திருப்பூரில் நிதி நிறுவன அதிபர் வீட்டில் நகை கொள்ளை

வீட்டின் கதவை திறந்து வைத்துக்கொண்டு வெளியே சென்று இருந்தார். 8 பவுன் நகை திருடப்பட்டிருப்பது தெரிய வந்தது.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

திருப்பூர் :

திருப்பூர் 15 வேலம்பாளையம் சொர்ணபுரி அவென்யூவில் வசித்து வருபவர் மோகன் ( வயது 53). நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இன்று காலை இவர் வீட்டின் கதவை திறந்து வைத்து க்கொண்டு வெளியே சென்று இருந்தார்.

இதனை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் வீட்டிற்குள் புகுந்ததுடன், பீரோவை திறந்து நகையை எடுத்து க்கொண்டிருந்தனர். அப்போது சத்தம் கேட்டு மோகனின் மனைவி எழுந்தார். உடனே மர்ம ஆசாமிகள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். பின்னர் பீரோவில் பார்த்த போது அதில் இருந்த ரூ.3.50 லட்சம் மதிப்புள்ள 8 பவுன் நகை திருட ப்பட்டிருப்பது தெரிய வந்தது. இது குறித்து 15 வேலம்பாளையம் போலீசில் புகார் செய்ய ப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகி ன்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com