search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "jewel theft"

    • வீட்டின் கதவை திறந்து வைத்துக்கொண்டு வெளியே சென்று இருந்தார்.
    • 8 பவுன் நகை திருடப்பட்டிருப்பது தெரிய வந்தது.

    திருப்பூர் :

    திருப்பூர் 15 வேலம்பாளையம் சொர்ணபுரி அவென்யூவில் வசித்து வருபவர் மோகன் ( வயது 53). நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இன்று காலை இவர் வீட்டின் கதவை திறந்து வைத்து க்கொண்டு வெளியே சென்று இருந்தார்.

    இதனை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் வீட்டிற்குள் புகுந்ததுடன், பீரோவை திறந்து நகையை எடுத்து க்கொண்டிருந்தனர். அப்போது சத்தம் கேட்டு மோகனின் மனைவி எழுந்தார். உடனே மர்ம ஆசாமிகள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். பின்னர் பீரோவில் பார்த்த போது அதில் இருந்த ரூ.3.50 லட்சம் மதிப்புள்ள 8 பவுன் நகை திருட ப்பட்டிருப்பது தெரிய வந்தது. இது குறித்து 15 வேலம்பாளையம் போலீசில் புகார் செய்ய ப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகி ன்றனர்.

    • டிரைவரிடம் 2 பவுன் தங்க நகை பறித்தனர்
    • போலீசார் வழக்குப் பதிவு செய்து மர்ம ஆசாமிகள் 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

    திருச்சி,

    புதுக்கோட்டை மாவட்டம் களத்தூர் கிராமப்பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 32) இவர் புதுக்கோட்டையில் உள்ள தனியார் மெட்டல் கம்பெனியில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று திண்டிவனம் செல்வதற்காக லாரியில் மோகன்ராஜ் சென்றுகொண்டிருந்தார். அப்பொழுது திருச்சி- சென்னை பைபாஸ் சாலையில் சஞ்சீவி நகர் அருகே லாரியை மோகன்ராஜ் நிறுத்தினார். அப்பொழுது 3 மர்ம ஆசாமிகள் மோகன்ராஜ்யிடம் தகராறாரில் ஈடுபட்டு கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க நகையை பறித்துக் கொண்டு ஓடி விட்டனர். இது குறித்து கோட்டை போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து மர்ம ஆசாமிகள் 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.


    • கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து விசாரணை
    • செயின் 2 துண்டானது

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் தாலுகா செளடேகுப்பம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தம்மாள் (வயது 70). இவர் அப்பகுதியில் மாரியம்மன் கோயில் அருகே பெட்டிக்கடை நடத்தி வருகிறார்.

    நேற்று பைக்கில் 2 மர்ம கும்பல் கடைக்கு வந்தனர்.

    பின்னர் தண்ணீர் பாட்டில் வாங்கினர். பிறகு சிகரெட் கேட்டுள்ளனர் அப்போது கோவிந்தம்மாள் உள்ளே சென்றபோது திடீரென அவர் கழுத்தில் இருந்த 4 பவுன் செயினை பறித்துள்ளனர்.

    சுதாரித்துக் கொண்ட கோவிந்தம்மாள் செயினை இறுக்கி பிடித்துள்ளார். செயின் 2 துண்டாகியுள்ளது.

    ஒரு துண்டு கோவிந்தம்மாள் கையிலும் மற்றொரு துண்டு கீழே விழுந்தது உடனே கண்ணிமைக்கும் நேரத்தில் மர்ம கும்பல் அந்த துண்டான செயினை எடுத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர்.

    இதுகுறித்து தாலுகா போலீஸ் நிலையத்தில் மூதாட்டி புகார் அளித்தார்.

    புகாரின் அடிப்படையில் போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • சமயநல்லூர் அருகே மெக்கானிக் வீட்டில் நகை-பணம் திருடப்பட்டது.
    • அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிரா பதிவுகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்கின்றனர்.

