search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அலுவலர்"

    • இரவு நேரங்களில் இந்த விளக்குகள் ஒளிர்வதால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் நிலை தடுமாறி அவதிப்படுகிறார்கள்.
    • திருச்செங்கோட வட்டார போக்குவரத்து அலுவலர் (பொறுப்பு) சரவணன் ஆய்வாளர் பாமாப்பி ரியாஆகியோர் அதிரடியாக திருச்செங் கோடு பஸ் நிலையத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

    திருச்செங்கோடு:

    திருச்செங்கோடு வழியாக செல்லும் பல பஸ்களிலும், தொலைதூரம் செல்லும் சில அரசு பஸ்களிலும் முன்பக்க கண்ணாடிகளில் ஒளிரும் வண்ணவிளக்குகள் கொண்ட பட்டைகள் பொருத்தியிப்பதாகவும் இரவு நேரங்களில் இந்த விளக்குகள் ஒளிர்வதால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் நிலை தடுமாறி அவதிப் படுவ தாக வந்த புகாரை அடுத்து

    திருச்செங்கோட வட்டார

    போக்குவரத்து அலுவலர்

    (பொறுப்பு) சரவணன்

    ஆய்வாளர் பாமாப்பி ரியாஆகியோர் அதிரடியாக திருச்செங் கோடு பஸ் நிலையத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது10-க்கும் மேற்பட்ட தனியார் மற்றும் அரசு பஸ்களில் இருந்த வண்ணவிளக்கு பட்டைகளை அகற்றி னார்கள். பஸ் எண் வழித்தடம் மற்றும் டிரைவர், கண்டக்டர் உரிமங்களை பெற்று பதிவு செய்து கொண்டதோடு இந்த முறை அறிவுறுத்துவதோடு அடுத்த முறை பிடிபட்டால் டிரைவர் மற்றும் கண்டக்டர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.

    • நாமக்கல் மாவட்டம் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலையத்தில் தீயணைப்பு நிலைய அலுவலராக கோமதி பணியாற்றி வந்தார்.
    • இவர் பதவி உயர்வு பெற்று பெரம்பலூர் மாவட்ட உதவி மாவட்ட தீயணைப்பு அலுவலராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலையத்தில் தீயணைப்பு நிலைய அலுவலராக கோமதி பணியாற்றி வந்தார். இவர் பதவி உயர்வு பெற்று பெரம்பலூர் மாவட்ட உதவி மாவட்ட தீயணைப்பு அலுவலராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

    இதையடுத்து ஈரோடு மாவட்டம் கொடுமுடி தீயணைப்பு நிலைய அலுவலராக பணியாற்றி வந்த சரவணன், பணிஇட மாறுதல் பெற்று வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலராக பதவி ஏற்றுக் கொண்டார்.

    அவருக்கு தீயணைப்பு நிலையத்தில் பணியாற்றும் அனைத்து தீயணைப்பு வீரர்கள், பல்வேறு துறை அலுவலர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

    • ஓய்வு பெற்ற வனத்துறை அலுவலர் ஆறுமுகம் (வயது 62)பரிகம் செக்போஸ்ட் அருகே ஆறுமுகம் தனியே வசித்துவருகிறார் .மனைவியை பார்த்து விட்டு நேற்று மாலை வீடு திரும்பியபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது.
    • பீரோவும் உடைக்க ப்பட்டு அதிலிருந்த 8.5 பவுன் நகை கொள்ளையடி க்கப்பட்டி ருந்தது.

    கள்ளக்குறிச்சி:

    கச்சிராயபாளையம் அருகே பரிகம் செக்போஸ்ட் அருகே ஓய்வு பெற்ற வனத்துறை அலுவலர் ஆறுமுகம் (வயது 62) வசித்து வருகிறார். இவருக்கு முனியம்மாள் என்ற மனைவியும் செந்தில்குமார் என்ற மகனும் உள்ளனர். இவரது மகன் வெளிநாட்டிலும், மனைவி கள்ளக்குறிச்சியில் வசித்து வருகின்றனர். பரிகம் செக்போஸ்ட் அருகே ஆறுமுகம் தனியே வசித்து வருகிறார். இவர் சில தினங்களுக்கு முன்னர் கள்ளக்குறிச்சிக்கு சென்று மனைவியை பார்த்து விட்டு நேற்று மாலை வீடு திரும்பினார்.

    அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோவும் உடைக்க ப்பட்டு அதிலிருந்த 8.5 பவுன் நகை கொள்ளையடி க்கப்பட்டி ருந்தது. மேலும், வீட்டில் பொறுத்தப்பட்டிருந்த 4 சி.சி.டி.வி. கேமராக்களும் சேதப்படுத்தப்பட்டிருந்தது. மேலும், சி.சி.டி.வி. விடியோக்களை சேமித்து வைக்கும் ஹார்ட் டிஸ்க்கையும் கொள்ளையர்கள் எடுத்துச் சென்றதை கண்டு ஆறுமுகம் அதிர்ச்சியடைந்தார். இது குறித்து புகாரின் பேரில் கச்சிராயப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கலெக்டர் அரவிந்த் வேண்டுகோள்
    • குடியரசு தினவிழா நிகழ்ச்சி அறிஞர் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் வருகிற 26-ந்தேதி அன்று நடைபெறவுள்ளது

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில், கலெக்டர் அரவிந்த் தலைமையில், 74-வது குடியரசு தினவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து, அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் அரவிந்த் பேசியதாவது:-

    கன்னியாகுமரி மாவட் டத்தில் குடியரசு தினவிழா நிகழ்ச்சி கடந்த ஆண்டை போல் இவ்வாண்டும் நாகர்கோவில், அறிஞர் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் வருகிற 26-ந்தேதி அன்று நடைபெற வுள்ளது. இவ்விழாவிற்கு வருகை தரும் முக்கிய விருந்தினர்களுக்கு போதிய அளவு இருக்கைகள் தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும்.

    நாகர்கோவில் மாநக ராட்சி மூலம் பொது மக்களுக்கு தேவையான குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்திட வேண்டும். விழாவில் விபத்துக்கள் ஏற்படாத வகையில், தீய ணைப்புத்துறை மூலம் தீயணைப்புக்கருவிகளை தயார்நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும். சுகாதாரத் துறையினர் சிகிச்சை உபகரணங்கள் மற்றும் ஆபத்துக்கால வாகனங்களுடன் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

    வருவாய்த்துறை, சுகா தாரத்துறை, காவல்துறை, உள்ளிட்ட பல்வேறு துறை களில் சிறப்பாக பணி யாற்றிய அலுவலர்கள், பணி யாளர்களுக்கு நற்சான்றிதழ்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகளை துறை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும்.

    குடியரசு தினவிழா விற்கான அனைத்து முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் அனைத்து அலுவ லர்களையும் கண்காணிக்க வேண்டும். ஒவ்வொரு அலுவலர்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பணிகளை தொய்வின்றி மேற்கொள்ள வேண்டும். மேலும், இவ்விழா சிறப்பாக நடைபெற அனைத்துத்துறைகளை சார்ந்த அலுவலர்களும் ஒருங்கிணைந்து தங்களது பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நாகர்கோவில் மாநக ராட்சி ஆணையர் ஆனந்த் மோகன், மாவட்ட வன அலுவலர் இளையராஜா, பத்மநாபபுரம் உதவி கலெக்டர் கவுசிக், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பாபு, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வீராசாமி, நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம் உள்பட அனைத்துத்துறை அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.

    • நிலுவையில் உள்ள அனைத்து திட்டப் பணிகளையும் விரைவாக தரமாகவும் முடித்திட உத்தரவு.
    • சாலைப்பணிகள், பூங்கா அமைக்கும் பணிகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களிடம் ஆய்வு செய்யப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் நகராட்சி நிர்வாக துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த மண்டல அளவிலான ஆய்வு கூட்டம் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் திரு. கே. என் .நேரு தலைமையில் நடைபெற்றது.

    அரசு தலைமை கொறடா முனைவர் கோவி.செழியன், நகராட்சி நிர்வாகத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா , தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மேலாண்மை இயக்குனர்தட்சிணாமூர்த்தி , பேரூராட்சிகள் ஆணையர் செல்வராஜ் , மாவட்ட கலெக்டர்கள் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் (தஞ்சாவூர்), அருண் தம்புராஜ் (நாகப்பட்டினம்), லலிதா (மயிலாடுதுறை) ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

    இந்த ஆய்வுக் கூட்டத்தில் கே.என்.நேரு பேசியதாவது:- 

    தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களின் உள்ள மாநகராட்சி, பேரூராட்சி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையம், எரிவாயு தகனமேடை, சாலைப்பணிகள், பூங்கா அமைக்கும் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களிடம் ஆய்வு செய்யப்பட்டது.

