search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து மூதாட்டியிடம் 5 பவுன் நகை திருட்டு
    X

    சிசிடிவி காமிராவில் பதிவான காட்சியில் மூதாட்டி மாசிலாமணிவுடன் செல்லும் மர்ம பெண்.

    குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து மூதாட்டியிடம் 5 பவுன் நகை திருட்டு

    • மூதாட்டியிடம் 5 பவுன் நகை திருடிய பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
    • குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து திருடியதாக தெரிகிறது.

    மதுரை

    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள மட்டப்பாறை ராமராஜபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் மாசிலாமணி(வயது 80). இவரது கணவர் சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் மாசிலாமணி திண்டுக்க ல்லில் உள்ள மகன் பாண்டியராஜன் வீட்டில் தங்கியிருந்தார்.

    சம்பவத்தன்று நிலக்கோ ட்டையில் வசிக்கும் தனது மகள் வீட்டிற்கு செல்வ தற்காக மாசிலாமணி திண்டுக்கலில் இருந்து பஸ்சில் புறப்பட்டார். மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பஸ் நிலையத்தில் இறங்கிய அவர் அங்குள்ள மாதா கோவிலில் சிறிது நேரம் இளைப்பாற தங்கியுள்ளார்.

    அப்போது 35வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மாசிலாமணியிடம் பேச்சு கொடுத்துள்ளார். சிறிது நேரத்திலேயே மாசிலா மணியின் நம்பிக்கையை பெற்ற அந்த பெண், தான் நீரேத்தானில் உள்ள நாகம்மாள் கோவில் பூசாரி வீட்டிற்கு குறிகேட்க செல்வதாக கூறியுள்ளார். உடனே மாசிலாமணியும் தானும் வருவதாக கூறியுள்ளார்.

    இதையடுத்து இருவரும் நீரேத்தானுக்கு புறப்பட்டு சென்றனர். யூனியன் ஆபீஸ் ரோட்டில் உள்ள நாகம்மாள் கோவில் அருகே சென்றபோது அந்த பெண் மாசிலாமணிக்கு மயக்க மருந்து கலந்த பழச்சாறை கொடுத்ததாக தெரிகிறது. அதை குடித்த மாசிலாமணி சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார்.

    உடனே அந்த பெண், மூதாட்டி அணிந்திருந்த இருந்த 5 பவுன் நகை, பையில் வைத்திருந்த ரூ.5ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிக்கொண்டு மாயமானார். சில மணிநேரம் கழித்து விழித்தெழுந்த மாசிலா மணி, தான் அணிந்திருந்த நகை மற்றும் பையில் வைத்திருந்த பணம் காணா ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    தன்னுடன் வந்த பெண்ணை தேடிப்பார்த்த போது அவர் மாயமாகி விட்டது தெரியவந்தது. இதனால் தனது நகை மற்றும்ம பணத்தை அந்த பெண் தான் திருடி இருக்கவேண்டும் என்ற சந்தேகத்தின் பேரில் வாடிப்பட்டி போலீசில் புகார் செய்தார்.

    அவரது புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினார். மேலும் சம்பவம் நடந்த பகுதியில் இருந்த சி.சி.டி.வி. காமிரா வீடியோ பதிவுகளை ஆய்வு செய்தார். அதில் மாசிலாமணியுடன், ஒரு பெண் நடந்து செல்வது பதிவாகி இருந்தது.

    அந்த பெண் தான் தன்னிடம் பேச்சு கொடுத்த தாகவும், மயக்கமருந்து கலந்த குளிர்பானத்தை தந்ததாகவும் மாசிலாமணி அடையாளம் காட்டினர். இதையடுத்து அந்த பெண் யார்? என்று கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    சி.சி.டி.வி. காமிரா காட்சியில் மூதாட்டியிடம் நகை மற்றும் பணத்தை பறித்துச்சென்ற பெண்ணின் முகம் தெளிவாக தெரிவதால் விரைவில் அவர் சிக்கிவிடுவார் என்று போலீசார் தெரிவித்தனர்.

    Next Story
    ×