    மதுரை

    மதுரை மாவட்டம் சமயநல்லூர் வி.எம்.டி.நகர் வைகை ரோட்டில் வசித்து வருபவர் கண்ணன் (வயது47). கார் பழுதுபார்க்கும் மெக்கானிக் செட் வைத்துள்ளார். நேற்று மாலை இவர் வீட்டை பூட்டிவிட்டு மகளுடன் மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றார்.

    பின்னர் இரவில் வீடு திரும்பிய போது அவரது வீட்டின் கதவு பூட்டும், மரக்கதவும் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த லாக்கரில் 4¼பவுன் நகை மற்றும் ரூ.10ஆயிரம் திருட்டு போயிருந்தது.

    இதுகுறித்த புகாரின்பேரில் சமயநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தி, சப்-இன்ஸ்பெக்டர் தியாகராஜன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருட்டில் ஈடுபட்டவர்களை கண்டறிய அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிரா பதிவுகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்கின்றனர்.

    • நகை பறித்த கொள்ளையனை போலீசார் கைது செய்தனர்.
    • தலைமறைவாகிய 5 பேரை தேடி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை சதாசிவம் நகரை சேர்ந்தவர் பிரேம் குமார் (வயது 43). இவர் திரைப்படங்க ளுக்கான பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார்.

    ஜல்லிக்கட்டு பேரவை மாவட்ட தலைவராகவும் உள்ளார். பிரேம்குமார் நண்பர் பாண்டியுடன் காரில் பாண்டி கோவில் ரிங் ரோட்டுக்கு சென்றார். அங்குள்ள மதுபான பாரில், பாண்டி சரக்கு வாங்கு வதற்காக சென்றார். அங்கு வந்த 5 பேர் கும்பல் பிரேம் குமாரை அரிவாள் முனையில் கடத்தியது.

    அவர்களது கார் சிவகங்கை மாவட்டம், இடையமேலூர், புதுப்பட்டி கண்மாய்க்கு சென்றது. அந்த கும்பல் பிரேம் குமாரிடம் ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டியது. இதற்கு பிரேம்குமார், "என்னிடம் அவ்வளவு பணம் இல்லை" என்று தெரிவித்தார்.

    அப்போது அந்த கும்பல், "உன் வீட்டில் இருக்கும் நகைகளை கொடு. இல்லை யென்றால் கொலை செய்து விடுவோம்" என்று மிரட்டியது. பயந்து போன பிரேம்குமார் உடனடியாக மனைவிக்கு போன் செய்தார். பின்னர் கடத்தல் கும்பலில் ஒருவன் மோட்டார் சைக்கிளில் கருப்பாயூரணியில் உள்ள பிரேம் குமார் வீட்டுக்கு சென்று 34 பவுன் தங்க நகைகளை வாங்கிச் சென்றான்.

    இதையடுத்து அந்த கும்பல் பிரேம்குமாரை கே.கே. நகரில் இறக்கி விட்டு தப்பியது.

    இது குறித்து அவர் மாட்டுத்தாவணி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதையடுத்து கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய மேலபனங்காடி அழகுமலையான் நகரை சேர்ந்த குண்டு சரவணன் (42) என்பவர் ஒத்தக் கடையில் பதுங்கி யிருப்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 34 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    இந்த சம்பவத்தில் தொடர்புடைய பாய்ஸ் மணி, இடையபட்டி தன பால், அவரது சகோதரர் தனசேகர், பாய்ஸ் மணியின் நண்பர் உள்பட 5 பேர் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்

    • மூதாட்டியிடம் 5 பவுன் நகை திருடிய பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
    • குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து திருடியதாக தெரிகிறது.

    மதுரை

    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள மட்டப்பாறை ராமராஜபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் மாசிலாமணி(வயது 80). இவரது கணவர் சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் மாசிலாமணி திண்டுக்க ல்லில் உள்ள மகன் பாண்டியராஜன் வீட்டில் தங்கியிருந்தார்.