    நிலுவையில் உள்ள அனைத்து திட்டப் பணிகளையும் விரைவாக தரமாகவும் முடித்திட சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

    மேலும் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம், திருப்பனந்தாள் மற்றும் திருவிடைமருதூர் ஒன்றியங்களைச் சார்ந்த 67 ஊரகக் குடியிருப்புகள் மற்றும் திருவிடைமருதூர். வேப்பத்தூர் பேரூராட்சிகளைச் சார்ந்த 2 குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டம் ரூ.117.09 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.82 சதவீதம் பணிகள் முடிவுற்றுள்ளது.

    தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர், திருவையாறு, தஞ்சாவூர், ஒன்றியங்களுக்குட்பட்ட 214 குடியிருப்புகளுக்கு ரூ.265.29 கோடி மதிப்பீட்டில் 1.79 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் கொள்ளிடம் ஆற்றினை நீராதாரமாக கொண்ட கூட்டுக்குடிநீர் திட்டம். தஞ்சாவூர் மாவட்டம் பாநாசம் மற்றும் அம்மாப்பேட்டை ஒன்றியங்களைச் சார்ந்த 252 குடியிருப்புகளுக்கு ரூ. 288.02 கோடி மதிப்பீட்டில் 2.09 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் கூட்டுக் குடிநீர் திட்டம் ஆகிய திட்டங்கள் தஞ்சாவூர் மாவட்டத்தில் செயலாக்கத்தில் உள்ள திட்டங்கள் ஆகும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இக்கூட்டத்தில் எம்.பி.க்கள் கல்யாணசுந்தரம், ராமலிங்கம், செல்வராஜ், டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், எம்.எல்.ஏ.க்கள் துரை சந்திரசேகரன், திரு. டி.கே.ஜி.நீலமேகம் , அன்பழகன் ,அண்ணாதுரை ,ஜவாஹிருல்லா ,ஷாநவாஸ் , ராஜ்குமார் , பன்னீர்செல்வம், நிவேதா முருகன் , நாகைமாலி , பூண்டி கலைவாணன்,டி. ஆர்.பி.ராஜா,மாரிமுத்து , கூடுதல் கலெக்டர்கள்சுகபுத்ரா , ஸ்ரீகாந்த், நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் ஜானகி ரவீந்திரன், மாநகராட்சி மேயர்கள் சண் ராமநாதன் (தஞ்சாவூர்), சரவணன் (கும்பகோணம்), மாவட்ட ஊராட்சித்தலைவர்உஷா புண்ணியமூர்த்தி, மாநகராட்சி துணை மேயர்கள்அஞ்சுகம் பூபதி (தஞ்சாவூர்), தமிழழகன் (கும்பகோணம்), மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர்முத்து, மாநகராட்சி ஆணையர்கள் சரவணகுமார் (தஞ்சாவூர்), செந்தில் முருகன் (கும்பகோணம்) மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
    • தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணையால் 4½ மாதங்கள் வினாடிக்கு 150 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிட வேண்டியுள்ளது.

    நாகர்கோவில்:

    முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி தொகுதி எம்.எல்.ஏ.வுமான தளவாய்சுந்த ரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது:-

    கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அஞ்சுகிராமம் மற்றும் அதன் சுற்று வட்டார கடைவரம்பு பகுதி களில் உள்ள விளை நிலங்க ளுக்கு தண்ணீர் கிடைக்கா மல் உள்ளது. ஆனால், தோவாளை கால்வாயில் இருந்து கடைவரம்பு நிலங்களுக்கு செல்லும் மடையினை அடைத்து முழுவதுமாக ராதாபுரம் கால்வாய் பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விடப் பட்டுள்ளது. குமரி விவசாயி கள் ராதாபுரம் கால்வாயில் தண்ணீர் திறந்து விடுவதற்கு எதிரானவர்கள் அல்ல. கடந்த காலங்களில் தண்ணீரின் இருப்பை பொருத்து 15 முதல் 30 நாட்கள் மட்டும் ராதாபுரம் கால் வாய்க்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது.

