்து வருகிறது.

    கடந்த காலங்களில் இது மாதிரி காங்கிரஸ் தனது எம்.எல்.ஏ.க்களை இழந்து ஆட்சி அமைக்க முடியாமல் போனது. அதுமாதிரியான நிலைமை வந்துவிடக்கூடாது என்பதில் காங்கிரஸ் கவனமாக இருக்கிறது.

    இதனால் எம்.எல்.ஏ.க்களை ரிசார்ட் போன்ற நவீன விடுதியில் தங்க வைத்து கண்காணிக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

    காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் நேரடி மேற்பார்வையில் எம்.எல்.ஏ.க்கள் கண்காணிக்கப்படுவார்கள்.

    காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் எந்தெந்த ஓட்டல், விடுதியில் தங்க வைக்கப்படுவார்கள் என்பது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

    • தனிப்பெரும்பான்மைக்கு தேவையான 113 இடங்களில் பா.ஜனதா வெற்றி பெறும்.
    • காங்கிரசுக்கு தனிப்பெரும்பான்மை பலம் கிடைக்க போவதில்லை.

    பெங்களூரு :

    பெங்களூருவில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

    சட்டசபை தேர்தலில் வாக்குப்பதிவு நிறைவு பெற்ற பின்பு வெளியான கருத்து கணிப்பு முடிவுகளுக்கும், அரசியல் சூழ்நிலைகளுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. ஏனெனில் பா.ஜனதா ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் உள்ள நிலை குறித்து, வாக்காளர்களின் மனநிலை பற்றியும் ஏற்கனவே அறிந்து வைத்துள்ளது. அதன்படி, இந்த தேர்தலில் பா.ஜனதா தனிப்பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதி.

    எங்களது கட்சியின் எம்.எல்.ஏ.க்களின் சொந்த பலத்திலேயே ஆட்சி அமைப்போம். பா.ஜனதாவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கும் பட்சத்தில் எந்த ஒரு கட்சியுடனும் கூட்டணி அமைக்கும் நிலை வராது.

    தனிப்பெரும்பான்மைக்கு தேவையான 113 இடங்களில் பா.ஜனதா வெற்றி பெறும். காங்கிரசுக்கு தனிப்பெரும்பான்மை பலம் கிடைக்க போவதில்லை. அதனால் தான் அந்த கட்சியின் தலைவர்கள் ஓட்டு எண்ணிக்கைக்கு முன்பாகவே வேறு கட்சியுடன் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள்.

    காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மீதே, அந்த கட்சியின் தலைவர்களுக்கு நம்பிக்கை கிடையாது. காங்கிரஸ் தலைவர்கள் ஒன்றாக கூடி ஆலோசனை நடத்துவதற்கு உரிமை உள்ளது. அதன்படி, தலைவர்கள் ஆலோசிக்கிறார்கள். இது வழக்கமானது தான். எல்லா கட்சிகளின் தலைவர்களும் கூடி ஆலோசனை நடத்துவது சகஜமானது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தேர்தல் பிரசாரத்தின் போது சித்தராமையா தான் முதல்-மந்திரி ஆவேன் என கூறி வாக்கு சேகரித்தார்.
    • சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இடையே முதல்-மந்திரி பதவிக்கு பனிப்போர் நீடித்து வருகிறது.

    பெங்களூரு :

    கர்நாடக சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காது என பெரும்பாலான கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. இதில் காங்கிரஸ் கூடுதல் இடங்களை கைப்பற்றலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இத்தகைய சூழ்நிலையில் இன்று சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