    சம்பவத்தன்று நிலக்கோ ட்டையில் வசிக்கும் தனது மகள் வீட்டிற்கு செல்வ தற்காக மாசிலாமணி திண்டுக்கலில் இருந்து பஸ்சில் புறப்பட்டார். மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பஸ் நிலையத்தில் இறங்கிய அவர் அங்குள்ள மாதா கோவிலில் சிறிது நேரம் இளைப்பாற தங்கியுள்ளார்.

    அப்போது 35வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மாசிலாமணியிடம் பேச்சு கொடுத்துள்ளார். சிறிது நேரத்திலேயே மாசிலா மணியின் நம்பிக்கையை பெற்ற அந்த பெண், தான் நீரேத்தானில் உள்ள நாகம்மாள் கோவில் பூசாரி வீட்டிற்கு குறிகேட்க செல்வதாக கூறியுள்ளார். உடனே மாசிலாமணியும் தானும் வருவதாக கூறியுள்ளார்.

    இதையடுத்து இருவரும் நீரேத்தானுக்கு புறப்பட்டு சென்றனர். யூனியன் ஆபீஸ் ரோட்டில் உள்ள நாகம்மாள் கோவில் அருகே சென்றபோது அந்த பெண் மாசிலாமணிக்கு மயக்க மருந்து கலந்த பழச்சாறை கொடுத்ததாக தெரிகிறது. அதை குடித்த மாசிலாமணி சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார்.

    உடனே அந்த பெண், மூதாட்டி அணிந்திருந்த இருந்த 5 பவுன் நகை, பையில் வைத்திருந்த ரூ.5ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிக்கொண்டு மாயமானார். சில மணிநேரம் கழித்து விழித்தெழுந்த மாசிலா மணி, தான் அணிந்திருந்த நகை மற்றும் பையில் வைத்திருந்த பணம் காணா ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    தன்னுடன் வந்த பெண்ணை தேடிப்பார்த்த போது அவர் மாயமாகி விட்டது தெரியவந்தது. இதனால் தனது நகை மற்றும்ம பணத்தை அந்த பெண் தான் திருடி இருக்கவேண்டும் என்ற சந்தேகத்தின் பேரில் வாடிப்பட்டி போலீசில் புகார் செய்தார்.

    அவரது புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினார். மேலும் சம்பவம் நடந்த பகுதியில் இருந்த சி.சி.டி.வி. காமிரா வீடியோ பதிவுகளை ஆய்வு செய்தார். அதில் மாசிலாமணியுடன், ஒரு பெண் நடந்து செல்வது பதிவாகி இருந்தது.

    அந்த பெண் தான் தன்னிடம் பேச்சு கொடுத்த தாகவும், மயக்கமருந்து கலந்த குளிர்பானத்தை தந்ததாகவும் மாசிலாமணி அடையாளம் காட்டினர். இதையடுத்து அந்த பெண் யார்? என்று கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    சி.சி.டி.வி. காமிரா காட்சியில் மூதாட்டியிடம் நகை மற்றும் பணத்தை பறித்துச்சென்ற பெண்ணின் முகம் தெளிவாக தெரிவதால் விரைவில் அவர் சிக்கிவிடுவார் என்று போலீசார் தெரிவித்தனர்.

    • வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் நகை பறித்து கொள்ளையர்கள் தப்பி ஓட்டம்
    • இதுகுறித்து மணிகண்டம் போலீ–சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரு–கின்றனர்.

    திருச்சி:

    திருச்சியை அடுத்த மணிகண்டம் வாட்ஸ் நகர் பிள்ளையார் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது மனைவி நல்லம்மாள் (வயது 77). இவர் தனது மருமகளுடன் அந்தப் பகு–தியில் வசித்து வந்தார்.இதற்கிடையே மருமகள் ஒரு வேலை விஷயமாக வெளியூர் சென்று விட்டார். மூதாட்டி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப் போது 2 இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் அவரது வீட்டுக்கு வந்தனர். பின்னர் அவர்கள் திருமண அழைப்பிதழ் கொடுக்க வந்ததாக தெரிவித்தனர்.

