search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிரடி"

    • பறக்கும் படை மற்றும் நிலையான படை குழுவினர் தீவிர வாகன சோதனை செய்து வருகின்றனர்.
    • பறிமுதல் செய்த பணத்தை வருவாய்த்துறை அலுவலரிடம் ஒப்படைத்தனர்.

    தென்காசி:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி தென்காசி மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு வினியோகம் செய்வதற்காக பணம் எடுத்துச் செல்லப்படுகிறதா? என்பதை ஆய்வு செய்ய மாவட்டம் முழுவதும் பறக்கும் படை மற்றும் நிலையான படை குழுவினர் தீவிர வாகன சோதனை செய்து வருகின்றனர்.

    தென்காசி மாவட்டம் புளியரை சோதனை சாவடியில் கடந்த 2 நாட்களாக உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச்செல்லப்பட்ட லட்சக்கணக்கான பணத்தை பறக்கும் படையினர் பறி முதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்து வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று இரவு தென்காசி மாவட்டம் குத்துக்கல்வலசை பகுதியில் பறக்கும்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மதுரையில் இருந்து தென்காசியை நோக்கி வந்த அரசு பஸ்சை நிறுத்தி சோதனை செய்தனர்.

    அப்போது பஸ்சில் பயணம் செய்த ஒருவர் வைத்திருந்த கைப்பையை போலீசார் வாங்கி சோதனை செய்து பார்த்தனர். அதில் கட்டுகட்டாக ரூ.35 லட்சம் இருந்தது. இதையடுத்து அதன் உரிமையாளரிடம் பறக்கும் படையினர் விசாரணை நடத்தியதில், அவர் தென்காசி அருமனை தெருவை சேர்ந்த செய்யது அலி (வயது 32) என்பது தெரியவந்தது.

    மேலும் செய்யது அலி தென்காசியில் நகைக்கடை நடத்தி வருகிறார். மதுரைக்கு நகை வாங்குவதற்காக பஸ்சில் பணத்துடன் சென்ற நிலையில், அங்கு நகை வாங்கவில்லை என்பதால் கொண்டு சென்ற பணத்தை அப்படியே திரும்பவும் கொண்டு வந்ததாக கூறினார்.

    ஆனாலும் அதற்கான ஆவணங்கள் ஏதும் இல்லாததால், பறக்கும் படையினர் பறிமுதல் செய்த பணத்தை வருவாய்த்துறை அலுவலரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • இரவு நேரங்களில் இந்த விளக்குகள் ஒளிர்வதால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் நிலை தடுமாறி அவதிப்படுகிறார்கள்.
    • திருச்செங்கோட வட்டார போக்குவரத்து அலுவலர் (பொறுப்பு) சரவணன் ஆய்வாளர் பாமாப்பி ரியாஆகியோர் அதிரடியாக திருச்செங் கோடு பஸ் நிலையத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

    திருச்செங்கோடு:

    திருச்செங்கோடு வழியாக செல்லும் பல பஸ்களிலும், தொலைதூரம் செல்லும் சில அரசு பஸ்களிலும் முன்பக்க கண்ணாடிகளில் ஒளிரும் வண்ணவிளக்குகள் கொண்ட பட்டைகள் பொருத்தியிப்பதாகவும் இரவு நேரங்களில் இந்த விளக்குகள் ஒளிர்வதால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் நிலை தடுமாறி அவதிப் படுவ தாக வந்த புகாரை அடுத்து

    திருச்செங்கோட வட்டார

    போக்குவரத்து அலுவலர்

    (பொறுப்பு) சரவணன்

    ஆய்வாளர் பாமாப்பி ரியாஆகியோர் அதிரடியாக திருச்செங் கோடு பஸ் நிலையத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது10-க்கும் மேற்பட்ட தனியார் மற்றும் அரசு பஸ்களில் இருந்த வண்ணவிளக்கு பட்டைகளை அகற்றி னார்கள். பஸ் எண் வழித்தடம் மற்றும் டிரைவர், கண்டக்டர் உரிமங்களை பெற்று பதிவு செய்து கொண்டதோடு இந்த முறை அறிவுறுத்துவதோடு அடுத்த முறை பிடிபட்டால் டிரைவர் மற்றும் கண்டக்டர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.

    நாமக்கல் மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டுத்துறை அதிரடி 10 சாயப்பட்டறை இடித்தனர்.

    குமாரபாளையம்:

    குமாரபாளையத்தில் மாசுக்கட்டுபாட்டு வாரிய அதிரடி நடவடிக்கையால் 10 சாயப்பட்டறைகள் இடிக்கப்பட்டது.

    குமாரபாளையத்தில் விசைத்தறி ஜவுளி உற்பத்திக்கு சாயம் போட 300-க்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகள் செயல்பட்டு வருகிறது. இதில் சில சாயபட்டறைகள் அனுமதி பெற்றும், பல பட்டறைகள் அனுமதி பெறாமலும் செயல்பட்டு வருகிறது. அனுமதி பெறாமலும், கழிவுநீரை காவிரியில் கலக்க விடும் பட்டறைகள் மீது அவ்வப்போது மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தினர் பொக்லின் உதவியுடன் இடித்து வந்தனர். அனுமதி பெறாத சாயப்பட்டறைகள் செயல்படக்கூடாது என அறிவித்தும், தொடர்ந்து செயல்படுத்தி வருவதுடன் சாயக்கழிவு நீரை காவிரியில் கலக்க விடுகிறார்கள். இது சம்பந்தமாக பலரிடம் நேரில் எச்சரிக்கை விடுத்தும் தொடர்ந்து செயல்பட்டதால் மாசுக்கட்டுபாட்டு வாரிய மாவட்ட அலுவலர் மோகன், தாசில்தார் தமிழரசி தலைமையில் நடராஜா நகர், கம்பன் நகர், ஓலப்பாளையம், ஆனங்கூர் ரோடு, அரசு மேல்நிலைப்பள்ளி சாலை உள்ளிட்ட பகுதியில் பொக்லின் உதவியுடன் 10 சாயப்பட்டறைகள் இடிக்கப்பட்டது.

    இதில் பறக்கும் படை அலுவலர் மணிவண்ணன், உதவி பொறியாளர்கள் வினோத்குமார், கிருஷ்ணன் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.

    ×