search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வானூர் அருகே பெருமாள் கோவில் பூட்டை உடைத்து பணம், நகை கொள்ளை
    X

    மர்மநபர்களால் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட தென்திருவலூர் பெருமாள் கோவில்.

    வானூர் அருகே பெருமாள் கோவில் பூட்டை உடைத்து பணம், நகை கொள்ளை

    • நேற்று இரவு வழக்கம் போல கோவிலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார்.
    • கோவிலின் கேட் திறக்கப்பட்டு உட்புற கதவு திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் வானூரைஅடுத்த தென்திருவலூர் கிராமத்தில் பெருமாள் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோவில் ஊரின் நடுவில் இருக்கிறது. இங்கு பூசாரியாக பணிசெய்து வரும் ஸ்ரீதர் நேற்று இரவு வழக்கம் போல கோவிலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். இன்று காலை கோவிலை திறப்பதற்காக வந்தார். அப்போது கோவிலின் கேட் திறக்கப்பட்டு உட்புற கதவு திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அக்கம் பக்கத்தினருடன் கோவிலுக்குள் சென்று பார்த்தார். கோவில் பிரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 2 ஆயிரம் ரூபாய் பணம் திருடப்பட்டி ருந்தது. உடனடியாக கோவிலின் கருவறைக்கு சென்று பார்த்த போது பெருமாளின் காலடியில் வைக்கப்பட்டிருந்த 5 கிராம் தங்க நாணயமும் திருடப்பட்டிருந்தது. துகுறித்து கிளியனூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பேரில் விரைந்து வந்த கிளியனூர் இன்ஸ்பெக்டர் பாலமுரளி தலைமையிலான போலீசார் தென்திருவலூர் கிராமத்திற்கு விரைந்து வந்தனர். மேலும், விழுப்புரம் மாவட்ட தடயவியல் நிபுணர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன்பேரில் கைரேகை நிபுணர் ஸ்ரீதர் தலைமை யிலான குழுவினர் விரைந்து வந்து கோவிலு க்குள் இருக்கும் தடயங்களை ஆய்வு செய்து வருகின்றனர். ஊரின் நடுவில் இருக்கும் கோவிலில் நள்ளிரவில் கொள்ளை சம்பவம் நடந்தது அக்கிராமத்தினரிடையே அச்சத்தையும், பரபர ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×