மெக்கானிக் வீட்டில் நகை-பணம் திருட்டு

சமயநல்லூர் அருகே மெக்கானிக் வீட்டில் நகை-பணம் திருடப்பட்டது. அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிரா பதிவுகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்கின்றனர்.
மெக்கானிக் வீட்டில் நகை-பணம் திருட்டு
Published on

மதுரை

மதுரை மாவட்டம் சமயநல்லூர் வி.எம்.டி.நகர் வைகை ரோட்டில் வசித்து வருபவர் கண்ணன் (வயது47). கார் பழுதுபார்க்கும் மெக்கானிக் செட் வைத்துள்ளார். நேற்று மாலை இவர் வீட்டை பூட்டிவிட்டு மகளுடன் மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றார்.

பின்னர் இரவில் வீடு திரும்பிய போது அவரது வீட்டின் கதவு பூட்டும், மரக்கதவும் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த லாக்கரில் 4¼பவுன் நகை மற்றும் ரூ.10ஆயிரம் திருட்டு போயிருந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில் சமயநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தி, சப்-இன்ஸ்பெக்டர் தியாகராஜன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருட்டில் ஈடுபட்டவர்களை கண்டறிய அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிரா பதிவுகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்கின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com