search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kamal political"

    சட்டை கலையாமல் கமல்ஹாசனை அரசியலில் இருந்து தமிழக மக்கள் அப்புறப்படுத்துவார்கள் என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
    சென்னை:

    இந்து தீவிரவாதம் என்று பேசிய கமல்ஹாசனின் பேச்சுக்கு தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் கண்டனம் தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

    கமல்ஹாசனை விட சிறப்பாக படித்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். சரித்திர உண்மை என்று சொல்லி சரித்திரத்தை திரித்து பார்க்கிறார். திரித்து வெளியிடுகிறார். ரணத்தை ஆற்றுகிற ரணமாக இருக்கிறது இந்து தீவிரவாதம் என்று சொல்கிறார்.



    ரணமாக இல்லை. அது ஆறிக்கொண்டிருப்பதை குத்திக்கிளறி ரத்தம்வர வைத்து பிரிவினைவாதத்தை தூண்டிக் கொண்டு இருக்கிறார்.

    தேர்தல் பிரசாரத்தில் பேசியதை சாதனை என்று சொல்லி பேசிக்கொண்டு இருக்கிறார். ஆட்சியாளர்களை சட்டை கலையாமல் வீட்டுக்கு அனுப்புவாராம். சட்டை கலையாமல் அவரை அரசியலில் இருந்து தமிழக மக்கள் அப்புறப்படுத்துவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    சரித்திர உண்மை, சரித்திர உண்மை என்று கூறி கமல் தரித்திரத்தை விலைக்கு வாங்குகிறார் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.
    ஒட்டப்பிடாரம்:

    தூத்துக்குடியில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சரித்திர உண்மை, சரித்திர உண்மை என்று கூறி கமல் தரித்திரத்தை விலைக்கு வாங்குகிறார். சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதி ஒரு இந்து என்று கூறுவது சரித்திர உண்மையா. அதற்கு முன்பெல்லாம் நடைபெற்ற கசப்பான சம்பவங்கள் நிறைய உண்டு.

    அதற்குள் நாம் போக வேண்டாம். அந்த சம்பவங்கள் கசப்பான, மறைக்கப்பட வேண்டிய மன்னிக்கப்பட வேண்டிய சம்பவங்கள். அதை நாம் மீண்டும் பேசினால் மதநல்லிணக்கத்திற்கு கேடு விளைவிக்கும்.

    அந்த சம்பவங்களுக்குள் ஒரு சாதாரண மனிதனே போகக்கூடாது. அதுவும் ஒரு நடிகர் பேசுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. விஸ்வரூபம் படம் வெளிவந்த போது இஸ்லாமியர்களை எப்படி பயங்கரவாதிகளாக சித்தரித்து காண்பித்தார் என்பதை அவர்கள் மறக்க மாட்டார்கள். சிறுபான்மையினர் வாக்குகளை வாங்க வேண்டும் என்பதற்காக கமல் தொடர்ந்து இப்படி பேசி வருகின்றார்.


    வேஷ்டி கசங்காமல் வீட்டிற்கு அனுப்புவேன் என்று கமல் கூறுகின்றார். ராஜ தந்திரி என பெயர் எடுத்த கருணாநிதியாலேயே அ.தி.மு.க.வை அழிக்க முடியவில்லை. ஜெயலலிதா மறைவிற்கு பிறகு இந்த ஆட்சி போய்விடும் என்று கூறினர். எடப்பாடி ஆட்சி வெற்றிகரமாக நடந்து வருகின்றது.

    கமல் கத்துக்குட்டி. ஒரு கருத்தை கூறிவிட்டால் பெரிய ஆளாகிவிட முடியாது. கமல் கட்சி ஒரு கவுன்சிலர் தேர்தலில் கூட வெற்றி பெற முடியாது. இந்த தேர்தலில் இவரது கட்சிக்கு எவ்வளவு ஓட்டு விழும் என்று பார்த்து விடுவோம். இவருக்கு யாரும் ஓட்டுப் போட மாட்டார்கள். எடப்பாடியின் ஏழைகளுக்கான ஆட்சி தொடர்ந்து செயல்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் தன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில் முன்ஜாமீன் கோரி கமல்ஹாசன் மனு தாக்கல் செய்துள்ளார்.
    மதுரை:

    அரவக்குறிச்சியில் தேர்தல் பிரசாரத்தின் போது மத உணர்வை புண்படுத்தும் வகையில் பேசுதல், மத ரீதியில் மோதலை தூண்டும் வகையில் பேசுதல் என இரண்டு பிரிவுகளில் கமல் மீது காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 13-க்கும் மேற்பட்ட போலீஸ் நிலையங்களில் இது போல் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.