    உடனே மூதாட்டி நல்லம் மாள் வாங்க..., வாங்க.... உள்ளே வந்து உட்காருங்க என கூறியுள்ளார். அதைத் தொடர்ந்து மர்ம நபர் கள் இருவரும் இரு நாற்காலி–களில் போய் அமர்ந்து கொண்டனர். பின்னர் அவர்கள் மூதாட்டி இடம் உறவினர்கள் போல நலம் விசாரித்து பேசினர்.மேலும் மதிய உணவை உங்கள் வீட்டில் சாப்பிட விரும்புவதாகவும் உரிமை–யோடு தெரிவித்து உள்ள–னர். உடனே மூதாட்டியும் விதவிதமாக மதிய உண–வுகளை தயார் செய்ய தொடங்கினார்.

    அப்போது அந்த மர்ம நபரில் ஒருவர், தாங்கள் அணிந்திருக்கும் செயின் நல்ல டிசைனாக இருக்கிறது. எந்த நகைக்கடையில் செய்து வாங்கினீர்கள் என கேட்டார். மேலும் அந்தச் செயினை ஒரு முறை பார்க்கலாமா? எனவும் கேட்டுள்ளனர்.உடனே நல்லம்மாள் தனது செயினை கழற்றி அவர்கள் கையில் கொடுத்துவிட்டு உணவு எடுப்பதற்காக சமையல் அறைக்குச் சென்றார். பின்னர் இருவருக்கும் உணவுகளை எடுத்துக் கொண்டு திரும்பிய போது அந்த மர்ம ஆசாமிகள் அந்த ரெண்டேகால் பவுன் செயினை எடுத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் பறந்து விட்டனர்.

    ஏமாற்றப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்த மூதாட்டி கதறி அழுதார். பின்னர் உடனடியாக மரு–மகளுக்கு செல்போனில் நடந்த சம்பவம் குறித்து தகவல் தெரிவித்தார். பின் னர் இது தொடர்பாக மணிகண்டம் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில மணிகண்டம் போலீ–சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரு–கின்றனர்.திருமண அழைப்பிதழ் கொடுப்பதாக நடித்து மூதாட்டியின் செயினை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்ப–டுத்தி உள்ளது.


    • மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலி பர்கள் முகவரி கேட்பது போல் செந்தமிழ் செல்வியிடம் பேச்சு கொடுத்தனர்.
    • நிலைதடுமாறிய செந்தமிழ் செல்வி தவறி கீழே விழுந்தார்.

    மதுராந்தகம்:

    அச்சரப்பாக்கம் அடுத்த பள்ளிப்பேட்டை மின்வாரிய குடியிருப்பு அருகில் வசிப்பவர் சிவ சண்முகம். இவரது மனைவி செந்தமிழ்செல்வி. படப்பையில் உள்ள அரசு மகளிர் பள்ளியில் ஆங்கில ஆசிரியைாக வேலைபார்த்து வருகிறார்.

    நேற்று மாலை அவர்பணி முடிந்ததும் பள்ளியில் இருந்து பஸ் மூலம் அச்சரப்பாக்கம் பஸ்நிலையம் வந்தார். பின்னர் அவர் வீட்டுக்கு நடந்து வந்து கொண்டு இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலி பர்கள் முகவரி கேட்பது போல் செந்தமிழ் செல்வியிடம் பேச்சு கொடுத்தனர். திடீரென அவர்கள் செந்தமிழ்ச்செல்வி அணிந்து இருந்த 5 பவுன் நகையை பறித்து தப்பி சென்றுவிட்டனர். இதில் நிலைதடுமாறிய செந்தமிழ் செல்வி தவறி கீழே விழுந்தார். இதுகுறித்து அவர் அச்சரப்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிரா பதிவு களை வைத்து தீவிர விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • கடையில் நகை வாங்குவது போல் நடித்து 2 பெண்கள் 3¾ பவுன் செயினை திருடிச்சென்றனர்.
    • தெற்கு வாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை திருடிய பெண்களை தேடி வருகின்றனர்.