    தற்போது பிறப்பிக்கப்பட் டுள்ள அரசாணையால் 4½ மாதங்கள் வினாடிக்கு 150 கன அடி வீதம் தண் ணீர் திறந்துவிட வேண்டியுள் ளது. அரசாணையின்படி தண்ணீர் திறந்து விடுவதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால், அதேநேரத் தில்நிர்ணயித்த அளவை விட கூடுதலாக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    இதனால், குமரி மாவட்டத்தில் உள்ள 79 ஆயிரம் ஏக்கர் நிலங்களில் பாசனம் செய்யும் விவசாயி கள் பெரும் துயரத்தில் உள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் விவசாயிகளை திரட்டி சம்பந்தப்பட்டதுறை அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளராக கார்த்திகேயன் பணிமாறுதல் செய்யப்பட்டுள்ளார்.
    • தஞ்சை சத்திரம் நிர்வாக தனி தாசில்தாராக ஜெயலெட்சுமி பணிமாறுதல் பெற்றுள்ளார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டத்தில் வருவாய் துறையில் பணியாற்றி வரும் 22 தாசில்தார்கள், துணை தாசில்தார்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.

    அதன் விவரம் வருமாறு:-

    திருவிடைமருதூரில் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராக பணிபுரிந்து வந்த ஜானகிராமன், பூதலூர் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    அங்கு பணியாற்றி வந்த தாசில்தார் புண்ணியமூர்த்தி, கும்பகோணம் நகர நிலவரித்திட்ட தனிதாசில்தாராக மாற்றப்பட்டுள்ளார். இங்கு பணியாற்றி வந்த ரவிச்சந்திரன், திருவிடைமருதூர் சமூக பாதுகாப்பு திட்ட தனிதாசில்தாராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    இங்கு பணியாற்றி வந்த சித்ரா, கும்பகோணம் கலால் மேற்பார்வை அலுவலராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இங்கு பணியாற்றிய கார்த்திகேயன், கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளராக பணிமாறுதல் செய்யப்பட்டுள்ளார்.

    தஞ்சை அரசு கேபிள் டி.வி. நிறுவன தனி தாசில்தார் முருககுமார், பாபநாசம் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பாபநாசத்தில் பணியாற்றி வந்த சுஜாதா, தஞ்சை வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    அங்கு பணியாற்றிய சிவக்குமார், ஒரத்தநாடு வட்ட வழங்கல் அலுவலராக பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளார். அங்கு பணியாற்றி வந்த சுமதி, பட்டுக்கோட்டை கோட்ட கலால் அலுவலராக பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளார்.

    பட்டுக்கோட்டை கோட்ட கலால் அலுவலர் ரீட்டா ஜெர்லின், கும்பகோணம் ஆதிதிராவிடர் நலத்துறை தனி தாசில்தாராக மாற்றப்பட்டுள்ளார். இங்கு பணியாற்றி வந்த இளமாருதி, ஒரத்தநாடு சமூக பாதுகாப்பு திட்ட தனிதாசில்தாராக பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளார். இங்கு பணியாற்றிய தமிழ்ஜெயந்தி, தஞ்சை மாவட்ட ஆய்வுக்குழு அலுவலக துணை அலுவலராக பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளார்.

    நாகை அலகு முத்திரை கட்டண தனிதாசில்தாராக பணிபுரிந்த கஜேந்திரன், தஞ்சை கலால் மேற்பார்வை அலுவலராக பணிமாறுதல் செய்யப்பட்டுள்ளார். அங்கு பணியாற்றிய மலர்குழலி, பட்டுக்கோட்டை அலகு முத்திரை தான் கட்டண தனி தாசில்தாராக பணிமாறுதல் செய்யப்பட்டுள்ளார்.

    இங்கு பணியாற்றி வந்த மல்லிகா தேவி, தஞ்சை கலால் அலுவலக மேலாளராக பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளார். இங்கு பணியாற்றி வந்த சுரேஷ், ஒரத்தநாடு தாசில்தாராக பணிமாறுதல் செய்யப்பட்டுள்ளார். தஞ்சை சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராக பணிபுரிந்த ஜெயலெட்சுமி, தஞ்சை சத்திரம் நிர்வாக தனி தாசில்தாராக பணிமாறுதல் பெற்றுள்ளார்.

    தஞ்சை சத்திரம் நிர்வாக தனி தாசில்தாராக இருந்த சக்திவேல், தஞ்சை தாசில்தாராக பணிமாறுதல் செய்யப்பட்டுள்ளார். தஞ்சை தாசில்தாராக பணியாற்றிய மணிகண்டன், நாகை அலகு முத்திரைத்தாள் கட்டண தனி தாசில்தாராக பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளார்.