    இந்நிலையில் தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டுமெனவும், இதனை அவசர வழக்காக விசாரிக்க கோரியும் சென்னை ஐகோர்ட்  மதுரை கிளை நீதிபதி புகழேந்தி முன்பாக கமல்ஹாசன் சார்பில் முறையிடப்பட்டது. அப்போது பேசிய நீதிபதி, வழக்கு மற்றும் வழக்கு விசாரணைக்கு தடை கோரும் மனுக்களை விடுமுறை கால அமர்வில் விசாரிக்க இயலாது என்றும் வேண்டுமென்றால், மனுதாரர் முன் ஜாமீன்  கோரி மனுத்தாக்கல் செய்தால் அதனை பரிசீலிப்பதாக தெரிவித்தார்.

    இதையடுத்து, கமல்ஹாசன் தரப்பில் முன் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று சென்னை மாநகர போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.
    சென்னை:

    இந்து தீவிரவாதி என பேசிய மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இந்து அமைப்பினர் போலீஸ் நிலையங்களில் புகார் கொடுத்து வருகின்றனர்.

    இன்று சென்னை மாநகர போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் வக்கீல் தமிழ்வேந்தன் மற்றும் அய்யா வைகுண்டர் மக்கள் கட்சி சார்பில் ஒரு புகார் மனு அளிக்கப்பட்டது. இதில் கமல்ஹாசனை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

    சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து போன்ற சர்ச்சை கருத்துக்களை தொடர்ந்து பேசினால் தமிழகத்தில் கமல்ஹாசனை நடமாட விடமாட்டோம் என்று மன்னார்குடி ஜீயர் தெரிவித்துள்ளார்.
    திருச்சி:

    கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் கடந்த 12-ந்தேதி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பள்ளப்பட்டி பகுதியில் பேசினார்.

    அப்போது அவர் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்ற சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார். அவரது பேச்சுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு அலை உருவாகியுள்ளது. பா.ஜனதா சார்பில் அவரது கட்சிக்கு தடை விதிக்க கோரி தேர்தல் ஆணையத்திடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் திருச்சி ஸ்ரீரங்கத்தில் இன்று மன்னார்குடி ஸ்ரீசெண்டலங்கார செண்பக மன்னார் ஜீயர் சுவாமிகள் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழக கோவில்களில் முறைகேடுகளில் ஈடுபட்ட இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். இதன் மூலம் அனைத்து இந்துக்களுக்கும், இந்து சமய அறநிலையத்துறை மற்றும் தமிழக அரசு மீது நம்பிக்கை வந்துள்ளது.

    மகாத்மா காந்தியை நாதுராம் கோட்சே சுட்டுக்கொன்றது அவரது தேசபக்தியை காட்டுகிறது. அதாவது பிரிவினைவாதத்திற்கு எதிராக அவர் வைத்திருந்த தேச பக்தி என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ஆனால் நாதுராம் கோட்சே மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்றது தவறுதான்.


    தற்போது ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்புடன் தொடர்பு வைத்துக்கொண்டு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இந்துக்களை தீவிரவாதிகள் என்கிறார். அவரது கருத்துக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

    அவர் இதுபோன்று சர்ச்சை கருத்துக்களை தொடர்ந்து பேசினால் தமிழகத்தில் நடமாட விடமாட்டோம். கமல்ஹாசன் கிறிஸ்தவ மதத்துக்கு மாறிவிட்டார். அவர் மட்டுமின்றி அவரது குடும்பமே கிறிஸ்தவ மதத்திற்கு மாறிவிட்டது. அதனால்தான் அவர் தொடர்ச்சியாக இந்துக்களுக்கு எதிராக பேசி வருகிறார்.

