என் மலர்tooltip icon

    இந்தியா

    வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஓட்டலில் தங்க வைப்பு
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஓட்டலில் தங்க வைப்பு

    • காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் நேரடி மேற்பார்வையில் எம்.எல்.ஏ.க்கள் கண்காணிக்கப்படுவார்கள்.
    • காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் எந்தெந்த ஓட்டல், விடுதியில் தங்க வைக்கப்படுவார்கள் என்பது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

    பெங்களூரு:

    கர்நாடகா சட்டசபை தேர்தலில் தொடக்கத்தில் ஆளும் பா.ஜனதாவுக்கும், காங்கிரசுக்கும் இடையே இழுபறி காணப்பட்டது. நேரம் செல்ல செல்ல காங்கிரஸ் கூடுதல் இடங்களில் முன்னிலை பெற்றது.

    ஆட்சி அமைப்பதற்கு தேவையான இடங்களை பெற மொத்தம் உள்ள 224 தொகுதியில் 113 உறுப்பினர்கள் தேவை. ஒரு கட்டத்தில் காங்கிரஸ் அதைவிட அதிகமான தொகுதிகளில் முன்னிலையில் இருந்தது.

    வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை நட்சத்திர ஓட்டல், விடுதிகளில் தங்க வைக்கப்படுகிறார்கள். எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் முயற்சியில் பா.ஜனதா ஈடுபடும் என்பதால் அவர்களை தங்கள் கைவசம் வைத்திருக்க காங்கிரஸ் இந்த ஏற்பாட்டை செய்து வருகிறது.

    கடந்த காலங்களில் இது மாதிரி காங்கிரஸ் தனது எம்.எல்.ஏ.க்களை இழந்து ஆட்சி அமைக்க முடியாமல் போனது. அதுமாதிரியான நிலைமை வந்துவிடக்கூடாது என்பதில் காங்கிரஸ் கவனமாக இருக்கிறது.

    இதனால் எம்.எல்.ஏ.க்களை ரிசார்ட் போன்ற நவீன விடுதியில் தங்க வைத்து கண்காணிக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

    காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் நேரடி மேற்பார்வையில் எம்.எல்.ஏ.க்கள் கண்காணிக்கப்படுவார்கள்.

    காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் எந்தெந்த ஓட்டல், விடுதியில் தங்க வைக்கப்படுவார்கள் என்பது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×