search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பல்லடம் அருகே  மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் நகைப் பறிப்பு
    X

    பல்லடம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் நகைப் பறிப்பு

    • மோட்டார் சைக்கிள் தடுமாறி கணவன்- மனைவி இருவரும் கீழே விழுந்துள்ளனர்.
    • சுந்தரி கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள குப்புசாமி நாயுடுபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மனைவி சுந்தரி(வயது 54). சம்பவத்தன்று கணவன் - மனைவி இருவரும் பல்லடம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், செம்மிபாளையம் பிரிவு அருகே சென்று கொண்டிருந்தபோது, மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் இரண்டு பேர், முத்துசாமி ஒட்டிய மோட்டார் சைக்கிளை, காலால் எட்டி உதைத்துள்ளனர் .இதில் மோட்டார் சைக்கிள் தடுமாறி கணவன்- மனைவி இருவரும் கீழே விழுந்துள்ளனர்.

    இதனைப் பயன்படுத்தி கொண்ட மர்ம நபர்கள் சுந்தரி அணிந்திருந்த 4 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர். இதுகுறித்து சுந்தரி கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    Next Story
    ×