    கமல்ஹாசன் மட்டுமல்ல, இந்துக்களுக்கு எதிராக பேசுபவர்கள் யாராக இருந்தாலும் நாங்கள் மன்னிக்க மாட்டோம். கமல்ஹாசன் கட்சிக்கு தடை விதிக்க கோரி அகில இந்திய துறவியர் பேரவை சார்பில் தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுப்போம்.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு திருப்பதி கோவிலை விட அதிகமான நகைகள் இருக்கிறது. அதனை முழுமையாக கணக்கிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மதங்களுக்கிடையே பிரச்சனை வரும் வகையில் பேசியது கண்டனத்திற்குரியது என்று ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

    ஈரோடு, மே. 15-

    கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் ஈரோட்டில் இன்று நிருபர் களுக்கு பேட்டியளித்தார்.

    மக்கள் நீதிமய்ய தலைவர் கமலஹாசன் மதங்களுக் கிடையே பிரச்சனை வரும் வகையில் பேசியது கண்ட னத்திற்குரியது.

    அரசியல் கட்சி தொடங்கிய ஒருவர் இப்படி பேசியது வருத்தமாக உள்ளது. நாட்டில் அமைதி நிலவ வேண்டும் என்பது அனைவரின் ஆசை. தேர் தலில் வாக்குகளை பெறும் நோக்கில் பேசியது ஏற்று கொள்ள கூடியது அல்ல.

    அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியது கமல ஹாசன் பேசியதை விட குற்றம். ஊடகத்தின் கவனத் தை ஈர்க்க இவ்வாறு பேசி யுள்ளார். தேர்தல் விதிமுறைகளை மீறி செயல்டும் இவர்கள் மீது தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை விரைந்து எடுக்க வேண்டும்.

    தேர்தலுக்கு பின்னர் என்ன நடக்கும் என்பது இந்தியாவில் உள்ள அனைத்து அரசியல் கட்சி யினருக்கும் தெரியும்.தமிழ கத்தில் தேர்தல் முடிவுகளை தெரிந்து கொண்டதால் தி.மு.க.வை கூட்டணிக்கு போட்டி போட்டு அழைக் கின்றனர்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    கமலின் சர்ச்சை பேச்சு குறித்து பிரதமர் மோடி கூறியது சரிதான் என்று பா.ஜ.க. தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பிரசாரம் செய்த போது ஒரு பெண் தனது கணவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும், அவருக்கு உரிய சிகிச்சை அளிக்க பரிந்துரை செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.

    இதைத்தொடர்ந்து தமிழிசை சவுந்தரராஜன் இன்று அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அந்த பெண்ணின் கணவரை சந்தித்து நலம் விசாரித்தார். மேல் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்படும் எனவும் அவரது குடும்பத்தினருக்கு உறுதி அளித்தார்.

    எந்த மதமும் தீவிரவாதத்தை ஆதரிப்பது இல்லை. ஆனால் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இந்துக்களை தீவிரவாதிகள் என பேசியுள்ளார். அவர் அரசியலில் தரம் தாழ்ந்து பேசி வருகிறார். அவரை பின்னால் இருந்து யாரோ இயக்கி கொண்டு இருக்கிறார்கள். அது அரசியல் கட்சிகளா? அல்லது வேறு யாருமா என்று தெரியவில்லை. எனவே அவரது பிரசாரத்தை தடை செய்ய வேண்டும்.

    மகாத்மா காந்தியின் கொள்ளு பேரன் நான் என்றும், ஒரு கட்டத்தில் இந்த நாட்டை விட்டே வெளியேறும் சூழ்நிலை ஏற்படும் என்றும் கூறியவர் கமல்ஹாசன். இப்போது தரம் தாழ்ந்து பேசி வருகிறார். அவரது சர்ச்சை பேச்சுக்கு சில அரசியல் கட்சி தலைவர்கள் ஆதரவு தெரிவிப்பது வருத்தம் அளிக்கிறது.


    தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் பல முகதோற்றத்தில் உள்ளார். அவரிடம் தோல்வி பயம் தெரிகிறது. நாங்கள் வெற்றியின் விளிம்பில் உள்ளோம். சந்திரசேகர ராவை பார்த்த பிறகு அவர்களுடைய நிலைப்பாட்டை தி.மு.க. தெரிவிக்காதது ஏன்?

