காங்கிரஸ் வெற்றி- நம்பிக்கையின் கலங்கரை விளக்கம்: கனிமொழி கருத்து

கர்நாடகா தேர்தலில் வெற்றி பெற்றுள்ள காங்கிரசுக்கு கனிமொழி எம்.பி. வாழ்த்து தெரிவித்துள்ளார். காங்கிரஸ் பெற்ற வெற்றியானது மதச்சார்பற்ற சக்திகளை நம்புபவர்களுக்கு, நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக விளங்குகிறது என கூறியுள்ளார்.
காங்கிரஸ் வெற்றி- நம்பிக்கையின் கலங்கரை விளக்கம்: கனிமொழி கருத்து
Published on

இந்தியா முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய கர்நாடகா சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது. மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் காங்கிரஸ் 223 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் காங்கிரஸ் 84 தொகுதிகளில் வெற்றியும் 54 தொகுதிகளில் முன்னிலையும் வகிக்கிறது.

இந்நிலையில் கர்நாடகா தேர்தலில் வெற்றி பெற்றுள்ள காங்கிரசுக்கு கனிமொழி எம்.பி. வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது:-

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் பெற்ற வெற்றியானது மதச்சார்பற்ற சக்திகளை நம்புபவர்களுக்கு, நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக விளங்குகிறது என கூறியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com