    தஞ்சை டாஸ்மாக் நிறுவன உதவி மேலாளர் வெங்கடேஸ்வரன், கும்பகோணம் தாசில்தாராக பணிமாறுதல் செய்யப்பட்டுள்ளார். கும்பகோணம் தாசில்தார் தங்கபிரபாகரன், தஞ்சை டாஸ்மாக் நிறுவன உதவி மேலாளராக பணி மாறுதல் பெற்றுளார்.

    பேராவூரணி தாசில்தார் அலுவலக கூடுதல் தலைமை இடத்து துணை தாசில்தார் சமத்துவராஜ், தஞ்சை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் அலுவலக தலைமை உதவியாளராக பணியிடை மாறுதல் செய்யப்பட்டுள்ளார்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வாழப்பாடி வனச்சரகத்தின் கீழ், சென்றாயன் பாளை யத்தில் நாற்றங்கால் அமைத்து 40 ஆயிரம் தேக்கு மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.
    • இந்த நாற்றங்காலை சேலம் மாவட்ட வன அலுவலர் நேற்று ஆய்வு செய்தார்.

    வாழப்பாடி:

    தமிழ்நாடு அரசு வனத்து றையின் பசுமை தமிழ்நாடு இயக்கத் திட்டத்தின் கீழ், வாழப்பாடி பகுதியில் பசுமை பரப்பை அதிகரிக்க வனத்துறை மூலமாக, பொதுமக்களுக்கு இலவச மரக்கன்றுகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

    இத்திட்டத்திற்காக வாழப்பாடி வனச்சரகத்தின் கீழ், சென்றாயன் பாளை யத்தில் நாற்றங்கால் அமைத்து 40 ஆயிரம் தேக்கு மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. இந்த நாற்றங்காலை சேலம் மாவட்ட வன அலுவலர் (கூடுதல் பொறுப்பு) எஸ். கவுதம் நேற்று ஆய்வு செய்தார்.

    அப்போது வாழப்பாடி வனச்சரகர் துரைமுருகன் மற்றும் வனத்துறை பணி ணயாளர்கள் உடனிருந்த னர்.

    வாழப்பாடி வனச்சர கத்திற்கு உட்பட்ட பகுதியில், மரத்தோட்டம் அமைக்க விருப்பமுள்ள விவசாயிகள், சேசன்சாவடியிலுள்ள வாழப்பாடி வனச்சரக அலுவலகத்தில், தங்களது நிலத்திற்கான பட்டா, சிட்டா, ஆதார் நகல்களை கொடுத்து, பெயரை பதிவு செய்து பயன்பெறலாம் என வாழப்பாடி வனச்சரகர் துரைமுருகன் தெரிவித்தார்.

    • அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி சார்பில், அனைத்து நிலை அரசு மற்றும் பொதுத்துறை நிறுவன அலுவலர்களுக்கு, ஆண்டுதோறும் புத்தாக்கப்பயிற்சி வழங்கப்படுகிறது.
    • 12-ந்தேதி முதல், 14ந் தேதி வரை சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் செல்வதற்கான முயற்சி என்ற தலைப்பில் பயிற்சி வழங்கப்படுகிறது.

    திருப்பூர் :

    சுற்றுச்சூழல் மாசுபாடு என்பது பெரும் சவாலாக மாறிவரும் நிலையில், உள்ளாட்சி நிர்வாகங்களில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சார்ந்த பணிகளை மேற்கொள்ள அரசு ஊக்குவித்து வருகிறது.

    சென்னையில் உள்ள அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி சார்பில், அனைத்து நிலை அரசு மற்றும் பொதுத்துறை நிறுவன அலுவலர்களுக்கு, ஆண்டுதோறும் புத்தாக்கப்பயிற்சி வழங்கப்படுகிறது.அதன்படி பேரூராட்சி அலுவலர்களுக்கு நாளை , 12-ந்தேதி முதல், 14ந் தேதி வரை சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் செல்வதற்கான முயற்சி என்ற தலைப்பில் பயிற்சி வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் குறிப்பிட்ட அலுவலர்கள் தேர்வு செய்யப்பட்டு பயிற்சியில் பங்கேற்க உள்ளனர். இப்பயிற்சியில் உலக வெப்பமயமாதல் மற்றும் காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு வழங்கப்பட இருக்கிறது.

