என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Remove banners"

    • நகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை
    • பேனர்கள் அகற்றும் பணி தொடரும்

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலை ஓரங்களிலும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் அனுமதியின்றி அதிக அளவிலான பிளக்ஸ் பேனர்கள் வைத்திருப்பதாக எழுந்த புகாரினை தொடர்ந்து, நகராட்சி ஆணையாளர் மாரிச்செல்வி வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனர்களை அகற்ற நகராட்சி பணியாளர்களுக்கு உத்தரவிட்டார்.

    இதனையடுத்து நகரமைப்பு அலுவலர் சண்முகம், நகரமைப்பு ஆய்வாளர் பாலாஜி, அல்லிமுத்து, சுகாதார ஆய்வாளர் செந்தில், நகராட்சி பணியாளர்கள் சரவணன், தயாளன் உள்ளிட்டோர், வாணியம்பாடி நகராட்சி பணியாளர்கள் வாணியம்பாடியின் பல்வேறு பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த பேனர்கள் மற்றும் விளம்பர பலகைகளை அகற்றினர்.

    மேலும் வாணியம்பாடியின் அனைத்து பகுதிகளிலும் இதேபோல் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பேனர்கள் அகற்றும் பணி தொடரும் என்றும், தொடர்ந்து அனுமதியின்றி பேனர்கள் வைப்பவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் நகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை செய்துள்ளார்.

    • பேனர்களை அதிரடியாக அகற்றி தடை விதித்தும் வருகின்றனர்.
    • உரிய அனுமதி பெற்று பேனர்கள் வைக்க வேண்டும்

    கடலூர்:

    பொது இடங்கள் மற்றும் சாலைகளின் ஓரத்தில் பேனர்கள் வைப்பதால் அடிக்கடி விபத்து சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதன் மூலம் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இவற்றை கட்டுப்படுத்தும் விதமாக போலீசார் அவ்வப் போது விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதோடு பேனர்களை அதிரடியாக அகற்றி தடை விதித்தும் வருகின்றனர். கடலூர் மாநகராட்சி பகுதியில் பேனர்கள் வைக்க வேண்டும் என்றால் மாநகராட்சி நிர்வாகத்தை தொடர்பு கொண்டு அதன் மூலம் உரிய அனுமதி பெற்று பேனர்கள் வைக்க வேண்டும் என உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் பொதுமக்களுக்கு இடையூராகவும், போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் பேனர் வைக்க கூடாது என அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா அறிவுறுத்தலின் பேரில் மாநகராட்சி ஆணையாளர் நவேந்திரன் உத்தரவின் பேரில் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட கடலூர் மஞ்சக்குப்பம், செம்மண்டலம், திருப்பாதிரிப்புலியூர், முதுநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகள் ஓரம் வைக்கப்பட்டிருந்த பேனர்கள் அதிரடியாக அகற்றப்பட்டன. மேலும் மாநகராட்சி ஊழியர்கள் பேனர்கள் அகற்றும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்ததால் பரபரப்பாக காணப்பட்டது. மேலும் தி.மு.க. தலைமை அறிவுறுத்தியதை தொடர்ந்து கடலூர் மாநகரில் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த தி.மு.க.வினர் பேனர்களும் அதிரடியாக அகற்றப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். 

    ×