search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "jewel theft"

    • அசோக்குமாரிடம் மோட்டார் சைக்கிள் மற்றும் தங்கஞ் சங்கிலியை வழிப்பறி செய்ததை ஒப்புக்கொண்டனர்.
    • 3 பவுன் தங்க சங்கலி, ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள சேடபாளையம் பகுதியைச் சேர்ந்த அசோக்குமார்(46) இவர் கடந்த மார்ச் 2 ந்தேதி அன்று இரவு வெட்டுப்பட்டான் குட்டை பகுதியில் இருந்து சேடபாளையம் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது வாலிபர் ஒருவர் லிப்ட் கேட்டு உள்ளார். அதற்காக அவர் வண்டியை நிறுத்தி எங்கு செல்ல வேண்டும் என கேட்டுக் கொண்டிருந்தபோது, அங்கு மறைந்திருந்த 2 பேர் ஓடிவந்தனர். அசோக்குமாரை மிரட்டி அவர் அணிந்திருந்த 3 பவுன் தங்கச் சங்கிலி, மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறித்துக்கொண்டு, மின்னல் வேகத்தில் மறைந்து விட்டனர். பின்னர் இது குறித்து அசோக் குமார் பல்லடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார் இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் பல்லடம் அருகே உள்ள அருள்புரம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்களை பிடித்து விசாரித்த போது முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர். அவர்களை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்தபோது, அவர்கள் அசோக்குமாரிடம் மோட்டார் சைக்கிள் மற்றும் தங்கஞ் சங்கிலியை வழிப்பறி செய்ததை ஒப்புக்கொண்டனர். போலீசாரது விசாரணையில் அவர்கள் பல்லடம் அருகே உள்ள அருள் புரத்தைச் சேர்ந்த பாரதி என்பவரது மகன் ராகுல் (20) பல்லடம் அம்மாபாளையம் பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவரது மகன் தாமரைச்சந்திரன்(19,)திண்டுக்கல் மாவட்டம் தர்மத்துப்பட்டியைச் சேர்ந்த மருதமுத்து என்பவரது மகன் பிரவீன் குமார்(24) ஆகிய 3 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 3 பவுன் தங்க சங்கலி, ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • மூதாட்டியிடம் 8 பவுன் நகை பறித்தார்
    • இது குறித்த புகாரின் பேரில், வாங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கரூர்:

    கரூரை அடுத்த மண்மங்கலம் அருகே பாலாஜி நகரை சேர்ந்தவர், சந்திரா (வயது 63). இவர், தன் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தார். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், சந்திராவிடம், கத்தியை காட்டி மிரட்டி, அவர் அணிந்திருந்த, 8 பவுன் நகைகளை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுவிட்டனர். கொள்ளையர் களுடன் போராடியதில், சந்திராவுக்கு சிறிய காயம் ஏற்பட்டது. இது குறித்த புகாரின் பேரில், வாங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


    • கண்காணிப்பு கேமராவில் சிக்கினார்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் சலவன் பேட்டை திருப்பூர் குமரன் தெருவை சேர்ந்தவர் குப்பு (வயது 55) அந்த பகுதியில் வீட்டு வேலை செய்து வந்தார்.

    கடந்த 22-ந் தேதி இவர் வீட்டை விட்டு வெளியே வந்தார். அப்போது ரத்த அழுத்தம் காரணமாக அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது.

    அப்போது அந்த வழியாக பின்னர் சென்று கொண்டிருந்தார் அவரிடம் தனக்கு மயக்கம் வருவதாக குப்பு கூறினார். உடனே அந்த பெண் முதலுதவி அளிப்பதாக கூறி குப்புவை அவரது வீட்டுக்குள் அழைத்துச் சென்றார். வீட்டுக்குள் சென்றதும் குப்பு மயங்கி விழுந்தார்.

    இதனை பயன்படுத்திக் கொண்ட அந்தப் பெண் குப்பு அணிந்திருந்த 3 பவுன் தங்க நகைகளை பறித்து கொண்டு தப்பி சென்று விட்டார்.

    சிறிது நேரம் கழித்து மயக்கம் தெளிந்து குப்பு கண்விழித்தார். அப்போது அவரது நகைகள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து வேலூர் தெற்கு குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    மேலும் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.