    இதற்கிடையே காங்கிரஸ் கட்சியில் முதல்-மந்திரி பதவிக்கு போட்டா போட்டி எழுந்துள்ளது. ஏற்கனவே தேர்தல் பிரசாரத்தின் போது எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான சித்தராமையா, தான் முதல்-மந்திரி ஆவேன் என கூறி வாக்கு சேகரித்தார். அதுபோல் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவரான டி.கே.சிவக்குமாரும், மண்டியா, மைசூரு மாவட்டங்களில் நடந்த தேர்தல் பிரசார கூட்டங்களில், ஒக்கலிக சமுதாய மக்கள் தேவகவுடாவை முதல்-மந்திரியாகவும், பிரதமராகவும் ஆக்கினீர்கள். அதுபோல் அவரது மகன் குமாரசாமியையும் முதல்-மந்திரி ஆக்கினீர்கள். எனவே இந்த முறை என்னை முதல்-மந்திரி ஆக்க வேண்டும் என்று கூறி அனல் பறக்கவிட்டார். இவ்வாறு சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இடையே முதல்-மந்திரி பதவிக்கு பனிப்போர் நீடித்து வருகிறது.

    ஆனால் காங்கிரஸ் மேலிடம், எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருக்கும் நபரை முதல்-மந்திரி ஆக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கிடையே தலித் சமுதாயத்தை சேர்ந்தவரை காங்கிரஸ் கட்சி முதல்-மந்திரி பதவி வழங்க வேண்டும் என்ற கோஷமும் எழுந்துள்ளது. அதாவது முன்னாள் துணை முதல்-மந்திரி பரமேஸ்வருக்கு முதல்-மந்திரி பதவி வழங்க கோரிக்கை எழுந்துள்ளது. மற்றொரு தலித் சமுதாய தலைவரான அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கும் வழங்கவும் அந்த சமுதாயத்தினர் வலியுறுத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில், கலபுரகி மாவட்டம் சித்தாபுரா தொகுதி காங்கிரஸ் வேட்பாளரும், மல்லிகார்ஜுன கார்கேவின் மகனுமான பிரியங்க் கார்கேவுக்கு முதல்-மந்திரி பதவி வழங்க வேண்டும் என்றும், அடுத்த முதல்-மந்திரி அவர் தான் எனக் கூறி அவரது ஆதரவாளர்கள் சித்தாபுரா பகுதிகளில் நேற்று விளம்பர பேனர்களை வைத்து, காங்கிரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அதே வேளையில் ஏற்கனவே காங்கிரஸ் செயல் தலைவரும், லிங்காயத் சமுதாய தலைவருமான எம்.பி.பட்டீல் முதல்-மந்திரி பதவிக்கான போட்டியில் தானும் இருப்பதாக கூறியுள்ளார்.

    அதுபோல் 91 வயதான காங்கிரஸ் மூத்த தலைவருமான சாமனூர் சிவசங்கரப்பாவும் நேற்று முன்தினம் லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்த ஒருவருக்கு முதல்-மந்திரி பதவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். தேர்தல் முடிவு இன்று வெளியாகும் நிலையில் காங்கிரசில் முதல்-மந்திரி பதவிக்கு தலைவர்கள் இடையே போட்டா போட்டி எழுந்துள்ளதால் அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • வாக்குப்பதிவின் போது 73.19 சதவீத ஓட்டுகள் பதிவாகி இருந்தது.
    • ஒட்டுமொத்தமாக மாநிலம் முழுவதும் 36 மையங்களில் ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது.

    கர்நாடக மாநிலத்தில் கடந்த 10ம் தேதி நடைபெற்ற சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது.

    பெங்களூருவில் உள்ள 28 தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை 6 மையங்களிலும், மற்ற தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை மாநிலத்தில் உள்ள 30 வாக்கு எண்ணும் மையங்களிலும் நடைபெற்று வருகிறது. ஒட்டுமொத்தமாக மாநிலம் முழுவதும் 36 மையங்களில் ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது.

    காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கிய நிலையில், மதியம் 2 மணிக்குள் பெரும்பாலான தொகுதிகளின் முடிவுகள் வெளியாகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    வாக்குப்பதிவின் போது 73.19 சதவீத ஓட்டுகள் பதிவாகி இருந்தது. இந்நிலையில், இன்றைய வாக்கு எண்ணிக்கையின் முடிவில் கர்நாடகாவில் ஆட்சியை பிடிக்கப்போவது யார் என்பது தெரிந்துவிடும்.

    ×