    மதுரை

    லட்சுமிபுரம் 7-வது தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன்(வயது49). இவர் நகைக்கடை பஜாரில் கடை வைத்துள்ளார். சம்பவத்தன்று காலை இந்த கடைக்கு 35 வயது மதிக்கத்தக்க 2 பெண்கள் வந்தனர்.

    அவர்கள் இந்த கடையின் வாடிக்கையாளர்கள் என்று கூறி நகை வாங்க வந்துள்ளதாக தெரிவித்தனர். பல்வேறு டிசைன்களை காண்பிக்க சொல்லியுள்ளனர். பின்னர் டிசைன் பிடிக்கவில்லை என்று கூறிவிட்டு திரும்பிச் சென்றனர்.

    இதையடுத்து ஊழியர்கள் கடையில் வைத்திருந்த நகைகளை சரிபார்த்தனர். அப்போது 3¾ பவுன் செயின் திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்து தெற்கு வாசல் போலீசில் புகார் செய்யப்பட்டது.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை கடையில் கைவரிசை காட்டிய 2 பெண்களையும் தேடி வருகின்றனர். மேலும் நகை கடையில் உள்ள கண்காணிப்பு காமிரா பதிவுகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

    • ஓய்வு பெற்ற வனத்துறை அலுவலர் ஆறுமுகம் (வயது 62)பரிகம் செக்போஸ்ட் அருகே ஆறுமுகம் தனியே வசித்துவருகிறார் .மனைவியை பார்த்து விட்டு நேற்று மாலை வீடு திரும்பியபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது.
    • பீரோவும் உடைக்க ப்பட்டு அதிலிருந்த 8.5 பவுன் நகை கொள்ளையடி க்கப்பட்டி ருந்தது.

    கள்ளக்குறிச்சி:

    கச்சிராயபாளையம் அருகே பரிகம் செக்போஸ்ட் அருகே ஓய்வு பெற்ற வனத்துறை அலுவலர் ஆறுமுகம் (வயது 62) வசித்து வருகிறார். இவருக்கு முனியம்மாள் என்ற மனைவியும் செந்தில்குமார் என்ற மகனும் உள்ளனர். இவரது மகன் வெளிநாட்டிலும், மனைவி கள்ளக்குறிச்சியில் வசித்து வருகின்றனர். பரிகம் செக்போஸ்ட் அருகே ஆறுமுகம் தனியே வசித்து வருகிறார். இவர் சில தினங்களுக்கு முன்னர் கள்ளக்குறிச்சிக்கு சென்று மனைவியை பார்த்து விட்டு நேற்று மாலை வீடு திரும்பினார்.

    அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோவும் உடைக்க ப்பட்டு அதிலிருந்த 8.5 பவுன் நகை கொள்ளையடி க்கப்பட்டி ருந்தது. மேலும், வீட்டில் பொறுத்தப்பட்டிருந்த 4 சி.சி.டி.வி. கேமராக்களும் சேதப்படுத்தப்பட்டிருந்தது. மேலும், சி.சி.டி.வி. விடியோக்களை சேமித்து வைக்கும் ஹார்ட் டிஸ்க்கையும் கொள்ளையர்கள் எடுத்துச் சென்றதை கண்டு ஆறுமுகம் அதிர்ச்சியடைந்தார். இது குறித்து புகாரின் பேரில் கச்சிராயப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தடயங்களை சேகரித்தனர்.
    • வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு பழையபாளையம் கீதா நகரை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி மஞ்சுளா தேவி (55). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். செந்தில்குமார் கடந்த 12 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார்.