    அப்போது குப்புவிற்கு முதலுதவி செய்வது போல நடித்து நகை பறித்து சென்ற பெண்ணின் உருவம் கேமராவில் பதிவாகி இருந்தது. இதன் மூலம் மூதாட்டியிடம் நகை பறித்த பலவன்சாத்துகுப்பம் கலைஞர் நகரை சேர்ந்த வனிதா (39) என்பவரை போலீசார் இன்று கைது செய்தனர்.

    கைதான வனிதா ஏற்கனவே பல ஆஸ்பத்திரிகளில் நர்சாகப் பணியாற்றி உள்ளார். சம்பவத்தன்று குப்பு மயங்கியதும் நகை பறித்ததை ஒப்புக் கொண்டுள்ளார்.

    • கோவில் திருவிழாவுக்கு சென்று விட்டு 2 மணி நேரத்தில் வீட்டுக்கு வந்து பார்த்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.
    • கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

    பாகூர்:

    புதுவை தவளக்குப்பத்தை அடுத்த நல்லவாடு பகுதியை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (வயது 41). தேங்காய் வியாபாரம் செய்து வருகிறார்.

    இவர் கடந்த ஆண்டு தானம்பாளையம் பகுதியில் புதியமனை வாங்கி வீடு கட்டி குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு மனைவி 2 மகள்கள் உள்ளனர்.

    இவரது சொந்த ஊரான நல்லவாடு பகுதியில் அங்காளம்மன் கோவில் மயான கொள்ளை நடந்து வருகிறது. இதனால் வியாபாரம் முடிந்து தினமும் இரவு நேரங்களில் குடும்பத்துடன் திருவிழாவுக்கு சென்று வந்தார்.

    அதுபோல் நேற்று கோவிலில் முக்கிய நிகழ்ச்சி நடைபெற்றதால் மாலை 6.00 மணி அளவில் வீட்டை பூட்டிக்கொண்டு மனைவி மற்றும் குழந்தைகளுடன் நல்லவாடு கோவிலுக்கு சென்றார்.

    அங்கு சாமியை தரிசித்து விட்டு இரவு 8.30 மணி அளவில் சத்தியமூர்த்தி வீடு திரும்பினார். அப்போது வீட்டில் கதவுகள் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    பின்னர் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் இருந்த 2 பீரோக்களும் உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்ததை கண்டு திடுகிட்டார்.

    2 பீரோக்களிலும் வைக்கப்பட்டிருந்த தங்க செயின், ஆரம், நெக்லஸ், மோதிரம், தாலி சரடு என சுமார் 15 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. கொள்ளைபோன நகைகளின் மதிப்பு ரூ.6 லட்சம் ஆகும்.

    கோவில் திருவிழாவுக்கு சென்று விட்டு 2 மணி நேரத்தில் வீட்டுக்கு வந்து பார்த்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. யாரோ மர்ம நபர்கள் தொடர்ந்து நோட்டமிட்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இதுபற்றி தவளக்குப்பம் போலீஸ் நிலையத்திற்கு சத்தியமூர்த்தி புகார் செய்தார். தகவல் அறிந்ததும் அரியாங்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன், தவளக் குப்பம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் திரு முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்தை பார்வை யிட்டு விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது வீட்டில் மிளகாய் பொடி, மஞ்சள் பொடி தூவி விட்டு மர்ம நபர்கள் நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    புதிய மனைப்பிரிவில் வீடு இருந்ததால் அங்கு கண்காணிப்பு கேமராக்கள் எதுவும் இல்லாத நிலையில் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார்

    தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பையும், அதிர்ச்சி யையும் ஏற்படுத்தியுள்ளது. 

    • தேன்மொழியின் கழுத்தை நெரித்த இளைஞர் தங்கத்தாலி, தோடு, மூக்குத்தி போன்றவற்றை பறித்துக் கொண்டு மாயமானார்.
    • கண்காணிப்பு கேமிரா பதிவுகளை சேகரித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த துக்கியாம்பாளையம் ஊராட்சி, மேலுார் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி தனபால் மனைவி தேன்மொழி (வயது 37). இவர் நேற்று மாலை இவரது பூந்தோட்டத்தில் பூ பறித்துக் கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக, இரு சக்கர வாகனத்தில் வந்த டிப்டாப் உடை அணிந்த மர்மநபர் ஒருவர், தனக்கு தாகமாக இருப்பதாகக் கூறி, குடிப்பதற்கு தண்ணீர் கேட்டுள்ளார்.