    தமிழகத்தில் முதல்- அமைச்சரின் காப்பீடு திட்டம் மற்றும் பிரதமரின் காப்பீடு திட்டங்களின் மூலம் ஒரு கோடியே 75 லட்சம் பேர் பயனடைய தகுதி பெற்றுள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதைத்தொடர்ந்து நிருபர்கள் கமலின் சர்ச்சை பேச்சு குறித்து பிரதமர் மோடி குறிப்பிடும் போது, தீவிரவாத செயல்களில் இந்துக்கள் ஈடுபட மாட்டார்கள் என்றும், தீவிரவாதத்தில் ஈடுபடுபவர்கள் இந்துக்களாக இருக்க மாட்டார்கள் என்றும் பேட்டி அளித்தது குறித்து கேட்டனர்.

    அதற்கு பதில் அளித்த தமிழிசை சவுந்தரராஜன் பிரதமர் மோடி கூறியது சரிதான் என்றார்.
    திருப்பரங்குன்றம் தொகுதியில் இன்று கமல்ஹாசன் திட்டமிட்டப்படி பிரசாரம் மேற்கொள்வார் என்று அக்கட்சியின் வேட்பாளர் சக்திவேல் தெரிவித்துள்ளார்.
    திருப்பரங்குன்றம்:

    திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர், ஒட்டப்பிடாரம் சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது. அரவக்குறிச்சி தொகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து கட்சி தலைவர் கமல்ஹாசன் பிரசாரம் செய்தார்.

    அப்போது சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஓரு இந்து என்றார். அவரது இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையத்திலும், போலீஸ் நிலையங்களிலும் புகார் செய்யப்பட்டுள்ளது.



    இந்த நிலையில் நேற்று ஒட்டப்பிடாரம் தொகுதியில் கமல்ஹாசனின் தேர்தல் பிரசாரம் ரத்து செய்யப்பட்டது.

    திருப்பரங்குன்றம் தொகுதியில் இன்று கமல்ஹாசன் திட்டமிட்டப்படி பிரசாரம் மேற்கொள்வார் என்று அக்கட்சியின் வேட்பாளர் சக்திவேல் தெரிவித்துள்ளார்.

    மாலை 4 மணிக்கு தோப்பூரில் பிரசாரத்தை தொடங்கும் அவர் பனையூர், சிந்தாமணி, வில்லாபுரம், ஹவுசிங்போர்டு காலனியில் பேசுவார். அதைத்தொடர்ந்து திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் அருகே நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கமல்ஹாசன் பேசுவார் என்று சக்திவேல் கூறினார்.
    நாகர்கோவிலில் இன்று சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று பேசிய கமல்ஹாசனின் உருவப்பொம்மையை எரித்து இந்து முன்னணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    நாகர்கோவில்:

    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் நடிகர் கமல்ஹாசன் தேர்தல் பிரசாரத்தின் போது சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று பேசினார். அவரது கருத்துக்கு பாரதிய ஜனதா, சிவசேனா மற்றும் இந்து அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    நாகர்கோவிலில் இன்று நடிகர் கமல்ஹாசனை கண்டித்து இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வடசேரி சந்திப்பில் நடந்த இந்த போராட்டத்தில் இந்து முன்னணியினர் மட்டுமல்லாமல் பாரதிய ஜனதாவினரும் கலந்து கொண்டனர். அவர்கள் கமல்ஹாசனை கண்டித்து கோ‌ஷங்களை எழுப்பினர்.

    மேலும் கமல்ஹாசனின் உருவப்பொம்மையை நடுரோட்டில் போட்டு தீவைத்து எரித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

    அந்த பகுதியில் பாதுகாப்புக்கு நின்ற போலீசார், அருகில் உள்ள கடைகளில் இருந்து குடங்களில் தண்ணீர் கொண்டு வந்து உருவப்பொம்மை மீது ஊற்றி தீயை அணைத்தனர்.

