search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நகை பறித்த கொள்ளையன் கைது
    X

    நகை பறித்த கொள்ளையன் கைது

    • நகை பறித்த கொள்ளையனை போலீசார் கைது செய்தனர்.
    • தலைமறைவாகிய 5 பேரை தேடி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை சதாசிவம் நகரை சேர்ந்தவர் பிரேம் குமார் (வயது 43). இவர் திரைப்படங்க ளுக்கான பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார்.

    ஜல்லிக்கட்டு பேரவை மாவட்ட தலைவராகவும் உள்ளார். பிரேம்குமார் நண்பர் பாண்டியுடன் காரில் பாண்டி கோவில் ரிங் ரோட்டுக்கு சென்றார். அங்குள்ள மதுபான பாரில், பாண்டி சரக்கு வாங்கு வதற்காக சென்றார். அங்கு வந்த 5 பேர் கும்பல் பிரேம் குமாரை அரிவாள் முனையில் கடத்தியது.

    அவர்களது கார் சிவகங்கை மாவட்டம், இடையமேலூர், புதுப்பட்டி கண்மாய்க்கு சென்றது. அந்த கும்பல் பிரேம் குமாரிடம் ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டியது. இதற்கு பிரேம்குமார், "என்னிடம் அவ்வளவு பணம் இல்லை" என்று தெரிவித்தார்.

    அப்போது அந்த கும்பல், "உன் வீட்டில் இருக்கும் நகைகளை கொடு. இல்லை யென்றால் கொலை செய்து விடுவோம்" என்று மிரட்டியது. பயந்து போன பிரேம்குமார் உடனடியாக மனைவிக்கு போன் செய்தார். பின்னர் கடத்தல் கும்பலில் ஒருவன் மோட்டார் சைக்கிளில் கருப்பாயூரணியில் உள்ள பிரேம் குமார் வீட்டுக்கு சென்று 34 பவுன் தங்க நகைகளை வாங்கிச் சென்றான்.

    இதையடுத்து அந்த கும்பல் பிரேம்குமாரை கே.கே. நகரில் இறக்கி விட்டு தப்பியது.

    இது குறித்து அவர் மாட்டுத்தாவணி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதையடுத்து கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய மேலபனங்காடி அழகுமலையான் நகரை சேர்ந்த குண்டு சரவணன் (42) என்பவர் ஒத்தக் கடையில் பதுங்கி யிருப்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 34 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    இந்த சம்பவத்தில் தொடர்புடைய பாய்ஸ் மணி, இடையபட்டி தன பால், அவரது சகோதரர் தனசேகர், பாய்ஸ் மணியின் நண்பர் உள்பட 5 பேர் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்

    Next Story
    ×