    உள்ளாட்சிகளில் மாசுபாடு குறைத்தல் தொடர்பான திட்டங்களை வகுப்பது, இயற்கை வளங்கள், காடுகளை பாதுகாப்பது, சுற்றுச்சூழல் சமநிலையை பாதுகாப்பது தொடர்பான திட்டங்களை வகுப்பது, அனைத்து உயிரினங்களும் அவற்றின் இயற்கையான வழித்தடங்களில் பயணிக்கவும், வாழவும் வழிகாட்டும் வகையிலான திட்டங்களை தீட்டுவது ஆகியவற்றை முக்கிய நோக்கமாக கொண்டு பயிற்சி வழங்கப்படவுள்ளது.தவிர இயற்கை உரம் தயாரிப்பு, மாடித்தோட்டம், இயற்கை முறையில் சோப்பு தயாரிப்பது, மழைநீர் சேகரிப்பு உள்ளிட்ட பல்வேறு பணி சார்ந்தும் பயிற்சி வழங்கப்பட உள்ளதாக திருப்பூர் மாவட்ட உள்ளாட்சி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

    • கடங்கநேரி ஊராட்சியில் திரவ கழிவு மேலாண்மையில் செங்குத்து உறிஞ்சுக்குழி அமைத்தல், மண்புழு உரம் தயாரிக்கும் மையம் உள்ளிட்ட பணிகள் கள ஆய்வு செய்யப்பட்டது.
    • வெங்கடாம்பட்டி ஊராட்சியில், அகழி அமைத்தல், தொகுப்பு மரக்கன்றுகள் நடுதல், மடத்தூர் ஊராட்சியில், மீள்நிரப்பு தண்டு அமைத்தல் ஆகிய பணிகள் கள ஆய்வு செய்யப்பட்டது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் ஜல் சக்தி அபியான் திட்டம் மற்றும் மழைநீர் சேகரிப்பு தொடர்பான பணிகளின் நிலை குறித்து மத்திய கண்காணிப்பு அலுவலர், ராஜேஷ் குப்தா மத்திய தொழில்நுட்ப அலுவலர் சரவணக்குமார் ஆகியோர் தலைமையில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    தென்காசி ஊராட்சி ஒன்றியம், குத்துக்கல்வலசை ஊராட்சியில், வட்டார நாற்றங்கால் பண்ணை அமைத்தல், சில்லரைப்புரவு ஊராட்சியில், தனிநபர் உறிஞ்சிக்குழி அமைத்தல், வாறுகால் அமைத்தல், குப்பை பிரித்தெடுக்கும் மையம், மண்புழு உரக் கொட்டகை அமைத்தல் பணிகள் கடையம் ஊராட்சி ஒன்றியம், வெங்கடாம்பட்டி ஊராட்சியில், அகழி அமைத்தல், தொகுப்பு மரக்கன்றுகள் நடுதல், மடத்தூர் ஊராட்சியில், மீள்நிரப்பு தண்டு அமைத்தல் ஆகிய பணிகள் கள ஆய்வு செய்யப்பட்டது.

    கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம், குணராமநல்லூர் ஊராட்சியில் அகழி அமைத்தல், தொகுப்பு மரக்கன்றுகள் நடுதல், குத்தப்பாஞ்சான் ஊராட்சியில், கசிவுநீர் குட்டை அமைத்தல், கடங்கநேரி ஊராட்சியில் திரவ கழிவு மேலாண்மையில் செங்குத்து உறிஞ்சுக்குழி அமைத்தல், மண்புழு உரம் தயாரிக்கும் மையம் ஆகிய பணிகள் கள ஆய்வு செய்யப்பட்டது.

    இந்த ஆய்வில் செயற்பொறியாளர் ஹசன் இப்ராஹீம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி பொறியாளர்கள், ஒன்றிய மேற்பார்வையாளர்கள், ஊராட்சி செயலாளர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    ‘கல்பனா சாவ்லா’ விருதுக்கு விண்ணப்பிக்கலாம் சேலம் மாவட்ட விளையாட்டு அலுவலர் தகவல் வெளியிட்டுள்ளார்.

    சேலம்:

    சேலம் மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவரஞ்சன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வீர, தீர செயல்புரிந்த பெண்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட்டு வரப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான விருது சுதந்திர தினத்தன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்.

    எனவே சேலம் மாவட்டத்தில் துணிச்சல், தைரியமான மற்றும் வீர, தீர செயல் புரிந்த பெண்கள் கல்பனா சாவ்லா விருது பெற வருகிற 20-ந்தேதிக்குள், சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×