    போராட்டத்தில் இந்து முன்னணியைச் சேர்ந்த மிசா சோமன், குழிச்சல் செல்லம், பாரதிய ஜனதா மாவட்ட தலைவர் முத்துகிருஷ்ணன், பாரதிய ஜனதா நிர்வாகிகள் நாகராஜன், முத்துராமன் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.
    கமல்ஹாசனின் நாக்கை அறுக்க வேண்டும் என பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பதவி நீக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது.
    சென்னை:

    அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று முன்தினம் அங்கு பிரசாரம் செய்தார்.

    அரவக்குறிச்சியில் தேர்தல் பிரசாரம் செய்த மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதியான நாதுராம் கோட்சே இந்துதான் என குறிப்பிட்டார்.

    அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தூத்துக்குடியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது,

    சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என்று கமல்ஹாசன் பேசி இருக்கிறார். அவரது கொழுப்பேறிய நாக்கை அறுக்க வேண்டும் என்று கடுமையாக  விமர்சித்திருந்தார்.

    இவரது பேச்சுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார்.



    இந்நிலையில் அமைச்சர் பதவியிலிருந்து ராஜேந்திர பாலாஜியை நீக்கம் வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது.

    இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளர் அருணாச்சலம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-

    கமல்ஹாசனின் நாக்கை அறுக்க வேண்டும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியது கண்டனத்திற்குரியது. பதவிப்பிரமாணத்தின் போது எடுத்த உறுதிமொழியை மீறும் வகையில் நடந்ததற்காக அமைச்சர் பதவியிருந்து ராஜேந்திர பாலாஜியை நீக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    கமல் இந்து தீவிரவாதம் பற்றி பேசியது தவறு என்றால், நாக்கை அறுப்பேன் என்று அமைச்சர் பேசியது சரியா? இதுவும் தீவிரவாதம் தான் என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    அரவக்குறிச்சி தொகுதியில் பிரசாரம் செய்த கமல்ஹாசன் இந்து தீவிரவாதம் பற்றிய பேச்சு அரசியல் களத்தில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    அவரது பேச்சுக்கு ஆதரவும் எதிர்ப்புகளும் பாயத்தொடங்கிவிட்டன.

    அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தூத்துக்குடியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது, கமல்ஹாசனை கடுமையாக விமர்சித்து உள்ளார். அவரது பேட்டி விவரம் வருமாறு:-

    சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என்று கமல்ஹாசன் பேசி இருக்கிறார். அவரது கொழுப்பேறிய நாக்கை அறுக்க வேண்டும். அவரது நாக்கில் சனி. இந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும் ஊரில் சென்று அவர் பேசி உள்ளார். தீவிரவாதிகளுக்கு மதம் கிடையாது. அவர்களை தீவிரவாதி என்றுதான் கூற வேண்டும்.

    சிறுபான்மையினர் ஓட்டை பெறுவதற்காக இந்துக்களை பற்றி பேசும் கமல்ஹாசன் நாக்கை ஒருகாலத்தில் அறுக்கத்தான் போகிறார்கள். ஏனென்றால் ரொம்ப பேசுகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.


    அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் கருத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். அவர் கூறியதாவது:-

    கமல் இந்து தீவிரவாதம் பற்றி பேசியது தவறு என்றால், நாக்கை அறுப்பேன் என்று அமைச்சர் பேசியது சரியா? இதுவும் தீவிரவாதம். சுதந்திர இந்தியாவில் முதல் பயங்கரவாதி மட்டுமல்ல ஆர்.எஸ்.எஸ்., ஜனசங்கம், இந்து மகா சபை போன்றவற்றில் உள்ளவர்கள், மாற்று கருத்து உடையோரை அழிக்க வேண்டும் என்பதில் உறுதியாக நம்பிக்கை உடையவர்கள். ஐ.எஸ். என்ற பயங்கரவாத அமைப்புக்கு இணையான அமைப்பு ஆர்.எஸ்.எஸ். எனவே கமல்ஹாசன் கூறியதை ஆயிரம் சதவீதம் ஆதரிக்கிறேன்

    இவ்வாறு அவர் கூறினார்.
    சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என்று பேசிய கமல்ஹாசன் நாக்கை அறுக்க வேண்டும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.
    தூத்துக்குடி:

    அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தூத்துக்குடியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என்று கமல்ஹாசன் பேசி இருக்கிறார். அவரது கொழுப்பேறிய நாக்கை அறுக்க வேண்டும். அவரது நாக்கில் சனி. இந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும் ஊரில் சென்று அவர் பேசி உள்ளார். தீவிரவாதிகளுக்கு மதம் கிடையாது. அவர்களை தீவிரவாதி என்றுதான் கூற வேண்டும்.