    இதனை நம்பிய தேன்மொழி, அந்த இளைஞருக்கு தண்ணீர் கொடுத்துள்ளார். அப்போது தேன்மொழியின் கழுத்தை நெரித்த அந்த இளைஞர், அவர் கழுத்தில் அணிந்திருந்த தங்கத் தாலி மற்றும் தோடு, மூக்குத்தி ஆகியவற்றை பறித்துக் கொண்டு மாயமானார்.

    இதுகுறித்து தகவலறிந்த வாழப்பாடி இன்ஸ்பெக்டர் உமாசங்கர் தலைமையிலான தனிப்படை போலீசார், பெண்ணிடம் தங்க நகைகளை பறித்த மர்ம நபரை பிடிக்க, கண்காணிப்பு கேமிரா பதிவுகளை சேகரித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    நள்ளிரவு அடையாளம் தெரியாத 2 பேர் வீட்டில் உள்ளே நுழைந்து 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே மேல் நாரியப்பனூர் கிராமத்தை சேர்ந்த சின்னசாமி. இவருடைய மனைவி செல்லம்மாள் (வயது 60). இவர்களது மகள், மகன்கள் அனைவரும் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர்

    இந்நிலையில் வழக்கம்போல் சின்ன சாமி, செல்லமாள் இரவு வீட்டில் தூங்கி கொண்டு இருந்தனர். நள்ளிரவு அடையாளம் தெரியாத 2 பேர் வீட்டில் உள்ளே நுழைந்து சின்னசாமி மற்றும் செல்லமாளை தாக்கி அவரின் கழுத்தில் இருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர்.இது குறித்து சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்து தப்பிச்சென்ற திருடர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த திருட்டு சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரப்பரப்பு ஏற்படுத்தி உள்ளது.

    • நேற்று இரவு வழக்கம் போல கோவிலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார்.
    • கோவிலின் கேட் திறக்கப்பட்டு உட்புற கதவு திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் வானூரைஅடுத்த தென்திருவலூர் கிராமத்தில் பெருமாள் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோவில் ஊரின் நடுவில் இருக்கிறது. இங்கு பூசாரியாக பணிசெய்து வரும் ஸ்ரீதர் நேற்று இரவு வழக்கம் போல கோவிலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார்.    இன்று காலை கோவிலை திறப்பதற்காக வந்தார். அப்போது கோவிலின் கேட் திறக்கப்பட்டு உட்புற கதவு திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அக்கம் பக்கத்தினருடன் கோவிலுக்குள் சென்று பார்த்தார். கோவில் பிரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 2 ஆயிரம் ரூபாய் பணம் திருடப்பட்டி ருந்தது. உடனடியாக கோவிலின் கருவறைக்கு சென்று பார்த்த போது பெருமாளின் காலடியில் வைக்கப்பட்டிருந்த 5 கிராம் தங்க நாணயமும் திருடப்பட்டிருந்தது.  துகுறித்து கிளியனூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பேரில் விரைந்து வந்த கிளியனூர் இன்ஸ்பெக்டர் பாலமுரளி தலைமையிலான போலீசார் தென்திருவலூர் கிராமத்திற்கு விரைந்து வந்தனர். மேலும், விழுப்புரம் மாவட்ட தடயவியல் நிபுணர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன்பேரில் கைரேகை நிபுணர் ஸ்ரீதர் தலைமை யிலான குழுவினர் விரைந்து வந்து கோவிலு க்குள் இருக்கும் தடயங்களை ஆய்வு செய்து வருகின்றனர். ஊரின் நடுவில் இருக்கும் கோவிலில் நள்ளிரவில் கொள்ளை சம்பவம் நடந்தது அக்கிராமத்தினரிடையே அச்சத்தையும், பரபர ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

    • இதையடுத்து குப்புலட்சுமி நகையை எடுத்து கொண்டு மீண்டும் ஊருக்கு செல்வதற்காக பஸ்சில் ஏறினார்.
    • இதன் மதிப்பு ரூ.50 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது.