    தொழில் அதிபரான மஞ்சுளாதேவி கிரானைட் தொழில் செய்து வருகிறார். இவரது மகன் தற்போது அமெரிக்காவில் வேலை பார்த்து வருகிறார். மஞ்சுளா தேவி மட்டும் வீட்டில் இருந்து வருகிறார்.

    இந்நிலையில் அவ்வப்போது பூந்துறையில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்று வருவார். மஞ்சுளாதேவியின் வீடு கீழ்த்தளம் மற்றும் முதல் மாடி கொண்ட வீடாக உள்ளது.

    இந்நிலையில் சம்பவத்தன்று மஞ்சுளா தேவி தனது தாயாரை பூந்துறையில் உள்ள அவரது வீட்டில் கொண்டு விட்டுவிட்டு கொல்கத்தாவில் உள்ள காளி கோவிலுக்கு சாமி கும்பிட சென்றுவிட்டார். பின்னர் சாமி கும்பிட்டு விட்டு நேற்று மஞ்சள் தேவி மீண்டும் வீட்டுக்கு வந்தார்.

    அப்போது வீட்டின் ஜன்னல் கதவுகள் உடைந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கதவை திறந்து உள்ளே சென்றபோது வீட்டின் முதல் மாடி கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு மேலும் அதிர்ச்சி அடைந்தார்.

    வீட்டில் பீரோ இருக்கும் அறைக்கு சென்றபோது பீரோ உடைக்கப்பட்டு திறந்து இருந்தது. மேலும் அதில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன.

    பீரோவில் இருந்த வைரத்தோடு 3 ஜோடி, வைர வளையல் ஒரு ஜோடி, 4 வைர மோதிரம், 7 ஜோடி தங்கத்தோடு, 3 தங்க மோதிரம், 4 தங்க வளையல்கள், 3 தங்க பவள மாலை என மொத்தம் 18 பவுன் நகைகள் திருட்டு போயிருந்தது. மேலும் பீரோவில் இருந்த ரூ.4.50 லட்சம் ரொக்க பணமும் திருட்டு போய் இருந்தது. இதன் மொத்த மதிப்பு ரூ.12 லட்சத்து 54 ஆயிரம் ஆகும்.

    இதுகுறித்து வீரப்பன் சத்திரம் போலீசாருக்கு மஞ்சுளாதேவி புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தடயங்களை சேகரித்தனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் 2 நபர்கள் உள்ளே வருவது பதிவாகி இருந்தது. ஆனால் அந்த நபர்கள் சி.சி.டி.வி. கேமிராவை திருப்பி வைத்து விட்டதால் சரியாக அடையாளம் தெரியவில்லை.

    இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த துணிகர கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வீட்டில் ஆள் இல்லாததை தெரிந்து கொண்டு இந்த துணிகர கொள்ளை சம்பவம் நடந்துள்ளதால் மஞ்சுளா தேவி பற்றி நன்கு தெரிந்தவர்கள் இந்த கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    • விருதுநகர் அருகே வீடு புகுந்து 19½ பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.
    • நரிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

    விருதுநகர்

    நரிக்குடி அருகே உள்ள உவர்குளம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜாக்கிளி(52),விவசாயி. இவரது மனைவி சுப்புத்தாய் நேற்று இருவரும் வீட்டை பூட்டி சாவியை மறைவான இடத்தில் வைத்துவிட்டு விவசாய வேலைக்கு சென்றுவிட்டனர்.

    இதை நோட்டமிட்ட மர்மநபர்கள் சாவியை எடுத்து கதவை திறந்து வீட்டுக்குள் புகுந்தனர். அங்கு பீரோவில் இருந்த 19½ பவுன் நகையை திருடிக்கொண்டு தப்பினர்.

    மாலையில் வீடு திரும்பிய ராஜாக்கிளி நகை திருடுப்போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் நரிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

    ×