    சிறுபான்மையினர் ஓட்டை பெறுவதற்காக இந்துக்களை பற்றி பேசும் கமல்ஹாசன் நாக்கை ஒருகாலத்தில் அறுக்கத்தான் போகிறார்கள். ஏனென்றால் ரொம்ப பேசுகிறார். இந்து மதம் புனிதமான மதம். மற்ற மதங்களுக்கு முன்னோடி மதம் இந்து மதம். இந்த மதத்தை புண்படுத்துவது சில கட்சிகளுக்கு தொழிலாகி விட்டது.

    கி.வீரமணி, மு.க.ஸ்டாலின் இந்துக்கள் சடங்குகளை அவமானப்படுத்தி பேசுவர். பின்னர் ஓட்டுக்காக திருநீறு பூசிக் கொள்வார். மாலையை வாங்கிக் கொள்வார். அவர்கள் நடிப்பார்கள். தற்போது கமல்ஹாசன் அவர்களோடு சேர்ந்து இருக்கிறார்.

    ஒற்றுமையாக வாழும் மக்களிடையே வாக்கு ஒன்றையே குறிக்கோளாக வைத்து, ஓட்டு வாங்குவதற்காகவே குறுக்குசால் ஓட்டும் வேலையை மு.க.ஸ்டாலின், கி.வீரமணி செய்தனர். தற்போது கமல்ஹாசன் ஆரம்பித்து உள்ளார். இது தவிர்க்கப்பட வேண்டிய கூட்டம். ஒடுக்கப்பட வேண்டிய கூட்டம். ஒழிக்கப்பட வேண்டிய அரசியல் வழிமுறை, நெறிமுறை.



    இது போன்ற பேச்சுக்களை கமல்ஹாசன் நிறுத்த வேண்டும் அல்லது நிறுத்தப்பட வேண்டும். தேர்தல் ஆணையம் உரிய முறையில் தலையிட்டு அவரது கட்சியை தடை செய்ய வேண்டும். கட்சி வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்.

    தி.மு.க. என்று சொன்னாலே தில்லுமுல்லு கட்சிதான். ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளர் என்று அறிவித்தார். அன்றே ராகுல்காந்திக்கு நேரம் சரி இல்லை என்று சொன்னோம். ஏனென்றால் நல்லவர்கள் வாயில் இருந்து நல்ல வார்த்தை வந்தால்தான் பலிக்கும்.

    மு.க. ஸ்டாலின் நயவஞ்சகர். பாம்பின் வாயில் இருந்து வி‌ஷம்தான் வரும். அது போன்று மு.க.ஸ்டாலின் ராகுல்காந்தி பிரதமர் வேட்பாளர் என்று கூறிவிட்டு, சந்திரசேகரராவுடன் 3-வது அணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இது கூட்டணிக்கு குழிபறிக்கும் செயலாகும்.

    கூட்டணியில் உள்ளவர்களை தோற்கடிப்பதுதான் தி.மு.க.வினர் வேலை. அதனை மு.க.ஸ்டாலின் செய்து வருகிறார். நம்பகத்தன்மை இல்லாத கட்சி என்பதற்கு எடுத்துக்காட்டு தி.மு.க. தி.மு.க.வுக்கு தமிழ்நாட்டில் செல்வாக்கு கிடையாது. அந்தமானில் சென்று நிற்க வேண்டியதுதான்.

    அடையாளம் காணப்பட்ட தலைவராக எடப்பாடி பழனிசாமி உருவாகி உள்ளார். கட்சியையும், ஆட்சியையும் சிறப்பாக நடத்தி வருகிறார் என்பதை மக்கள் நம்புகிறார்கள். இதனால் தான் மக்கள் வெள்ளத்தில் நீந்தி வருகிறார். எங்களுக்கு வரக்கூடிய கூட்டம் மக்கள் விரும்பி வரக்கூடிய கூட்டம். இந்த கட்சிதான் ஆளும். வாழும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×