    கோபி

    கோவை மாவட்டம் சிறுமுகை பகுதியை சேர்ந்தவர் குப்புலட்சுமி (70). இவர் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள ஒரு நகை கடைக்கு நகைகள் விற்பனை செய்ய வந்தார். தொடர்ந்து அவர் 1¼ பவுன் நகைைய விற்பனை செய்ய கொடுத்தார்.

    அப்போது அந்த நகை தரம் குறைவாக இருப்பதாக கூறி கடைக்காரர் நகையை திருப்பி கொடுத்து விட்டார்.

    இதையடுத்து குப்புலட்சுமி நகையை எடுத்து கொண்டு மீண்டும் ஊருக்கு செல்வதற்காக பஸ்சில் ஏறினார்.

    அப்போது தான் கொண்டு வந்த பையை பார்த்த போது அதில் வைத்து இருந்த நகை காணவில்லை. இதன் மதிப்பு ரூ.50 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது.

    நகை திருடப்பட்டது தெரிய வந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் அக்கம் பக்கம் தேடி பார்த்தும், விசாரித்தும் நகை கிடைக்கவில்லை.

    இது குறித்து குப்புலட்சுமி கோபிசெட்டிபாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மூதாட்டி காதுகளை அறுத்து கம்மல் பறித்த வழக்கில் போலீசார் விசாரணை
    • தொடர் கொள்ளை சம்பவங்களால் பொதுமக்கள் பீதி

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர்அடுத்த கந்திலி அருகே உள்ள சுந்தரம்பள்ளி கிராமத்தையொட்டி சாணிப்பட்டி கொல்ல கொட்டாய் பகுதி உள்ளது.

    இந்தப்பகுதியில் வசிப்பவர் தனபாக்கியம் (வயது 60). இவரது கணவர் சின்னப் பையன் சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டதால், தனியாக வசிக்கும் தனபாக்கியம் அவரது நிலத்தில் பயிரிட்டு வருகிறார். இவரது மகன் தமிழ்ச்செல்வன் வீடு 200 அடி தொலைவில் உள்ளது. இவர் அவரது மனைவி கோமதி மற்றும் பிள்ளைகளுடன் தனியாக வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு தனபாக்கியம் வீட்டிற்கு 2 வாலிபர்கள் பைக்கில் வந்துள்ளனர். அவர்களை பார்த்து நாய் குரைத்துள்ளது. நாய் குரைக்கும் சத்தம் கேட்டதும் தனியாக இருந்த தனபாக்கியம் வீட்டில் இருந்து வெளியே வந்துள்ளார்.

    அப்போது தனபாக்கியத்தை தாக்கி கம்மலுடன் காதுகளை அறுத்து சென்றனர்.அப்போது அவர்களில் ஒருவன் திடீரென கத்தியை காட்டி மிரட்டி தனபாக்கியத்தின் வாயை அமுக்கவே மற்றொருவன் தனபாக்கியம் அவருடைய இரண்டு காதுகளையும் ஒரு பவுன் தங்க கம்மலுடன் கத்தியால் ரத்தம் சொட்ட சொட்ட அறுத்து கழுத்து, வயிறு பகுதிகளிலும் கத்தியால் கிழித்து விட்டு தங்க கம்மல்களுடன் தப்பினர்.

    ரத்த வெள்ளத்தில் அலறி துடித்த தனபாக்கியத்தின் சத்தம் கேட்டு அருகில் இருந்த அவரது மகன் தமிழ்ச்செல்வன், மருமகள் கோமதி ஆகியோர் வந்தனர். அவர்களிடம் கதறியவாறு தனபாக்கியம் கூறிக்கொண்டிருந்தபோதே அவர் மயக்கம் அடைந்துள்ளார். தனிப்படை அமைத்து விசாரணை உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தனபாக்கியத்தை கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்துள்ளனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் கந்திலி போலீசார் சென்று விசாரணை நடத்தினர். மேலும் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சம்பவம் நடந்த இடத்தின் அருகில் கிருஷ்ணகிரி மாவட்ட எல்லை இருப்பதால் காதை அறுத்து சென்றவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த நபர்களா என்பது குறித்தும், தர்மபுரி மெயின் ரோட்டில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கண்காணிப்பு கேமராவில் இரண்டு வாலிபர்களின் படம் பதிவாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

    எனவே குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் தெரிவித்தனர். திருப்பத்தூர் பகுதியில் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

    • கூட்டத்தில் பிரவீன்குமாரின் கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை ஒரு பெண் பறிக்க முயற்சி செய்துள்ளாா்.
    • 3 பேரையும் கைது செய்த போலீசார் அவா்களை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, மாவட்ட பெண்கள் சிறையில் அடைத்தனா்.

    காங்கயம்:

    ஈரோடு மாவட்டம் கொடுமுடியை சோ்ந்தவா் பிரவீன்குமாா் (வயது 25). காா் டிரைவரான இவா் காங்கயத்தை அடுத்த மடவிளாகம் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சிக்கு சென்றுள்ளாா். அப்போது கூட்டத்தில் பிரவீன்குமாரின் கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை ஒரு பெண் பறிக்க முயற்சி செய்துள்ளாா். உடனடியாக சுதாரித்துக்கொண்ட பிரவீன்குமாா், கூட்டத்தில் சந்தேகப்படும்படியாக நடமாடிய 3 பெண்கள் குறித்து காங்கயம் போலீசாரிடம் புகாா் தெரிவித்துள்ளாா்.

    இதையடுத்து மகளிா் காவல் நிலைய போலீசாா், 3 பெண்களையும் பிடித்து விசாரித்தனா். அதில் அந்த 3 பெண்களும் நாகா்கோவில், ஒழுவஞ்சேரி பகுதியைச் சோ்ந்த சுப்புதாய் (30), அட்சயா (28), மரியா (33) என்பதும், இவா்கள் 3 பேரும் கோவில் திருவிழா நிகழ்ச்சிகளுக்கு சென்று நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபடுவதும் தெரிய வந்தது. இதையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார் அவா்களை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, மாவட்ட பெண்கள் சிறையில் அடைத்தனா். 

    • மர்ம நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • 8 பவுன் தங்க நகைகளை காணவில்லை.

    கோவை,

    கோவை மசக்காளிபாளையம் பகுதியை சேர்ந்தவர் இளையதாசன் (வயது 34).

    இவர் புனேவில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை செய்து வருகிறார்.

    இந்நிலையில், கோவையில் இருந்த அவரது மனைவி சசி (29), பொங்கல் பண்டிகையை கொண்டாட கடந்த 13-ந் தேதி தனது சொந்த ஊரான கடலூருக்கு சென்றார்.

    பின்னர் 17-ந் தேதி கோவை திரும்பினார். வீட்டிற்கு சென்று பார்த்த போது அவர் வீட்டில் பேக்கில் வைத்திருந்த வளையல், செயின், பிரேஸ்லெட் போன்ற 8 பவுன் தங்க நகைகளை காணவில்லை. யாரோ திருடி சென்று விட்டனர்.

    இது குறித்து அவர் புனேவில் உள்ள தனது கணவரிடம் தெரிவித்தார். அவர் அங்கிருந்து கோவை திரும்பினர்.

    தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து சிங்காநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டு போனது எப்படி? திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மோட்டார் சைக்கிள் தடுமாறி கணவன்- மனைவி இருவரும் கீழே விழுந்துள்ளனர்.
    • சுந்தரி கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள குப்புசாமி நாயுடுபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மனைவி சுந்தரி(வயது 54). சம்பவத்தன்று கணவன் - மனைவி இருவரும் பல்லடம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், செம்மிபாளையம் பிரிவு அருகே சென்று கொண்டிருந்தபோது, மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் இரண்டு பேர், முத்துசாமி ஒட்டிய மோட்டார் சைக்கிளை, காலால் எட்டி உதைத்துள்ளனர் .இதில் மோட்டார் சைக்கிள் தடுமாறி கணவன்- மனைவி இருவரும் கீழே விழுந்துள்ளனர்.

    இதனைப் பயன்படுத்தி கொண்ட மர்ம நபர்கள் சுந்தரி அணிந்திருந்த 4 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர். இதுகுறித்து சுந்தரி கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    ×